25 பைசா இனி இல்லை..

இனிமேல 25 பைசா காயின பணப் பட்டுவாடாவிற்கு பயன்படுத்த முடியாது. கேள்விப் பட்டதும் ஒரு சில சிந்தனைகள்.. மனதில் தோன்றியவை..முழுக்க முழுக்க சொந்தக் கற்பனையே..  மறைமுகமாகவும் எவரையும் குறிப்பிடவில்லை இப்பதிவு.

ரெடி ஸ்டார்ட்.. 

கோவில் உண்டியலுல இப்போது இருக்குற(!) 25 பைசா காசெல்லாம் என்ன ஆகும் ?
இதுக்குத்தான் நாலு நாளு முன்னாடியே உண்டியல ஓபன் பண்ணி.. 25 பைசாவலாம் கோவில் கணக்குல பேங்குல கட்டி இருக்கணும்...
------------------------------
நண்பர் (செல்வாமாதிரி ஒரு ஆளு) சொன்னாரு..
நண்பர் : நா 25 பைசா காயின இப்பவும் 'செல்ல' வைப்பேன்..
நான்     :  எப்படி ?
நண்பர் : இப்படித்தான் பாருங்க, http://www.youtube.com/watch?v=C4ohRdGFvBM
எப்படி செமையா உருண்டு போகுது (செல்லுது) பாருங்க..
நீங்கதான்.. கையால சரியா சுழட்டி விடனும்.. அப்பத்தான் அது சரியாச் 'செல்லும்
-----------------------------
அதே நண்பர் மளிகை கடையில சிப்பந்தியா வேலை பாத்தாருன்னா..
கடை சிப்பந்தி  : உங்க பில்லு அமவுண்டு அம்பது ரூபாய் 75 பைசா..
வந்தவர்  : இந்தாப்பா அம்பது ரூபாய் நோட்டு.. ம்ம்.. ஒரு ரூபாய் காயின்.
கடை சிப்பந்தி : ம்ம்.. 25 பைசா காயின் செல்லாது......
                            ஒரு ரூபாய் காயின் வேணாம், பாக்கி தரமுடியாது......
                            ஒரு ரூபாய் நோட்டு தாங்க...........
வந்தவர் : ஒரு ரூபாய் காயின், ஒரு ரூபாய் நோட்டுல என்ன வித்தியாசம். நோட்டு கொடுத்தா பாக்கி எப்படி சில்லறை தருவ ?
கடை சிப்பந்தி : இப்படித்தான்.. 
நாலு பாகமாக  'ஒரு ரூபாய்' நோட்டை சரியாக மடித்து அதில் ஒரு பாகத்தை கிழித்துத் தொடுத்தார் பாக்கி சில்லறைக்கு பதிலாக. 
----------------------------------------
என்னது, 25 பைசா காயின் செல்லாதா ? அதை ஏன் இவ்ளோ லேட்டா சொல்லுறாங்க ?
நாங்கதான் எங்க ஊருல அம்பது பைசா கூட யூஸ் பண்ணுறதில்லையே..  
நாங்கலாம் அவ்ளோ 'அட்வான்ஸா' இருக்கோமில்ல.. 
----------------------------------------
சரியான முடிவு !!
நிக்கல் உலோகத்தால செய்யப்பட்ட, ஓரூ 25 பைசா காயினோட எடை 2 .5 கிராம் (தகவல் : விக்கிபீடியா ). நாற்பது 25 பைசா காயினோட மொத்த எடை 100 கிராம்.... ஒரு கிலோ நிக்கல் விலை கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய் (தகவல் : கூகிள் தேடல்)

அப்ப, பத்து ரூபாய் மதிப்புள்ள, நாற்பது 25 பைசா காயின்கள் செய்ய குறைந்தது  நூறு ரூபாய் செலவு..  இது உலோகத்திற்கான செலவு மட்டும்.. அப்பப்பா .. கண்ணக் கட்டுதே.. 
-----------------------------------------

20 Comments (கருத்துரைகள்)
:

செல்வா said... [Reply]

//அப்ப, பத்து ரூபாய் மதிப்புள்ள, நாற்பது 25 பைசா காயின்கள் செய்ய குறைந்ததுநூறு ரூபாய் செலவு.. இது உலோகத்திற்கான செலவு மட்டும்.. அப்பப்பா .. கண்ணக் கட்டுதே.. //

உண்மைலேயே ரோசிக்க வேண்டிய விசயம்தான் அண்ணா :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அப்போ 25 காச பேங்குல குடுக்காம காயலான் கடைல போட்டா அதைவிட அதிகமா தேறும் போல இருக்கே?

A.R.ராஜகோபாலன் said... [Reply]

அப்ப, பத்து ரூபாய் மதிப்புள்ள, நாற்பது 25 பைசா காயின்கள் செய்ய குறைந்ததுநூறு ரூபாய் செலவு.. இது உலோகத்திற்கான செலவு மட்டும்.. அப்பப்பா .. கண்ணக் கட்டுதே..

மிக உண்மையான கருத்து
நாம் எதற்கு எப்படி செலவு சிகிறோம் என்று தெரியாமலே செய்துகொண்டிருக்கிறோம் மாதவன்
நன்றி சுவையான உபயோகமான பகிர்விற்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

அட.. புள்ளைக்கு டக்குனு வெளங்கிரிச்சி போல.. ..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

பேரிச்சம்பழம்.. !!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.ராஜகோபாலன்

அப்படித்தான்.
உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு நன்றி.

RVS said... [Reply]

நிறைய ஆராய்ச்சி பண்றீங்க மாதவன்! ;-))

சாய்ராம் கோபாலன் said... [Reply]

//அப்ப, பத்து ரூபாய் மதிப்புள்ள, நாற்பது 25 பைசா காயின்கள் செய்ய குறைந்ததுநூறு ரூபாய் செலவு.. இது உலோகத்திற்கான செலவு மட்டும்.. அப்பப்பா .. கண்ணக் கட்டுதே.. //

உண்மைலேயே யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

//RVS said...நிறைய ஆராய்ச்சி பண்றீங்க மாதவன்! ;-)) //

ஆர்.வி.எஸ். அதே அதே !

படிச்சவன் படிச்சவன் தான்பா !!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ Saai.
// படிச்சவன் படிச்சவன் தான்பா !! //

இப்படி சொல்லிச் சொல்லியே உசுப்பேத்தி விட்டுடுறாங்க.. ம்ம்.. சும்மா தாமாசுக்குத்தான்..

ஸ்ரீராம். said... [Reply]

வெகு நாட்களுக்கு முன்னாலிருந்தே கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் யாசகர்கள் கூட இருபத்தைந்து பைசா என்ன, ஐம்பது பைசாவைக் கூட மதிப்பதில்லை!

rajamelaiyur said... [Reply]

புதிய செய்தி நண்பா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... [Reply]

Suvaarasyam!

அருண் பிரசாத் said... [Reply]

இவ்வளோ சிந்திக்க ஆரம்பிச்சிட்டாரா நம்ம நிதியமைச்சரு?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

ம்ம்ம்ம்.. அவங்களாம் அவ்ளோ 'அட்வான்ஸா' இருக்காங்க.. !

Madhavan Srinivasagopalan said... [Reply]

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி
ராஜபாட்டை.., நிஜாமுதீன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அருண் பிரசாத்

நிதியமைச்சர் மேல அவ்ளோ நம்பிக்கையா ?

பாலா said... [Reply]

கடைசியா என்ன சொல்ல வர்ரீங்க? செல்லாத காயினை எல்லாம் உருக்கி வித்துடலாமா?

middleclassmadhavi said... [Reply]

25 பைசாவிற்கு உருப்படியா ஒண்ணும் செய்ய முடியாதுன்னு செல்லாததாக்கிட்டாங்களா?!

ஆனா, இப்படி ஒரு உருப்படியா ஒரு பதிவு போட உதவியிருக்கே?!!

CS. Mohan Kumar said... [Reply]

உங்க ப்ளாகில் கிளாக்கையே டான்ஸ் ஆட வச்சிருக்கீங்க இன்னிக்கு தான் பாக்குறேன்

வெங்கட் நாகராஜ் said... [Reply]

25 பைசா செல்லாது...
அது செல்ற காலத்திலேயே இங்கே வாங்க மாட்டாங்க... 25, 50 பைசாக்கள் செல்லாது என்று சொல்லி விடுவார்கள்....

ஆராய்ச்சி பலமா இருக்கு.... :)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...