நண்பர் வெங்கட் இங்க எழுதின மேட்டருக்கு, அருண்(சீனியர்,எனக்கு ஜூனியர்தான், எங்க குரூப்புல ரெண்டு அருண் இருக்காங்க அதான் ) அங்க பதில் பதிவு போடுறாரு.. பாத்துக்கிட்டு இருந்த எனக்கும் எதிர் தொடர் பதிவு எழுதத் தெரியாதா என்ன?.. அதான் இது..
மொரீஷியஸ் நண்பர் அருண் இந்திய விசிட்டுல அவரோட நெருங்கிய (!) உறவினர் கல்கத்தால இருக்குறதால அவர பாக்கப் போறதா கேள்விப்பட்டேன், உடனே அவருக்கு போன் பண்ணினேன்..
அருண் : நாளைக்கு, ஹவுரா மெயில்.
நான் : ஒகே.. வைசாக் (Vizag ) வர்றப்ப 1:20 ஆகிடும்.. ரெண்டுங்கெட்டான் நேரம்தான் .. இருந்தாலும் பரவாயில்லை.. கண்டிப்பா நா வந்து உங்களை வைசாக் ரயில் ஸ்டேஷன்ல மீட் பண்றேன்.
அருண் : ஹி.. ஹி.. நா அப்ப ஸ்டேஷன்ல தான் (ரயிலுலதான்) இருப்பேன்.. யோசிச்சு சொல்லுங்க ஒங்களால கண்டிப்பா வரமுடியுமா, சேலம் மாதிரி ஆகிடாதே ?
நான் : உங்களைப் பாக்க நா, இது கூட செய்ய மாட்டேனா ?
அருண் : சரி நீங்க வந்தா, அதுவும் குடும்பத்தோட, கண்டிப்பா, ஃபேமிலி ஸ்பெஷல் பிசாவும், ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீமும் வாங்கித் தர்றேன் என்னோட கோச் A /2
நான் : கரும்பு தின்னக் கூலியா.. குடும்பத்தோட வந்துடறேன்..
அடுத்தநாள் ரயிலில் ஏறிய சிறிது நேரத்திற்கு பிறகு...
அருண் (மனதிற்குள் மாதவன் சொன்னதை நினைத்து ) : ஹி.. ஹி.. ரெண்டுங்கெட்டான் நேரம்னு சொல்லுறாரு.. . கண்டிப்பா வர்றாராம்.. அதுவும் குடும்பத்தோட.. ஹா.. ஹா.. ஹா... சரி.. சரி.. தூங்கலாம் இப்போ..
அருண் தூங்கி முழிச்சுப் பாத்தப்ப.. மணி காலை 10 ஆகிடிச்சு..
அருண் (தனக்குள்) : "எ.சி கோச், அதான் வெளிச்சம் தெரியலை, நெனைச்சபடி மாதவன் 1 :20 க்கு வரலை.... செலவு மிச்சம்".
பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு ரெண்டு மூணு புத்தகம் படிச்சிட்டு.. பொழுது போகாம.. டயத்த போக்கிகிட்டு இருந்தாரு அருண். கிட்டத்தட்ட ரெண்டு மூணு மணி நேரத்துக்கப்புறம், பேன்ட்ரி சர்வர் கிட்ட,
சர்வர் : சார் பத்து நிமிஷத்துல வைசாக் வந்துடும். அங்க லஞ்ச் தருவோம்.
அருண் (சர்வரிடம்) : என்னது.. வைசாக் இன்னும் வரலியா.. வண்டி 12 மணிநேரம் லேட்டா போகுதா ?
சர்வர் : இல்லையே வண்டி ரைட் டைம் தான் சார். மதியம் 1:20 தான் வைசாக் ரீச் ஆகும்.
அருண் : !@#$%^&*() ?
(வழக்கம்போல தனக்குள்) : அடப்பாவி மக்கா.. மத்தியானம் கூட உங்களுக்கு 'ரெண்டுங்கெட்டான்' டைமா ?
டிஸ்கி : அருண் பர்சை எடுத்துக் கொண்டு தயாராகிறார், மாதவனை ஆவலோடு(!) காண, வேறு வழியில்லாமல்...
======================================
33 Comments (கருத்துரைகள்)
:
வல்லவனுக்கு வல்லவன்??
இதுக்கப்புறம்தானே திடுக்கிடும் திருப்பங்கள் வரப்போகுது?
அங்கே அருண்-உங்களிடையே நடந்த ‘சுவையான’ சம்பவங்கள் அடுத்த பதிவில் வருமா?
இசைச்சுவை, சொற்சுவை, பொருட்சுவை.. இதுல எந்த சுவைய பத்தி சொல்றீங்க, எஸ் கே??
//அனு said...
இசைச்சுவை, சொற்சுவை, பொருட்சுவை.. இதுல எந்த சுவைய பத்தி சொல்றீங்க, எஸ் கே?//
நான் சொன்னது அறுசுவை!
//நான் சொன்னது அறுசுவை!//
என்னது, அறுவையா?? கரெக்ட்டா தான் சொல்லியிருக்கீங்க.. :)
சரி சரி சீக்கிரம் சென்னை வந்து எனக்கு ஓசி சோறு வாங்கி தரவும். இந்த மாசம் டல்லா போவுது
இப்படிச் சொன்னா எப்படி? கடைசில மீட் பண்ணீங்களா இல்லையா?
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply] 7
சரி சரி சீக்கிரம் சென்னை வந்து எனக்கு ஓசி சோறு வாங்கி தரவும். இந்த மாசம் டல்லா போவுது/////
அவனவன் கவலை அவனவனுக்கு.....
@ அனு.,
// எஸ்.கே Said.,
நான் சொன்னது அறுசுவை! //
// @ அனு Said.,
என்னது, அறுவையா?? கரெக்ட்டா
தான் சொல்லியிருக்கீங்க.. :) //
கிளாசை அடிக்கடி கட் அடிச்சா இப்படிதான்
இன்னும் எழுத்து கூட்டி ஒழுங்கா
படிக்க வரலை பாருங்க..
சரி., சரி.., அங்கே பாருங்க
உங்க முதியோர் கல்வி டீச்சர் கூப்பிடறாங்க..
சீக்கிரம் கிளாஸுக்கு போங்க..
ஆகா பார்த்தீங்களா இல்லையா?
@வெங்கட்
//எழுத்து கூட்டி ஒழுங்கா
படிக்க வரலை பாருங்க.. //
தமிழை ஆங்கிலம் மாதிரி international levelக்கு கொண்டு போவதில் புது முயற்சி இது..
அதனால், இனிமேல் 'அறுசுவை'யில் 'சு' silent..
(பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. இதில் நீர் இரண்டாம் வகை.. நன்றி: திருவிளையாடல்)
அப்புறமா நடந்தது என்ன...
அடுத்த பாகம் இருக்கா..
அருண் இனி மொரீசியஸ் போற வரைக்கும் இதை வைச்சே எல்லோரும் பதிவ தேத்துவாங்க போல இருக்கே
அவங்க கேட்டதெல்லாம் ரெடியா வாங்கி வச்சீங்களா?
கடிசியா அருண் அண்ணன் என்ன வாங்கி குடுத்தார்னு சொல்லுங்க .. ஹி ஹி
//சரி சரி சீக்கிரம் சென்னை வந்து எனக்கு ஓசி சோறு வாங்கி தரவும். இந்த மாசம் டல்லா போவுது
//
போலீசின் தொழில் பக்கதி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ..
பிசாக் கனவுகள்...
என்னது.. வைசாக் இன்னும் வரலியா.. வண்டி 12 மணிநேரம் லேட்டா போகுதா //
அடப்பாவிகளா இப்பதான் கண்டுபிடிச்சீங்களா
நீங்க வைசாக்ல இருக்கீங்களா? ஸ்ரீகூர்மம் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. வந்த உங்க வீட்டில் தங்கறேன்:-)
@அனு
@எஸ்.கே
எந்த சுவையா இருந்தா என்ன ? சுவைதான் முக்கியம்..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
பிப்ரவரி 30 th ஓகேவா ?
@பன்னிக்குட்டி ராம்சாமி
மீட் பண்ணதா முக்கியம்..
மொக்கை.. மொக்கைதான் முக்கியம்..
@வினோ
பன்னியாருக்கு சொன்ன பதிலே..
@வெங்கட்
என்னோட போஸ்ட்லையும் மக்கள் (கும்மி) அடிக்க(வெங்கட் அனு ) ஆரம்பிச்சுட்டாங்க.. அப்ப நானும் பிரபலம் தான ?
@வெறும்பய
@இம்சைஅரசன் பாபு..
போட்டுட்டாப் போச்சு..
@Lakshmi
யாரை.. அருணதானக் கேக்குறீங்க, லட்சுமி மேடம் ?
@கோமாளி செல்வா
என்னையும் மெய்சிலிர்க்க வைக்கிறது ..
@ஸ்ரீராம்.
நல்ல வேளை.. ஒரு 'சு'வை விட்டுட்டீங்க..
@ஆர்.கே.சதீஷ்குமார்
அருணத் தான கேட்டீங்க ?.
@Gopi Ramamoorthy
வாங்க கோபி.. கண்டிப்பா தங்கலாம்.. ஸ்ரீ கூர்மம் போயிட்டு வரலாம்...
டிசெம்பர்லதான் போயிட்டு தர்சனம் பண்ணிட்டு வந்தேன்..
சிம்மாச்சலத்த விட்டுட்டீங்களே .. அதுக்கும் போயிட்டு வரலாம்..
மாதவா.. சொல்லி சொல்லி அடிக்கிறீயேப்பா!! வலிக்குது.. ;-)
ஒரு ரயில்வே டைம்-டேபிளை வச்சு இப்படி ஒரு போஸ்ட் போட முடியும்னு எனக்கு தோணாம போச்சே!
:))))
Post a Comment