1) Bundle,
2) unwarp
3) excited
4) steam
ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தேன், கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
1 , 2 , 3 மறுகேள்வி கேட்காமல் கவனித்தான்.
'ஸ்டீம்' - நான் சொன்ன விளக்கம்.
நான் : வெந்நீரிலிருந்து மேலே செல்லும் ஆவியைப் பாத்திருக்கியா..?
மகன் : ஆம்
நான் : அதுதான் 'நீராவி' இங்கிலீஷுல 'ஸ்டீம்'
தண்ணிய சூடு பண்ணினா, நீராவி ஆகிடும்....
தண்ணிய கூல் பண்ணினா 'கட்டி' ஆகிடும்.. அதாவது தண்ணிய ஃபிரிஜ்ஜில வச்சா ஐஸ் கட்டி ஆகிடும்ல..........
மகன் : தண்ணிய சூடு பண்ணி ஃபிரிஜ்ஜில வச்சா என்ன ஆகும் ?
நான் : ?!@#$%^&*().. (கரெண்டு-பில்லு ரொம்ப ஆகும்)
Moral : எம்புட்டு தேவையோ அதோட பொத்திக்கணும்.. எக்ஸ்ட்ரா விளக்கம்லாம் கொடுக்கப்டாது.
---------------------------------------------------------
இன்றைய ஸ்பெஷல் ஜோக்கு :
க ஸ் (ஷ்) டமர் : என்னங்க, ஆடி 1ம் தேதி முதல் 'தள்ளுபடி' அறிமுகம்ணு விளம்பரம் செஞ்சுட்டு, 'டிச்கவுண்டே' தரலையே?
கடைக்காரர் : ஹீ... ஹீ.... நாங்க சொன்னது அதோ இருக்குதே அந்த 'தள்ளு-படி' (எஸ்கலேட்டேர்) அதுதான் இன்னிலேர்ந்து ஆரம்பிச்சுருக்கோம்..
--- இது எனது 'சொந்த முயற்சி'
'தள்ளுபடி' (எஸ்கலேட்டேர்) நல்ல கண்டுபிடிப்பு தான..? அது எப்படி வேலை செய்யுறதுன்னு, நெட்டுல கெடச்ச இந்த படம் நல்லா இருக்குறதால............ கொஞ்சம் கீழே பாருங்க..
நன்றி : google images
---------------------------------------------------------
10 Comments (கருத்துரைகள்)
:
இந்த சின்ன பசங்களுக்கு விளக்கம் சொல்லர்துக்குள்ள அவங்க நுறு கேள்விகளோடு தயாராக இருப்பார்கள்...
உங்க தள்ளுபடி சூப்பர்...
அதற்கும் மேல எப்படி அது இயங்குதுன்னு நீங்கள் கொடுத்த விளக்கம் அமோகமாக இருந்தது...
நன்றி
//இந்த சின்ன பசங்களுக்கு விளக்கம் சொல்லர்துக்குள்ள அவங்க நுறு கேள்விகளோடு//
"அவங்களோட கேள்விகளுக்கு மதிப்பளித்து விடை தர முயல வேண்டும். அது அவர்களை ஊக்குவிக்கும்" -- எனது அண்ணன் கொடுத்த அட்வைஸ்
//உங்க தள்ளுபடி சூப்பர்...//
நன்றி Gayathri
soopparoo.....
//மகன் : தண்ணிய சூடு பண்ணி ஃபிரிஜ்ஜில வச்சா என்ன ஆகும் ?
நான் : ?!@#$%^&*().. (கரெண்டு-பில்லு ரொம்ப ஆகும்)//
வீட்டுக்கு வீடு வாசப்படி.. (குழந்தைகள் கேட்கும் கேள்விகள்)
கடைக்கு கடை 'தள்ளுபடி' (ஆடித் தள்ளுபடிங்க..)
//1 , 2 , 3 மறுகேள்வி கேட்காமல் கவனித்தான்//
ஒரு வேளை, தெரியலன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டீங்களோ?
//தண்ணிய சூடு பண்ணி ஃபிரிஜ்ஜில வச்சா என்ன ஆகும் ?//
ஓஹோ....அதுனாலதான் ஃபிரிஜ்ஜைத் திறந்தா ஆவி வருதா?
தள்ளுபடி .. :))
Room pottu yosippeengalo??
//தள்ளுபடி//
முடியல!!!
//பெயர் சொல்ல விருப்பமில்லை said. "ஒரு வேளை, தெரியலன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டீங்களோ?"
ஆஹா.. நம்மளையே சந்தேகப் படுறாங்களே..!
//ஓஹோ....அதுனாலதான் ஃபிரிஜ்ஜைத் திறந்தா ஆவி வருதா?//
ஹீ.. ஹீ.. தமாஷு.. (thanks pe.so.vi)
இதுக்குலாம் ரூம் தேவை இல்லை, எனக்கு. ஹாலே போதும்.. (நன்றி திரு. மோகன் குமார்)
//முடியல // என்னது ('தள்ள') முடியலையா? நீங்க தள்ளவேண்டாம்.. அதுவே நகர்ந்து நகர்ந்து போகும்.. (நன்றி அனு)
நன்றி rice , dream girl (தமிழ் தெரிந்த, ஹிந்தி சினிமா நடிகை ?)
ஆவி பறக்கும் முதல் செய்தியையும், தள்ளுபடி செய்ய முடியாத இரண்டாவது நகைச்சுவையையும் ரசித்தேன்.
@ ஸ்ரீராம் :: நகைச்சுவையை ரசித்தமைக்கு நன்றி.. என்னடா நீங்க இன்னும் வரலியேன்னு நெனைச்சேன்.. வந்துட்டீங்க.. (வெரி குட்),இனிமே லேட் பண்ணாதீங்க..
Post a Comment