நான் -ஸ்டாப் நான்சென்ஸ் !


ஒரு முறை செல்வா வேலை நிமித்தமாக சென்னைக்கு அருகில் இருக்கும் கூடுவாஞ்சேரி  செல்ல நேரிட்டது. அவர் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு நேரடியாச் செல்லும் பேருந்தில் செல்வா ஏறிக்கொண்டார். கண்டக்டர் வந்ததும், அவரிடம். 

செல்வா     : இந்த பஸ் சென்னை போகும்தான ?

கண்டக்டர் : போர்டை பாக்காம ஏற வேண்டியது.
கேள்வியப் பாரு.. கேள்விய.. ம்ம்.. போகும்.. போகும்.

செல்வா     : கூடுவாஞ்சேரி வழியாத் தான போகும் ?

கண்டக்டர் : போகும்.. ஆமா.. அமா..    ம்ம்..  வந்துட்டானுக.. கூடுவாஞ்சேரி.. கூம்மிடிப்பூண்டினு.. சொல்லிக்கிட்டு..

செல்வா     : எனக்கு கூடுவாஞ்சேரி ஒரு டிக்கட் தாங்க.

கண்டக்டர் : ஸ்ஸ்ஸ்.. கூடுவாஞ்சேரிலாம்  நிக்காது..  ஒன்லி சென்னை டிக்கெட் தருவேன்..  சென்னை மட்டும் ஏறு..

செல்வா     : ஏன். ஏன்.. அது வழியாத் தான போகுது.. அங்க போனதும் வண்டிய நிறுத்த வேண்டியதுதான.. நா இறங்கிப்பேன்..

கண்டக்டர் : இவரு பெரிய ------------------ ? வந்துட்டானுக.. யோவ், இது 'Non-Stop' வண்டி.. மொதல்ல முன்னாடி போயி  போர்டைப் பாத்துட்டு வா..

செல்வா முன்புறம் சென்று 'சென்னை' மற்றும் 'Non-Stop' போர்டுகளை பார்த்து விட்டு கண்டக்டரிடம் மீண்டும்..

செல்வா : இது 'Non-Stop' தான். ஆனா,  அதுக்கு என்ன அர்த்தம் ?

கண்டக்டர் : அப்படிக் கேளு.. ஜிம்பலக்கடி பம்பா.. -- இந்த வண்டி கெளம்பினா எங்கயுமே நிக்காது.... அதாம்பா.. நோ ஸ்டாப்பு.. -- நான் ஸ்டாப்பு..

செல்வா : அப்போ சென்னையில  மட்டும் எப்படி நிக்கும் ?

கண்டக்டர் : (கடுப்பாகி) ம்ம்.. சென்னை போன ஒடனே.. இந்த போர்டை எடுத்துடுவோம்..  வண்டி தானா நின்னுடும்..

செல்வா : (நன்றாக யோசித்து) ஓகே.. எனக்கு சென்னை ஒரு டிக்கட் கொடுங்க.. நா கூடுவாஞ்சேரில இறங்கிக்கறேன்..

கண்டக்டர் : யோவ்.. சொல்லுறது புரியலையா.. அங்க வண்டி நிக்காது..

செல்வா : அத நா பாத்துக்கறேன்.. நீங்க டிக்கெட் கொடுங்க..

பயணம் இனிதே(!) ஆரம்பித்தது ..
------------------------- தொடர்ந்தது..

இன்னும் சற்று நேரத்தில் கூடுவாஞ்சேரி வரவிருந்தது..

செல்வா தனது மூட்டை முடிச்சுக்களை எடுத்துக் கொண்டு.. வண்டியின் முன்புறம் நோக்கி நடந்தார்.. நேரே சென்று 'Non-Stop' என்று எழுதி இருந்த பலகையை எடுக்க முயற்சித்தார்.. பலனில்லை.. போல்ட் நெட் போட்டு இரும்புப் ப்ளேட்டில் நன்கு  ஃபிக்ஸாகி இருந்தது. 

திடீர் யோசனை..  உடனே செயல் படுத்த செல்வா ரெடி..

தனது பையிலிருந்து ஒரு  ப்ளாங்க்   பேப்பர் மற்றும் ஃபெவி-ஸ்டிக் எடுத்தார். பேப்பரில்  ஒரு பக்கம் ஃபெவி-ஸ்டிக் தடவி பலகையில் எழுதி இருந்த 'Non-' என்பதன்மேல், பேப்பரை ஒட்டும் பணியில் தீவிரமாக இறங்கினார்....
============================ 

33 Comments (கருத்துரைகள்)
:

எஸ்.கே said... [Reply]

பேப்பரை ஒட்டும் பணியில் தீவிரமாக இறங்கினார்....//
அதுசரி, பஸ்ஸில இருந்து இறங்கினாரா?:-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

இதற்கு செல்வாதான் பதில் சொல்ல வேண்டும்..

செல்வா said... [Reply]

செல்வாவ இவ்ளோ அறிவாளியா மாத்தினதுக்கு ரொம்ப நன்றினா :-) ஹி ஹி ஹி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

செல்வா எஸ்.கே கேட்ட கேள்விக்கு என்ன பதில் ? அதையும் சொல்லிட்டுப் போ, மகராசா..

Mohamed Faaique said... [Reply]

செலவா......அலேர்ட் ஆகிக்கப்பா.... சர்தார்ஜி... விஜய் வரிசைல அடுத்து நீதாம்ப்பா.....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Mohamed Faaique

அகங்களலாம் தோக்கடிச்சு.. ஃபர்ஸ்ட் ப்ளேஸ்க்கு வரணும்.. அதுதான் செல்வாவோட குறிக்கோளே.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அப்போ சென்னை பஸ்ல ஏரி, போர்ட்ல மதுரைன்னு எழுதிட்டா என்னாகும்?

கவிதை வீதி... // சௌந்தர் // said... [Reply]

ஆஹா ஆரம்பிச்சிட்டங்கப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

ஏரி இல்லை, ஏறி!

தமிழ்மணி said... [Reply]

என்ன செல்வா இப்பிடி கிளம்பிட்டாங்க..... உங்களுக்கு போட்டியாக அயல்நாடு சதிபண்ணுது செல்வா.... பொறுத்தது போதும் பொங்கி எழுந்து இன்னொரு பதிவு போடுங்க.....

கௌதமன் said... [Reply]

தொடரும்?

Anonymous said... [Reply]

நல்ல 'ஆஹா'...வாழ்த்துக்கள் நண்பரே...

RAMA RAVI (RAMVI) said... [Reply]

ஹா ஹா ஹா நல்ல வேடிக்கை...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

எழுதிப் பாருங்க.. அப்புறமா தெரியும்.. (எங்களுக்கும்தான்)

Yaathoramani.blogspot.com said... [Reply]

கண்டக்டர் இவ்வளவு நாகரீகமாகவா பேசினார்
ஆச்சரியமா இருக்கே!
ஒருவேளை ப்ரைவேட் பஸ்ஸா?
கண்டக்டர் தண்ணி போட்டு
நிதானம் இல்லாமல் இருந்தாரா?
இல்லையானால் இவ்வளவு நாகரீகமாக
பேசமாட்டார்களே !
சரி அடுத்த முறை சென்னை செல்லும் போது
அந்த அயோக்கியர் யாரென்று விசாரிக்கிறேன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@தமிழ்மணி

செல்வா..
பொங்குக பொறுமையுடன் பெருமையாக..

Thanks Thamizhmani for ur first visit (!) & comments.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@kggouthaman

அவர் (செல்வா) ஒரு தொடர்கதை..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Reverie

நல்ல நன்றி.. வாழ்த்திற்கும், ஆஹாவிற்கும்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RAMVI

வேடிக்கை, நமது வாடிக்கை ..
--(thanks to Dir. Visu )

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Ramani

ஹா..ஹா.. இந்த மாதிரி ஸ்டைலா பேசறவரு நம்ம ராமசாமி (பன்னிக்குட்டி) .. அவரைத்தான் மனசில நெனைச்சு இப்படி எழுதினேன்

சௌந்தர் said... [Reply]

இப்படி பண்ணது செல்வா வா மாதவனா..??

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சௌந்தர்

ஹா.. ஹா.. சௌந்தர்..
சி.ஐ.டி ல ட்ரைனிங் எடுத்துக்கிடீங்களா ?

வெளங்காதவன்™ said... [Reply]

இம்புட்டு அமைதியா பேசுன அந்தக் கண்டக்குட்டர் வாழுக!

#செல்வா மொக்கைதான் முடியலைன்னா, நீங்களுமா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெளங்காதவன்

கண்டக்டர் வாழ்க..
ரமணிக்கு சொன்ன பதில படிங்க வெளங்காத சாரு..

வெங்கட் said... [Reply]

// பேப்பரில் ஒரு பக்கம் ஃபெவி-ஸ்டிக்
தடவி பலகையில் எழுதி இருந்த 'Non-'
என்பதன்மேல், பேப்பரை ஒட்டும் பணியில்
தீவிரமாக இறங்கினார்.... //

இதுக்கு பேசாம அவர் ஓடற பஸ்ல
இருந்து கண்டக்டரை தள்ளி விட்டிருக்கலாம்..!!

அப்ப பஸ்ஸூ நின்னு தானே ஆகணும்..!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

// இதுக்கு பேசாம அவர் ஓடற பஸ்ல
இருந்து கண்டக்டரை தள்ளி விட்டிருக்கலாம்..!! //

இப்படிலாம் பண்ணிடுவாங்கலோனு தான் கண்டக்டர் அப்பவே யூனி ஃபார்ம மாத்திட்டு பாசெஞ்சரோட பாசெஞ்சரா சைலென்ட் ஆகிட்டாரா..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... [Reply]

Thaaaangala...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... [Reply]

Thaaaangala...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NIZAMUDEEN

சாரி சார்.. நீங்க ரெண்டு தடவ இத படிச்சிருக்க வேணாம்.. அதான்..

ஸ்ரீராம். said... [Reply]

:))

A.R.ராஜகோபாலன் said... [Reply]

நல்ல சுவையான பகிர்வு மாதவன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

&

@
A.R.ராஜகோபாலன்


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..

R. Gopi said... [Reply]

மாதவன், நீங்கதான் அந்த கண்டக்டரா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...