இந்த பிலாகுல, என்னோட சொந்த விஷயங்கள / நடந்த நிகழ்ச்சிகள அதிகமா எழுதினதில்ல.. நம்ம பொலம்பல எதுக்கு இங்க எழுதி வாசகர்கள (!) கஷ்டப் படுத்தணும்னுதான். இருந்தாலும் உபயோகமா (!) இருக்கும்ணு மனசுல பட்டா, அத எழுதுறது வழக்கம். அந்த வரிசையில இதோ...


ரயிவே சர்வர்தான் ஸ்லோன்னு இல்ல பேமென்ட் gateway வங்கியும் ஸ்லோவா இருந்திச்சு.. அந்தக் குழப்பத்துல நானும் தப்புத்தப்பா (எப்படியோ) பாஸ்வேர்ட் டயிப் பண்ணிட்டேன் போல.. என்னோட ஆன்லையன் அக்கவுன்ட் டிசெபில் ஆயிடிச்சு.. தெரிஞ்ச ஒருத்தரோட அக்கவுன்ட வெச்சு புக் பண்ணினேன். புக்கிங் ஆனா போதுமே.
இந்த ஆன்லையன் அக்கவுன்ட் அடுத்த நாள் ஆக்டிவ் ஆயிடும்.. அதனால கவலை இல்லை.( அப்புறமா ஆக்டிவ் ஆயிடிச்சு.. செக் பண்ணிட்டேன்)
அந்தோ பாருங்க.. நேத்திக்கு ஈவினிங் 'ஏ.டி.எம்'லயும் பாஸ்வேர்ட் தப்பா போயிடிச்சு.. அதுவும் லாக்.. இருப்பத்தி நாலு மணி நேரம் கழிச்சுத்தான் அதுக்கு விடிவு காலம் வருமாம். எவ்ளோவோ பண்ணிருக்கோம்.. வெயிட் பண்ண மாட்டோமா?.
பாஸ்வேர்ட் ரெகவரி சிஸ்டம் இன்னும் பெட்டரா இருந்தா தேவல.. ஆங்.. பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதுக்கு எந்த பங்கமும் வரக்கூடாது..
என்னமோ மனசில பட்டது.. எழுதிட்டேன்.. வங்கி/பணபரிமாற்ற விஷயங்கள்ல கவனமா இருக்குறது எப்பவுமே நல்லது....
--------------------------------------------------------------------
11 Comments (கருத்துரைகள்)
:
தகவலுக்கு நன்றி ...
IRCTC பல சமயங்களில் தொந்தரவு செய்யும்...
வங்கிகளின் கேட்வே கூட நிறைய பிரச்சனைகள் தருகிறது... பயன்படுத்தும் போது ஜாக்கிரதை உணர்வு தேவை தான் நண்பரே....
என் பக்கத்தில் மீள் பதிவு! பற்றி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுதி இருக்கேன்....
கணக்கு புலிக்கே கணக்கு (பாஸ் வர்ட்) தப்பாகுதா?
// வங்கி/பணபரிமாற்ற விஷயங்கள்ல கவனமா இருக்குறது எப்பவுமே நல்லது. //
ஆமாம் மாதவன்,நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி.
எவ்வளவு வசதிகள் சவுரியங்கள் புதுசு புதுசா வந்தாலும் நமக்கு அதை உபயோகப்படுத்துவதில் சில குழப்படிகள் இருக்கத்தான் செய்யுது.
ஆம் நண்பரே நாம் எப்போது எதிலுமே கவனமாக இருக்க வேண்டும்
rightly said!
// நம்ம பொலம்பல எதுக்கு இங்க எழுதி வாசகர்கள (!) கஷ்டப் படுத்தணும்னுதான். இருந்தாலும் உபயோகமா (!) இருக்கும்ணு மனசுல பட்டா, அத எழுதுறது வழக்கம். //
நல்ல வழக்கம்.. :)
எவ்வளவுதான் திட்டமிட்டுச் செய்தாலும் சில சமயம் இப்படி தவறுகள் நேர்ந்து விடுகின்றன. பொங்கல் நேரத்து பயண முன் பதிவுகள் முடிந்து விட்டடது என்று செய்தி பார்த்தேன். இந்த மாதிரி நேரத்தில் ஊர்ப் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதிவு செய்யக் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது பாவம் என்று தோன்றும்.
எவ்வளவுதான் திட்டமிட்டுச் செய்தாலும் சில சமயம் இப்படி தவறுகள் நேர்ந்து விடுகின்றன. பொங்கல் நேரத்து பயண முன் பதிவுகள் முடிந்து விட்டடது என்று செய்தி பார்த்தேன். இந்த மாதிரி நேரத்தில் ஊர்ப் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதிவு செய்யக் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது பாவம் என்று தோன்றும்...
Friends, I have a suggesstion....
நான் சொல்லறதைக் கேட்குறதா வேண்டாமா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
நான் ஆகாய மார்கமாக செல்கிறேன். அதிக செலவில்லை.
சென்னை மன்னார்குடி அல்லது சென்னை திருச்சி கார் மூலம் செல்லாம்.
பின்னூட்ட கருத்து சொல்லிய அனைவருக்கும் நன்றி
cho visiri, அவர்களே.. நல்ல யோசனைதான்.
எனக்கு வேறு ஒரு யோசனையும் உண்டு.. முடிந்தால் ஓரிருநாள் முன்னதாக சென்றாலும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது..
Post a Comment