ஆனா அதுக்கான காரணம் நம்ம சிரிப்பு போலிசால தெரிஞ்சிடிச்சி.. வைட்.. வைட்.. நா கம்ப்லேயின்ட்லாம் தரலை.. தந்தா மட்டும் அவர் FIR போட்டு சரியா கண்டுபுடிச்சிடுவாரா என்ன?
போலிசோட இந்தப் பதிவ படிச்சிட்டு அதுக்கு நா கமெண்டு போட்டேன் இந்த மாதிரி.. (27 வது கமெண்டு..)
//"....... ஆனா ஒண்ணு மட்டு அழுத்தமா சொல்லுறேன்.. படத்துல இருக்குற 'வீடுதிரும்பல்' மோகன எனக்குத் தெரியும்.. (அவருக்குதான் என்னை ------
அட சொல்ல விடுகப்பா... 'நல்லாவே தெரியுமே') பள்ளி வாழ்க்கையில் எனது சீனியர் அவர்... எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார்."//
அதுக்கு ரமேசு(சிரிப்பு போலிஸ்) சொன்னாரு பாருங்க ஒரு பதிலு.. (36 வது கமெண்டு)
//சொன்னாரு. ஒழுங்கா படிக்காம அவர்கிட்ட செம அடி வாங்குநீங்கலாமே//
இப்படிலாம் பதில் போட்டு, தூங்கிட்டு இருந்த சிங்கத்தை கெளப்பி விட்டுட்டாரு.... தேவையா அவருக்கு.. நா ஒடனே ஒரு பதிலுக்கு, பதில் கமென்ட் வித்தியாசமா போட யோசிச்சேன்.. (ஆனா போடலை.. ஹி.. ஹி.. அத வெச்சிதான் இந்த பதிவே அப்புறம் எதுக்கு கமெண்டு போட்டு வேஸ்டு பண்ணனும் ?).
நா யோசிச்சது இதுதான். //"ஒங்களை நெனைச்சா எனக்கு பரிதாமா இருக்கு போலீசு..
அவருகிட்டே அடி வாங்கினேன்.. அப்புறமா நல்லா படிச்சேன்.. இன்னிக்கு நல்ல நெலமைல இருக்கேன்.... நீங்க பாவம்... சரியான சமயத்துல அடி கொடுக்க ஆளு இல்லாம 'எப்படி' இருக்க வேண்டிய நீங்க 'இப்படி' இருக்கீங்க.."//
'எப்படி' அதுக்காக குகிள் இமஜெஸ்ல தேடினேன் 'ஸ்மார்ட் மென்' கீ வேர்டு போட்டு. அதுக்கு இந்தப் பக்கத்துல கெடைச்சுது, 'எலி பிடிக்கும்' முயற்சித் தோல்விக்கான காரணம். பாருங்க இந்த படத்த.. எலிலாம்கூட எவ்ளோ வெவரமா இருக்குது..
இனிமே எலி பிடிக்க பெரிய பொட்டி டைப்பு பொறிதான் யூஸ் பண்ணனும். இது புரிஞ்சா யாரும் இனிமே 'வட போச்சே'னு பொலம்ப மாட்டாங்க..
ஒரே கல்லுல ரெண்டு வடை.. ச்சே.. மாங்காய்..
1) இனிமே எலிய, எளிய முறையில புடிச்சுடலாம்.. (பெட்டி வெச்சி..)
2) பெ.சோ.வி யோட இந்த பதிவுக்கான போட்டி கதை.. அதாங்க.. 'ஆ'னா, 'ஆ'வன்னா... . இல்லாம கதை சொல்லச் சொன்னாரே ? இந்த எலி படத்த, தலைப்பே வெக்காம அனுப்பிட்டேன்....
ஜெயிக்கப் போவது (எலிகிட்டேயும், பெ.சோ.வி போட்டிலயும் ) நாந்தான ?
டிஸ்கி : இன்ட்லில இணைப்பதில் ஏதோ தவறு நடந்துவிட்டது..நீங்கள் இந்த லின்க்கினை (என்மீது கிளிக் செய்து)முயற்சி செய்து இதற்கு ஓட்டளிக்கவும். நன்றி



















