எப்போதோ கேட்ட செய்திகள் !

செய்தி --1
ஒரு புலவரின் மகன்,  அவரிடம், "அப்பா, காலில் முள் குத்திவிட்டது,  என்ன செய்ய? என்றானாம். அதற்கு அப்புலவரோ,

"பத்து ரத புத்திரனின், மித்திரனின், சத்துருவின், பத்தினியின் காலேடுத்துத் தேய்."

புரியலியா?

பத்து ரத - தச ரதன்
புத்திரன் - ராமன்
  (பொறியியல் கல்லூரிக்குப் போகாமலே கடற்-பாலம் கட்டியவன் , கொசுறு   தகவல்)
மித்திரன் -  சுக்ரீவன்
சத்துரு -  வாலி 
பத்தினி - தாரை,
காலெடுத்து -  'ரா'வில் காலேடுத்தால் 'ர'  ..
அதாவது 'தாரை' யில் கால் எடுத்தால்  'தரை'

ஹூம்!   முள் குத்திவிட்டால், 'தரை'யில் தேய் என்பதை, எவ்வளவு கவிதை நயமாக சொல்லியிருக்கிறார்  இந்த புலவர்.

செய்தி -- 2
பிதொகோரோஸ் முக்கோண விதி உங்களுக்குத் தெரியுமா?
ஒரு செங்கோண முக்கோணத்தில், சாய்வு(கர்ணம் - 'க') பக்கத்தின் வர்க்கம், மற்ற பக்கங்களின் (எதிர்பக்கம் 'எ', மற்றைய பக்கம் 'ப'),  வர்க்கத்தின் கூடுதலுக்கு சமமாக இருக்கும்.  (எ*எ + ப*ப = க*க.)


இதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்  என உங்களில் பலர் கேட்பது, எனக்குப் புரிகிறது.  மேலும் படிக்கவும். 


"ஒடிய நீளன்தனை ஒரெட்டு கூராக்கி
கூரதில் ஒன்றை தள்ளி குன்ட்ரதின் பாதியை
சேர்த்தால் நீடிய கர்ணம் தானே"

 
ஒடிய நீளன்தனை -- பெரிய பக்கத்தின்,
ஒரெட்டு கூராக்கி --  எட்டில் ஒரு பாகமாக்கி
கூரதில் ஒன்றை தள்ளி -- எட்டில் ஒரு பக்கத்தினை நீக்கி 
குன்ட்ரதின் பாதியை  --  மற்றைய பக்கத்தின் பாதியை
நீடிய கர்ணம் தானே -- (வருவது) கர்ணம் (சாய்வு) தானே.
அதாவது, முக்கோணத்தின் பெரிய பக்கத்தின் அளவில்
1/8 பாகத்தை அதனின்று கழித்து அதனுடன் சிரிய பக்கத்தின்
அளவில் பாதியை கூட்டினால் மூன்றாவது (Hypotenuse)
பக்கத்தின் அளவு  கிடைக்கும்.  உதாரணம் பெரிய பக்கம் 8 
சிறிய பக்கம் 6 என்று வைத்துக்கொண்டால்
மேற்கண்ட விதியின் படி,  1 /8 * 8 = ௧,   8 - (1)=  7,
இதனுடன், 6/2 = 3 (மூன்றை) கூட்டினால், 7 +3 = 10
மூன்றாவது பக்கத்தின் அளவு பிதகோரஸ் தேற்றப்படி
8^2 + 6^2 == 100 = c^2   c= 10.

இது பலருக்கும் தெரிந்திருக்கலாம்,
ஆனால் இந்த பாடலுக்கும், பிதொகோரோஸ் முக்கோண விதிக்கும்
ஒரு வித்தியாசம் இருக்கிறது. 'பிதொகோரோஸ் முக்கோண விதி'
தசம பிண்ண எண்களுக்கும்(fractional numbers) பொருந்தும்.
பாடலின் பொருள் தசம பிண்ண எண்களுக்குப் பொருந்தாது.
என்னதான் இருந்தாலும், நமது முன்னோர்கள் பல
வருடங்களுக்கு முன்பே இந்த விதியை பற்றி
சொல்லியதாக தெரியவருகிறது. இது உண்மையாக
இருப்பின், நம் தமிழ் மொழியின் தன்மையும், நம்
முன்னோர்களின் திறமையும் போற்றக்கூடியது தானே?
இந்த பாடல் எந்த இலக்கியத்தில் வருகிறது,
யாருக்காவது தெரியுமா? 
 
நன்றி : 
முதல் பாடலை என் அண்ணன் சொல்லி கேட்டிருக்கிறேன்.
இரண்டாவது பாடலை இன்டர்நெட் மூலம் அறிந்துகொண்டேன். 

செய்தி -- 3 :
:

3.1415926535897932384626433832795028841971693993751058209749445923078164062
862089986280348253421170679821480865132823066470938446095505822317253594081
284811174502841027019385211055596446229489549303820.........


ஹே.. ஹே..  நா எதுவும் தப்பா டைப் செய்யல..  மேலே உள்ள எண், கணித குறியீடு 'பை'(π)யின் மதிப்பாகும். அது பற்றிய ஒரு செய்தி. 'பை'(π) நாள் (PI-Day) என்றால் என்ன? மார்ச்சு (3 ) மாதம் 14 தேதி 'பை'(π) நாள் ஆகும். ( 3.14 ) அன்றைய தினம் மதியம் 1 மணி 59 நிமிடம், 'பை'(π)  நிமிடம் ( 3.14159 ) மற்றும், 'பை'(π) வினாடி என்பது, அன்றைய தினம் மதியம் 1 மணி 59 நிமிடம்,, 26 வினாடி .ஆகும் ( 3.1415926 )

சமஸ்க்ரிதத்தில் எழுதப்பட்ட ஸ்லோகம், இதன் ('பை'-π)) மதிப்பை 31 இலக்கம் வரை எழுத இயலுமென கேள்விப்பட்டேன். யாருக்காவது அதனைப் பற்றி பிற விபரங்கள் தெரியுமா?

5 Comments (கருத்துரைகள்)
:

Anonymous said... [Reply]

Hi Taliva
Interesting facts about pythogoras theorem in tamil.

பெசொவி said... [Reply]

Very good and interesting post.

Regarding Pi, search the google and you will get so many digits of Pi.

For million digits of pi, visit http://www.exploratorium.edu/pi/Pi10-6.html

பெசொவி said... [Reply]

அந்த முதல் இலக்கிய நயம் மிக்க உரையாடல் இப்படி வரும்.

ஒரு புலவர் ஆற்றுக்கு போகும் வழியில், முள் குத்திவிட்டது, எனவே இன்னொரு புலவரிடம் இப்படி கூறினார்:

"முக்காலெடுத்து இருமூணுக்குப் போகையில், ஐந்து தலை நாகம் அழுந்திக் கடித்தது, என்ன செய்ய?"

முக்கால் - மூன்று கால் அதாவது, இரண்டு கால் தவிர, ஒரு கழியை ஊன்றிக் கொண்டு சென்றதை இப்படி கூறுகிறார்.

இருமூணு = ஆறு.

அதற்குப் பதில் தான் முதல் செய்தியில் உள்ளது.

Madhavan Srinivasagopalan said... [Reply]

// பெயர் சொல்ல விருப்பமில்லை said... ""முக்காலெடுத்து இருமூணுக்குப் போகையில், ஐந்து தலை நாகம் அழுந்திக் கடித்தது, என்ன செய்ய?"
... அதற்குப் பதில் தான் முதல் செய்தியில் உள்ளது.//

அந்த முதல் பகுதி, எனக்கு நினைவில் இல்லை. உங்களது வருகைக்கும், பின்னோட்டம் மற்றும் 'அந்த முதல் பகுதிக்கும்' நன்றிகள்.

விஸ்வாமித்திரன் said... [Reply]

GOOD ATTEMPT

YOU MAY SEE MY BLOG AND COMMENT PLEASE.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...