கிரிக்கெட்டினால் ஏமாந்த அனுபவம்

வழக்கமா 'http://www.samachar.com' என்ற வலைதளத்தில் பெரும்பாலான செய்திகளின் லிங்க்கு இருக்கும், அதனை நான் பார்ப்பது வழக்கம். என்னைக் கவர்ந்த செய்தி ஏதாவது இருந்தால், அந்த லின்க்கை க்ளிக் பண்ணி படிப்பது வழக்கம். அந்த மாதிரி இன்னிக்கு என்னைக் கவர்ந்த தலைப்பு,
  "Imran Khan caught in a ladies compartment"
 
இம்ரான்கான் கிரிக்கெட்டர் ---  24 மணி நேர பெண்கள் கம்பார்ட்மென்ட்           

"அட.. இம்ரான் கான்.. கிரிக்கெட்டர்.. ஓஹோ.. வேல்டு கப்பு கிரிக்கெட் மேட்ச் நடக்கப் போகுது. அதுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டர் இம்ரான் கான் இந்தியா வந்திருக்காரு போல.... விளையாடுறதுல இருந்து ரிடையர் ஆனாலும், காசு சம்பாதிக்க கமேண்டேடர், அம்பயர்னு தொடரலாமே. இருந்தாலும் அவரு என்னாத்துக்கு டிரைணுல போகணும் ? சரி.. சரி.. எதுக்கோ போயிருக்காரு(!). தெரிஞ்சோ - தெரியாமலோ, அவர் லேடிஸ் கம்பார்ட்மென்டுல  எறிட்டாறு  போல..... ", இப்படிலாம் நெனைச்சுக் கிட்டு, மனசுல அவரை நல்லா திட்டிட்டு(லேடிஸ் கம்பார்ட்மென்டுல ஏறினதுக்குத்தான்)   லிங்கை க்ளிக் பண்ணி போயி பார்த்தா.. கீழே கொடுத்துள்ள போட்டோ தான் இருந்திச்சு.
ஆர்ராது ???????...... ஆமா இம்ரான்கானை எங்கே காணொம்..?

இந்த போட்டோல இருக்கிற 'இம்ரான்கான்' ஒரு திரைப்பட நடிகராம்.. அவரு நடிக்கற விளம்பர ஷூட்டிங்க்ல தான் இந்த மாதிரி லேடிஸ் கம்பார்ட்மென்ட் கூத்து  நடந்திச்சாம். 

எனக்கு 'ஹிந்தி' தெரியும்  - 'ஹிந்தி நடிகைங்க'(ஹி.. ஹி..) தெரியும். அதெல்லாம் மட்டும் தெரிஞ்சா போதாது. ஹிந்தி நடிகர்களையும் (அட்லீச்ட் பெயராவது) தெரிஞ்சிருந்தா தேவையில்லாமல் ஏமாந்திருக்க மாட்டேனோ? 

நா கற்பனை பண்ணதுக்கும், அந்த மேட்டருக்கும் இருந்த பொருத்தம், மார்க் டைலருக்கும் (ஆஸ்திரேலிய முன்னால் கிரிக்கெட் வீரர்) - தையல் மெஷினுக்கும் இருந்ததுபோலவே இருந்திச்சு..
 
நீதி : நியூஸ்காரங்க கூட(involantary) பல்பு தராங்க அதையும் (பல்புதான்) வாங்க  என்னைய மாதிரி ஆளுங்க இருக்காங்க.. ஹி.. ஹி.. 
==================================

20 Comments (கருத்துரைகள்)
:

எஸ்.கே said... [Reply]

அப்படின்னா ராகுல், விஜய் இவங்கெல்லாம் கூட கிரிக்கெட்டர் இல்லையா?

எஸ்.கே said... [Reply]

அதெல்லாம் ஓகே! அவர் அந்த கம்பார்ட்மெண்ட்ல என்ன பண்ணார்னு போட்ருக்கலாம்!:-)))

அனு said... [Reply]

இம்ரான் கானை யாருன்னு தெரியாதுன்னு சொன்னதால இந்த பதிவை புறக்கணிக்கிறேன்..

வினோ said... [Reply]

எப்படி எல்லாம் ஏமாற வேண்டி இருக்கிறது...

Chitra said... [Reply]

:-))))

Philosophy Prabhakaran said... [Reply]

// தையல் மெஷினுக்கும் இருந்ததுபோலவே இருந்திச்சு..//

எப்படி எல்லாமோ யோசிக்கிறாங்க...

மாணவன் said... [Reply]

:))

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல தமாசு ...

வைகை said... [Reply]

ஆமா...அது யாரு கிரிக்கெட்டர் இம்ரான்கான்?

பிரியமுடன் பிரபு said... [Reply]

'ஹிந்தி நடிகைங்க'(ஹி.. ஹி..) தெரியும்
////

en inamaiyaa nee.......

sakthistudycentre-கருன் said... [Reply]

Nice post,.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

இன்று பேப்பரில் "Lara Weds Bhupathi" என வந்திருந்தது கண்டு இது என்னடா என்று பார்த்து நானும் பல்பு வாங்கினேன்! பார்த்தால் மகேஷ் பூபதி- லாரா தத்தா கல்யாணம்!! :)))

கோமாளி செல்வா said... [Reply]

இம்ரான் காண எனக்குத் தெரியும் .. நான் பார்த்திருக்கேனே .. ஹி ஹி
படத்துலதான் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

ஆமா கிரிக்கெட்னா என்ன? பூச்சியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

இம்ரான்னா யாரு....? அவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல்ல சம்பந்தம் இருக்கா?

சாய் said... [Reply]

அஹஹஹக

அப்பாவி தங்கமணி said... [Reply]

ha ha ha ....sema comedy....me too develop stories like this by reading headlines sometimes...:)

Lakshmi said... [Reply]

eppati yellaam eemaaRRukkaL.

RVS said... [Reply]

:-))))))))))))))))))))))))))))))))))))))))

சிவகுமாரன் said... [Reply]

இம்ரான்கான் தர்ம அடி வான்கினாரான்னு சொல்லவே இல்லை

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...