திருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள்.
( மறக்காம டிஸ்கியப் படிங்க.. !)
- கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். - பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. - அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் - யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. - நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. - தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. - எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. - அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். - உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு - தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு. - தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. - இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். - செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. - தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. - நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். - இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். - அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. - கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். - யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (ஹி.. ஹி.. இது உண்மையிலேயே 18 + தான் )
பத்து குறள்தான் சொல்லுறதாதான் இருந்தேன்.. ஹிட்ஸ் வேணும்னுதான் பதினெட்டு ப்ளஸ் போட்டுட்டேன்..
டிஸ்கி - 2 : இந்தப் பதிவினை தொடர நண்பர் டெரர் பாண்டியனை அன்புடன் அழைக்கிறேன்.. அவர் தனக்குப் பிடித்த டாப் 1330 குறள்களை எழுதுவார்.
நன்றி : http://kural.muthu.org/
===========================================
42 Comments (கருத்துரைகள்)
:
இங்கே இப்போ ஒரு கொலை விழும், சாட்சி சொல்ல விரும்புறவங்கள்லாம் வரிசையா வந்து நில்லுங்க சார்..... (கேமரா நாட் அலோவ்டு)
அழகான குறள்கள்!
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
இருந்தாலும் 13-வது குறலுக்காக சும்மா விடுறேன்.......
@பன்னிக்குட்டி ராம்சாமி
திரும்ப ஒரு தடவை.. மூணாவது குறள படிச்சி புரிஞ்சுக்கிட்டு வாங்க.. நான் ரெடி..
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
@எஸ்.கே
நன்றி எஸ்.கே..
அதுவும் நல்ல குறள் தான். .
தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார் மன்ற
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
'அரிவாரைக் காட்டார் நரி'.
@எஸ்.கே
//கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை. //
அது எதில் / எங்கு வருகிறது நண்பரே ? (எனக்குத் தெரியாது !)
@பன்னிக்குட்டி ராம்சாமி
எப்படியோ .. நீங்கள் நல்ல முடிவுக்கு வந்தமைக்கு நன்றி.., எங்கள் பன்றியாரே..
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.// இது நாலடியார் இன்னொன்னு பழமொழி நானூறு!:-)
திருவள்ளுவர் எங்கே பிறந்தார்?
@எஸ்.கே
//திருவள்ளுவர் எங்கே பிறந்தார்? //
சரி.. அவர் மயிலாப்பூரில் (சென்னைதான்) பிறந்ததா படிச்சிருக்கேன்..
சரி.. அவர் மயிலாப்பூரில் (சென்னைதான்) பிறந்ததா படிச்சிருக்கேன்..///
நானும் அப்படி படிச்சிருக்கேன். ஆனால் ஒரு சாரார் அவர் கன்னியா குமரியில் பிறந்ததாக சொல்வார்கள்
ஏனெனில் மயிலை - திருவள்ளுவர் பிறந்த காலத்தில் இன்னும் தள்ளில் கடல் இருக்கும் இடத்தி(கிட்டதட்ட அந்தோமான் நிக்கோபார் பக்கம்) இருக்கும். எனவே அது மயிலை இல்லை என்பார்கள்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்க்கு.
@ பன்னி.,
// இங்கே இப்போ ஒரு கொலை விழும்,
சாட்சி சொல்ல விரும்புறவங்கள்லாம்
வரிசையா வந்து நில்லுங்க சார்..... //
சாட்சி நெ 1 : வெங்கட்., வெங்கட்., வெங்கட்.,
வக்கீல் : பன்னிக்குட்டி., மாதவனை
வெட்டுனதை நீ பாத்தியா..?
வெங்கட் : என்ன நீ பாத்தியா..?
வக்கீல் : மாதவன் பிளாக் பக்கம்
போனியா..?
வெங்கட் : என்ன நீ போனியா.?
வக்கீல் : அவர் பதிவை நீ
படிச்சியா..?
வெங்கட் : என்ன நீ படிச்சியா..?
வக்கீல் : அங்கே பன்னிக்குட்டி
கமெண்ட்டை பாத்தியா..?
வெங்கட் : என்ன நீ பாத்தியா..?
வக்கீல் : திரும்ப திரும்ப பேசுற நீ..
வெங்கட் : என்ன திரும்ப திரும்ப பேசுற நீ.. ?
18
19
நானும் 18+ போட்டுட்டேன் 18th,19th,20th கமென்ட் என்னோடதுதான்
எனக்கு இதுல 47வது லைன் தாங்க ரொம்ப பிடிச்சிருக்கு.. :) (Including title, excluding empty line)
@சௌந்தர்
அதுவும் நல்ல பொருள் கொண்ட திருக்குறள்தான் சௌந்தர்..
@நன்மனம்
அதுவும் நல்ல பொருள் கொண்ட திருக்குறள்தான் 35 ஆவது அதிகாரம் பத்தாவது குறள்.
நாட்டுக்குத் தேவையான நல்ல பதிவு! வாழ்த்துக்கள் -
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
@வெங்கட்
நன்பேண்டா நீ !
எனக்கா.. ராம்சுக்கா ?
@பெயர் சொல்ல விருப்பமில்லை
ஹாட்ரிக் அடித்த பெ.சோ.விக்கு ஒரு பெரிய 'ஓ' போடுங்கப்பு..
@அனு
ஒரு லைன்னாவது உங்களுக்கு பிடிச்சதா இருக்கனும்னுதான் நீங்க சொன்ன அந்த 47 வது லைன்..
பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
அப்படியே 36+ போடுங்க... இன்னும் நல்லா இருக்கும். ;-) (இன்னும் உங்களோட பேங்க் ட்ரான்சாக்ஷன்லேர்ந்து நான் இன்னும் வெளியே வரலை.. )
@middleclassmadhavi
உங்கள் கருத்திற்கு நன்றி..
@Gopi Ramamoorthy
31 வது அதிகாரம் 'இன்னா செய்யாமை' ஒன்பதாவது குறள்.. (319 ) நல்ல கருத்துக்கள். நன்றி, கோபி சார்.
@RVS
Bank Transaction -- ஹா.. ஹா.. அதெல்லாம் நாங்கலாம் அப்பவே மறந்திட்டோமே.. விட்டுடுங்க..
//அப்படியே 36+ போடுங்க...//
ஹி.. ஹி.. அப்புறம் ஹிஸ்ட்ஸ் எப்படி வரும்....
வேணும்னா டைடில மாத்தாம 1329 + கூட போடலாம்..
நன்றி ஆர்.வீ.எஸ்.
Nice
@மோகன் குமார்
திருவள்ளுவருக்கு நன்றிகள். !!
18 + maniac உங்களுக்குமா !.
திருவள்ளுவர் குறளை 'அ'வில் தொடங்கி 'ன்'ல் முடிசிருக்கார்.
//இந்தப் பதிவினை தொடர நண்பர் டெரர் பாண்டியனை அன்புடன் அழைக்கிறேன்.. அவர் தனக்குப் பிடித்த டாப் 1330 குறள்களை எழுதுவார்.
//
தமிழே தமிழை எழுதப் போகிறதே!:-)))
லொள் லொள்
மியாவ்
காகா கா
இதுவும் குரல்தான்
18 பிளஸ் அல்லது 15 பிளஸ், எப்படியோ திருவள்ளுவரை நினைவில் வைத்திருப்பதற்கும் அடுத்தவர்களுக்கு நினைவு படுத்தியதற்கும் நன்றி.
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......................... இதெல்லாம் படிக்க சொல்றாங்கன்னுதான் நான் ஸ்கூல் பக்கமே போகல .......... இங்கயுமா ????
ஹிட்டறதா....திட்டறதா...என்னவோ போங்க...
இது என்ன ?
Post a Comment