சொந்த முயற்சி

முடிஞ்சவரைக்கும்  அடுத்தவங்கள காப்பியடிக்காம, அட்லீஸ்ட் ஈயடிச்சாங்காப்பி  அடிக்காம இருக்கணும்னு நா நெனைப்பவன்.. ( நெனைப்பு பொழப்ப கெடுக்கும்).

அதனால தான், நானே சொந்தமா என்னோட கையால எடுத்த ஃபோட்டோக்களை  நீங்கல்லாம் பாக்குறதுக்கு இங்கிட்டு கொடுத்ருக்கேன்.

மோ. க.  காந்தி.
ஜவஹர்லால் நேரு. 














நானே சொந்த முயற்சி பண்ணி  கண்டுபிடிச்ச 'கார்' கீழே படத்துல இருக்குது.
 

பாத்தீங்களா.. நல்லா இருக்குதானே ?.. நீங்களும் இனிமே முடிந்தவரைக்கும் 'தன் கையே தனக்குதவி' னு  எல்லாத்தையும் சொந்தமா செய்ய டிரை பண்ணுங்களேன்..

என்னமோ கேக்க வரீங்கன்னு நெனைக்கிறேன்..

1 )  நா எடுத்த ஃபோட்டோக்களை பத்தியா..?
 அது வந்து.. எங்க வூட்டாண்ட  மேல ஷெல்புல இருந்த புக்ஸலாம் சுத்தம் செயுறப்ப, உள்ளே இருந்த காந்தி, நேரு ஃபோட்டோக்கள்  கீழ விழுதுடிச்சா.. நாதான் அந்த ரெண்டு ஃபோட்டோக்களை யும் என்னோட 'கையால எடுத்து'  புக்ஸ்ல திரும்ப வெச்சேன்.

2 )  நா எப்படி காரக் கண்டு பிடிச்சேனா ?
ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்னோட பையனோட வெளையாட்டு காரு காணாமப் போச்சுன்னு, அவன் ரொம்ப அழுதானா .. அத பாத்து.. தாங்க முடியாம... வீட்டையே புரட்டி போட்டு தேடினப்ப என்னால அந்த காரக் (தேடிக்) கண்டுபிடிக்க முடிஞ்சிச்சி....

டிஸ்கி : என்னங்க பண்ணுறது.. எனக்கு
http://ulagamahauthamar.blogspot.com/2010/09/blog-post_06.html
http://gokulathilsuriyan.blogspot.com/2010/09/blog-post_06.html
http://arunprasathgs.blogspot.com/2010/08/im-back.html
மாதிரி எல்லாம் எழுதத் தெரியாது.. அதான் இப்படி..

4 Comments (கருத்துரைகள்)
:

பெசொவி said... [Reply]

ஏதோ ஏன் பதிவை மேற்கோள் காட்டியதால் சொல்லவில்லை, உங்க பதிவு சூப்பர்!

வெங்கட் said... [Reply]

ஹா., ஹா., ஹா..

இனிமே நானும் உங்களை
மாதிரியே சொந்தமா ( !!! )
எதாவது எழுத Try பண்றேன்..

அருண் பிரசாத் said... [Reply]

//அடுத்தவங்கள காப்பியடிக்காம,//

எதுக்கு சார் அடுத்தவங்க காப்பிய நீங்க அடிக்கனும், காப்பிய குடிக்க வேண்டியது தானே!

//ஈயடிச்சாங்காப்பி//

பில்டர் காப்பி, இன்ஸ்டண்ட் காப்பி தெரியும் அது என்ன ஈஅடிசாங்காப்பி? ஈ - ஐ அடிச்சா காப்பி தருவாங்களா?

Chitra said... [Reply]

வேணாம்..... அழுதுருவேன்......

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...