ஜனநாயகம் - தேர்தல்

நல்லதொரு ஜனநாயகத்திற்கு அறிகுறி : அதிக அளவு வாக்குப் பதிவு.
இந்தமுறை நடைபெற்ற மாநிலப்  பொதுத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் வழக்கத்தைவிட அதிக அளவில் வாக்குப் பதிவு நடைபெற்றது, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அறிகுறிதானே ? இந்த தேர்தலை சிறப்பான முறையில் செய்த தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள். ஒரு மாத கால அவகாசத்திற்குப் பின்னரே முடிவுகள் தெரியவரும். அனைவருக்கும் அதுவரை சஸ்பென்ஸ் தானே ? தேர்தலில் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்துவரும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். 
------------------------------------------------------------


ஜோக்கு (கண்டுப்பா சிரிக்கோணும்)

ஒருவர் : எதுக்கு நடிகர் ரஜினி ஒட்டு போடுறத வீடியோ எடுத்தாங்க.. எல்லாரும் ஆர்வமா பாத்தாங்க ?
மற்றவர் : அவரு ஒரு ஒட்டு போட்டா நூறு ஒட்டு போட்ட மாதிரியாச்சே ! அதான்.

 ----------------------------------------------------------

நான் சந்தித்த தேர்தல்கள் :
அட.. தேர்தல்ல வேட்பாளரா நிக்குற அளவுக்கு எனக்கு செல்வாக்கு இல்லை. நா சொல்ல வர்றது நானும் ஒரு வாக்களராகி, தேர்தல்ல ஒட்டு போட்டதைப் பத்திதான் சொல்ல வந்தேன். முதல் முறையா நா வாக்காலரானது 1991 ஆகஸ்டு மாசத்துலதான். அதுக்கு முன்னாடியே, 'மே' மாசத்துலேய பொதுத் தேர்தல் வந்திட்டு போயிடிச்சு. 

ஒரு பஞ்சாயத்து தேர்தல்லதான் மொதோ தடவையா ஒட்டு போட்டேன். ஸ்வஸ்திக் வடிவம் கொண்ட அச்சினால் இன்க்கில் தோய்த்து வாக்குச் சீட்டில் ஓட்டுப் அச்சிட்டு, வாக்குப் பெட்டியில் போட்டேன்.

அப்புறமா 1996 பொதுத் தேர்தல்ல ஓட்டுப் போட்டேன். அப்பவும் வாக்குச் சீட்டுதான். யாருக்கு ஒட்டு போட்டேன்னு எனக்கே மறந்து போயிடிச்சு.... அதுக்கப்புறம் 2001 , 2006 ரெண்டுத்துலேயும் ஓட்டுப் போடலை.. ம்ம்ம்ம்.. வாக்காளர் பட்டியல்லையே பேர நீக்கியாச்சு. வேற மாநிலத்துக்கு வேலைக்கு போயிட்டேன்.

என்னால் இந்த முறை(யும்) வாக்களிக்க இயலவில்லை. பன்னிரண்டு வருஷமா, நா தமிழ்நாட்டுக்கு வெளியில இருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி குஜராத்துல ஒட்டு போட்டேன்.. யாருக்கா ? அஸ்கு புஸ்கு அப்பளம் வடை... நா யாருக்கு போட்டேன்னு நீங்கலாம் தெரிஞ்சிக்குற மாதிரி நா ஒன்னும் பெரியாளு இல்லை. நா ஒட்டு போட்டாலும் ஒரு ஓட்டுதான் கணக்குல வருமாம்.

டிஸ்கி : 'நாக்கு' எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு 'வாக்கு' முக்கியம்.
==================================

14 Comments (கருத்துரைகள்)
:

A.R.RAJAGOPALAN said... [Reply]

எளிமையான உங்கள் நடையில் ,
வலிமையான கருத்துக்கள் எல்லோரையும் கவரும்

மோகன் குமார் said... [Reply]

உங்க வயசு ஏறக்குறைய தெரிஞ்சு போச்சு

பெசொவி said... [Reply]

//நாக்கு' எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு 'வாக்கு' முக்கியம்//

இதப் புரிஞ்சுக்காதவந்தான் "பேக்கு", சரியா?

பாலா said... [Reply]

வாக்கு சதவீதம் அதிகரிப்பு நிச்சயம் வரவேற்கபடவேண்டிய விஷயம்.

நகைச்சுவை-அரசர் said... [Reply]

கலக்கறே மாதவா.. பாராட்டுகள்..!

குஜராத்ல யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு ’மோ’டி மறைச்சாலும் நாங்க தெரிஞ்சுக்குவோம்ல..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.RAJAGOPALAN

நன்றி நண்பரே.. உங்கள் ஊக்கம் என்னைப் போன்ற சிறுவனுக்கு(!) அவசியம்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்
//Madhavan Said "நன்றி நண்பரே.. உங்கள் ஊக்கம் என்னைப் போன்ற சிறுவனுக்கு(!) அவசியம்."//

நண்பர் ARRருக்கு அளித்துள்ள பதிலையும் பார்க்கவும் அண்ணா ! நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெசொவி

ஆக்கு - பாக்கு வெத்தலை பாக்கு
டாம் டும் டஸ்க்கு
அச்கலக்கடி ஆலசுந்தர
கோல கொப்பற கொய்யா..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பாலா
"வாக்கு சதவீதம் அதிகரிப்பு நிச்சயம் வரவேற்கபடவேண்டிய விஷயம். " //

அதே.. அதே..
உங்கள் வருகைக்கு நன்றி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நகைச்சுவை-அரசர்

வாங்கன்னே..
ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு எழுதறேன்..
உங்க லேவேலே தனி..
உங்க "மகன் போட்ட சவால்" -- நா இன்னும் மறக்காத நாடகம்.

'மூடி' மறச்சாலும் 'மோதி'ப் பாத்தாலும்.... -- ம்ம்ம்ம்..
நீங்க நீங்களேதான்..

RVS said... [Reply]

நாக்கு வாக்கு நன்றாக இருந்தது. ;-)

ஸ்ரீராம். said... [Reply]

குஜராத்துல ஓட்டு போட்டதாலேயே பெரிய மனுஷன் ஆயிட்டீங்களே ஜி...

கோமதி அரசு said... [Reply]

//நாக்கு' எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு 'வாக்கு' முக்கியம்.//

ஆகா என்ன அருமையான பொன்மொழி!
சொல்வாக்கு, செல்வாக்கு, மக்கள் வாக்கு எல்லாம் மிக மிக முக்கியம் மாதவன்.

Lakshmi said... [Reply]

நாக்கு வாக்கு ஜோர்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...