முற்பகல் செய்யின்..

வார விடுமுறை.. ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் நண்பர் வீட்டிற்கு சென்று வர இரண்டு வாரங்களாக போட்ட திட்டம்.. இந்த முறை (20-02-2011) நடந்தேறியது..

இன்று கற்றுக் கொண்ட பாடம்...
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..."

காட்சி  - 1   (முற்பகல்)
நண்பர் வீட்டில் வாசற் படிகளுடன் பக்கத்தில் மோட்டார் சைக்கில் ஏற்றுவதற்கு சரிவு இருந்தது. எனது மூன்றரை வயது மகள், அந்த சரிவின் மீதேறி உள்ளே சென்றாள்.
அவளிடம் நான், "அதன் வழியாகச் சென்றாள் நீ, கீழே  விழுந்து விடுவாய்... அது பைக் செல்வதற்காக மட்டுமே. நாம் படிகள் மீது ஏறி செல்லவேண்டும்", என்றேன்.
"சரிப்பா", தலையாட்டிக் கொண்டே மகள் சொன்னாள். 

முற்பகல் அட்வைஸ் 
பிற்பகல்  (பல்ப் ?)


காட்சி  - 2 (பிற்பகல்)
வீட்டில் குளியலறையில், மகளுக்கு கால் கை சுத்தம் செய்யும் பொது...
மகள் : (மக்கில் (Mug) இருக்கும் கைப்பிடியை காண்பித்து) அப்பா இந்த மக்குல, எதுக்கு இந்த மாதிரி வெச்சிருக்காங்க இருக்கு ?
நான் : அதக் கையால பிடித்து தண்ணி எடுத்து ஊத்துறதுக்கு..
மகள் : அப்புறம் எதுக்குப்பா, நீ, சைடுல பிடிச்சிக்கிட்டு தண்ணி எடுக்குற ?

நாம் வாழ்க்கையில் பல விஷயங்களைச்  சரியாகச் செய்வதில்லை என்பதை எனக்கு நினைவு படுத்தப் பட்ட தினம் நேற்று, எனது மூன்றரை வயது மகள் மூலம்.

அருண், இம்சை பாபு எழுதியுள்ள 'பல்பு' சம்பந்தப் பட்ட பதிவுகளை படித்த முதல் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.. வேறென்ன 'விதி' சார். .'விதி'..
(ஹி.. ஹி.. பொண்ணு வாயால வாங்கிய பல்பு..)

===================================

16 Comments (கருத்துரைகள்)
:

எஸ்.கே said... [Reply]

ஜக்கை நிறைய பேர் கைப்பிடிய பயன்படுத்தாம இருப்பாங்கதான்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

அதான் புரியலை.. எதுக்குனே ?

எஸ்.கே said... [Reply]

இப்படி எதுக்கோ தயாரிச்சதை எதுக்கோ பயன்படுத்துவது நிறைய இருக்கு! வாழைப்பழம் ஊதுபத்தி, இப்படி நிறைய!

எஸ்.கே said... [Reply]

//அதான் புரியலை.. எதுக்குனே ? // சில பேருக்கு அகலமா பிடிச்சாதான் நல்லாருக்கும். அதனால கைப்பிடி வசதியா இல்லாம இருக்காம இருக்கலாம்.!

மாணவன் said... [Reply]

:))

RVS said... [Reply]

பல்புன்னா என்னப்பா?

செல்வா said... [Reply]

//
மகள் : அப்புறம் எதுக்குப்பா, நீ, சைடுல பிடிச்சிக்கிட்டு தண்ணி எடுக்குற ?///

நல்ல கேள்வி .. நல்ல கேள்வி .. இதே கேள்விய நான் கேட்டா எல்லோரும் முறைக்கிறாங்க தெரியுமா அண்ணா ?

பாலா said... [Reply]

நானும் ஒரு கேள்வி கேட்கிறேன். பல்பு வாங்குவது என்று எப்படி பெயர் வந்தது? கமான் டெல் மீ.. :)

R. Gopi said... [Reply]

மக்கில் உள்ள திரவம் கையில் படவேண்டாம் என்றால் கைப்பிடியைப் பிடித்துத் தூக்கலாம். கையில் படலாம் என்றால் எப்படி வேண்டுமானாலும் தூக்கலாம்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ கருண், மாணவன் -- வாங்க..வாங்க ரொம்ப நன்றி.. அடிக்கடி வாங்க..

@ எஸ்.கே. நீங்கள் சொன்ன உதாரணம் செம..

@ ஆர்.வி.எஸ் & பாலா -- ஹி.. ஹி.. இப்படிலாம் கேள்வி கேக்கக் கூடாது.. ஜஸ்ட் அனுபவிக்கனும்.. இங்க போயிப் பாருக பல்புனா என்ன அத எங்க எப்படி வாங்கனும்னு சொல்லிருக்காரு நண்பர் ஒருத்தரு.

@ செல்வா -- ஒங்க மாதிரி ஆள, நா இப்ப புரிஞ்சிக்கிட்டேன்..

@ கோபி -- அப்படி ஒண்ணு இருக்கா.. தகவலுக்கு நன்றி.

சாய்ராம் கோபாலன் said... [Reply]

அப்பாவிடம் மகள் நல்ல கேள்வி !

வினோ said... [Reply]

உங்களுக்குமா தல... நமக்கும் இங்க அப்படி தான்...

ஸ்ரீராம். said... [Reply]

சபாஷ்....(நோ நோ உங்களை இல்லை...உங்கள் மகளை...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

mm vilankiduchu

Chitra said... [Reply]

good ones.

ஆதி மனிதன் said... [Reply]

மேடி பொண்ணுன்னா சும்மாவா?

//RVS said... பல்புன்னா என்னப்பா? //

இது தான் 1000 வாட்ஸ் பல்போ?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...