யு.கே.ஜி படிக்கிற என் பொண்ணு பாத்ரூம்ல தண்ணிய கொட்டி விளையாடிக்கிட்டு இருந்தா. அவகிட்ட நான் சொன்னேன்.. "தண்ணிலையே ரொம்ப நேரம் இருந்தா சளி பிடிக்கும் ஜுரம் வரும்". அதுக்கு பொண்ணு என்னைய கேட்டா, "இந்த Tap உள்ள தண்ணி எப்பவுமே இருக்குல்ல .. அப்ப இந்த Tap க்கும் ஜுரம் வருமா ?".
யோசிச்சேன்.. யோசிச்சேன்.. என்னோட லக், கெய்சர்ல கொஞ்சம் சுடு தண்ணீர் இருந்திச்சு.. அத பைப்புல ஓபன் பண்ணிட்டு.. பொண்ண மெதுவா பைப்போட மேல்பக்கம் தொட்டுப் பாக்கச் சொன்னேன். தொட்டுப் பாத்திட்டு "அமாம் ஜுரம் வந்துடிச்சு போல".
அப்பா, சமாளிச்சாச்சுனு நெனைச்சா... உடனே.. பொண்ணு சொல்லுறா, "ஆனா சளி அதுக்கு பிடிக்காது.. அதுக்குத்தான் மூக்கே இல்லையே..!"
ஒருவழியா தண்ணில வெளையாடுறத நிறுத்திட்டு சோப்ப எடுத்து கொழைக்க ஆரம்பிச்சிட்டா பொண்ணு. "சோப்ப எடுக்காத.. அத தேச்சா சீக்கிரமே கரைஞ்சிடும்", அப்படி சொன்னேன். அதுக்கு பொண்ணு கேட்டா "சோப்ப உடம்புல போட்டுக்கிட்டா, ஏம்பா சோப்பு மட்டும் தேயுது.. உடம்பு தேயமாட்டேங்குது ?"
--- இதுக்கு பதில் தெரிஞ்சா, வெயிட்....வெயிட்.. ஒன் மோர் கொஸ்டின், பொண்ணுக்கிட்டேருந்துதான் .. "நம்மள பூச்சி கடிச்சா நமக்கு மட்டும் வலிக்குது. ஏன் பூச்சிக்கு வலிக்க மாட்டேங்குது.. ?"
--- இதுக்கும் சேத்து பதில் தெரிஞ்சா யாராவது சொல்லுங்க.. ப்ளீஸ்,
ஏன்னா, நானும் "பாபு, அருண், வெங்கட்" நடத்துற 'பல்பொ-பல்பு' சங்கத்துல சேர்ந்திட்டேன்.
=======================