(இந்திய) ஆசிரியர் தினம் :


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளே அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. ஒரு முறை அவரிடம் அவரது நண்பர்களும், மாணவர்களும், அவரது பிறந்தநாளை கொண்டாட அனுமதி அளிக்குமாறு கேட்டனராம். அதற்கு அவர், தனது பிறந்தநாளை, தனக்காக மட்டும் கொண்டாடாமல், அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் வகையில் அதனை,  ஆசிரியர் தினமாக கொண்டாட விழைந்தாராம்.

இந்தியக் குடியரசின் இரண்டாவது 'துணை ஜனாதிபதி' மற்றும் இரண்டாவது 'ஜனாதிபதியாகவும்' (1962–1967) பதவி வகித்து நமது தேசத்திற்கு பெருமை சேர்த்தவர்.

"Dr. Radhakrishnan studied philosophy by chance rather than by choice. Being a financially constrained student at the time, when a cousin, after graduating from the same college, passed on his textbooks in philosophy to Radhakrishnan, it automatically decided his academic course.  Later on he felt deep interest in his subject and wrote many acclaimed works on philosophy, both eastern and western." Courtesy : http ://www .wikipedia .org

வாழ்க்கையில் பலருக்கு தான் விரும்பியது கிடைக்காமல் போகலாம்.. ஆனால் கிடைத்ததை வைத்துக்  கொண்டு நாம் நம்மை எவ்வாறு மேற்கொண்டு செல்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.  அவ்வாறு இருந்து வெற்றி கொடியை நாட்டிய இவரை நமது இளைய தலைமுறை மக்கள் ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பிறந்து பெரும்பாலும் ஆந்திரத்தில் வளர்ந்தார். அவர் ஆந்திர பல்கலைக் கழகம் மற்றும், ஹிந்து பனாரஸ் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பொறுப்பு வகித்து கல்விபணி செய்துள்ளார்.

அன்னாருக்கும், கல்வி பயில்விக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நாளில், எனது மனமார்ந்த நன்றிகள். பின்வரும் பெருந்தகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எனது பள்ளி நாட்களில் என்னுடைய வகுப்பாசிரியர்களாக (class teacher) இருந்தவர்கள்..
ஆரம்பப் பள்ளி நாட்களில் - ஒன்னாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.. (முறையே ) : 
திருமதி. சரோஜா, திருமதி லிலி, திருமதி. மூகாம்பிகை, திரு நடராஜன், திரு. சுந்தர ராவ் (இவர் பள்ளித் தலைமையாசிரியராகவும் இருந்தவர்) 

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வரை (முறையே)  :
திரு. டாண்டன் , திரு. தியாகராஜன், திரு. வி.ஆர். பாலசுப்பிரமணியன், திரு. பி.ஆர். கணேசன், திரு. கிருஷ்ண மூர்த்தி, திரு. இளங்கோவன் (11th   & 12th) மற்றும் தலைமை ஆசிரியர்  ஆசிரியர் திரு. எஸ். சம்பத், துணை தலைமை ஆசிரியர் திரு. சிவராமன்.  உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமு, திரு. ராமதாஸ் (1 &  2) மற்றும் தமிழ், ஆங்கில ஆசிரியர்கள்... மற்றும் எனக்கு இயற்பியலில் ஆர்வம் வரக் காரணமாக இருந்த எனது +2 டியூஷன் ஆசிரியர் திரு. உலக நாதன் (அப்போது அவர் கல்லூரி விரிவுரையாளராக இருந்தவர்)

கல்லூரி நாட்களில் (இயற்பியல் துறை):
திரு. ஜி. பலவந்த ராவ்.  , திரு. ஜி. சிதம்பரம், திரு(Dr ). பிலோமிநாதன், திரு.ஆர். ராஜகோபாலன், திரு. எஸ். சுவாமிநாதன்., திரு.எஸ். ரங்கராஜன்., திரு ஜே. ஜேசுதாஸ். திருவாளர்கள் கிருஷ்ண மூர்த்தி  பி மற்றும் எம், திரு(Dr ). கலிய பெருமாள் (HOD ), திரு(Dr ). ஏ தாயுமானவன், திரு(Dr .) பி. நீலமேகம், திரு. எஸ். ஜெயராமன் ..
கணிதத் துறை  : திரு. எஸ். சுவாமிநாதன், திரு. ஆர். உதய குமார்,. ஜே. ஜெயக்குமார்.   மற்றும் சில - ஆங்கிலத் துறை, தமிழ்த் துறை, வேதியல் துறை ஆசிரியர்கள்.. (பெயர்கள் நினைவில் இல்லை)

மேலும் கல்லூரி முதவராக அப்போது இருந்த Dr. மெய்பொருள் (இவர் முதல்வராக இருந்ததாலோ அல்லது தமிழ் துறையை சார்ந்தவராக இருந்ததாலோ, எனக்கு இவர் பாடம் எடுக்காமலிருந்தாலும், இவருக்கு  பாடமெடுத்தவர் எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கில, கணிதம் டியூஷன் எடுத்தவரும், எனது சிறிய-தந்தையாருமான திரு. ஆர். ரங்கராஜன் அவர்கள் ஆவார். இவர் ஒய்வு பெரும்பொது அரசாங்க பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தவர்.) 

என்னை கவர்ந்த, என்னை ஊக்குவித்த சில ஆசிரியர்களின் பெயர்கள் கீழே கொடுத்துள்ளேன் :

இயற்பியல் துறை திரு. (Dr .) பி. பிலோமிநாதன், மூன்றாவது ஆண்டு இளமறிவியல் வகுப்பில் முதன் முதலில் நுழைந்தவுடன் எங்களிடம் கேட்ட கேள்வி 'மாதவன் யாரு?" ('அலைபாயுதே' ஷூட்டிங், பாடல் பதிவு இதெல்லாம் நடப்பதற்கு பல ஆண்டுகள் முன்னால்..) ஆமாங்க.. என்னைத்தான்.. அவர் தெரிந்து கொள்ள இப்படி கேட்டார். ஏனென்றால், முதலாவது செமஸ்டரில், நான் 95 % எடுத்திருந்தேன். (முதன்மை பாடமான இயற்பியலில் 92 % மற்றும் இனப் பாடம் கணிதத்தில் 98 % ம் சேர்த்து). இதை எனது முதாலாவது செமஸ்டரிலேயே தெரிந்து கொண்டு, ஒன்றரை ஆண்டுகள் கழிந்தாலும் ஞாபகமாக என்னைப் பற்றி முதன் முதலிலேயே கேட்டது, எனக்கும் ஊக்கமாக இருந்தது. அன்றிலிருந்து நான் முதுகலை முடிக்கும் வரை எனக்கு நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.

எனது குடும்பத்தில், ஆசிரியப் பனி செய்தவர்கள் :
எனது இரண்டு, சிறிய தந்தையர்கள் (Paternal Uncle), எனது இரண்டு அண்ணன்மார்கள் (ஒருவர் முழு நேர விரிவுரையாளர், மற்றவர் அறிவியல் ஆராய்ச்சியாளராகவும் அவர்களின் அலுவலக B .Tech courseல் பல வருடங்களில் ஆசிரியப் பணியிலும் ஈடுபட்டவர்). எனது அக்காவும், மன்னியும் (அண்ணி), சில வருடங்கள் நர்சரி வகுப்பில் ஆசிரியராக பணியாற்றியவர்கள்.

16 Comments (கருத்துரைகள்)
:

சாய்ராம் கோபாலன் said... [Reply]

மாதவா - ரொம்ப படிச்சவனோ நீ ? பின்னற.

சும்மா சொன்னேன். சூப்பர் தகவல்கள்

மதுரை சரவணன் said... [Reply]

ஆசிரியர் தினத்தில் அருமையான பதிவினை கொடுத்ததுடன் அனைத்து ஆசிரியர்களையும் நினைவு படுத்தியமைக்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்

Chitra said... [Reply]

அருமையான விதத்தில், குடும்பத்தில் உள்ள ஆசிரியர்களையும், உங்களுக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களையும் வாழ்த்தி இருப்பது நல்லா இருக்குதுங்க.... பாராட்டுக்கள்!
நீங்கள் மதிப்புடன் அறிவித்து இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

கௌதமன் said... [Reply]

நல்ல பதிவு. ஆசிரியர்கள் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதையும், நன்றியும் மெச்சத் தகுந்தது.
சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
உதாரணங்கள்:
மிகரும்
பொருப்பாசியர்களாக
பின்ன்றண்டாம்
எடுக்காமளிருந்தாலும்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said... [Reply]

தகவலுக்கு நன்றி..
நம்மை உருவாக்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

எதோ அமெரிக்காவுல பொழப்பு நடத்துற அளவுக்கு படிக்காட்டாலும்.. இந்தியால தெறமையை காட்டுற அளவுக்கு படிச்சிருக்கேன் சார்.. நன்றி சாய்

@ மதுரை சரவணன், சித்ரா, ஆனந்தி -- ஆசிரியர்களை நினைவில் கொள்வது முக்கியம் என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதாவது நன்றாக நடத்தி.. வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால், எந்த மாணவரும் அவரை மறக்க மாட்டார்கள்.

@ kgg -- > நன்றி சார். முடிந்தவரை பிழைகள் இல்லாமல் எழுத முயல்கிறேன். நீங்கள் சொன்ன பிழைகளை சரி செய்து விட்டேன்.

கௌதமன் said... [Reply]

எடுக்காமளிருந்தாலும் to எடுக்காமலிருந்தாலும் yet to be done in the 8th para - referring to Dr Meipporul.

கௌதமன் said... [Reply]

There was one Mr Meipporul, who worked in Valivalam Desikar Polytechnic Nagapattinam in academic year 1968-1969 for a very short time as lecturer for PTC (Pre-Technical course - First year Polytechnic) and then went to some other Institution.
Not sure whether he is same mentioned in your blog.

CS. Mohan Kumar said... [Reply]

I could read the names of some my teachers in this post, which made me nostalgic.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி மோகன் சார்.
நன்றி kgg சார். நீங்கள் மீண்டும் இதைப் பார்த்து திருத்தப்படாத பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

Dr. மெய்பொருள், அவர்கள் தமிழ்த் துறை பேராசிரியராக இருந்தவர் (Retired as Principal of AVVM Sri Pushpam College, Poondi TJ Dist). அவர் அம்மாப்பேட்டையை(தஞ்சாவூர் மாவட்டம்) பகுதியைச் சார்ந்தவர். (kgg )

பெசொவி said... [Reply]

ஸ்கூல்ல, காலேஜ்ல உங்களுக்கு அட்டெண்டன்ஸ் எடுத்த ஒரே காரணத்துக்காக, உங்க ஆசிரியர்களுக்க் நீங்க அட்டெண்டன்ஸ் எடுத்ஹுட்டீன்களோ? நல்ல பதிவு, வாழ்த்துகள்!

vinu said... [Reply]

Madhavan said...
எனக்கு வேணும்... வேணும்.. நல்ல இன்னுங்கூட வேணும்..
'ஆழம் தெரியாம கால விடக் கூடாது' - நல்ல உதாரணம் எனக்கு.. மொதோ மோதலா இங்கிட்டு வந்தெம் பாரு.. அதுக்கு (Read from 1st line again )


ippudi solliputtu odippoitta eppudi vaanga gummalam

சாய்ராம் கோபாலன் said... [Reply]

//Madhavan said...எதோ அமெரிக்காவுல பொழப்பு நடத்துற அளவுக்கு படிக்காட்டாலும்.. இந்தியால தெறமையை காட்டுற அளவுக்கு படிச்சிருக்கேன் சார்.. நன்றி சாய்//


ஐயோ மாதவன், தப்பாய் எடுத்துக்கொண்டுவிட்டீர்களே. நான் படிக்கவே இல்லை என்று என் அப்பா அம்மா என்னை இன்னும் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் (எனக்கு இப்போது 45 வயது !!). ஏதோ கடவுளின் அருளால் மற்றும் நான் போன ஜென்மத்து செய்த புண்ணியத்தால் ஏதோ விற்பனை துறையில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றேன். "ஐ.டி செர்விசெஸ்" ஆனால் கணணி ப்ரோக்ராம்மிங் இல்லை !! அதற்கு மூளை வேண்டும். அது எனக்கு சுத்தமாய் கிடையாது.

நான் செய்யும் விற்பனை துறை வேலைக்கு நன்றாக "பொய்" சொல்லவந்தால் போதும். அது எனக்கு ஏராளம் ஏராளம். அடுத்த ஜென்மத்தில் நான் பிச்சை தான் எடுப்பேன், இந்த ஜென்மத்து பாவங்களை பார்த்தால் !!

Madhavan Srinivasagopalan said... [Reply]

Dear Sai,

I told in humor sense only. Sorry to triger your feelings on this.

Your are like my elder brother (agewise atleast). Let's continue our relationship through blog as usual. No more deep feelings / sentiments.

:-)

cheena (சீனா) said... [Reply]

மாது - ஆசிரியப்பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற கொள்கையினை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தொண்டு புரியும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு ஆசிரியர் தின இடுகை. இத்தனை ஆசிரியர்களையும் நினைவு வைத்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது மாது - நல்வாழ்த்துகள் மாது - நட்புடன் சீனா

chandru2110 said... [Reply]

நான் 8ம் வகுப்பு வரை படித்த கோபால சமுத்திரம் பள்ளி மீரா மணியன், தேசிய மேல் நிலைப்பள்ளி(9-12) கமலப்பன் சார் , ராஜாங்கம் சார் (இவரால்தான் இன்னைக்கு ஆங்கிலம் முறையா தெரிஞ்சுருக்கேன்) , தாண்டான் சார், அன்புமணி மேடம் , பாட்டணி பாலு சார், கவுதம் சார், இளங்கோவன் சார், காமராஜ் சார், சுரேஷ் சார்,பெறியியல் HOD கனிமொழி மேடம் இவங்க எல்லோருக்கும் நான் கடமைபட்டுருக்கேன்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...