பின்வரும் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் சொல்லவும். எல்லாம் கற்பனை வளத்தினால் வந்தவையே! சும்மா தமாசுக்குத்தான் !!
- ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆட்ட நாயகனுக்கு $ 1000 போன்ற ராட்சத காசோலை தராதது ஏன் ? (அப்படித்தான பல மேட்சுல பாத்திருக்கோம்..)
- ஆட்டத் தொடர் நாயகனுக்கு தருவார்கள் என நான் நினைத்திருந்த -- அடிக்கடி காண்பித்த மோட்டார் சைக்கிள் தராதது ஏன்? ராட்சத சாவி காணவில்லையோ ? ( தந்தாங்களா ? )
- டாஸ் தோத்து மேட்ச்சு ஜெயிச்சா ICC ராங்கிங்ல போனஸ் பாயிண்டு கெடைக்காதா ?
- வேர்ல்டு கப் ஜெயிச்சா ICC ராங்கிங்ல போனஸ் பாயிண்டு கெடைக்காதா ? (அட உலகத்துல எல்லா அணிகளும் வெளையாடுற ஆட்டமாச்சே.. அதான்)
- போலி டாக்டர், போலி பைலட் மாதிரி.. அதென்ன போலி உலகக் கோப்பை (Replica) கஸ்டம்ஸ் கிட்ட இருக்குதாமே ? இனிமேல் இந்த மாதிரி விவகாரம் ஏற்படாம, கச்சிதமா செய்ய வேண்டுகிறோம்..
- 'Man of the Match' மாதிரி 'Ban of the match'ன்னு ஏன் இல்லை.. [ ஹி.. ஹி.. சில பிளேயர்ஸ நினைச்சுத்தான் இந்தக் கேள்வி ]
- இறுதி ஆட்டத்தின் மைதான நடுவர்கள் ஆஸ்திரேலிய, பாகிஸ்தானியர்கள். இந்தியா, காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரை இறுதியில் பாகிஸ்தானையும் வென்றது... --- ரெண்டுக்கும் இருக்கும் தொடர்பு ?
- ஆரம்பித்தவரே கடைசியில் பேசும் பட்டிமன்றம் போல, இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய அணியே, கடைசியிலும் துடுப்பெடுத்து ஆடியது எப்படி ? [முதல் / கடைசி ஃபோர், சிக்ஸ், விக்கெட் எல்லாமே இந்தியா அணியினரது ]
- ஃபோரில் துவங்கிய இந்த போட்டிகள் சிக்சரில் முடிந்தது.. இரண்டுமே பவுண்டரிகள்.. எப்படி ?
- இறுதி ஆட்டத்தில் டாஸ் குளறுபடி / குழப்பம் ஏன்.. எப்படி வந்தது ? அதெப்படி சங்ககாரா சத்தமா 'கால்' செய்ய வில்லை ?
டிஸ்கி : பின்னூட்டத்தில் கேள்விகளும் கேட்கலாம் ...
=============================================
16 Comments (கருத்துரைகள்)
:
'Man of the Match' மாதிரி 'Ban of the match'ன்னு ஏன் இல்லை.. [ ஹி.. ஹி.. சில பிளேயர்ஸ நினைச்சுத்தான் இந்தக் கேள்வி ]
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... செம!
இந்திய அணிக்கு கொடுக்கப்பட வேண்டிய சரியான கோப்பையை கொடுத்து விட்டதாகச் சொல்கிறார்களே, அப்ப அது முன்னாடியே முடிவானது தானா?!!
அட சாரே.... எல்லா மேட்சும் பிக்ஸ்டுனு உமக்கு தெரியாதா?
கிரிக்கெட்டுல இவ்ளோ இருக்கா? ஹி ஹி
அவ்ளோ பெரிய சாவிய வச்சு என்ன பண்ணுறதுன்னு அளவான சாவிய மட்டும் கொடுத்திருப்பாங்க .. ஹி ஹி .. வேற ஒரு கேள்வியும் இல்ல ..
நல்ல சுவாரஸ்யமான கேள்விகள்தான். ஒன்றிரண்டு விஷயம் அடுத்து வெளி வர இருக்கும் 'எங்கள்' பதிவிலும் உண்டு!
@ஸ்ரீராம்.
For the Q you asked in rvsm.in post.. I replied.. for your ref..
Madhavan Srinivasagopalan said...
//ஸ்ரீராம். said...
மன்னை மேலத்தெரு வக்கீல் குமாஸ்தா சீனிவாசன் தம்பி ஜெய சங்கர் தெரியுமோ...?
//
// RVS said...
@ஸ்ரீராம்.
எனக்கு தெரியலை! அம்மாவை கேட்டு சொல்றேன்! ;-)) //
@ ஸ்ரீராம்.
அந்த குமாஸ்தாவைத் தெரியும் எனக்கு. (குமாஸ்தாவின் தம்பி ஜெயசங்கர் எனது அண்ணனின் வயதுடையவர் -- எந்தளவுக்கு நண்பர் எனத் தெரியாது)
அந்த குமாஸ்தாவின் புதல்வன் தற்போது ஒரு வக்கீலாவார்.
அந்த குமாஸ்தாவின் மைத்துனர்களில் ஒருவர் எனது நண்பர்.. அவர் பெயரும் VSM தான் .. ஆனால், அவர் LVSM (not RVSM )
@Chitra
@middleclassmadhavi
உங்கள் வருகைக்கு நன்றி..
@அருண் பிரசாத்
Match Fixtures னு சொல்லுவாங்களே.. அதுவா ?
@கோமாளி செல்வா
அளவான சாவி -- என்னாது இது ?
சிறப்பு கேள்விகள் பத்தா?
உங்கள் கேள்வி பத்தாதா? நாங்களும் கேட்க வேண்டுமா.
// இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய அணியே, கடைசியிலும் துடுப்பெடுத்து ஆடியது எப்படி ? [முதல் / கடைசி ஃபோர், சிக்ஸ், விக்கெட் எல்லாமே இந்தியா அணியினரது ] //
அட ஆமால்ல..!!
:)
இன்னொரு முக்கியான கேள்வி, சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் விருதுகள் இந்த முறை கொடுக்கப்படல?
///////அருண் பிரசாத் said... [Reply] 3
அட சாரே.... எல்லா மேட்சும் பிக்ஸ்டுனு உமக்கு தெரியாதா?//////////
இங்க போயி பாருங்கப்பு, http://simbuvambu.blogspot.com/2011/01/blog-post_26.html
@பன்னிக்குட்டி ராம்சாமி
சிறந்த பவுலர் -- நம்ம ஸ்ரீஷாந்த் தான் (முதல் மற்றும் கடைசி ஆட்டம்)
சிறந்த பெட்ச்மன் -- மிஸ்பா (காலிறுதி ஆட்டம்)
என்னோட கேள்வி..
வீரர்கள் மூக்கு நோண்டுவது, முகவாய்க்கட்டையை சொறிவது எல்லாம் காட்டும் காமெரா, பூவா தலையாவில் யார் சொன்னது விழுந்தது என்று க்ளோசப் போய் காட்டுவதில்லையே ஏன்..?
Post a Comment