Team Work - கூட்டு (கூடி செய்யும்) வேலை

தலைப்பை நினைத்தாலே ஒரு தெம்பு வருகிறது. எந்த ஒரு வேலையிலும் பலதரப்பட்ட நுணுக்கங்கள், சிரமங்கள் இருக்கலாம். ஒருவர் போல மற்றொருவர் சிந்திப்பதில்லை. பலதரப்பட்ட மக்களுக்கு, பலவித சிந்தனை இருப்பது இயற்கை அல்லவா? எனவே எந்த ஒரு வேலையானாலும், பலரின் ஆலோசனைகளை அறிந்து, அவற்றுள் சிறந்தவற்றை செயல் படுத்தினால் அச்செயலில் வெற்றி பெறுவது எளிதாகுமல்லவா?

பலர் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபடுவதே டீம் வொர்க் (team work) என்பது. அதனை நம் இனிய தமிழில் 'கூட்டு முயற்சி' எனச் சொல்லலாமென நான் நினைக்கிறேன். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது நம்மில் பலருக்கு தெரிந்த பழமொழி. பின்வரும் படம், அதனை நன்கு வெளிப்படுத்துகிறது. இப்படம் சிரிக்க மற்றும் சிந்திக்கவும் வைக்கிறதல்லவா? மூவர் சேர்ந்து செய்தால், நன்மை மூவருக்கும் கிடைக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது. இவ்வாறு நடைமுறையில் ஒரு பள்ளத்தை தாண்டலாமா எனக் கேட்காமல், அந்த படம் உணர்த்தும் பொருளை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாமே !








கீழ்வரும் படத்தில் பறவைகளைப் பாருங்கள். கூட்டு முயற்சியால் விளையும் பயன், சிறகடித்து பறக்கும் (வலமிருந்து இடப்புறமாக), இந்த பறவைகளுக்குக் கூட தெரிந்திருக்கிறது. இதனை தெரிந்து கொள்வதற்கு இப்பறவைகள் பள்ளிக்கூடம் ஏதும் செல்லவில்லை என்பது யாவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாகும். 'பட்டறிவு' (படித்து வாங்கும் பட்டம் தரும் அறிவு அல்ல) என்பது வாழ்க்கையில் 'பட்டு' தெரிந்து கொள்ளும் அறிவு ஆகும். இதனை ஆங்கிலத்தில் 'Experience' என்று கூறுவர். அந்த 'பட்டறிவு' தான் இந்த பறவைகளுக்கு, கூட்டு முயற்சியின் பலனை உணரச் செய்ததோ ?


இதனுள் ஒரு இயற்கை நுணுக்கம் இருக்கிறது. பறவைகள் இவ்வாறு 'V' போன்ற வடிவத்தில் பறப்பதினால், அப்பறவைகள் எதிர் கொள்ளும் காற்றின் எதிர்ப்பு குறையும்.  'Aero-dynamics'  என்ற இயற்பியல் பிரிவு இதை பற்றி விரிவாக விளக்கமளிக்கிறது. 'Aero-dynamics' தந்த மாபெரும் பரிசு, 'ஆகாய விமானம்' ஆகும். இப்படி பறக்கும் பறவைகளுள், முன்னால் பறக்கும் பறவை காற்றின் எதிப்பை அதிகமாக சந்திக்க வேண்டும் (அதாவது 'V' வடிவின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பறவை).  பின்னால் வரும் பறவைகள் சற்று குறைந்த எதிப்பை எதிகொள்ளும். இப்படியாக கடைசியின் வரும் பறவைகள் (கோடியில் இருக்கும் இரண்டு பறவைகள்) மிக மிகக் குறைந்த எதிப்பை எதிர்கொள்ளும்.

கதை இத்துடன் முடிந்த பாடில்லை. முதலில் பறக்கும் பறவை என்ன பாவம் செய்தது என நீங்கள் சிந்திக்கவில்லையா? அந்த பறவை ஏன் அதிக எதிர்ப்பை சந்திக்க வேண்டும்? அத்தகைய கேள்விக்கு விடை தான், 'பட்டறிவு' மற்றும் 'கூட்டுமுயற்சி'(அல்லது கூட்டுறவு). சிறிது தூரம் சென்றபின், முன்னால் பறக்கும் பறவை பின்னால் வந்து சேரும், மற்ற பறவைகள் தங்களுக்குள் இடம் மாற்றிக்கொண்டு மீண்டும் 'V' போன்ற நிலைக்கு மாறிவிடும்.  இவ்வாறு சுலபம் மற்றும் கடின விஷயங்களை தங்களுக்குள் கூட்டாக பகிர்ந்து கொண்டு வாழ இப்பறவைகளுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்? இது  வியக்கத்தக்க விஷயம் அல்லவா? இந்த செய்தியை எனது அண்ணன் சொல்லியே நான் தெரிந்து கொண்டேன். பின்னர் இதனை பற்றி 'Internet'ன் வாயிலாக படித்திருக்கிறேன். என் அண்ணனுக்கும், 'Internet'க்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.

நன்றிக்குப் பெயர் போன 'நாய்கள்' கூட கூட்டாக சேர்ந்து செய்யும் வேலையை கீழ்வரும் படம் சொல்கிறதே! இப்படம் சொல்லும் கருத்தினை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.. ஏனென்றால், இப்படம் எனக்கு இயற்கையாகத் தெரியவில்லை. ஒரு 'Refrigirator' மற்றும் மூன்று 'நாய்களைக்' கொண்டு ஒட்டு  வித்தை செய்து உருவாக்கியது போலத் தெரிகிறது.


கூட்டு முயற்சி என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. ஒரு விடுமுறை நாளில் நான் வீட்டின் வாசற்புறம் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். தெருவில், ஒருவன் வரிசையாக குழிகள் பறித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர் ஒருவன் ஒவ்வொரு குழிக்குள்ளும் தண்ணீர் ஊற்றிய படியே சென்றான். பின்னர் மூன்றாமவன் அந்த குழியை மூடிவிட்டு அடுத்த  குழியை நோக்கி சென்றான்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்றாமவனிடம்  சென்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்டேன். நால்வர் சேர்ந்து மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ், 'செடி-நடும்' கடமைகளைச் செய்து கொண்டு செல்வதாகச் சொன்னான்.  அவன் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நான் அவனிடம் கேட்டேன் "செடி இல்லாமல் இது எப்படி சாத்தியம்?" என்றேன். அதற்கு அவன் சொல்லிய பதில், "ஐயா, நாங்கள் மொத்தம் நால்வர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். முதலில் சென்றவர், குழி வெட்டுவார், பிறகு இரண்டாமவர் செடிகளை  நடுவார், மூன்றாமவர், தண்ணீர் ஊற்றிக்கொண்டு செல்வார். பிறகு அந்த குழியை மூடுவது என் கடமை ஆகும்.  எங்களில் இரண்டாமவருக்கு இன்று உடம்பு சரியில்லை, ஆதலால் அவர் வர இயலவில்லை. அவர் இல்லாவிட்டாலும், நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமலிருக்கலாமா?" என்றானே பார்க்கலாம், நான் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்தேன்.  இது 'கூட்டு முயற்சிக்கு' ஒரு தவறான உதாரணம் அல்லவா?


'கூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.
 
கூட்டுறவே நாட்டுயர்வு.  கூடி வாழ்வோம், பயன் பெறுவோம் !

(நினைவிற்கு....  கூட்டுறவு வங்கி, கூட்டுறவு பால் சங்கம், கூட்டுறவு பட்டு சொசைட்டி)

பின்குறிப்பு :
்தி
நான் வலைப்பூ எழுதுவது கூட கூட்டு முயற்சி தான். நான் எழுத, நீங்கள் பின்னூட்டமிட (comment), நான் ஊக்குவிக்கப்பட்டு மேலும் மேலும் (நல்ல தகவல்களை) உங்களுக்கு பயன்அளிக்கும்(?) என நினைத்துக்கொண்டு எழுத ...     ஹீ..., ஹ..ீ.. அடிக்க வரீங்களா?  ஓகே. ஜூட். !


15 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதான்.
கூட்டுறவு நாட்டுயர்வுதான்..
ஆனா எனக்கு கூட்டு பிடிக்காதுங்க...(நான் சமையல்ல சொன்னேன்..)

hayyram said... [Reply]

//தமிழில் 'கூட்டு முயற்சி' // கத்தரிக்காய் கூட்டு, வாழக்காய் கூட்டு அப்படியா!

//சிறிது தூரம் சென்றபின், முன்னால் பறக்கும் பறவை பின்னால் வந்து சேரும், மற்ற பறவைகள் தங்களுக்குள் இடம் மாற்றிக்கொண்டு மீண்டும் 'V' போன்ற நிலைக்கு மாறிவிடும்.// சுவாரஸ்யமான அழகு நிறைந்த விஷயம்.

படங்கள் அருமை. நன்றி. இப்படியே தொடருங்கள்.
www.hayyram.blogspot.com

ஆதி மனிதன் said... [Reply]

நல்ல கருத்தை நயமாக நகைச்சுவையுடன் விளக்கி இருக்கிறீர்கள். சூப்பர்... keep it up.

Prathap Kumar S. said... [Reply]

அந்த பறவைகள் மேட்டர் புதுசு... பகிர்ந்ததுக்கு நன்றிங்க... இப்படி உருப்படியா நான் எழுதனதே கிடையாது... எல்லாமே மொக்கைதான்... இந்த மாதிரி நிறைய எழுதுங்க...

Chitra said... [Reply]

உங்க கூட்டு முயற்சிக்கு எங்க ஒத்தாசையும் தர வந்து விட்டோம். வாழ்த்துக்கள்.

பெசொவி said... [Reply]

superb! Keep it up!

Jaleela Kamal said... [Reply]

/கூடி வாழ்ந்தால் கோடிநன்மை// ரொம்ப அருமையான முறையில் பதிவு போட்டு இருக்கீங்க.

Unknown said... [Reply]

The gain of Team work and the loss of lack of it are well depicted.

கண்ணகி said... [Reply]

செடிக்கதைதான்நாட்டில் இன்று நிலமை.கடங்கார வேலை.

பறவைகள் இடம் மாறிக்கொள்வது புதிய செய்தி.

முழுவதும் படித்துவிட்டேன்.

dondu(#11168674346665545885) said... [Reply]

வெட்டவெளியில் புதிதாகத் தெரு போட வேண்டுமானால் போக வேண்டிய இடத்தை நோக்கி மாடுகளை ஓட விடுவார்களாம். அவை செல்லும் பாதையே சரியான வழி என தீர்மானம் செய்வார்களாம் என எனது சிவில் பொறியாளர் நண்பர் கூறியது நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

//ஸ்ரீராம். said... "ஆனா எனக்கு கூட்டு பிடிக்காதுங்க...(நான் சமையல்ல சொன்னேன்..)"
//hayyram said..."தமிழில் 'கூட்டு முயற்சி' கத்தரிக்காய் கூட்டு, வாழக்காய் கூட்டு அப்படியா!"//
சாப்பாடு விஷயம் உங்க இஷ்டங்க..

//hayyram said.. படங்கள் அருமை.//
நூறு வார்த்தைகளின் அர்த்தத்தை சொல்ல, ஒரு படம் போதுமே! (படத்தின் வலிமை)

//ஆதி மனிதன் said..."நல்ல கருத்தை நயமாக நகைச்சுவையுடன் விளக்கி இருக்கிறீர்கள். சூப்பர்... keep it up.//

'நகைச்சுவை' இருக்கா ? ok

//நாஞ்சில் பிரதாப் said..அந்த பறவைகள் மேட்டர் புதுசு... //

நிறைய விஷயங்கள் புதிதுதான், நாம் தெரிந்துகொள்ளும் வரை.

//Chitra said..."உங்க கூட்டு முயற்சிக்கு எங்க ஒத்தாசையும் தர வந்து விட்டோம். வாழ்த்துக்கள்."

//பெயர் சொல்ல விருப்பமில்லை said..."superb! Keep it up!"

@ Jaleeja.. நன்றி.. மீண்டும் (மீண்டும்) வாருங்கள்.. வாழ்த்துங்கள்.

@ Sriramadesikan
Thanks for your appreciation.

//கண்ணகி..said "முழுவதும் படித்துவிட்டேன்".//
நன்றி.

//dondu(#11168674346665545885) said... "வெட்டவெளியில் புதிதாகத் தெரு போட வேண்டுமானால் போக வேண்டிய இடத்தை நோக்கி மாடுகளை ஓட விடுவார்களாம். அவை செல்லும் பாதையே சரியான வழி என தீர்மானம் செய்வார்களாம் என எனது சிவில் பொறியாளர் நண்பர் கூறியது நினைவுக்கு வருகிறது."//

உங்களது வருகை, தகவல், பின்னூட்டம் அனைத்திற்கும் நன்றிகள் .

அனைவருக்கும் நன்றி.. மீண்டும் (மீண்டும்) வாருங்கள்.. வாழ்த்துங்கள்.

Anonymous said... [Reply]

Nice blog!

--
Raju

எல் கே said... [Reply]

welcome to bloggers world. nice post . Keep it up

one suggesstion please remove "Anonymous" option in comments section

cheena (சீனா) said... [Reply]

மாது - சூப்பர்பா - தண்டவாளம் பழசு தான் --ஆனா இது மாதிரி விஷயத்த எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்ல்லாம் - தப்பே இல்ல - சுப்பர் இடுகை - கூடி வாழ்வதைப் பற்றிய - டீம் வொர்க் பற்றிய நல்ல தொரு இடுகை மாது

எஸ்.கே said... [Reply]

உண்மையாலுமே மிக நல்ல கட்டுரை! கூட்டு முயற்சியின் மகத்துவத்தை உணர்ந்தால் எல்லாமே எளிமையாக விரைவாக முடியும். ஆனால் ஈகோ, மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் போன்றவைகளால் ஒரு குழுவில் கூட்டு முயற்சி இல்லையென்றால் அதன் நோக்கம் நிறைவேறுவது மிகக் கடினமாகும்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...