முதலாவது மேட்டர்:
நேற்று (பிப்ரவரி பன்னெண்டு) இந்திய நேரப்படி முன்னிரவு எட்டு மணி முதல், ஒன்பது மணி வரை ஜெயா தொலைக்காட்சியில் நல்லதொரு நிகழ்ச்சி கண்டு களித்தேன். 'சின்ன சின்ன ராகம்' என்பது அதன் பெயர். இந்நாளில், (அசிங்கமான) குத்தாட்டம், சினிமா பாட்டு, சினிமா, விஷயம் தவிர எந்த ஒரு (நல்ல) கலை (!) நிகழ்ச்சியும் எந்த தொலைக்காட்சியில் பார்ப்பது அரிதான நிலையில் இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது.
பள்ளி மாணவ மாணவியர் சுமார் பத்து பேருக்கு மேலே தமிழ், தெலுகு, சமஸ்க்ருத சங்கீதமும், நாட்டுப் புறப் பாடல்களுடன் குழுவாக இனிமையாகப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு மன மகிழ்ச்சி தந்து வருகிறது. கடந்த ஒரு மாதாகாலமாக இந்த நிகழ்ச்சியை சனிக் கிழமைதோறும் பார்த்து வருகிறேன்.
இன்றைய நிகழ்ச்சியில் நன்றாகப் பாடிய மாணவியர்கள், வண்டலூர் விஷ்வ வித்யாலயாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நல்ல முறையில் பாடியதற்கும், அவர்களை தயார் செய்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
இதைப் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தொலைகாட்சி நிறுவனங்களும், விளம்பர தாரர்களும் தொடந்து தந்து வந்தால், ஆரோக்கியமான சமுதாயம் நன்கு வளரும் என்று நான் நினைக்கிறேன்.
ஹி.. ஹி.. நா ரொம்ப லேட்டா இதப் பத்தி சொல்லுறேன் போல..பல மாசமா இந்த நிகழ்ச்சி நடந்து வருதாம்.... தங்க்ஸ் சொன்ன விஷயம்.
இரண்டாவது மேட்டர் :
பள்ளி மாணவர்களின் தேர்வு நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட்டு தேவையா..? கடந்த மூன்று வருடங்களாக, ஐ.பி.எல் T-20 தரும் தொல்லைகள் போதாதென இந்த வருடம் இது வேறு சேர்ந்து கொண்டுள்ளது. இந்த மாதிரி கிரிக்கேட்டுகளை தேர்வு நேரமில்லாத நவம்பர், டிசம்பர், ஜனவரிக்குள் முடிக்கக் கூடாதா ? சம்பத்தப் பட்டவர்கள் யோசிக்க மாட்டார்களா..?
நானும் சின்ன வயதில் கிரிக்கெட்டு பார்த்து ரசித்தவந்தான்.. ஆனால் அப்போது கூட அளவாக.. எனது படிப்பு /அலுவல்களுக்கு இடைஞ்சல் வராதவாறு இருந்தது எனது ஈடுபாடு. இப்பதேல்லாம் கிரிக்கெட் மூலம் பணம்.. பணம்.. வேறோன்றுமில்லாத வியாபராமாகிவிட்டதால் அதன் மீதுள்ள ஈடுபாடு மிகவும் குறைந்துவிட்டது.
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களே உஷார்.. கிரிக்கெட்டு ஆட்டங்கள் வருடம் தோறும் வரும்.. போகும்.. . உங்களது பொதுத் தேர்வு ஒருமுறை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறி அவர்களது படிப்புக்கு பங்கம் வராதவாறு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். (ஹி.. ஹி.. என்னோட பையன் இப்ப ரெண்டாவது படிக்கிறான்.. இன்னும் எட்டு வருசம் கழித்து அவன் பத்தாம் வகுப்பு படிப்பான்.. அப்ப கிரிக்கெட்டு உலக கோப்பை வருமோ ? -- )
இந்த வருடம் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் -பொதுத் தேர்வேழுதவிருக்கும், அனைத்து மாணவ மாணவிகளுக்கும், நல்ல முறையில் தயார் செய்து தேர்வெழுதி சிறந்த மதிப்பெண்கள் வாங்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
உபரி.. : அப்புறம்.. பிப்ரவரி 14 , வாலண்டைன் டெ.. , அந்த நாளிற்கான சரியான அர்த்தத்தினை நண்பர் 'ஆதி மனிதன்' அவரது வலைப்பூவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்... நேரம் கெடைச்சா போயி படிச்சிட்டு வாங்க.. நன்றி..
உபரி.. : அப்புறம்.. பிப்ரவரி 14 , வாலண்டைன் டெ.. , அந்த நாளிற்கான சரியான அர்த்தத்தினை நண்பர் 'ஆதி மனிதன்' அவரது வலைப்பூவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்... நேரம் கெடைச்சா போயி படிச்சிட்டு வாங்க.. நன்றி..
+++++++++++++++++++++++++++++++++++++++++++
15 Comments (கருத்துரைகள்)
:
vadai!
//பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களே உஷார்.. கிரிக்கெட்டு ஆட்டங்கள் வருடம் தோறும் வரும்.. போகும்.. . உங்களது பொதுத் தேர்வு ஒருமுறை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.//
well said!
நானும் பார்த்தேன் மாதவன் சின்ன குழந்தைகள் பாடுறது அருமை ...
அப்புறம் இந்த பரீட்ச்சை டைம் கிரிக்கெட் மேட்ச் ரொம்ப கஷ்ட்டம் மாதவன் சார் ..பாவம் அதிலும் பசங்க தான் கிரிக்கெட் உம பார்க்க முடியாம ...புக் லேயும் மனசு ஒன்றி படிக்க முடியாம ....ரொம்ப கட்ட படுவாங்க
எக்சாம் டைம்ல மேட்ச் வெக்கிறது இந்தப் பன்னாடைகளுக்கு புதுசு இல்ல, ஒரு மாசம் கழிச்சு வெச்சா என்ன? எல்லாம் காசு....!
எக்சாம் டைம்ல மேட்ச் வைக்க கூடாதுன்னு நாம என்னதான் சொன்னாலும் அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க! அவங்களுக்கு வேண்டியது பணம் மட்டும்தான்!
கிரிக்கெட் நடத்துறவங்க இதைப் பத்தி யோசிக்கவே மாட்டாங்க.
இப்பதான் அந்த ப்ரோக்ராம் பார்க்கறீங்களா ? ரொம்ப அருமையா இருக்கும் தொடர்ந்து பாருங்கள்
பசங்க தான் பார்த்து நடக்கணும்.. வேற வழியே இல்ல
ஆசியா நெட் டீவில தினம் இரவு எட்டு மணி முதல் நடக்கும் நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா மாதவன்...மிகத் திறமையான இளைய பாடகர்கள்...
நன்றி நண்பர்களே..
நீங்கள் சொல்வதுபோல அவர்களுகென்ன கவலை.. மாணவர்கள்தான் கவனத்தை சிதரவிடாது படிக்க வேண்டும். அதானே கவலை..
@ எல்.கே.. ஸ்ரீராம்..பாபு.. -- நீங்களும் பார்த்துவரும் நிகழ்ச்சியா ? நல்லது..
Nice. Thanks for informing about the Jeya tv program. Will watch it.
நான் அந்த நிகழ்ச்சி பார்த்தது இல்லை அண்ணா . அடுத்த சனிக்கிழமை பார்க்க முயற்ச்சிக்கிறேன் ..
அப்புறம் கிரிக்கெட் பத்தி எனக்கு ஒண்ணும் தோணலை ..
ஏன்னா அது உலக கோப்பை .. பொதுவா எப்பவும் நடத்துற மாதிரி தான் வைப்பாங்கனு தோணுது ..
கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html
Good post and well said .Such things shouldn't distract children.
Post a Comment