சரஸ்வதி பூஜை - 2011

இன்றைக்கு சரஸ்வதி பூஜை. எதேச்சையாக கூகிள் படங்களில், 'சரஸ்வதி' தெரிந்தாலும், பல படங்களில் ஒன்றே ஒன்று மட்டும் எனது கண்களுக்கு பளிச்செனத் தெரிந்தது.. ஏன்.. ஏன்.. ஏன் ?
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்த நாட்களில், பள்ளியில் சரஸ்வதி பூஜை மதியம் மூன்று மணி சுமாருக்கு நடக்கும். 'படிக்க வேண்டாம், சுண்டலும் கிடைக்கும்', இந்த இரு காரங்களினால் ஆசையாக பள்ளிக்கு செல்லும் ஒரே நாள், இந்த நாள். அங்கு சரஸ்வதியின் படம் (கண்ணாடி ஃபிரேம் போட்டிருக்கும்) வைத்து பூஜை செய்து பின்னர் கருப்பு கொண்டக் கடலை சுண்டல் கொடுப்பார்கள். அந்தப் படத்தினை (நன்றி கூகிள்) பல வருடங்களுக்குப் பின்னர் கூகிள் இமேஜாகப் பார்த்தேன் இன்று.. முப்பது வருடங்களுக்கு முன்னாள் நடந்த நிகழ்ச்சி கண்முன் வந்து போகிறது. 
" மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி..
செந்தமிழ் சொல்லெடுத்து  பாடவந்தோம்.. .."
இந்தப் பாடல் பொதுவாக இன்றைய தினம், கொலு வைத்த எல்லார் வீட்டிலும் பாடப் படும்.  அதுவும் நினைவில் வருகிறது..

இந்தியாவின் நாளைய தூண்கள், இன்றைய மாணவர்கள் நல்ல கல்வி, வித்தை கற்று வாழ்வில் தனக்கும், சமூகத்திற்கும் நல்லது செய்து நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள். கலைவாணி அதற்கு அருள் புரிய வேண்டி இப்பதிவு.

9 Comments (கருத்துரைகள்)
:

Ramani said... [Reply]

இந்தப் பழைய ஸரஸ்வதி படம்
எங்கள் வீட்டிலும் இருந்தது
இப்போது தங்கள் பதிவில் பார்க்க
அனைவரும் ரொம்ப சந்தோஷப்பட்டோம்
இனிய நவராத்திரி திரு நாள் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said... [Reply]

உண்மைதான். அந்தப் படம் ரொம்பப் பொதுவான படம். அது சரி...செந்தமிழ் சொல்லெடுத்த, தேன் தமிழ் சொல்லேடுத்தா...

NAAI-NAKKS said... [Reply]

ஹி ...ஹி...

NAAI-NAKKS said... [Reply]

நாம பெரியாரிஸ்ட் ...அதான்

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நல்ல பகிர்வு... :)

RAMVI said... [Reply]

ஆஹா..அந்த சரஸ்வதி படம்..
எங்க வீட்டுலேயும் ரொம்ப வருடங்களுக்கு இருந்தது.
இனிமையான நினைவுகளை மீண்டும் தந்ததற்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ Sriram
// செந்தமிழ் சொல்லெடுத்த, தேன் தமிழ் சொல்லேடுத்தா... //

சின்ன வயசில வார்த்த சரியா தெரியாம மத்தவங்க பாடுறதே கேட்டு கேட்டு பாடினது..

Thanks to all those who expressed their happiness abt. such green memories.

Lakshmi said... [Reply]

இந்த சரஸ்வதி படமும் மாணிக்க வீணையேந்தும் பாடலும் என்றுமே மறக்கமுடியாத நினைவுகள் தான்.

middleclassmadhavi said... [Reply]

சின்ன வயது நினைவுகள் பொக்கிஷங்கள் தாம்.

எனக்கு மீசை வைத்த பரமசிவன் படம் நினைவில் நிற்கிறது!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...