ஹிந்தி வாத்தியாரு..

ஒரு படத்துல, வடிவேலோ, செந்திலோ... ஹிந்தி தெரியும்னு சொல்லிக்கிட்டு திரிவாரு..'இதர் ஆவோ' (இங்க வாங்க), அதுக்கு மட்டுமே அர்த்தத்த தெரிஞ்சுகிட்டு, 'அங்கிட்டு போங்க' ன்னு சொல்லுறதுக்கு ஹிந்தில என்னான்னு கேட்டா.. கொஞ்சம் தூரக்க போயிட்டு, அங்கேருந்து நம்மள 'இதர் ஆவோ'ன்னு கூப்புடுவாரு...

இங்ககூட நம்ம ஹிந்தி வாத்தியாரு, எப்படி அர்த்தம் சொல்லுறாரு பாருங்க. சரியான அர்த்தம் '( )'ல இருக்குது.

ஓவர் (ஆமாம் ரொம்ப ஓவருதான்..) டு 'ஹிந்தி வாத்தியார்'



டு









ஸ்டார்ட்
மியூசிக் :

1)
தும்
கோன் ஹே(ய்) )?
தும்மலோட 'கோணி'கிட்ட போலாமா ஐயா?
(நீ யாரு ?)

2)
ஆப் கிதர் கயதே ?
ஆப்பு வெச்சது கிரிதர் 'கைதயா' (கழுதையா)?
(நீங்கள் எங்கு சென்றீர்கள்)

3)
ஹம் சாத், சாத் ஹே !
ஹூம்.. சாத் சாத்ணு சாத்திட்டானே !
(நாம் கூட்டு கூட்டாக இருப்போமே !) ['சாம்பார்' யார்ன்னு கேக்கப்டாது]

4)
அச்சி ஹவா ஆத்தீ ஹே .
அச்சுல அவ(ள்), 'ஆத்தா' போல இருக்குறா.
(நல்ல காற்று வீசுகிறது)

5)
ஏக், தோ, தீன், ச்சார், பாஞ்ச்.. வாரே, வாரே, வாஹ்.
ஒரு தபா, 'ஸாரு', 'தீ'யில பாஞ்சு வெளியே வந்தாரு.
(ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு.. ஆஹா, ஆஹா.. அற்புதம்.)

15 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

அச்சி ஹவா ஆத்தீ ஹே .
அச்சுல அவ(ள்), 'ஆத்தா' போல இருக்குறா.
(நல்ல காற்று வீசுகிறது)


......சான்சே இல்லை..... நல்லா சிரிச்சேன்!

Gayathri said... [Reply]

ஹய்யோ எப்படி இப்படி..சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது..அருமை அருமை...ஆப கா யே ப்ளாக் பாஹூத் அச்சா ஹேய்

Madhavan Srinivasagopalan said... [Reply]

ஏதோ.. தோணிச்சி.. பிளாக்குல எழுதிட்டேன்..
நன்றி சித்ரா மேடம், காயத்ரி மேடம் & ஸ்ரீராம் சார்.

RVS said... [Reply]

ஏக் காம் மே ஏக் கிஸான் ரகு தாத்தா.... (ரஹ்தாதா...)... இது நம்ம பாக்கியராஜ் பட ஹிந்தி... பாட்டி மடியில் படுத்து படிக்கும் ஹிந்தி... மாதவா ஆந்த்ரால இருக்க.. அப்படியே ஒரு தெலுங்கு கிளாஸ் எடுப்பா.... ஏமண்டி... தெலுங்கு ராவா... ;-) ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

//அப்படியே ஒரு தெலுங்கு கிளாஸ் எடுப்பா.... ஏமண்டி... தெலுங்கு ராவா//
வட-இந்தியால கொஞ்ச வருஷம் இருந்ததுனால, ஹிந்தி தெரிஞ்சுது... இங்க வந்து 1 வருஷந்தான் ஆச்சு போகப் போக தெலுகு கத்துகிட்டு, எழுதுறேன், நன்றி ஆர்.வி,எஸ்.
(இக்கட வச்சி ஒகடே சம்வச்த்சரம் ஆயிந்தி..)

Madhavan Srinivasagopalan said... [Reply]

ஹிந்தி வாத்தியார் (இன்ட்லில) பிரபலம் ஆயிட்டாரு. ஒட்டு போட்ட எல்லாருக்கும் தாங்கஸூ..
ஒட்டு போட்டாமாதிரி, இங்க காமெண்டும் போட்டா இன்னும் நல்லா இருக்கும்..

################
Congrats!

Your story titled 'ஹிந்தி வாத்தியாரு..' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 16th September 2010 04:42:01 AM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/338704

Thanks for using Indli

Regards,
-Indli
##################

அருண் பிரசாத் said... [Reply]

%^*&^#$*%^$ (^(#^$(& (&^(#$^&#^$ !@$%&#$&

ஒன்னும் புரியலையா? ஹிந்தி வாத்தியாரை கேளுங்க

CS. Mohan Kumar said... [Reply]

:)))

Ahamed irshad said... [Reply]

நல்லாயிருக்கு..சிரித்தேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

Thanks mohan, ahmed - for ur visit & comments

Ananya Mahadevan said... [Reply]

எண்பதுகளில் 9 மணிக்கு தேசிய நிகழ்ச்சிகள் டெல்லி அஞ்சலின் போது பச்சோன் கி கார்யக்ரம்ன்னு அறிவிப்பாளர் சொன்ன உடனே என் தாத்தா என்ன எழவோ பச்சோந்தி பச்சோந்தின்னு சொல்லிட்டு போறான்னு சொல்லுவார். அதான் ஞாபகம் வந்தது! ரசிச்சு சிரிச்சேன். தான்க்கீஸ்!

சாய்ராம் கோபாலன் said... [Reply]

நல்லா சிரிச்சேன். Super Madhavan. Thanks

பத்மா said... [Reply]

மாதவன் சார் நான் ஒரு நல்ல ஹிந்தி ஆசிரியரை தேடிக்கொண்டு இருக்கிறேன் ...அடிக்கடி இப்படி பாடங்கள் நடத்துங்க ..எங்கள் ஹிந்தி பலப்படட்டும் .:)))))

அச்சுல அவ ஆத்தா தான் டாப் கிளாஸ் ..

kailash,hyderabad said... [Reply]

நல்லா சிரிச்சேன். Super. Thanks. Continue more.

அப்பாதுரை said... [Reply]

பாக்யராஜ் பட ரகுதாத்தா வசனம் போல சிரிச்சேங்க.. நன்றி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...