ஆல்ரவுண்டர்

நம்ம பொண்ணு கூட ஆல்ரவுண்டர்தான்..
ஸ்கூலுல நடந்த பல போட்டிகளுல கந்துக்கிட்டு பல போட்டிகளுல ஜெயிச்சு பரிசு வாங்கி இருக்கா. இன்றைய தினம் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு போயிட்டு வந்தோம்.
பரிசு பெற்ற அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.
----------------------------------------
நன்றி : கூகிள் இமேஜெஸ்..
இப்பத்தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டு முடிஞ்சி (சும்மாவா.. இந்தியாதான ஜெயிச்சுது.... ) சந்தோஷமா அதையே நெனைச்சிக்கிட்டு நாலஞ்சு நாள  ஓட்டினா.. தொடர்ச்சியா ஐ.பி.எல் T -20 மேச்சு ஆரம்பிச்சிட்டுது..

உலகக் கோப்பை மாதிரியே, மொதோ மேட்ச்சுல தோணி டீம் ஜெயிச்சுடிச்சு.. கடைசி ஆட்டத்திலேயும் ஜெயிப்பாங்களா ? ம்ம்.. பார்க்கலாம்.
-------------------------------------------------------
ஸ்கூல் காலேஜு டேஸ்ல நாங்க எங்க தெரு கிரவுண்டுல கிரிக்கெட் ஆடுவோம்...  நா எப்படி விளையாடுவேனா .? நானும் ஒரு ஆல்ரவுண்டர்தான்.

ஒரு ஆஷிஷ்  நேரா,  ஒரு காம்பீர்.
அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து செய்த கலைவை நான்..
ஆஷி நேரா மாதிரி பேட்டிங்கும், காம்பீர் மாதிரி பவுலிங்கும் செய்யற ஆளு நானு, மொத்தத்துல ஒரு ஆல் ரவுண்டர் தெரியுமா ?
------------------------------------
ஒரு மேட்சுல ரொம்ப இக்கட்டான / தோத்துப்போற  நெலமையில இருந்த அணியை ஜெயிக்க வெச்சேனே ! எப்படியா ? நானு ஸ்ரீசாந்த் மாதிரில்ல பால் போடுவேன்! எப்படி எதிரணி தோத்துப் போகும் ?
------------------------------------

பெரும்பாலும் பலருக்கு பவுலிங் போடுறத விட பேட்டிங் பண்ணுறதுதான் ரொம்பப் பிடிக்கும். நாங்களும் விதி விலக்கல்ல. எங்கள் தெருவில் இருக்கும் அனைவருக்கும் கிரிகெட்டு விளையாடும்போது பேட்டிங்கின்மீதே நாட்டமிருந்தது, ஒருவர் தவிர.  அவர்--என்னுடைய சின்ன அண்ணன். தனக்கு பவுலிங் போடுவதுதான் ரொம்ப இஷ்டம்னு சொல்லுவாரு. ஏனென்று கேட்டால் அவர் சொல்லும் பதில் "பேட்டிங் நம்ம இஷ்டத்துக்கு செய்ய முடியாது.. ஆனா பவுலிங் நம்ம இஷ்டத்துக்கு எங்க வேணும்னாலும் (வைடு கூட)  போடலாம்".

ம்ம்ம்ம்.. பேட்டால ரவுண்டு கட்டி, பந்தை  அடிப்பாருன்னு பார்த்தா, பந்தை ரவுண்டு கட்டி அடிக்கும்(வீசுற)  ஆளா இருந்தாரு அவரு. அந்த ஆல்(ளும்) ரவுண்டர்தானா ?
======================================

16 Comments (கருத்துரைகள்)
:

தமிழ்வாசி - Prakash said... [Reply]

வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு...

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

// ஏனென்று கேட்டால் அவர் சொல்லும் பதில் "பேட்டிங் நம்ம இஷ்டத்துக்கு செய்ய முடியாது.. ஆனா பவுலிங் நம்ம இஷ்டத்துக்கு எங்க வேணும்னாலும் (வைடு கூட) போடலாம்".
//

அதைவிட ஈசி, ஆடியன்சா இருக்கறதுதான்.
"ச்சே! அவன் அப்படி அடிச்சிருக்கக் கூடாது, இவன் இப்படி பால் போட்டிருக்கக் கூடாது" என்று வித விதமாக குறை சொல்லிக் கொண்டிருக்கலாமே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

நான் கிரிக்கெட் ஆடற ஸ்டைலே தனி, தெரியுமா? நான் போனாலே போதும், எல்லாருமே என்னை கெஞ்சுவாங்க, எதிர் அணில விளையாடச் சொல்லி!

ஸ்ரீராம். said... [Reply]

உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

மோகன் குமார் said... [Reply]

உலகக் கோப்பை மாதிரியே, மொதோ மேட்ச்சுல தோணி டீம் ஜெயிச்சுடிச்சு.. கடைசி ஆட்டத்திலேயும் ஜெயிப்பாங்களா ?

Chennai or Mumbai can go on to win the cup. Early predictions..(Can change later)

Lakshmi said... [Reply]

வாழ்த்துக்கள் மகளுக்கு.

middleclassmadhavi said... [Reply]

உங்கள் மகளுக்கும் மாணவக் கண்மணிகளுக்கும் வாழ்த்துகள்!
படம் சூப்பர்!

RVS said... [Reply]

மாதவா! மகளுக்கு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said... [Reply]

உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

எல்லாத்தையும்விட அம்பையரா இருக்கறதுதான் ஈசி... ஜாலியா அவுட் கொடுத்துக்கிட்டே இருக்கலாம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

///ஸ்கூலுல நடந்த பல போட்டிகளுல கந்துக்கிட்டு பல போட்டிகளுல ஜெயிச்சு பரிசு வாங்கி இருக்கா. ///////

வாழ்த்துக்கள்....!

angelin said... [Reply]

வாழ்த்துக்கள் உங்கள் அன்பு மகளுக்கு .

வெங்கட் said... [Reply]

// ஒரு ஆஷிஷ் நேரா, ஒரு காம்பீர். அவங்க ரெண்டு
போரையும் சேர்த்து செய்த கலைவை நான்..
ஆஷி நேரா மாதிரி பேட்டிங்கும், காம்பீர் மாதிரி
பவுலிங்கும் செய்யற ஆளு நானு, //

ஹா., ஹா., ஹா..

முதல்ல நான் கூட பயந்தே போயிட்டேன்..
இப்ப தான் நிம்மதியா இருக்கு

போளூர் தயாநிதி said... [Reply]

உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

A.R.RAJAGOPALAN said... [Reply]

அன்பு மாதவன்
ஆனந்தம் உங்கள் மகள் வெற்றி பெற்றது
அற்புதம் உங்கள் எழுத்தை படித்து ....
வாழ்த்துக்கள் உங்களுக்கும் , மகளுக்கும்

Madhavan Srinivasagopalan said... [Reply]

Thanks all..

Gopli thanks for ur first visit & comment. keep coming..

thanks

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...