வருஷத்துக்கு ஒரு தடவை வர்றதுனால பண்டிகை தினம் எல்லாமே நல்ல ரசிச்சு.. ரசிச்சு கொண்டாடணும். அந்த வகையில எனக்கு தீபாவளி ரொம்ப பிடிக்கும். அது பத்தி ஒரு ஸ்மால் பதிவு.
சின்ன வயசுல.. ஸ்கூல் போற சமயத்துல விஜய தசமி வந்தாலே தீபாவளி பத்தி நெனப்பு ஆரம்பமாயிடும். அப்பலாம் அந்தளவுக்கு ரெடிமேட் ட்ரெஸ் மோகம் அதிகமா கெடையாது. துணி வாங்கி டைலர் கிட்ட கொடுத்து அளவா தைச்சிப்போம். தீபாவளி நெருங்க நெருங்க, டைலர் துணி ஆர்டர் வாங்க மாட்டாரு, கமிட் பண்ணிட்டா தீபாவளிக்குள்ள தைச்சு கொடுக்கணுமே அதான்.
தீபாவளிக்கு கண்டிப்பா மூணு நாலாவது ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. சனி, ஞாயிறு சேர்ந்து வந்தா அஞ்சு நாலு லீவு கூட கெடைக்கும். தீபாவளிக்கு முன்னாடி கடைசி ஸ்கூல் டேஸ்ல, அரைநாள் பள்ளிக் கூடம்தான். அந்த மத்தியான நேரத்துலேருந்து நண்பர்களோடு லூட்டிதான்.. கடைக்கு போயி வெடி வாங்குறது.. நண்பர்கள் ஒவ்வொரு வீடா வெடி வெடிக்க ஆரம்பிச்சுவோம்.
தீபாவளி முதல் நாள் காலையில் வெளியூரில் இருக்கும் அண்ணன்கள் வருவார்கள். ஸ்வீட்ஸ் பாக்ஸ், புது ட்ரெஸ்னு ஒவ்வொன்னா எடுத்து எல்லாருக்கும் காமிச்சு, கதை, அரட்டைன்னு.. அப்படியே சாயந்திரம் வந்துடும். ஈவினிங் கலர் மத்தாப்பு, கலர் ராக்கெட், ரயில்னு கண்ணுக்கு விருந்தளிக்கும் பட்டசலாம் கொளுத்துவோம். நைட்டு, அண்ணனோட சேர்ந்துக்கிட்டு, கடைக்குப் போவோம்.... ராத்திரி முழுவதும், ஜன சந்ததியோட கடைத் தெரு ஜக ஜோதியா இருக்கும். எதுவுமே வாங்கலைன்னாலும் இந்த ராத்திரி கடைவீதி விசிட் என்ஜாய் பண்ற மாதிரி இருக்கும்.
அப்புறமா அரையும் கொறையுமா தூங்கும் போது அம்மா எழுப்பி விடுவாங்க.. சூரிய உதயத்துக்கு முன்னாடியே எண்ணெய் தேச்சு குளிக்கணும்னு எழுதப் படாத விதிபோல. இருந்தாலும் அது ஒரு தனி சொகம்தான். குளிச்ச ஒடனே புது ட்ரெஸ், பட்டாசு, தின்பண்டம்னு, காலை பத்து-பதினோரு மணி வரைக்கு ஓடிடும். அப்புறம் நண்பர்கள் வீட்டுக்கு செட்டா விசிட் பண்ணுவோம். லஞ்ச வரைக்கும் ஒவ்வொரு பிரென்ஸ் வீடா போயி.. வெடி, இனிப்பு/காரம்னு வயிறு ரொம்பிடும். ம்ம்ம்ம்.. மனசும்தான்.
அப்புறமா அரையும் கொறையுமா தூங்கும் போது அம்மா எழுப்பி விடுவாங்க.. சூரிய உதயத்துக்கு முன்னாடியே எண்ணெய் தேச்சு குளிக்கணும்னு எழுதப் படாத விதிபோல. இருந்தாலும் அது ஒரு தனி சொகம்தான். குளிச்ச ஒடனே புது ட்ரெஸ், பட்டாசு, தின்பண்டம்னு, காலை பத்து-பதினோரு மணி வரைக்கு ஓடிடும். அப்புறம் நண்பர்கள் வீட்டுக்கு செட்டா விசிட் பண்ணுவோம். லஞ்ச வரைக்கும் ஒவ்வொரு பிரென்ஸ் வீடா போயி.. வெடி, இனிப்பு/காரம்னு வயிறு ரொம்பிடும். ம்ம்ம்ம்.. மனசும்தான்.
இந்த மாதிரி இனி ஒரு தடைவ தீபாவளி கொண்டாட முடியுமா.. ? நண்பர்கள் ஒவ்வொருத்தரும் வெவ்வேற ஊருல செட்டில் ஆயிட்டதால கஷ்டம்தான். அட்லீஸ்ட் சொந்த பந்தகளோட கொண்டாடலாம்.. அதாவது முடியுதே, மகிழ்ச்சி.
தொண்ணூறுகளின் பின்னால் எப்படியோ தீபாவளி கொண்டாட்டத்த டி.வி ஆக்கிரமிக்க ஆரம்பிடிச்சு... நல்ல வேளை இப்பலாம் தீபாவளி சிறப்பு (!) நிகழ்ச்சி பாக்குறதில்ல. பிடிக்கல.
நான் தெரியாமத்தான் கேக்கறேன் சினிமா நடிக நடிகையர்கள் மட்டும்தான் தீபாவளி கொண்டாடுவாங்களா ?
அதென்ன.. எந்த பண்டிகையா இருந்தாலும் சினிமா சம்பந்தப் பட்ட ஆளுங்க மட்டுமே தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சில வராங்க.. அதும் என்னைக்கோ கொண்டாடின தீபாவளி போன்ற ஒரு நிகழ்ச்சியை அன்னைக்கு.. அப்பத்தான் கொண்டாடுற ஒரு பில்ட் அப்.. தேவையா.. ?
நல்ல நாள், பண்டிகையும் அதுவுமா, வயலென்ஸ்.. சண்டை. துப்பாக்கி, பாம்.. பழிவாங்கல். இப்பார் ஒன்னல்லு நாலஞ்சு படம் .. பாத்து பாத்து செலெக்ட் பண்ணுவாங்க போல.
என்னது.. நீங்கலாம் ரொம்ப வருஷமாவே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை, இந்த ஒரு காரணத்துக்காகவே பாக்குறதே இல்லையா ? வெரி குட் !
சொந்த பந்த, சுற்றமும் நட்போட, நல்லா ரசிச்சு ருசிச்சு தீபாவளி கொண்டாட
சொந்த பந்த, சுற்றமும் நட்போட, நல்லா ரசிச்சு ருசிச்சு தீபாவளி கொண்டாட
"இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. "
-----------------------------
27 Comments (கருத்துரைகள்)
:
//நான் தெரியாமத்தான் கேக்கறேன் சினிமா நடிக நடிகையர்கள் மட்டும்தான் தீபாவளி கொண்டாடுவாங்களா ?
///
ஹன்சிகா மோத்வானி வாழுக!
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...
என்னது.. நீங்கலாம் ரொம்ப வருஷமாவே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை, இந்த ஒரு காரணத்துக்காகவே பாக்கப் போறது இல்லையா ? வெரி குட் !
...... Thanks..... :-)))))
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
happy diwali friend
தீபாவளி ஐம்புலன்களுக்கும் சந்தோஷம் அளிக்கக் கூடிய பண்டிகை. ஒவ்வொரு தீபாவளியின் இனிய அனுபவங்களும் அடுத்த தீபாவளி வரையிலும் நினைவில் நிற்கும். சில தீபாவளி நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் தங்கிவிடும்.
எல்லோருடைய இளமைகால நினைவுகளை திரும்பி பார்க்க வைச்சுட்டீங்க உங்க பதிவின் மூலமா.அருமையான நினைவுகள் மாதவன்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
குறிப்பிட்ட வயது வரை தீபாவளியை பலவிதங்களில் கொண்டாடும் நாம் அப்புறம் மற்றவர்கள் கொண்டாடுவதை ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் நண்பரே... ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒன்றும் பார்ப்பதில்லை என்றே வைத்திருக்கிறேன். அதுவும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என்றால் அலுப்பு தான் வருகிறது.
நல்ல பதிவு மாதவா. அவ்வப்போது இது மாதிரியும் எழுதவும்
Happy Diwali !!
நான் குறிப்பாக சொன்னது மன்னை இளமை காலத்து நினைவுகள் பற்றி
@வெளங்காதவன்
பேருக்கேத்த மாதிரிதான் பேசுறீங்க..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@Chitra
@"என் ராஜபாட்டை"- ராஜா
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@kggouthaman
//ஒவ்வொரு தீபாவளியின் இனிய அனுபவங்களும் அடுத்த தீபாவளி வரையிலும் நினைவில் நிற்கும். சில தீபாவளி நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் தங்கிவிடும். //
பத்தி பத்தியா சொன்னத ஒரு வரில சொல்லிட்டேங்க..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@RAMVI
//எல்லோருடைய இளமைகால நினைவுகளை திரும்பி பார்க்க வைச்சுட்டீங்க உங்க பதிவின் மூலமா.//
அந்தளவுக்கு இருக்கா ?
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@ஸ்ரீராம்.
ஆமா.. உண்மைதான் ஸ்ரீராம் சார்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@வெங்கட் நாகராஜ்
//ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒன்றும் பார்ப்பதில்லை என்றே வைத்திருக்கிறேன். அதுவும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என்றால் அலுப்பு தான் வருகிறது. //
மறுக்க முடியாத உண்மை.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@மோகன் குமார் //நான் குறிப்பாக சொன்னது மன்னை இளமை காலத்து நினைவுகள் பற்றி //
முயற்சி செய்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
மன்னையின் கடை வீதிகள் மனித தலைகளால் நிரம்பி வழிகிறது,, இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாதவன்.......
மாதவா ஹாப்பி தீபாவளி :-)
Happy Diwali Madhavan...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், மாதவன் சார்.. :)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
நீங்க படிச்ச ஸ்கூல்லே நான் படிக்காம் போயிட்டனே? தீபாவளிக்கு ஒண்ணு ரெண்டு நாள் தான் லீவு எங்க பள்ளிக்கூடத்துல.
பால்ய நினைவுகளை அப்படி
அழகாய் கொண்டுவந்து இருக்கீங்க
கண்முன்னே
கடைசியில் சொல்லப்பட்ட அத்தனையும் நிஜம்
Post a Comment