புதிய ஆண்டு அனைவருக்கும் 'கர கர - மொரு மொரு'வென சுவையானதாக இருக்கட்டும்.
என்னதான் சொல்லுங்க...நம்மளப் போல சில பல ஆளுங்களுக்கு சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.. அப்படித்தான் கொண்டாடுறோம்..
கடந்த சில மாதங்களில், நான் பார்த்த, பேசிய, என்னுடன் தொடர்பு கொண்ட எனது உறவினர்கள் (17 ), என் இளமை பருவ அக்கம்பக்க நண்பர்கள் (13 ) ஆரம்பப் பாடசாலை நண்பர்கள் (8 ), உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் (26 ) கல்லூரி நண்பர்கள் (14 ), வலை மனை நண்பர்கள் (16 ), அலுவலக நம்பர்கள் (22 ) ம்ம்..ம்ம்.. போதும்... போதும்.. அவர்கள் யாவருமே இன்றும், சித்திரை மாதத்தின் முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிவருவதாகச் சொன்னார்.
நாடு நலம் பெறவும் மக்கள் அனைவரும் நன்றாக இருக்கவும், அனைவருக்கும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-: 'கர' வருஷத்திய பலன் வெண்பா :-
கர வருடமாரிபோய்யுங் காசினியுமுய்யும்
உரமிகுத்து வெள்ளமேங்குமொடும் - நிறைமுகுத்து
நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்
பாலும்நெய்ய்யுமே சுருங்கும் பார்.
இவ்வருஷத்திய தகவல்கள்
வருஷ தேவதை : லட்சுமி நாராயணர் &
பசுனாயகன் (ராமராஜன் ?) : கோபாலன்.
வருஷ தேவதை : லட்சுமி நாராயணர் &
பசுனாயகன் (ராமராஜன் ?) : கோபாலன்.
இவ்வருஷத்திற்கு விந்திய பர்வதத்திற்கு வடக்குதிக்கில் சங்கவர்த்த மேகம் உற்பத்தியாகிறது. மிகுந்த காற்றடிக்கும். தேவமானத்தால் 100 யோஜனை உயரமும், 60 யோஜனை அகலமும் உள்ள மரக்காலால் 3 மரக்கால் முக்குருணி மழை பொழியும், இதில் 10 பாகம் சமுத்திரத்திலும், 6 பாகம் மலையிலும், 4 பாகம் பூமியிலும் மழை பொழியும்.
இந்த வருடம் வைகாசி மாதம் 32 ம் தேதி (15-06-2011) புதன்கிழமையும் (இந்திய நேரப்படி இரவு 11 :52 முதல் மறுநாள் அதிகாலை 03 :32 வரை) , கார்த்திகை மாதம் 24 ம் தேதி (10-12-2011) சனிக்கிழமையுமாக (இந்திய நேரப்படி மாலை 06:14 முதல் முன்னிரவு 09:47 வரை) இரண்டு பூரண சந்திரக் கிரகணங்கள் வரவிருக்கிறது.. (Lunar eclipse )
மேலே சொல்லப் பட்ட தகவல்கள் கர வருஷ சுத்த வாக்கிய பஞ்சாங்கம்.. அசல் 28 நே. பாம்பு பஞ்சாங்கத்திலிருந்து படித்தேன். (நன்றி : பாம்பு பஞ்சாங்கம்)
===================================
11 Comments (கருத்துரைகள்)
:
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு
புத்தாண்டு வாழ்த்துக்கள் .
அப்படியே நம்ம பக்கமும் வாங்கன்னே
http://mahaa-mahan.blogspot.com/
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல தகவல்கள்..
நான் தை 1 ஐ புத்தாண்டாக நினைப்பதால், தங்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ரெண்டு சந்திர கிரகணமா....ஓகே...
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
முத்திரை பதிக்கும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எங்களுக்கு எப்போதுமே சித்திரைதான் புதுவருடப்பிறப்பு :)
வாழ்துக்கள் சகோ!!!
நன்றி நண்பர்களே..
@Thamesh
உங்கள் வலைப் பக்கம் பார்த்தேன்.. நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.
தித்திக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவன்
மிகவும் பயனுள்ள செய்திகள் , நன்றி
@A.R.RAJAGOPALAN
உங்களுக்கு இந்த தகவல்கள் பயனளிக்கும் என்பதை படித்ததும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.. நன்றி.
Post a Comment