டிவி யில் எனது பேட்டி...

  
என்ன மாதிரி உள்ள பிரபல (?) வலைப்பூ பதிவர்களை தொலைக்காட்சியில் பேட்டி  எடுத்தாங்கன்னா எப்படி இருக்கும் ? (ஒரு கற்பனை தான்..)


பேட்டியாளர் : வணக்கம்..
நான் : (நடப்பதை  நம்பவே முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு..) வண.. க்க.... ம்ம்ம்ம்

பேட்டியாளர் : உங்க பெயரை வாசகர்களுக்கு நீங்களே சொல்லுங்களேன்..
நான் : பேரச்சொன்னா அலை.... பாயுமில்ல....

பேட்டியாளர் : ஆஹா.... ஆரம்பத்துலேய அசத்துறீங்க....
சரி, உங்களுக்கு இந்த பெயர் எப்படி வந்ததுன்னு சொல்ல முடிமா ?
நான் : சொல்ல முடியுமே, ஆனா கேட்டாதான் சொல்லுவேன்.

பேட்டியாளர் : நான் தான் கேட்டேனே?
நான் : நீங்க, 'சொல்ல முடியுமான்னு' தான கேட்டீங்க...

பேட்டியாளர் : (மனதினுள், அடாடா.. கொல்றானே) சரி. உங்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது ?
நான் : நா பொறந்தது வெள்ளிக்கிழமை.. ஒரு வாரம் கழிச்சு வந்த ஞாயித்துக் கிழமையில, யாரோ, என்னோட ரெண்டு காதுலயும், மூணு தடவை, சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு.. பின்னால அதை சொன்னது, என்னோட அம்மா தான்னு தெரிஞ்சுது.... இப்படித்தான் எல்லோரும் அதே பேருல என்ன கூப்புட ஆரம்பிச்சாங்க.. இப்ப கூட அந்த நாள், நல்லா எனக்கு ஞாபகம் இருக்குது..

பேட்டியாளர் : உங்கள் வயது ?
நான் : மூணு மாமாங்கம் கடந்தவன்..

பேட்டியாளர் : 24லா இல்லை 36ஆ?
நான் : என்ன  கேள்வி இது.. 12 வருஷத்துக்கு ஒரு மாமாங்கம்னா, மூணு மாமாங்கம் 36 வருஷத்துலதானே ?

பேட்டியாளர்  : நீங்க பொறந்த உடன் மாமாங்கம் வந்திருந்தால், 24 வயசு முடிந்த உடன்  மூணாவது மாமாங்கம் வந்துருக்கும் இல்லையா?
நான் : ஒ, நீங்க அப்படி வரீங்களா.. (கடுப்பாகி) அப்ப ஓங்க இஷ்டப் படி, என்னோட வயச  வெச்சுக்கங்க..

பேட்டியாளர்  : உங்கள் தொழில் ?
நான்:  அறிவியல் ஆராய்ச்சியாளர்..

பேட்டியாளர் : இல்லாத ஒரு விஷயத்துல ஆராய்ச்சியா?
நான் : (சற்று அதிர்ச்சியாகி) 'அறிவியல்' --  அதாவது 'science'  இருப்பது உண்மைதானே.... இல்லைன்னு சொல்லுறீங்களே..?

பேட்டியாளர் : நான் சொன்னது 'உங்கள்' 'அறிவு' பற்றிய இயல்..
நான்  : ஹீ.. ஹீ... ஹீ.. (வேறென்ன செய்யுறது..)

பேட்டியாளர் : உங்களோட பொழுது போக்கு ?
நான் : பிளாக் (வலைப்பூ) எழுதுறது......    ....  பின்னூட்டம் போடுறது..

பேட்டியாளர் : நீங்களே எழுதி, நீங்களே பின்னூட்டம் போடுவீங்களா?
நான் : (மனதினுள்....  யார்ராவன்... என்னோட பிளாக்குல பின்னூட்டம் போடுறவங்க ரொம்ப இல்லை என்பதால் நானே சில சமயம் பின்னூட்டம் போடுறது இவனுக்கு எப்படி தெரியும்..?)  பின்னூட்டம் அடுத்தவங்க வலைப்பூக்கு போடுவேன்னு சொல்ல வந்தேன்..

பேட்டியாளர்  : பிளாக்குல என்னலாம் எழுதுவீங்க..?
நான் : அதாங்க  ரொம்ப கஷ்டம்..  அடுத்த பதிவா, இந்த பேட்டிய போட்டுட வேண்டியதுதான்..

பேட்டியாளர்  : இந்த பேட்டியா ..? ஏன் சார், வேற சரக்கு எதுவும் இல்லையா ?
நான் : நீங்க கூடத்தான், நல்ல சரக்கு இல்லாம, என்னைய மாதிரி ஆளலாம் பேட்டி எடுத்து போடுறீங்க..!

பேட்டியாளர் : கேள்விய வாபஸ் வாங்கிக்கறேன்.. (இல்லைன்னா எங்க மானம் போயிடுமே!)
நீங்க என்ன காரணத்துக்காக பிளாக் எழுத ஆரம்பிச்சீங்க..?
நான்  : கொஞ்சம் பிரபலம் ஆகணும்னுதான்.

பேட்டியாளர் : ஏன் சார் பிரபலம் ஆகணும்?
நான் : உங்களை மாதிரி டிவி  சேனலுல  நா பேட்டி தரணும்.

பேட்டியாளர் : ஏன் சார் பேட்டி தரணும் ?
நான்  : அப்படியாவது என்னோட 'பிளாக்கு' பிரபலம் ஆகணும்.., அதுக்குத்தான்..

பேட்டியாளர்  : என்ன சார்.. நீங்க 'பிளாகுல' பிரபலம் ஆகணுமா, இல்லை, 'சேனலுல' பிரபலம் ஆகணுமா?

நான் :'சேனலுல' தான்.. அதுல என்னோட பேட்டி வந்து நான் பிரபலமாகனும்..

பேட்டியாளர்  : எதைப் பத்தி பேட்டி வரணும் ?
நான் : என்னோட பிளாகப் பத்திதான்..

பேட்டியாளர்  : ஆ.. ரொம்ப வலிக்குதே..  இப்ப நேரா மேட்டருக்கு வர்றேன்....
நான் : (இடை மறித்து..) இதுவரைக்கும் கேட்டது சொன்னதுலாம் மேட்டரே இல்லையா?

பேட்டியாளர் : (வெறுப்பாகி ) சார், நான் தான் கேள்வி கேக்கணும்.. நீங்க பதில மட்டும் சொல்லுங்க.
(தொடர்ந்து)  பிளாக்குல என்ன மாதிரிலாம் எழுதனும்னு நெனைக்கறீங்க.. ?

நான் : (சற்று உற்சாகமாகி)  "நாஞ்சில் எக்ஸ் பிரஸ்ஸுல , வித்தவ்டுல போகும் எங்கள் பெயர் சொல்ல விருப்பமில்லாத அனந்யாவின் என்ன அலைகள் போன்ற தீராத விளையாட்டு பிள்ளையாய் Do's & Dond'sஉள்ளது உள்ளபடி சொன்னாலும், இட்லிவடை காம்பினேஷன் போல் கொஞ்சம் வெட்டிப் பேச்சையும் கலந்து........",    மூச்சு முட்டுதுல்ல?  இப்படித்தான், சம்பந்தமில்லாத, ஆனா கோர்வையா வர்ற மாதிரி ஏதாவது எழுதணும்.
நண்பர் ரொம்ப நாளைக்கு முன்னாடி அனுப்பிய இ-மெயிலு, ஏதாவது 'படம்' அப்படீன்னு கண்டபடி எழுதணும்.. கேப்பே(Gap) விடப்டாது.... ஏன் சார் ஓடுறீங்க... நில்லுங்க சார்.. நில்லுங்க.. இன்னும் சொல்லவேண்டிய மேட்டரு நெறைய இருக்குது....

(அதை எல்லாம் பொருட்படுத்தாது.. பேட்டியாளர் 'பேக்-அப்' செஞ்சுட்டு வீடு திரும்பிட்டாரு )

பின்குறிப்பு : யாரையும் பழிக்கும் நோக்கமல்ல.. அனைத்தும் சொந்த கற்பனையே..

24 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

(சற்று உற்சாகமாகி) "நாஞ்சில் எக்ஸ் பிரஸ்ஸுல , வித்தவ்டுல போகும் எங்கள் பெயர் சொல்ல விருப்பமில்லாத அனந்யாவின் என்ன அலைகள் போன்ற தீராத விளையாட்டு பிள்ளையாய் Do's & Dond's ஐ உள்ளது உள்ளபடி சொன்னாலும், இட்லிவடை காம்பினேஷன் போல் கொஞ்சம் வெட்டிப் பேச்சையும் கலந்து........", மூச்சு முட்டுதுல்ல? இப்படித்தான், சம்பந்தமில்லாத, ஆனா கோர்வையா வர்ற மாதிரி ஏதாவது எழுதணும்.


....... அசத்தல் பேட்டி! மேலும் இந்த மாதிரி நிறைய பேட்டி கொடுக்கும் வண்ணம் வளர வாழ்த்துக்கள்! :-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

//(மனதினுள்.... யார்ராவன்... என்னோட பிளாக்குல பின்னூட்டம் போடுறவங்க ரொம்ப இல்லை என்பதால் நானே சில சமயம் பின்னூட்டம் போடுறது இவனுக்கு எப்படி தெரியும்..?) //

தொழில் ரகசியத்தை எல்லாம் இப்படி வெளியிடக் கூடாது, தம்பி!

ஸ்ரீராம். said... [Reply]

பேட்டி எடுக்க வந்தவருக்கும் உங்கள் பெயர்தானோ... சம பலத்தில் இருக்கீங்க ...!!

Madhavan said... [Reply]

@ சித்ரா -- வாழ்த்துக்களுக்கு நன்றி
@ பெ.சோ.வி. -- ஹி.. ஹி.. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்..
@ ஸ்ரீராம் -- சொந்த கற்பனையின்னு சொன்னேனே..(ரெண்டுபேருக்குமே)

Chitra said... [Reply]

Hi Madhavan - Whenever I get a chance, I will try to check your blog and catch up with the comments..... :-)

மோகன் குமார் said... [Reply]

ம்ம் நம்மளை விட்டுட்டீங்க :))

Madhavan said... [Reply]

//மோகன் குமார் said... "ம்ம் நம்மளை விட்டுட்டீங்க :))"

You are Last but not the lease..

இப்ப ஓக்கேவா?

Gayathri said... [Reply]

very funny! nice post..planning to read all your posts today ..kalakunga ..

Madhavan said... [Reply]

@ Gayathri, Welcome & thanks for joining here.

3G (திரும்பி) வருதுன்னு சொல்லுறாங்களே அது நீங்க தானா..?

ர‌கு said... [Reply]

//நான் : (மனதினுள்.... யார்ராவன்... என்னோட பிளாக்குல பின்னூட்டம் போடுறவங்க ரொம்ப இல்லை என்பதால் நானே சில சமயம் பின்னூட்டம் போடுறது இவனுக்கு எப்படி தெரியும்..?)//

இப்ப‌டியா வெளிப்ப‌டையா இருக்க‌ற‌து..ப‌ச்ச‌ம‌ண்ணுங்க‌ நீங்க‌ :)

வல்லிசிம்ஹன் said... [Reply]

ருமை. எக்ஸ்ப்ரஸ் வேகத்தில உங்க பதிவு எல்லாத்தையும் படிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said... [Reply]

அநன்யாவின் எண்ண அலைகள் இல்லையோ??

வல்லிசிம்ஹன் said... [Reply]

நீங்களும் திருநெல்வேலியா;)

வல்லிசிம்ஹன் said... [Reply]

மன்னை? எந்த ஊர் அது. மன்னார்குடியா!!!

Madhavan said... [Reply]

//வல்லிசிம்ஹன் said..."மன்னை? எந்த ஊர் அது. மன்னார்குடியா ?"//

Yes

RVS said... [Reply]

உங்களை பேட்டி கண்ட பெருமாள் ஒரு கேள்வியை விட்டுட்டாராம். ஈமெயில் மூலமாக எனக்கு அனுப்பியிருந்தார். அந்த கேள்வி கீழே.

நீங்க எப்ப ரிடையர் ஆவீங்க? :) :)

உங்களிடம் ரகசியமாக ஒரு கேள்வி. யார் காதிலும் விழாமல் கேட்கிறேன். பேட்டியை முடித்தவுடன் பேட்டிகண்டவரை அழைத்துப் போக ஆம்புலன்ஸ் வந்ததாக ஊரெங்கும் பேச்சாக இருக்கிறதே உண்மையா? பதிலையும் ரகசியமாகபின்னூட்டமாகவே சொல்லுங்கள்.

இந்த பேட்டி சமாசாரத்தை என்னுடைய நூறாவது பதிவிற்கு வைத்திருந்தேன். இட்ஸ் ஓகே.

அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com

Gayathri said... [Reply]

Thanks for your comments sir..i deleted the year and sorry i had to your comments..now my age is not visible..thanks a lot sir for your advice..please do visit my blog often and leave your valuable comments..thanks once again

மங்குனி அமைச்சர் said... [Reply]

போலந்து கட்டிடிங்க பேட்டில

Madhavan said... [Reply]

நன்றி மங்குனி அமைச்சர், Gayatri, Raghu, வல்லிசிம்ஹன் & RVS

அடிக்கடி வாங்க.. கருத்துகளை சொல்லுங்க. . குறை இருந்தா குட்டுங்க.. சரி செய்யுறேன்.

மோகன் குமார் said... [Reply]

Thanks Madhavan for considering my comment & adding the blog name.

Madhavan said... [Reply]

Hi madhavan73,

Congrats!

Your story titled 'டிவி யில் எனது பேட்டி...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th July 2010 12:14:01 AM GMT

Here is the link to the story: http://ta.indli.com/story/311661

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

மகாதேவன்-V.K said... [Reply]

அருமையான கற்பனை வாழ்த்துக்கள்

Madhavan said... [Reply]

thanks mahadevan sir. please keep visiting here & pass on your comments.

cheena (சீனா) said... [Reply]

மாது, விரைவினில் தொலைக்காட்சியில் நேரடியாக பேட்டி எடுக்கப்பட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...