ஞாபகம் வருதா ? வரணுமே ....


எந்த ஒரு தகவலையும் மறக்காம இருக்க ஏதாவது ஷார்ட்-பார்ம், கோட்-வேர்ட், அல்லது பாட்டு வடிவில் ---  குறிப்பு வெச்சுக்கலாம்.

என்னோட பையனுக்கு ஆங்கில வார்த்தைகள் 'stationary' & 'stationery' ரெண்டுக்கும் இருக்கும் அர்த்தத்த இப்படி ஞாபகம் வெச்சுக்கலாம்னு சொன்னேன். "stationery மற்றும் --pen , pensil , note -- இதுல்லாம் 'e ' காமனா இருக்கு.. அதாவது 'stationery' என்று சொன்னால் 'பெண்', 'பென்சில்', 'நோட்' இதெல்லாம் இருக்கும் கடையைக் குறிக்கும்" என்றேன். குழப்பமில்லாமல் புரிந்துகொண்டான். நெஜமாவே.. இது எனக்கே தோன்றியதுதான்..

பின்னர் கூகிள் தேடலில் 'stationary stationery' என்று தேடியதன் மூலம் ஒரு வெப்சைட் கிடைத்தது.. உங்களுக்கும் பயன் படலாம். எனவே அதன் இணைப்பு.. இதோ..
எலெக்ட்ரானிக்ஸ் Labல, Resistance(தடுப்பான் ?) மதிப்பு, கலர்  கோடிங் 'BBROY of Great Britain had a Very Good Wife' என்று, ஞாபகம் கொள்ள சுலப வழி சொன்னார்கள். (விவரம் இங்கும்[1], அங்கும்[2] இருக்கிறது)

சிறு வயதில் வார நாட்களை நினைவில் கொள்வதற்கு ஒரு பாடல் உண்டு.  ஒரே பாட்டுலே மூன்று தகவல்கள்... (1)வார நாட்கள் வரிசை, (2) திருடாதே பாப்பா திருடாதே மேசெஜு மற்றும் (3) வார்த்தைகளின் ஒசைக்கேற்ற 'மோனையுடன்' பாடல்......  இதோ.. கீழே கொடுத்துள்ளேன்.....  நம்ம கமேண்டோட........

ஞாயிற்றுக்கிழமை கையைக் காணும்
      (வீட்டப் பூட்டிட்டு குடும்பத்தோட ஊர் சுத்தினா அப்படித்தான்)
திங்கட்கிழமை திருடன் பிடிபட்டான்.
      (அந்த காலத்துல போலீசு செமையா வேலை செஞ்சாங்க)
செவ்வாக் கிழமை ஜெ(செ)யிலுக்குப் போனான்
      (ம்ம்ம்.. அப்ப நீதித் துறையும் செமையா இருந்திச்சு போல..)
புதன்கிழமை புத்தி வந்தது..
      (பொன் ஆப்டாலும், புதன் ஆப்டாதுன்னு சும்மாவா சொன்னாங்க..)
வியாக்கிழமை விரதம் இருந்தான்.
      (ஸ்ரீ ராகவேந்தர் சீடன் ஆயிட்டான் போல..)
வெள்ளிக் கிழமை விடுதலை ஆனான்..
      (இங்கப் பாருடா.. விரதத்தொட உடனடிப் பலன்..)
னிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்...
      (ரெஸ்ட் வேணும்தான்.. நாளைக்கு வேலை இருக்கோ என்னவோ..  ம்ம் மறுபடியும் மோதலேருந்தா..!)

 படங்கள் உதவி : கூகிள் இமேஜெஸ்..(நன்றி)
 ---------------------------------------------

22 Comments (கருத்துரைகள்)
:

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

இதே மாதிரி நாங்க பயன்படுத்திய சில,
1. LEO (Loss of Electron is Oxidation)
2. BRA (Blue to Red is Acid, in litmus paper)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

ரெண்டாவதா சொன்னீங்களே.. அதத்தான் மாணவர்களாம் மறக்காம இருந்தாங்களாமே.. சரியா ?

பாலா said... [Reply]

மிகச்சிறந்த ஐடியாதான். நாங்கள் படிக்கும்கேள்விகளில் உள்ள தலைப்புகளை வைத்து ஒரு சிறு கதையை ரெடி பண்ணி வைத்துக்கொள்வோம். அந்த கதையை வைத்து கேள்வியை சரியாக எழுதி விடலாம்.

எஸ்.கே said... [Reply]

இதை ஆங்கிலத்தில் Mnemonics என்பார்கள்

VIBGYOR கூட ஒரு mnemonicதான்

My Very Energetic Mother Just Served Us Nine Pizzas
இது ஒரு mnemonic எதோடதுன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்?:-)

A.R.ராஜகோபாலன் said... [Reply]

ஏதோ அறிவுப்பூர்வமான விஷயம்
நமக்கு தான் ஒண்ணும் விலங்கல

அனு said... [Reply]

@Madhavan

மறக்கல.. :)

@SK

Planets தானே?? :)

mnemonic சொல்லாம போனா தெய்வ குத்தமாகிடும்.. நாங்க piயோட value ஞாபகம் வச்சுக்க சொல்ற mnemonic இது..
How I need a drink, alcoholic of course, after the heavy lectures involving quantum mechanics :)

R. Gopi said... [Reply]

compliment - complement சிக்கல் நிறைய வரும். gift இல் i வருகிறது. அதை வைத்து முடிவு செய்வேன்.

நாங்களும் எடுத்து விடுவோம்ல:-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பாலா

நல்லா ஐடியாதான் பாலா..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

நீங்க சொன்னத கூகிள் தேடல் கேட்டா, உடனே கெடைக்குது பதில்.. இவ்ளோ ஈசியான கேள்விய கேட்டுட்டீங்களே !!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.ராஜகோபாலன்

அதெப்படி கொப்லி.. உங்க நாலேட்ஜுந்தான் எனக்குத் தெரியுமே.. :-)
என்னமோ சம்பந்தமில்லாத மாதிரி சொல்லிப்புட்டீங்க..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@"என் ராஜபாட்டை"- ராஜா

மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா.. நானும் உங்கள் பதிவினை தொடர வழி செய்யுங்கள்.. (follow button missing )
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அனு

piயோட mnemonic சூப்பர்..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy


இனிமே எனக்கு compliment / complement குழப்பம் வராது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

வெங்கட் said... [Reply]

சின்ன வயசுல Sweet - Sweat இதுல
சில சமயம் குழப்பம் வரும்...

ஸ்வீட்னா ரெண்டு " ஈ " ( E ) இருக்கும்னு
ஒரு முடிவுக்கு வர வருவோம்..!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

என்னடா நேத்து ராத்திரி கனவுல சம்பந்தமில்லாம ரெண்டு 'ஈ' வந்திச்சேன்னு நெனைச்சேன்..

நீங்க சொன்ன 'ஸ்வீட் ட்ரீம்ஸ்' க்கு அர்த்தம் இப்ப வெளங்கிரிச்சு.. ..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

ஸ்ரீராம். said... [Reply]

week- weak .....a for anaemia..!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

அஹா..
எல்லாருமே நல்லாவே யோசிக்கராங்கப்பு..
நா ஒன்னும் ஸ்பெஷல் இல்லை போல..

பெசொவி said... [Reply]

good post!

:)

RAMA RAVI (RAMVI) said... [Reply]

வணக்கம் மாதவன். உங்க பதிவிர்க்கு புதியதாக வருகிறேன்.அருமையாக இருக்கிறது.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RAMVI

மிகுந்த நன்றி ராம்வி..
மீண்டும் வருக.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நல்ல பகிர்வு. நினைவில் நிறுத்த எத்தனை வழிகள் சொல்லித் தந்திருக்கிறார்கள் நமக்கு.....

பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said... [Reply]

தங்கள் பதிவுகள் அனைத்துமே
பயன்தரத் தக்கவைகளாகவே உள்ளன
நன்றி.தொடர வாழ்த்துக்கள்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...