ரெண்டு கேள்விகள்

ரெண்டு கேள்விகள் சார்...  தெரிஞ்சா பதில் சொல்லுங்க....

ஒண்ணு :
சின்னப் பொண்ணு.. யு.கே.ஜி படிக்கறா....
கணக்குல நம்பர் நூறுக்கு மேல சொல்லிக் கொடுக்கறாங்க..
one zero zero = hundred..  = 100
one zero one = one hundred one  101
......
....
...
one zero nine = one hundred nine = 109
one zero ten = one hundred ten  = 1010

எப்படி சின்ன பொண்ணுக்கு புரிய வெப்பேன்.. அவ ரொம்ப கன்பியூஸ் ஆயிடுறா.

ரெண்டு

பையன் மூணாவது படிக்கறான்.. அவன் பொறந்த மாசம் சம்மர் ஹாலிடேஸ்ல வரும்..
ஸ்கூலுல மத்த பசங்கலாம் பிறந்த நாள் சாக்லேட் தராங்களாம்.. என்னோட சின்ன பொண்ணு, கூட பர்த் டே வந்தா சாக்லேட் கிளாஸ்ல டிஸ்ட்ரிபூட் பண்ணுவா.. அதெலாம் பாத்தா என்னோட பையனுக்கு வருத்தம்.... தன்னோட பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்க முடியல..

போன வருஷம், நவம்பர் பதினாலு, குழந்தைகள்  தினத்துல ஸ்கூலுல சாக்லேட் தர ஏற்பாடு பண்ணோம்.. அவனுக்கு அதில திருப்தி இல்ல.... அவன் இப்ப கேக்குறான்
"அம்மா பர்த்-டே வ செர்டிபிகேட்ல மாத்த கவர்மென்ட்கிட்ட அப்ளை பண்ணலாமா ?"

போன வாரம் பிரண்டு ஒருத்தரோட பேர மாத்த கவர்மென்ட் கிட்ட அப்ளை பண்ணி கேசட்ல பப்ளிஷ் பண்ணலாம்னு நாங்க பேசிக்கிட்டு இருந்தத காதால கேட்டதால இப்படி கேக்குறான் போல.. !!


16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 3)

முஸ்கி 1 : பார்ட் - 1 & பார்ட் - 2 படிச்சிட்டீங்களா ?

11. பிடிச்ச மூன்று உணவு வகை? 
சர்க்கரைப் பொங்கல் (இனிப்பு)        
பாகற்காய் பிட்லே (கசப்பு)
மிளகாய் பஜ்ஜி (காரம்)                     

12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்? 
ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)       
நடந்த கால்கள் நொந்தவோ.. (பிரபந்தம்)
அஞ்சல் மட அன்னமே (நளவெண்பா பாடல்)  

13) பிடித்த மூன்று படங்கள்? 
தாத்தா பாட்டி (தந்தையின் பெற்றோர்) கருப்பு வெள்ளை (புகை)படம்.
   ---  இந்த ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது. :-)
   ---  தாயின் பெற்றோரின் புகைப்படம் ஒன்று கூட இல்லை    :-(
 
எங்கள் தந்தையின் பிறந்த நாளில்.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது...(டிஜிட்டல் முறையில் கலர் புகைப்படம்)
இந்திய மூவர்ணக் கோடி பட்டொளி வீசி பறக்குது  (மூவர்ணப் படம்)
மத்தபடி.. திரைப்படம்லாம்  என்னை ரொம்ப கவரல. சரியாச் சொல்லனும்னா, திரைப்படம் இப்பலாம் பணம் பண்ணுற தொழிலா இருக்கு.. எனக்கு பிரயோஜனம் இருப்பதா தெரியல.

14 ) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்
HIJKLMNO (H20 -- நீலு, பாணி, தண்ணீர்)            
O & O (ரெண்டு ஒ, அதான்.. O2 --- பிராண வாயு)
உடை ( மானம் போனபின் வாழ்வது ஒரு வாழ்வா ? )


15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்? 
கோபத்தை கட்டுப் படுத்துவது (முக்கியமாக குழந்தைகளிடம்)
இசை 
ஏரோப்ளேன் ஓட்டுவது.                                                    

16 ) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள் (மனிதர்கள்)?   
ஆதிமனிதன்  (வலையுலக நண்பர்)                                             
wwவெப்மனிதன் (வலையுலக மனிதன்-நன்றி கூகிள் தேடல்) 
ஆகாயமனிதன் (நன்றி கூகிள் தேடல் )                                      

அம்புட்டுதேன்....  பொறுமையாக (!) படித்த அனைவருக்கும் நன்றி !

16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 2)

முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் மறுபடியும் நன்றி..
முஸ்கி 2 : பார்ட் - 1  படிச்சிட்டீங்களா ? .. அப்ப இத தாராளமா படிக்கலாம்.
முஸ்கி 3 : ரெண்டு முஸ்கிதான் போட முடிஞ்சுது.
தொடர்ச்சி..........

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
நைட்ரஸ் ஆக்சைட் (Nitrous Oxide)                          
திரு. அவரைப்  பருப்பு  (Mr. Bean )
காமெடி ஜோக்குகள்.                                                 

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
படித்தேன் -- எனவே யோசனை.. "அட்லீஸ்ட் ஒரு வயசுல கெளம்பி ஒளி வேகத்துல போயிருந்தா.. இந்நேரம் அந்த வேற்றுக் கிரகத்த அடைந்திருக்கலாம்.."
வீட்டு ஃபோன்ல வயர் காண்டாக்ட் பிராப்ளம்.. ஓபன் பண்ணி சரி செஞ்சேன் (ஃபோன் வயர் பிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு..)
அட.. ஒடனே யாரோ ஃபோன் பண்ணுறாங்க.. அட்டென்ட் பண்ணிட்டு வரேன்.. வெயிட்.

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
எப்படியாவது நோபெல் பிரைஸ் வாங்கிடணும் ..                               
முனைவர் பட்டம் வாங்கணும்  (கூடிய சீக்கிரம்)
உலகத்துக்கு உருப்படியா பயன் படுறமாதிரி ஏதாவது செய்யணும்    

9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.
முனைவர் பட்டமாவது வாங்க முடியும் (!)                                            
புரிந்து கொண்டு, ஆர்வமுள்ள திசையில் செல்ல
மாணவர்களுக்குஊக்கம் தருவது.
எப்படியாவது மூணாவது விஷயத்தையும் எழுத முடியும்.. (இப்படித்தான்) 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
இதை எங்கிட்ட கேக்குறது  (யோசிக்க வெச்சதுக்காக) 
ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ணுங்க(!)
இப்படி தப்பு செஞ்சிட்டீங்களே !                                         

டிஸ்கி : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதுனதுக்கு மூணு காரணங்கள்
  1. வளவளனு எழுதினா படிக்க சலிப்பு தட்டிடும் (இப்ப மட்டும் என்னவாம்)
  2. யோசிச்சு யோசிச்சு பொறுமையா எழுதலாம் (எழுத நேரம் கிடைக்கும்) 
  3. தொடர்பதிவ தொடர்ந்து எழுதி புதுமை செய்வது... (ரொம்ப முக்கியம்)
                   ------------ தொடர்(ரும்)பதிவு  


16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 1)

முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் - மனமார்ந்த நன்றி..
முஸ்கி 2 :  தொடர் பதிவு -  தொடரா எழுதுறதுதான ?
                  அதான் மூணு பார்ட்டா, எழுதப்போறேன்..
முஸ்கி 3 :  ஏதாவது வித்தியாசமா எழுத ஒரு முயற்சி..
                  (சாம்பிள்தான் முஸ்கி #2 . முஸ்கி கூட மூணு)

இனி.. ஸ்டார்ட் மியூசிக்.. 

நான் 

1) விரும்பும் மூன்று விஷயங்கள்...
அருமையான குளியல்                            
அளவான சாப்பாடு 
அமைதியான தூக்கம்                             

2) விரும்பாத மூன்று விஷயங்கள்...
குளிக்காமல் சாப்பிடுதல்                                             
சாப்பிடாமல் (பசியோடு) தூங்குதல்
தூங்காமல் குளித்தல் (குளிச்சா தூக்கம் வராதாமே) 

3) பயப்படும் மூன்று விஷயங்கள்...
கெட்ட கனவுகள் (நாளைக்கு எக்ஸாம், படித்ததுலாம் மறந்துடிச்சே!)
மனிதர்களின் பேராசை (உலக நலன் கருதி)
இயற்கை பேரழிவு (உலக நலன் கருதி)                                                  

4) புரியாத மூன்று விஷயங்கள் (இதுவரை)...
உலகில் முதன்முதலில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பித்த
ஆசிரியர் எந்த பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று வந்தார்?               
மூணுமாசக் குழந்தைக்கு என்னவெல்லாம் தெரியும் ?
C++ கணணி மொழி                                                                            

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்... 
12.4 செ.மீ நீளம், 2 செ.மீ விட்டமுள்ள ஒரு உலோகக் குழாய்
எங்கள் பிளாக் தொடர அழைத்த பதிவோட பிரின்ட் அவுட் 
         (பாத்து பாத்து பதில் எழுதணுமில்ல..)
ஒரு ஜோடி செருப்பு(பிராண்ட் நியூ) இருக்கும் அட்டைப் பெட்டி  

       ------------ தொடர்(ரும்)பதிவு
Indli Link  

மனதில் பட்டவை (10-09-2011)

மொதல்ல ஒரு கேள்வி.. "உலோகம்(Metal) 'தங்கம்'(gold) எங்க(where) இங்க கிடைக்கும் விலையை விட சீப்பா(cheap) கெடைக்கும்(available) ?". பதில் கடைசில..

நாட்டுல நமக்கு வேண்டிய வேலை சரியானபடி நடக்கலேன்ன கடுப்பு வருதில்ல. அதே மாதிரி சாரி.. சாரி... அதுக்கு நேர்மாறா நாம எதிர்பாக்காத டயத்துக்குள்ள வேலைய முடிச்சு தந்தாங்கன்னா அவங்களுக்கு நன்றி சொல்ல நாம கடமை படுறோம் இல்லையா..

2009 -10 க்கான வருமான வரி ரிட்டன் ஜூலை 2010 ல சப்மிட் பண்ணிட்டு கெடைக்கவேண்டிய பாக்கிப் பணம் டிசம்பர்  முதல் வாரத்துலேய நேரடியா என்னோட வங்கி கணக்குல கெடைச்சதுக்கு ஏற்கனவே இந்தப் பதிவுல நன்றி சொல்லிட்டேன். அஞ்சு மாசத்துக்குள்ள பணம் கெடைச்சது ரொம்ப ஆச்சர்யமாவும்.. பாராட்டும் பணியாகவும் இருந்தது....

அந்த ரெக்கார்ட பிரேக் பண்ணிட்டாங்க அதே வ.வரி துறை... எப்படியா..? 2010 - 11க்கான நிதியாண்டு ஐ.டி. ரிட்டன் ஜூலைல சப்மிட் பண்ணேன் .. அட இங்கப் பார்டா.. ரெண்டு மாசம் கூட முடியல.. அதுக்குள்ள கெடைக்கவேண்டிய பாக்கிப் பணம் நேரடியா என்னோட வங்கி கணக்குல கிரெடிட் ஆகிடிச்சு.  Three Cheers to our Income Tax Dept..
-------------------------------
இப்பலாம் கூகிள் பஸ்ல ஏறி ஊர் சுத்துறதால, பிளாக் பக்கம் ரொம்ப வர்றதில்ல.. பிலாகிலயும் தொடர்ந்து ஈடுபடணும்னு மனசு சொல்லுது.. ம்ம்... பாப்போம்.. அதே காரணத்தால மத்தவங்க பதிவ படிக்க முடிஞ்சாலும் கமெண்டு போட டயம் இருக்குறதில்ல.. அதையும் சரி செய்திடணும்.. ம்ம்ம்.. பாக்கலாம்..  
-----------------------------
இப்பலாம் நெறைய விஷயம் இங்கிலீசுல படிக்கறதுனால.. தமிழ் வார்த்தைய (அர்த்தம் புரிஞ்சாலும்) எப்படி ஆங்கிலத்துல சொல்லுறதுன்னு புரியல.. உதா : அழைப்பாணை, விழிப்புணர்வு, மெய்த்தன்மை 
----------------------------

ஒருவர் : வெயில் தாங்கமுடியல... எப்படித்தான் ராஜதானி எக்ஸ்ப்ரெஸ்ல நேரத்த ஓட்டப் போறேனோ..?
மற்றவர் : ராஜதானி எக்ஸ்ப்ரெஸ்ல எல்லா கம்பார்ட்மெண்டும் ஏர்-கண்டிஷண்டு  தான.. .. அத்தோட சாப்பாடும் தருவாங்களே.... என்ன கஷ்டம்..?
அந்த ஒருவர் : நா அந்த டிரைன ஓட்டப்போற  டிரைவர்..
---------------------------------------------------------------
முதல் கேள்விக்கான பதில் 'நிலவுல' .. அங்க தங்கம், இங்க விக்கிற வெலைய விட 5  பங்கு  கொறச்ச வெலையில கெடைக்குமாம்..  எப்படியா..? அங்க கிராஜுவட்டி .. சாரி.. சாரி கிராவிட்டி(gravity 'g ' )  பூமியைவிட அஞ்சு மடங்கு சின்னது.  அதனால பூமில 1 கிலோகிராம் எடையுள்ள பொருள் நிலவுல கிட்டத்தட்ட 160 - 170   கிராம்  மட்டுமே இருக்குமாம்.. .. ஒகே.. ஒகே சாவகாசம கணக்கு போட்டுப் பாருங்க.. 

அப்போ ரைட்.. பஸ்ல (BUZZ) பயணம் பண்ணப் போறேன்.. 
------------------------------------------

'சிரிப்பு போலீஸ்' பெயர்க் காரணம்

முஸ்கி : இந்தப் பதிவு சிரிப்பு போலீஸ், ரமேஷ் பிறந்த நாளுக்கு அற்பணிப்பு....   

ஃப்ளாஷ் நியூஸ் : 'சிரிப்பு போலீஸ்' பெயர்க் காரணம் அம்பலம்
  சுட்டப் படம் - இடம் 'சிரிப்பு போலீஸ்'

சென்னை : பிரபல (?) வலைஞர் ஒருவர் 'சிரிப்பு போலீஸ்' என தனது வலைமனைக்கு பெயர் வைத்தது ஏன் என்பது திடீரென அம்பலமானது. இது பற்றி எமது சிறப்புச் செய்தியாளர் தெருவிக்கிறார்.......

ஸ்டுடியோவிலிருந்து (ஸ்டு ) : ஹலோ.. நா பேசுறது கேக்குதா..? 
சிறப்பு செய்தியாளர் (சி. செ) : ..... வயதிலிருந்து அவர்...   ர்பம்ம்ம்மம்ம். .

ஸ்டு  : மன்னிக்கவும்  இணைப்பில் ஏதோ கோளாறு... மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிசெயகிறோம்..இதோ.. இதோ..  எமது சிரிப்பு சாரி.. சாரி.. சிறப்பு செய்தியாளர் .. சொல்லுங்க (மொக்க)ராசா..

 சி. செ : சிரிப்பு போலீஸ்' என தனது வலைமனைக்கு பெயர் வைத்தது ஏன் என்பது திடீரென அம்பலமானது. சிரிப்புக்கும், போலீசுக்கும் துளிக்கூட சம்பந்தமே இல்லாத ஒருவர் அவற்றை தனது வலைமனையின் பெயராக பயன்படுத்தி வருகிறார். இது பற்றி தற்போது திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அவர் அந்த சொற்களை பயன் படுத்துவதற்கெதிராக தொடரப் பட்ட பொது நல வழக்கு விசாரணையின்போது நீதி மன்றத்தில் அவர் சார்பாக வாதாடிய வக்கீல் அந்த தகவலை நீதியரசரிடம் சொன்னார். சின்ன வயதில் திருடன் போலீஸ் விளையாட்டில் அவர் திருடனாக மட்டுமே இருக்க முடிந்ததாம். அதனால் அவர் சோகமாக வேறு விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினாரர். பின்னர் சற்று எழுதப் படிக்க தெரிந்தபின், அவர் அறுவர் விளையாடும் 'ராஜா, ராணி, மந்திரி, சேவகன், திருடன் & போலீஸ்' விளையாட்டு விளையாடினார். அதிலும் ஒரு முறைகூட போலீசாக முடியவில்லை. எப்போதும்  திருடனாகவோ, சேவை செய்யும் சேவகனாகவோ வந்து சோகம் ததும்பும் நாட்களை வெறுப்புடன் சந்தித்தார். படித்து(!) போலீஸ் வேலைக்கு விண்ணபித்து, ஒவ்வொரு முறையும் பல்வேறு காரணங்களால் அவ்வேலை கிடைக்காததால் வாழ்வில் சோகமே தொடர்ந்தது. இந்த பழைய நினைவுகளால் உந்தப் பட்டு தன்னுடைய வலைமனையிலாவது 'போலீசும், சிரிப்பும்' இருக்கட்டுமே என அப்பெயர் வைத்தார் தனது கட்சிக்காரர் என்றும் வாதாடினார் அவ்வக்கீல்...... (
ரமேஷு.. எப்போ , எந்த கட்சில சேந்தீங்க..?)


--------------------