நான்-வெஜ்ஜுதான் சாப்டுவேன். நீங்க?

சண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு..  அவருக்கு இங்கிலீசு அறைகொரையாதான் தெரியும்.. அவரு காய்கறி, கீரை, கிழங்கு எல்லாத்துக்கும் இங்கிலீசுல சொன்னாரு பாருங்க, சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடிச்சு....

ஒங்களால சிரிக்க முடியலேன்னா, சொன்னது புரியலன்னு அர்த்தம்.. சிரிக்காம விடமாட்டீங்களா.. அப்ப சவாலுக்கு தயாரா..?
ரெடி ஸ்டார்ட் மியூசிக்... (நம்ம ராமசாமிய நெனைச்சிகிட்டு..)

  1. Life
  2. Cylinder
  3. Flower-Saturday
  4. Sucrose-Murugan Wife
  5. Coimbatore
  6. Thorndress
  7. Scissors
  8. English
  9. Half
  10. Sin

 டிஸ்கி :

  1. கடைசீல 'காய், கிழங்கு, கீரை' ஏதாவது ஒண்ணு சேர்த்துக் கொள்ளவும்.(சாப்பாட்டுல சேத்துக் கிட்டா ஒடம்புக்கு ரொம்ப நல்லது.... கிழங்குல மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல்.. ஒக்கே..?)
  2. பின்னோட்டம் தற்போது மாடரேஷன் செய்யப் படுகிறது..(என்னவோ நெறைய பேரு இத்தைலாம் படிச்சு பதில் போடுவாங்கன்னு நெனைச்சி..)

49 Comments (கருத்துரைகள்)
:

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

எனக்கு ஒண்ணும் புரியல....

எஸ்.கே said... [Reply]

1. வாழைக்காய்
2, உருளை கிழங்கு
3. பூசணி
4. சர்க்கரை வள்ளி கிழங்கு
5. கோவைக்காய்
6. முள்ளங்கி
7. கத்தரிக்காய்
8. வெள்ளரிக்காய்
9. அரைக்கீரை
10. பாவக்காய்

Chitra said... [Reply]

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... இப்படி சொல்லி காய் கீரை கிடைச்சுதா, இல்லை ....????
எல்லாமே சிரிப்பாக இருந்தாலும், பூசணிக்கு - Flower Saturday - கொஞ்சம் ஓவரா தெரியல. ஹா,ஹா,ஹா,ஹா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

Scissors - kaththirkkaai. avlothaan

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

1 ) வாழை கிழங்கு...

2 ) பூசணி..
5 ) கோவைக்காய்
10 ) பாவக்காய்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

1. வாழைக்காய்
2. உருளைக்கிழங்கு
3. பூசணி
4. சக்கரவள்ளிக் கிழங்கு
5. கோவைக்காய்
6. முள்ளங்கி
7. கத்திரிக்காய்
8.
9. அரைக்கீரை
10. பாவக்காய்

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

////ரெடி ஸ்டார்ட் மியூசிக்... (நம்ம ராமசாமிய நெனைச்சிகிட்டு..)////

ஆமா.. ஆமா இந்த மாதிரி அறிவுப்பூர்வமான விஷயத்துக்குலாம், நம்மல நெனச்சிக்கிட்டாத்தான் நல்லது!

Victor Suresh said... [Reply]

ரொம்ப மொக்கையா இருந்தாலும் சிரிப்பு லேசா வர்றதை ஒத்துக்க வேண்டியதுதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

8 மட்டும் வெளங்கலியே...? கேரட்டா? பீட்ரூட்டா?

அனு said... [Reply]

இதுல பாதி காய்கறிகள் பேரு மட்டும் தான் தெரியும், அதை வச்சு சமையல் பண்ணத் தெரியாது :) விடையையாவது ட்ரை பண்றேன்..

1. வாழைக்காய்
2. உருளைக்கிழங்கு
3. பூசனிக்காய்
4. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
5. கோவைக்காய்
6. முள்ளங்கி
7. கத்தரிக்காய்
8. பரங்கிக்காய்
9. அரைக்கீரை
10. பாவக்காய்

எனக்கு வடை கிடைக்குமா?

சௌந்தர் said... [Reply]

Life======வாழைக்காய்

Half====அவரைக்காய்

சௌந்தர் said... [Reply]

Scissors=====கத்தரிக்காய்

சௌந்தர் said... [Reply]

Half=====அரை கிரை

RVS said... [Reply]

வாழை
உருளை
பூசணி
சக்கரவள்ளி
கோவை
முள்ளங்கி
கத்தரி
அரைக்கீரை
பாவக்காய்

உமர் | Umar said... [Reply]

Life - வாழை
Cylinder - உருளை
Flower-Saturday - பூசணி
Sucrose-Murugan Wife - சக்கரைவள்ளி
Coimbatore - கோவைக்காய்
Thorndress - ?
Scissors - கத்திரிக்காய்
English - கேரட்
Half - அவரைக்காய்
Sin - பாவக்காய்

வெங்கட் said... [Reply]

Life - வாழக்காய்
Cylinder -உருளை கிழங்கு
Flower-Saturday - பூசணிக்காய்
Sucrose-Murugan Wife - சர்க்கரை வள்ளி கிழங்கு
Coimbatore - கோவைக்காய்
Thorndress - ?
Scissors - கத்திரிக்காய்
English - ?
Half - அரைக்கிரை
Sin - பாவக்காய்

வெங்கட் said... [Reply]

Life - வாழக்காய்
Cylinder -உருளை கிழங்கு
Flower-Saturday - பூசணிக்காய்
Sucrose-Murugan Wife - சர்க்கரை வள்ளி கிழங்கு
Coimbatore - கோவைக்காய்
Thorndress - முள்ளங்கி
Scissors - கத்திரிக்காய்
English - வெள்ளரிக்கா
Half - அரைக்கிரை
Sin - பாவக்காய்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெறும்பய

புரிஞ்சா என்ன, புரியலன்ன என்ன.. ஏதாவது காய்கறி நம்பர் போட்டு சொல்ல வேண்டியதுதான..

Madhavan Srinivasagopalan said... [Reply]

1) No.. ramesh.. that's not right. sorry


2) @ பன்னிக்குட்டி ராம்சாமி //ஆமா.. ஆமா இந்த மாதிரி அறிவுப்பூர்வமான விஷயத்துக்குலாம், நம்மல நெனச்சிக்கிட்டாத்தான் நல்லது! //

நல்லா ஐஸ் வெச்சாச்சு.. ஏதாவது வேலைன்னா.. அண்ணன் முடிச்சுக் கொடுத்துடுவாரு..

//8 மட்டும் வெளங்கலியே...? கேரட்டா? பீட்ரூட்டா? //

இங்க்லீஷ் னு சொன்னத தப்பாப் புரிஞ்சிக் கிட்டாரே.

3) //@ ஏவிஎஸ் "ரொம்ப மொக்கையா இருந்தாலும் சிரிப்பு லேசா வர்றதை ஒத்துக்க வேண்டியதுதான்//

தங்களுக்கு லேசாவாவது சிரிப்பு வந்ததற்கு நன்றி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

1) @ எஸ்.கே. -- முதலில் வடையைப் பெற்றுக் கொள்ளுங்கள்..
அப்புறம்.. 'எட்டாவதை' தவிர மற்றதெல்லாம் சரி..

2) @ சித்ரா நீங்க சொன்ன அந்த ஒன்னு(மூன்றாவது) மட்டும் சரி....
நீங்க ஓவரா சொல்லலை.. ஒத்துக்கறேன்..

3) @ ரமேஷ் நீங்க சொன்ன அந்த ஒன்னு(ஏழாவது) மட்டும் சரி....
மத்தது டிரை பன்னனியா ?

4) @ வெறும்பய -- நீங்க சொன்ன முதலாவது விடை(சரியாகச் சொன்னாலும்) அது 'கிழங்கு' வகையா ?
மூன்றாவது சரியாகச் சொன்னீர்கள்.. அனால் அதனை இரண்டு எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்..
5 , 10 ரைட்டு.

5) @ P ராமசாமி -- சொன்ன அனைத்தும் சரி.. 'எட்டாவது' உங்களுக்கு தெரியவில்லையா ?

6) @ Anu -- உங்களுக்கு 'பட்டமே' (பதங்க் இல்லை) கொடுக்கலாம்..
அனைத்தையும் சரியாச் சொல்லி
அசத்திய
அனு

7) @ வெங்கட் -- நீங்கள் சொன்ன அனைத்தும் சரி, எட்டாவது தவிர..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ anu --

1) @ சௌந்தர் -- நீங்கள் சொல்லிய 1, 7 & 9 -- மூன்றும் சரி.. மற்றவை ?

2) @ RVS -- சொன்ன அனைத்தும் சரி.. 'எட்டாவது' உங்களுக்கும் தெரியவில்லையா ?

3) @ கும்மி-- சொன்னவற்றுள் 8 வது தவறு.. மற்றவை சரி
ஆறாவது நீங்கள் சொல்லவில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

8. பறங்கிக்காய்....?

அனு said... [Reply]

//உங்களுக்கு 'பட்டமே' (பதங்க் இல்லை) கொடுக்கலாம்.//

ஹிஹி.. இதை முதலில் எங்க அம்மா கிட்ட காட்டனும். இனிமேல், 'உனக்கு பாகற்காய்-க்கும் பீர்க்கங்காய்-க்குமே வித்தியாசம் தெரியல.. நீயெல்லாம் எங்க சமைக்க போற'-ன்னு என்னைப் பார்த்துக் கேக்க முடியாதில்ல...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ P ராமசாமி -- 'எட்டாவதும்' சரி..

அனு said... [Reply]

இந்த 'பதங்க்' என்னன்னு நானும் என் வீட்டுக்காரரும் ரூம் போட்டு யோசிச்சோம். பதக்கம், தங்கம் ரெண்டையும் சேர்த்து தங்கபதக்கத்தை தான் ஸ்டைலா 'பதங்க்'னு சொல்றீங்கன்னு நினைச்சு ஒரு நிமிஷம் சந்தோஷப் பட்டுட்டோம்.

ஆனா, சொன்னது மாதவனாச்சே.. அதனால இன்னும் கொஞ்சம் யோசிக்கும் போது தான், இது 'ஏக் காவ் மே ஏக் கிசான் ரேஹ்தா தா!' பதங்க்-ன்னு புரிஞ்சது :)

உமர் | Umar said... [Reply]

8. வெள்ளரிக்காய்.

உமர் | Umar said... [Reply]

6. முள்ளங்கி

Madhavan Srinivasagopalan said... [Reply]

//@ Anu, இந்த 'பதங்க்' என்னன்னு நானும் என் வீட்டுக்காரரும் ரூம் போட்டு யோசிச்சோம். பதக்கம், தங்கம் ரெண்டையும் சேர்த்து தங்கபதக்கத்தை தான் ஸ்டைலா 'பதங்க்'னு சொல்றீங்கன்னு நினைச்சு ஒரு நிமிஷம் சந்தோஷப் பட்டுட்டோம். //

செலவில்லாம 'பட்டம்' கொடுக்குறதுதான் இன்னையோட நாடு நெலமைக்கு நல்லதுன்னு.. தாடி வெச்ச புலவரு நேத்து கனவுல சொன்னாரு.. அதான்..
பதக்கம் தங்கம் அப்படீன்னு பணத்த செலவு செய்யல..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ kummi.. 8th is wrong. but 6th one right. Gud.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

யோவ் நாந்தான் ஜெயிச்சுட்டென்ல, எல்லாத்துக்கும் சொல்லி ஆட்டைய க்ளோஸ் பண்ணுய்யா!

NaSo said... [Reply]

1.வாழைக்காய்
2.உருளைக்கிழங்கு
3.பூசணிக்காய்
4.சர்க்கரைவள்ளிக் கிழங்கு
5.கோவைக்காய்
6.முள்ளங்கி
7.கத்தரிக்காய்
8.வெள்ளரிக்காய்
9.அவரைக்காய்
10.பாகற்காய்

Anonymous said... [Reply]

உருளைக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

கோவைக் காய்

முள்ளங்கி

கத்தரிக் காய்

அவரைக் காய்

பாவக் காய்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ நாகராஜ சோழன்.. எம்.ஏ.
--- ஒன்பதும், எட்டும் -- எட்டாமல் இருக்கிறது.. மற்றவை எட்டிவிட்டது

@ Balaji Saravanan -- எவரையோ காய் னு சொன்னீங்களே அதத் தவிர மத்ததுலாம் ரைட்டு..
நீங்க சொன்னா ஏழுல ஆறு சரி.. மற்ற 'நான்கு' ?

எஸ்.கே said... [Reply]

8. பரங்கிக்காய்

சரியாங்க?

Madhavan Srinivasagopalan said... [Reply]

அனு, P .ராமசாமி, எஸ்.கே -- மூவரும் அனைத்தையும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டார்கள்..

இன்று திங்கட்கிழமையாதளால்..மேலும் சிலர் படிக்கக் கூடும்.. எனவே மாலை வரை வெயிட் செய்யலாமே..? (for P . ராமசாமி)

ராஜ நடராஜன் said... [Reply]

இதோ பின்னூட்ட ஊழல்:)

விடை கண்டுபிடிச்சு போட்டா விடையும் காணோம்...பின் ஊட்டத்தையும் காணோம்!

Arun Prasath said... [Reply]

எனக்கும் ஒன்னும் புரில

Gayathri said... [Reply]

vaazhaikaai
vaazhaithandu
poosanikkai
chakaravalli kizhangu
kovaikaai
mullangi
kathrikai
parangikkaai
araikeerai
paavakkai

செல்வா said... [Reply]

எனக்கும் சத்தியமா ஒண்ணும் புரியல ..!!

Unknown said... [Reply]

1.வாழைக்காய்
2.உருளைக்கிழக்கு
3.பூசணி
4.சர்க்கரை வள்ளிக்கிழங்கு
5.கோவைப்பழம்
6.
7.கத்திரிக்காய்
8.
9.
10.பாவக்காய்

Anonymous said... [Reply]

நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டுட்டு கீரை பொறியல் சாப்பிடுவாங்களா..ஏதோ நல்ல கருத்து ஒண்ணு சொல்லி இருக்கீங்க..ம்

Anonymous said... [Reply]

எனக்கும் ஒன்னும் புரில//
இதுல என்னமொ மேட்டர் ஒளிஞ்சிருக்குய்யா அதை நாம தான் கண்டுபிடிச்சி மாதவனுக்கு சொல்லணும்

அருண் பிரசாத் said... [Reply]

# Life - வாழை
# Cylinder - உருளை
# Flower-Saturday - பூசணி
# Sucrose-Murugan Wife - சர்க்கரைவள்ளிகிழங்கு
# Coimbatore - கோவை
# Thorndress - முள்ளங்கி
# Scissors - கத்திரி
# English - வெள்ளரி
# Half - அவரை
# Sin - பாவக்காய்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ காயத்ரி.. ரெண்டாவதுக்கு இப்படி வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.... நா நெனைச்சது வேற.. Rest are right

@ ஜெய்சங்கர் ஜகன்னாதன் 6,8 & 9 எதுவுமே சொல்லல ? Rest are right.
5 ) ____ பழம் னு சொல்லி இருக்கீங்க. நா நெனைச்சது _____ காய். ஆன்னாலும் சரிதான்

@ அருண் பிரசாத் : எட்டு, ஒன்பது -- இரண்டும் தவறு. Rest are right

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy

ஹ.. ஹா.. நல்ல தமாஷ்..
மறுபடியும் 'தலைப்பை' பாருங்க.. நா கூட அதான் சொல்லுறேன்..

படிக்காமலே நா BE(Brain Eater) & ME (Mind Eater) பட்டங்களை பெற்றவன்..

Anonymous said... [Reply]

1.வாழைக்காய்
2.உருளைக்கிழங்கு
3.பூசணிக்காய்
4.சீனிவள்ளிகிழங்கு
5.கோவைக்காய்
6.முள்ளங்கி
7.கத்தரிக்காய்
8.வெள்ளரிக்காய்
9.அரைக்காய்
10.பாவக்காய்

அருண் பிரசாத் said... [Reply]

9. half - அரைகீரை

goma said... [Reply]

அட அடா என்னமா இங்க்லீஷ்லெ வெஜ் வாங்கியிருக்கார்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...