எனக்குப் புரியலை - உங்களுக்கு ?

அதென்னமோ தெரியலை.. புரியலை.. படிச்சிட்டு நீங்களே ஒரு ஞாயம் சொல்லுங்க..
 
இன்னிக்கு மாலை சுமார் 4:30 - 05:30 வரை (அதுக்கப்புறம் இதுவரை நான் டிரை செய்யவில்லை), ஆறேழு தடவை, ஒரு எஸ்,டி,டி கால் பண்ணினேன், பி.எஸ்.என்.எல், லேன்ட் லயன்லேருந்து. கிடைத்த பதில், "No telephone is working with this number". அதே சமயத்துல, என்னோட செல்போனுலேருந்து போன் செஞ்சா, அந்த நம்பருக்கு டயல் போகுது.  ஏன்.. எப்படி.. எதுக்காக இப்படி ?

சரி... என்ன பிரச்சனைன்னு கஸ்டமர் கேருக்கு போன் போட்டா, அதுல "you are in Q" ன்னு சொல்லுது.. அதுக்கப்புறம் எந்த தகவலும் இல்லை. நாலஞ்சு தடவை இப்படி செஞ்சு பாத்து அலுத்துப் போய் விட்டது. 
------------------------------------------------------------------------------

இந்தியன் ரயில்வே, உலகிலேயே மிகப் பெரியதொரு நிறுவனம். அவர்கள் செய்யும் சேவைகளுக்கு ஒரு 'சல்யூட்'. இருந்தாலும் ஒரு சில தகவல்களுக்கு அர்த்தம் புரிவதில்லை, எனக்கு. உதாரணம், ரயில்வே வெப் சயிட்டுல, பி.என்.ஆர் கொடுத்து ரிசர்வேஷனின் ஸ்டேடஸ் பார்த்தால், ஸ்டேடசுடன் கீழ்கண்ட செய்தியும் இருக்கிறது.
  • "Please Note that in case the Final Charts have not been prepared, the Current Status might upgrade/downgrade at a later stage."
 'Upgrade' -- சரி புரியுது....  அதென்னது 'downgrade' ?
----------------------------------------------------------------------------------
 "அடுத்த வாரம் ஆந்திர சட்டசபை விரிவாக்கம்" -- தினமலர் வலைதள செய்திகளுள் ஒரு தலைப்பு.
டவுட்டு : ஓஹோ.. சட்டசபை வளாகத்தினை(கட்டடத்தினை) விரிவு படுத்துகிறார்களோ ?
ஆனால், படித்தப் பின்னர்தான் தெரிகிறது,  மந்திரி சபை விரிவாக்கமாம். தெளிவாக சொல்ல (எழுத) வேண்டாமா ?
++++++++++++++++++++++++++++++++++++++++

31 Comments (கருத்துரைகள்)
:

Nivisugis said... [Reply]

எல்லா வலை தளங்களுக்கும் போய் பார்த்து கருத்துகளை சொல்ல முயற்சி எடுத்தேன் . தற்போதுதான் எப்படி தமிழில் பதிவு செய்வது என்று கற்றுக் கொண்டேன் . தங்களின் உதவிக்கு நன்றி .

பெசொவி said... [Reply]

//மந்திரி சபை விரிவாக்கமாம். தெளிவாக சொல்ல (எழுத) வேண்டாமா ?
//

தெளிவாக சொல்வது என்பது வேறு, இது தவறாக சொல்வது. மந்திரி சபை விரிவாக்கம் என்பதுதான் சரி, சட்டசபை விரிவாக்கம் என்று எழுதியது தவறு.

வெங்கட் said... [Reply]

// பி.எஸ்.என்.எல், லேன்ட் லயன்லேருந்து.
கிடைத்த பதில், "No telephone is working
with this number". ஏன்.. எப்படி.. எதுக்காக
இப்படி ? //

மக்கள் அனாவசியமா போன் பேசி.,
பணத்தை வீணாக்கறாங்களேன்னு
கவர்மெண்ட் மக்கள் பணத்தை
சேமிக்க ஸ்பெஷல் திட்டம் போட்டு
இருக்குல்ல.... அதான் இது..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Nivisugis

உங்கள் முதல் வருகைக்கு நன்றி..
அதெப்படி என்னால் நீங்கள் பதிவெழுதக் கற்றுக் கொண்டீர்கள்..?

ஒரு வேளை, 'இவனெல்லாம் ஏதேதோ எழுதுறான், நம்மளால முடியாத என்ன ?' அப்படித்தானே ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெசொவி

உங்கள் கருத்திற்கு நன்றி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

இந்தக் கதைலாம் வேணாம்..
ஒரு வேளை இப்படி இருக்கலாம்..
லேண்ட் லயன் டு லேண்ட் லயன் ஒரு கால், 180 நொடிகள்.. (பணி செய்யவில்லை)
மொபைல் டு லேண்ட் லயன் ஒரு கால், 60 நொடிகள்.. (பணி செய்கிறது)

எல்லாம் அவங்க லாபத்திற்குதான.. ?

A.R.ராஜகோபாலன் said... [Reply]

சரி... என்ன பிரச்சனைன்னு கஸ்டமர் கேருக்கு போன் போட்டா, அதுல "you are in Q" ன்னு சொல்லுது.. அதுக்கப்புறம் எந்த தகவலும் இல்லை. நாலஞ்சு தடவை இப்படி செஞ்சு பாத்து அலுத்துப் போய் விட்டது

இப்படியே அலுத்துப் போயி, அலுத்துப் போயே நம் வாழ்வு பழகி போய்டும் மாதவன், ஏன்னா வாடிக்கையாளர் சேவையில் அவர்களின் ஈடுபாடு , இது BSNL க்கு மட்டுமல்ல எல்லாருக்குமே பொருந்தும்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.ராஜகோபாலன்

ம்ம்.. நாளைக்கு மறுபடியும் டிரை பண்ணி பாக்குறேன்..

RVS said... [Reply]

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்... ;-)))

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமா இருந்தா தேவலையே..
'போ'ராட்டமா இருக்குதே !

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

ஒருவேள உங்க போனுக்கு அது எஸ்டிடி நம்பர்னு தெரியலியோ? எதுக்கும் மறுக்கா ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாக்கறது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

////// 'Upgrade' -- சரி புரியுது.... அதென்னது 'downgrade' ?/////

கடைசி வர அப்கிரேடு ஆகலேன்னா அது டவுன்கிரேடுதானே?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

அட.. நாளு பூரா டிரை பண்ணி பாத்திட்டேன்..
தமிழ் நாட்டுல சென்னை தவிர, வேறெந்த ஊருக்கும் போன் கால் போகமாட்டேங்குது..

Madhavan Srinivasagopalan said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said, "கடைசி வர அப்கிரேடு ஆகலேன்னா அது டவுன்கிரேடுதானே?" //

அட.. அதுக்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்குதா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

///////Madhavan Srinivasagopalan said... [Reply] 13
@பன்னிக்குட்டி ராம்சாமி

அட.. நாளு பூரா டிரை பண்ணி பாத்திட்டேன்..
தமிழ் நாட்டுல சென்னை தவிர, வேறெந்த ஊருக்கும் போன் கால் போகமாட்டேங்குது..//////////

நல்லா பாத்தீங்களா உங்க போனுக்கு கால் இருக்கான்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

///////Madhavan Srinivasagopalan said... [Reply] 14
//பன்னிக்குட்டி ராம்சாமி said, "கடைசி வர அப்கிரேடு ஆகலேன்னா அது டவுன்கிரேடுதானே?" //

அட.. அதுக்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்குதா ?
//////

ஆமா கழுத்த புடிச்சி வெளிய தள்ளிவாடுங்கள்ல அத சொன்னேன்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

/////சரி... என்ன பிரச்சனைன்னு கஸ்டமர் கேருக்கு போன் போட்டா, அதுல "you are in Q" ன்னு சொல்லுது.. ///////

நீங்க எதுக்கும் இந்த R, S, T, U - ல இருந்து பாருங்களேன்...?

Madhavan Srinivasagopalan said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said.. "நல்லா பாத்தீங்களா உங்க போனுக்கு கால் இருக்கான்னு?"//

அட.. லேண்ட்-லயன் போஸ்ட் பெயிடுங்க..
ஹ்ம்ம்.. நீங்க எந்த 'கால' சொன்னீங்க.. ?

இராஜராஜேஸ்வரி said... [Reply]

அடுத்த வாரம் ஆந்திர சட்டசபை விரிவாக்கம்" -//
விரிவாய் விளக்கியதற்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

/////"அடுத்த வாரம் ஆந்திர சட்டசபை விரிவாக்கம்" -- தினமலர் வலைதள செய்திகளுள் ஒரு தலைப்பு.
டவுட்டு : ஓஹோ.. சட்டசபை வளாகத்தினை(கட்டடத்தினை) விரிவு படுத்துகிறார்களோ ?
ஆனால், படித்தப் பின்னர்தான் தெரிகிறது, மந்திரி சபை விரிவாக்கமாம். தெளிவாக சொல்ல (எழுத) வேண்டாமா ?/////////

ஒருவேள மந்திரிசபையே சட்டசபை அளவுக்கு பெருசா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said.. "நீங்க எதுக்கும் இந்த R, S, T, U - ல இருந்து பாருங்களேன்...? " //

அங்கிட்டலாம் நிக்க முடியுமா.. ?
நா இதுவரைக்கும், 'Q ' தாண்டினதே இல்லை.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இராஜராஜேஸ்வரி

உங்கள் வரவிற்கும், கருத்திற்கும், நன்றி மேடம்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said.
"ஒருவேள மந்திரிசபையே சட்டசபை அளவுக்கு பெருசா?"//

ம்ம்ம்.. இருக்கலாம்

middleclassmadhavi said... [Reply]

நீங்கள் போட்ட நம்பர் 8-ல் ஆரம்பித்த மொபைல் நம்பரா?!!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ஆஹா என்னமா ஒரு டவுட்டு... ஆனா இந்த டவுட் நிறைய பேருக்கு இருக்கு... :)

ஸ்ரீராம். said... [Reply]

நான் ஒரு நம்பருக்கு டயல் செய்த போது 'நீங்கள் பேச நினைக்கும் நபர் தற்சமயம் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறார்' என்று 'போட்டுக்' கொடுத்தது! அப்புறம் அவரைக் கேட்டால் 'அதெப்படி உனக்குத் தெரிஞ்சுது'ன்னு ஷாக் ஆயிட்டார்!!

rajamelaiyur said... [Reply]

எனக்கும் புரியல

rajamelaiyur said... [Reply]

bsnl என்ன பெரிய அப்பாடக்கரா ?

rajamelaiyur said... [Reply]

அண்ணா நான் புதுசுங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said... [Reply]

////// 'Upgrade' -- சரி புரியுது.... அதென்னது 'downgrade' ?/////

அதாங்க இது...:))

CS. Mohan Kumar said... [Reply]

பிரச்சனை எனக்கும் வருவதுண்டு. ரயில்வே மேட்டர் சிரமம் எடுத்து, படமெல்லாம் போட்டு விளக்கி உள்ளீர்கள் (வேன் வச்சி கடத்தின ஜோக் நியாபகம் வருது )

நிற்க இதே கம்மேன்ட்டை நேற்று அலுவலகத்தில் இருந்து போட முயன்றேன் ஏனோ கமென்ட் வெளியாகவே இல்லை. இன்னொரு பதிவிலும் இதே நிலை. எனவே உங்கள் ப்ளாகில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...