கதம்பம் (ஏப்ரல் ஏழு)


தற்போதைய ஹீரோ :
ஊழலற்ற சமுதாயம் வேண்டும். இது பொதுவான கருத்துதான். அதற்கு யாராவது ஏதாவது செய்யவேண்டுமே ? செய்ய முயற்சி எடுத்துள்ளார்.. அன்னா ஹஸாரே. அவரது முயற்சிக்கு நாம் ஊக்கம் கொடுப்போம்.. நம்மால் முடிந்த ஏதாவது செய்வோம்.. வாழ்வில் நேர்மையாக நடப்போம்.. மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் மனதளவிலும் வேண்டாம் நமக்கு. அட்லீஸ்ட் இப்போது அவரை பாராட்டி.. அவருக்கு துணை நிற்போம். அவரது அஹிம்சை முறை போராட்டம் வெற்றி பெறட்டும். இந்திய நாடு நலம் பெறட்டும். வாழ்க வையகம்.. வாழ்க பாரத தேசம்.. பாரத மாதா..  பாரத மக்கள் !!

இந்தியரின் பெருமை :
நமது தேசத்தின் தேசிய கீதம் எழுதியவர் நோபெல் பரிசு பெற்ற ரபீந்தரநாத் தாகூர். அனைவருக்கு தெரிந்திருக்கும். அவர் எழுதிய தேசிய கீதத்தை சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டு ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் மைதானத்தில் பாடப் பட்டது. போட்டியின் முதல் மற்றும் கடைசி போட்டிகளில் பாடப்பட்ட மூன்று தேசிய கீதங்களுக்கும் (இந்தியா, பங்களாதேஷ், இலங்கை) ரபீந்தரநாத் தாகூரோடு தொடர்பிருக்கிறது. முதலிரண்டு தேசிய கீதங்களையும் எழுதியவர் ஷாக்ஷாத் ரபீந்தரநாத் தாகூர் தான். ஆனால் இலங்கை தேச கீதத்துக்கும் அவருக்கு எப்படி தொடர்பு.  இலங்கை தேசிய கீதத்தை எழுதியவர் ஆனந்த சமரகூன். சிறிது காலத்திற்கு அவர் இந்திய மண்ணில்,   ஷாந்திநிகேதனில் இருக்கும் விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் பயின்ற பொது, ரபீந்தரநாத் தாகூரின் மாணவனாக இருந்தார். தாகூரின் இலக்கியத்தில் பற்று கொண்ட அவர், இலங்கைக்காக எழுதிய கீதம் தாகூரின் கீத்தத்தின் சாயலில் அமைந்ததாக இங்கு குறிப்பு இருக்கிறது. தாகூர்தான் இசையமைத்ததாக நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தது.. ஆனால் அதற்கு சுட்டி கிடைக்கவில்லை (இருந்தால் பின்னூட்டத்த்தில் தெரிவிக்கவும்) .   ----  நன்றி :  விக்கிபீடியா .

திறமை, ஆர்வம்  & வாய்ப்பு : 
மகேந்திர சிங் டோனி -- அவரின் தற்போதைய நிலை யாவருக்கும் தெரியும். ஆனால்.. அவர் பத்தாண்டுகளுக்கு முன்னர் எங்கு எப்படி இருந்தார் ? கடக்பூர் ( kharagpur ) ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு சேகரிக்கும் (ticket collector) வேலை பார்த்தார். சூழ்நிலையால் அப்பணியில் (விளையாட்டு கோட்டாவில்) சேர்ந்தாலும், கிரிக்கெட்டே அவருடைய குறிக்கோளாக இருந்தது. பணி வேளையிலும் கிரிக்கெட்டிற்கே  பெரும்பாலான நேரத்தை செலவழித்ததால், அவர் சம்பள பெறாத விடுப்பில் செல்லவும் நேர்ந்ததாம். தனக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் விடாது பின்தொடந்து சென்று கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டு இன்று சாதனையாளராக  இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரை தனது ரோல் மாடலாக, தெய்வமாக நினைத்த அவரே சச்சின் பங்கு பெரும் அணிக்கு தலைமை தாங்கும் நிலைக்கு உயர்ந்தார். அப்பிடியொரு குறிக்கோள் (தத்தமது விருப்பம் மற்றும் ஆர்வத்தில்)  வேண்டும் ஒவ்வொருவருக்கும்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆர்வமும் திறமையும் இருக்கும்.. அதனை கண்டறிந்து அதன் பின் சரியான பாதையில் சென்றால், வாய்ப்பு கிடைக்கும்போது சாதனையாளராகலாம். இது அனைத்து பெற்றோருக்கும் தெரிந்தால், அடுத்த தலைமுறையின் ஆற்றலை, திறமையை வீணடிக்காமல் நல்ல சமுதாயத்தை -- அனைவருக்கு பயனுள்ளதாக அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தனது பிள்ளைகளை  பெற்றோரது விருப்பத்திற்கிணங்க கட்டுப் படுத்தாமல் அவர்கள் திறமைக்கேற்ப சரியான வழி நடத்துதல் வேண்டும். நம்மால்தான்  டாகராகமுடியலை.. என்ஜினீயர் ஆக முடியலை.. ஜில்லா கலெக்டர், CA   ஆக முடியலை.. என்றெல்லாம் நினைத்து பிள்ளைகளை நீ இதுவாக வேண்டும் அதுவாக வேண்டும் எனக் கட்டுப் படுத்தாமல் இருத்தல் வேண்டும். ஆனால் பிள்ளைகள் மீது கவனம் வேண்டும், அவர்கள் சரியான வழி செல்வதற்கு.
 
நம்ம பொண்ணு ஸ்பெஷல் :

நேத்திக்கு என்னோட நாலு வயசு பொண்ண அழைச்சிக்கிட்டு பைக்குல கடைக்கு போயிட்டு வந்தேன்..  அவள பெட்ரோல் டாங்க்மேல உக்கார வெச்சிருந்தேன்.. போயிட்டு இருந்தப்ப பொண்ணு அவளோட ஃபேவரிட் கார்டூன் வர்ற நேரமாயிட்டுதொணு நெனைச்சி ஆரம்பிச்சா இந்த மாதிரி...

பொண்ணு : இப்ப டயம் என்னப்பா ?
நான் : நா இப்ப ரிஸ்ட்-வாட்ச் கட்டிக்கலை, அதனால டயம் தெரியாது.
பொண்ணு : முன்னாடிதான் க்ளாக் இருக்கே, அதப் பாத்து டயம் சொல்லுப்பா
நான் : முன்னாடி க்ளாக்கா.. எங்க ?
பொண்ணு : இதாம்ப்பா.... ( அந்த க்ளாக், பைக்கோட ஸ்பீடாமீட்டர்)
 நேரம்டா சாமி !
 வேகம்டா சாமி ! 

12 Comments (கருத்துரைகள்)
:

தமிழ்வாசி - Prakash said... [Reply]

முதல் மழை என்னை நனைத்ததே...

Chitra said... [Reply]

உங்க பொண்ணு பட்டையை கிளப்புறா.... வாரம், ஒரு பதிவு அவள் பார்வையில் சொல்லலாமே.

தமிழ்வாசி - Prakash said... [Reply]

பொண்ணு நக்கல் சூப்பர்.


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

மோகன் குமார் said... [Reply]

உங்க பொண்ணு உங்க மாதிரி தான் இருக்கா

middleclassmadhavi said... [Reply]

Mixed garland நல்லாயிருக்கு!

ஸ்ரீராம். said... [Reply]

அன்னா ஹஜாரேயின் முயற்சி பாராட்டத் தக்க முயற்சி. போற்றுதலுக்குரியது. எங்காவது ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும்.சரிதான். ஆனால் என்ன சொல்லி நிறுத்துவார்? நம்மூர் அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் அசந்தவங்களா என்ன?
இந்தியரின் பெருமை சுவாரஸ்யமான தகவல்.
உங்கள் சுட்டிப் பெண்ணுக்கு ஒரு ஜே....
உங்கள் ஊர் கோவில் பெருமாளுக்கு வெண்ணெய் சாற்று திருவிழா என்று டிவியில் காட்டினார்கள்.

அருண் பிரசாத் said... [Reply]

உங்க பொன்னு செம.... இதுக்கு தான் எல்லாத்தையும் ஒழுங்கா சொல்லி குடுக்கனும், இல்ல கார்ட்டூன் டைம்ல வீட்டுக்கு போயிடனும்

TERROR-PANDIYAN(VAS) said... [Reply]

unga ponnukaga votuuu.... :))

வெங்கட் said... [Reply]

புத்திசாலி பொண்ணு..!!

கலக்கிட்டா.. குட்டி பாப்பா..!

பலே பிரபு said... [Reply]

//ஹசாரேவின் முயற்சிக்கு நாமும் கைகொடுப்போம்.//

நிச்சயமாக..............

Lakshmi said... [Reply]

ஹசாரேவின் முயற்சிக்கு கைகொடுப்போம்.பொண்ணுக்கு நீங்கதான் ட்ரெய்னிங்கா?

இராஜராஜேஸ்வரி said... [Reply]

அவரது அஹிம்சை முறை போராட்டம் வெற்றி பெறட்டும். இந்திய நாடு நலம் பெறட்டும். வாழ்க வையகம்.. வாழ்க பாரத தேசம்.. பாரத மாதா.. பாரத மக்கள் !!//
வாழ்க! வளர்க!!
பெண்ணுக்குப் பாராட்டுக்கள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...