ஒருவருக்கு இருப்பிடம் அவசியம் தேவை. அதனை குறிப்பதற்கு, அதற்கு முகவரி வேண்டும். முகவரியில் வீட்டு / மனை எண், தெருப்பெயர், ஊர்பெயரும் இருக்கும். தெருப் பெயர் இல்லாத முகவரி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன ? ஆனால், நான் வசித்த காந்திநகர் (குஜராத்), மற்றும் (சில ?) ஆந்திர நகரங்களில் தெருப் பெயர் இல்லாத இடங்களே அதிகம். முகவரியில், தனியதான (யுனிக்) மனை எண்களும், பகுதியின் பெயரும் மட்டுமே இருக்கும்.
- காந்திநகர் (குஜராத்) திட்டமிட்டு அனுமானிக்கப் பட்ட தலை நகர் ஆகும். எட்டு பிரிவுகளாக (செக்டார்) ஒவ்வொரு பிரிவிலும் நான்கு உட்பிரிவோடும் (A, B, C or D), இருக்கும். ஒவ்வொரு மனையும் '/1' அல்லது '/2 ' என குறிப்பிடப் பட்டிருக்கும். எனவே ஒரு வீட்டின் முகவரி, தெருப் பெயர் இல்லாமல் இருக்கும்.
உ.ம் -- பிளாட் நம்பர். 184 / 2 , செக்டர் 4 A , காந்தி நகர்
- ஆந்திராவில் (ஹைதராபாத், விசாகப்பட்ணம்) XX -YY -ZZZ என்று எண்களுடன், தெருப் பெயர் இல்லாமல், பகுதிப் பெயர் மட்டுமே இருக்கும்.
எதுக்கு இதையெல்லாம் சொல்லுற ? ஒங்க கேள்வி புரியுது.. பொறுமையோட படிங்க.. ப்ளீஸ்....
அதாவது.. நானு பொறந்து, வளந்த ஊருல ஒரு சில தெருவோட பேருங்க பொருத்தமா.. அதாவது காரணத்தோட இருக்கும். பேரு வெச்சா காரணம் இருக்கணும்.. இல்லேன்னா.. மேலே சொன்னா மாதிரி தெருவுக்கு பேரு இல்லாமலே அட்ரஸ் வெச்சிடலாம். ஆங்.. எங்க ஊருல இருக்குற ஒருசில தெருவோட பெரும் அதோட அர்த்தத்தையும் படிச்சு பாருங்க..
கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதி -- இவை நான்கும் பொதுவாக பெரிய கோவில்கள் இருக்கும் ஊர்களில் இருப்பது வழக்கம். அதாவது.. முக்கியமான கோவிலை சுற்றி நான்கு புறங்களில் இருக்கும் வீதிகளின் பெயர்களே இவைகள்.
அதே போல முக்கியமாகவும் மிகவும் பெரியதாகவும் இருக்கும் , 'ஹரித்ராநதி' எனும் குளத்தினை சுற்றி அமைந்துள்ள தெருக்கள் கீழகரை, மேல்கரை, வடகரை, தென்கரை, என பெயரிடப்பட்டுள்ளது.
இதெல்லாம், பல ஊர்களிலும் இருப்பதுதான் என நினைக்கிறேன். ஆனால்.. எங்கள் ஊரில் இருக்கும் வேறு சில தெருப் பெயர்கள் மற்ற ஊர்களில் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். அப்படி இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.
ஊர் திருவிழாவில் முக்கியமான தேரோட்டம் நடக்கும் பொது கீழ வீதியிலிருந்து தேர் மேற்கு நோக்கித் திரும்பி தெற்கு வீதியில் நுழைவதற்கு, தேர்வடம் கீழ வீதியின் தொடர்ச்சியாக தெற்கு திசை நோக்கி செல்லும் தெருவிற்குள் நுழைந்து தேர் திரும்பிய பின்னர் தெற்குத் தெருவிற்குள் தேர்வடம் செல்லும். அதனால் அந்தத் தெருவிற்கு 'தெற்கு வடம்போக்கித் தெரு', அதாவது தேர்திருப்ப வடம் (மட்டும்) செல்லும் தெரு என்றும், அதே போல மற்ற நான்கு வீதிகளிலும் தேரினை திருப்புவதற்கு தேர்வடம் நுழையும் தெருக்களுக்கு, முறையே 'மேல வடம்போக்கித் தெரு, வடக்கு வடம்போக்கித் தெரு, கீழ வடம்போக்கித் தெரு' எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. தாலுகா ஆபீஸ் இருப்பதால், கீழ வடம்போக்கித் தெரு 'தாலுகா ஆபீஸ் ரோடு' எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
ஒற்றைத் தெரு : ஒரு தெருவில் ஒரு பக்கத்தில் மட்டும் வீடுகள்.. எதிர்பக்கம் பக்கத்துத் தெருவின் வீடுகளின் கொல்லைப் பக்கம் மட்டுமே. -- ஒற்றை சாரியாக அமைந்த தெருவாதளால் இதன் பெயர் 'ஒற்றைத் தெரு' -- அந்த தெருவின் மேற்கு மூலையில் இருக்கும் பிள்ளையார் -- ஒற்றைத் தெரு பிள்ளையார் எனவர் அழைக்கப் படுகிறார்.
எங்கள் ஊரிலும் மேல / கீழ ராஜ வீதிகள் உண்டு. எனது வீடு இருக்கும் தெரு கோவிலுக்கு மேல்புறம். கோவிலின் கிழக்குப் பக்க வீதியை 'கீழ ராஜ வீதி' என்பார்கள். அதனால், நான் எங்கள் வீட்டுப் பக்கமிருக்கும் ஒரு தெருவை 'மேல ராஜ வீதி' என்று நினைத்திருந்தேன்.. ஆனால், பின்னால் தான் தெரிந்தது.. 'மேல - கீழ' ராஜ வீதிகள் இரண்டுமே கோவிலுக்கு கிழக்குப் பக்கம்தான் இருப்பதாக. அதாவது.. ஒரே ஒரு 'ராஜ வீதிதான்' -- ராஜாவின் வாசலில் இருந்து நேராக செல்லும் வீதி. அந்த வீதி மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் இருப்பதால்.. அந்த வீதியின் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்கள் தனித் தனியாக 'மேல', 'கீழ' ராஜ வீதிகளாக பிரிக்கப்பட்டு பெயரிடப் பட்டுள்ளது.
பல ஊர்களிலும் பொதுவாக இருக்கும் தெரு / சாலை / ரோடு பெயர்கள் :
கப்பல் வராத சமுத்ரம், கடல் இருக்கு - எங்கள் ஊரில் ( பெயரளவில் )
டிஸ்கி : வித்தியாசமா பதிவு எழுதணும்னுதான் உங்களின் கவனத்தை தெருவிற்கு, மன்னிக்கவும், தெருப்பெயருக்கு கொணர்ந்தேன்.
எங்கள் ஊரிலும் மேல / கீழ ராஜ வீதிகள் உண்டு. எனது வீடு இருக்கும் தெரு கோவிலுக்கு மேல்புறம். கோவிலின் கிழக்குப் பக்க வீதியை 'கீழ ராஜ வீதி' என்பார்கள். அதனால், நான் எங்கள் வீட்டுப் பக்கமிருக்கும் ஒரு தெருவை 'மேல ராஜ வீதி' என்று நினைத்திருந்தேன்.. ஆனால், பின்னால் தான் தெரிந்தது.. 'மேல - கீழ' ராஜ வீதிகள் இரண்டுமே கோவிலுக்கு கிழக்குப் பக்கம்தான் இருப்பதாக. அதாவது.. ஒரே ஒரு 'ராஜ வீதிதான்' -- ராஜாவின் வாசலில் இருந்து நேராக செல்லும் வீதி. அந்த வீதி மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் இருப்பதால்.. அந்த வீதியின் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்கள் தனித் தனியாக 'மேல', 'கீழ' ராஜ வீதிகளாக பிரிக்கப்பட்டு பெயரிடப் பட்டுள்ளது.
பல ஊர்களிலும் பொதுவாக இருக்கும் தெரு / சாலை / ரோடு பெயர்கள் :
- காந்தி
- பாரதியார்
- கம்மாளத் தெரு ( ஆபரணம் செய்யும் தொழிலாளர்கள் வசிக்கும் தெரு )
- பஸ்டாண்டு ரோடு, ரயில் நிலைய ரோடு.. (ஹி. ஹி.. )
- பெரிய / சின்ன கடை தெரு
- ராஜ வீதி..
- சன்னதி தெரு (கோவில் வாசலில் இருக்கும் தெரு.. ராஜ வீதி போன்று)
கப்பல் வராத சமுத்ரம், கடல் இருக்கு - எங்கள் ஊரில் ( பெயரளவில் )
- சமுத்ரம் (கோபால சமுத்ரம் -- கோவிலை சுற்றியுள்ள பகுதியின் பெயர்)
- கடல் ( திருப்பாற்கடல் -- ஒரு பகுதியின் பெயர்)
- நதி - ( ஹரித்ரா நதி -- முக்கியமான குளத்தின் பெயர்)
டிஸ்கி : வித்தியாசமா பதிவு எழுதணும்னுதான் உங்களின் கவனத்தை தெருவிற்கு, மன்னிக்கவும், தெருப்பெயருக்கு கொணர்ந்தேன்.
17 Comments (கருத்துரைகள்)
:
வோட்டு போட்டுட்டேன்
ஐ, வடை எனக்கே எனக்கு!
மாதவா படம் போட்டு விளக்கியது சூப்பெர்ப். ;-)
@பெசொவி //"வோட்டு போட்டுட்டேன்"//
ஏப்ரல் 13 ம் தேதி தான.. ?
@RVS
படம் போட்டா சரியா புரிய வெக்கலாம்னுதான்..
நன்றி ஆர்.வி.எஸ்.
//எதுக்கு இதையெல்லாம் சொல்லுற ? ஒங்க கேள்வி புரியுது.. பொறுமையோட படிங்க.. ப்ளீஸ்....//
சரி சரி .. அழாதீங்க .. படிக்கிறேன் :-))
எங்க ஊர்ல இரண்டே தெருதான் இருக்கு .. ஒண்ணு மாரியம்மன் தெரு , இன்னொன்னு காளியம்மன் தெரு :-)
மிக அற்புதமான மன்னை மைந்தர்கள் அறிய வேண்டி மன்னையின் மண்ணை பற்றிய பதிவு
எனக்கு இன்றுதான் வடம் போக்கி தெரு பெயர் காரணம் தெரியும் நன்றி பயனுள்ள பதிவு
@கோமாளி செல்வா
ஒங்க ஊருல ரெண்டே ரெண்டு தெருதானா .. ?
ரெண்டே ரெண்டு கோவில்தானா ?
@A.R.RAJAGOPALAN
வாங்க கோப்லி.. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
ஆச்சர்யம்.. வடம் போக்கித் தெரு பற்றி உங்களுக்கு தெரியாதது..
பெயர் காரணம் பற்றிய அலசல் சிறப்பு .பதிவின் தலைப்பே திணற வைக்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி
@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
Good posting. But many old names have disappeared today. Some popular ( Historic?) names ought have been retained to remind the new generation about our past history. HIt is a pity that the street names have become a casualty o the modern politics
வடம்போக்கித் தெரு தேரோடும் எல்லா ஊர்களிலும் இருக்கும். திருவாரூர், மதுரை, தஞ்சாவூர்...மதுரையில் தெருப் பெயர்கள் இன்னும் விசேஷம். சித்திரை வீதி, ஆனி வீதி, ஆடி வீதி...எல்லாவற்றிலும் மேல, கீழ, வட, தென் உண்டு!
@Shankar
என்னதான் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' தொடந்தாலும்.. ஒரு சில காரணப் பெயர்கள் (இடம், தெரு, ஊர்) மாறாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
@ஸ்ரீராம்.
அப்படியா ஸ்ரீராம்..(வடம்போக்கித் தெருக்கள் மற்ற ஊர்களிலும்).
ம்ம்.. மதுரையில் மேலும் 'மாசி' வீதி..
ஸ்ரீரங்கத்தில்.. கிழக்கு - மேற்கு சித்திர, உத்திர வீதிகள், அடைய வளஞ்சான்..
எல்லா ஊர்களிலும் இருக்கும் ஒரு பெயர் அண்ணா நகர், மற்றும் எம்ஜியார் நகர். எல்லாம் கழகத்தின் கைங்கர்யம்.
Post a Comment