நாள் முழுதும் அலுவலகப்பணி அதிகமிருந்ததால், மிகவும் களைத்துப்போய், வரவேற்பறையில் இளைப்பாரிகொண்டிருந்த வேளையில், துள்ளிக் குதித்து வீட்டினுள் வந்தான் என் 5 வயது செல்லக் குட்டி (மகன்).
அவனோடு தொடர்ந்து உள்ளே வந்தது, ஒரு பட்டாம் பூச்சி (Butterfly). சிறகடித்து பறந்த அந்த பட்டாம் பூச்சியை பார்க்கையில், என்ன ஒரு இன்பம், நமக்கு கூட. என் மகன் ஆனந்தமாய் அந்த பூச்சியை கண்டு களித்து கொண்டிருந்தான்.
அந்தி சாய்ந்துவிட்டதால், மின் விளக்கு வீட்டினுள் ஒளிர்ந்து கொண்டிருந்தது. மின் விளக்கால் நமக்கு என்ன ஒரு பயன்.. ஆனால், அந்த மின் விளக்கு யாருக்காவது சோதனையாக இருக்க நேரிடுமோ? ஆம், அந்த மின் விளக்கால், பட்டாம்பூச்சிக்கு வந்த சோதனையை சொல்லி மாளாது.
மின் விளக்கு கண்டு, அந்த பட்டாம் பூச்சி அதனை நோக்கி செல்ல, அத்தகைய வருகையை எதிர்பார்த்து காத்திருந்த பல்லி, ஒன்று திடீரென பாய்ந்து, சுலபமாக அந்த பட்டாம் பூச்சியை பிடிக்க எத்தனித்த பொது, அதனை உணர்ந்த பூச்சி அங்கும் இங்குமாக பறக்க .. ஒரு சிறிய போட்டி நடந்து கொண்டிருந்தது.
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.. பட்டாம் பூச்சியை காப்பாற்றினால், புண்ணியம் கிடைக்கும் வேளையில், பல்லியின் உணவை தடுத்த பாவமும் சேருமோ? அதே போல், பல்லியின் உணவை தடுக்கா விட்டால், புண்ணியம் கிடைக்குமா அல்லது, பட்டாம் பூச்சியை காப்பாற்றாத பாவம் சேருமா என குழப்பத்தில் இருக்கையில் எல்லாம் முடிந்து விட்டது. அந்த பல்லியே வெற்றி கொண்டது.
இறைவனின் படைப்பில் இப்படி ஒரு போட்டி தேவையா? யாருக்குத் தெரியும் ? இறைவனின் ஒவ்வொரு செயலிலும் காரணம் கண்டிப்பாக இருக்கும் என நம்புவன் நான்.
அனால், ஒரு விஷயம் நிச்சயம், நான் சிபி சக்கரவர்த்தி இல்லை !
அது மட்டுமல்ல, இப்படி ஏன் நடந்தது? எனக்கேட்ட, என் மகனிற்கு என்னால் விடை சொல்லத் தெரியவில்லை.. !!
12 Comments (கருத்துரைகள்)
:
You could have switched off the light for a few seconds that might have enablled the butterfly to fly away and the lizard would have moved to a different location.
For Lizard it was a matter of food for one time. For the butterfly it was a life and death problem and there was no error of margin.
//cho visiri said... "For Lizard it was a matter of food for one time." //
But, I think/believe Lizard's food is insects or other living things only. If so, even 'food for one time' is the 'life of another'.
Thanks Brother, for your visit & comments. Comments are encouraging to post more useful things.
நண்பரே! உன்னுடைய பதிப்புகள் மறைந்த நாவலாசிரியர் திரு.சுஜாதாவை பிரதிபலிக்கின்றன !
வாழ்த்துக்கள்! படைப்புகள் தொடரட்டும்
அன்புடன்
பாலா (பழைய என்றும் மறவா நண்பன்)
உலகில் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஓர் உயிர் இன்னொன்றை தின்றே வளர்கிறது. என்ன செய்வது? குழந்தைகளுக்கு இது சற்று அதிர்ச்சி ஆக தான் இருக்கும்
u cant do anything on that buddy.. the biggest mistakes of human being is not being as humans rest of the world is doing it duty correctly.. its just for you and me all these like and dis likes.. for them its life just another day with out any sixth sense nonsense their life cycle is good and complete..
btw.. nice to see that you are writing posts..keep goin.::))
ஹஹஹ... இதைத்தான் இயற்கை சமநிலை என்பது. இப்ப மனிதர்கள் ஆடு, கோழி சாப்பிடறமாதிரி, சிம்ங்கம், புலி, மானை வேட்டையாடற மாதிரி, பசு, மாடு புல் திங்கறமாதிரி..
இப்படி இயற்கை தன்னைத்தானே சமநிலை படுத்திக்கொள்கிறது.
அதில் மனிதன் கைவைக்கும்போதுதான் இயற்கையில் மாற்றங்கள் ஏற்படும். இப்போது அதிகம் அதான் நடக்கிறது.
//bala said...
நண்பரே! உன்னுடைய பதிப்புகள் மறைந்த நாவலாசிரியர் திரு.சுஜாதாவை பிரதிபலிக்கின்றன ! வாழ்த்துக்கள்! படைப்புகள் தொடரட்டும்\\
இதைத்தான் எனது மற்றொரு நன்பரும் சொன்னார். வேடிக்கை என்னவென்றால், நான் திரு. சுஜாதா எழுதிய ஒரு கதையைக்கூட படித்ததில்லை..
ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களை படித்திருக்கிறேன்.
தங்கள் வரவிற்கு நன்றி. (வரவு நல்ல உறவு)
---------------
//மோகன் குமார் said...
உலகில் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஓர் உயிர் இன்னொன்றை தின்றே வளர்கிறது. என்ன செய்வது? //
நீங்கள் சொன்னவை ஐந்தறிவு ஜீவன்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். நமக்கு..? ஏனோ 'மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே..' பாடல் ஞாபகம் வருகிறது.
----------
//பலா பட்டறை said...
btw.. nice to see that you are writing posts..keep goin.:: //
Thanks brother..!
---------
//நாஞ்சில் பிரதாப் said...
இப்படி இயற்கை தன்னைத்தானே சமநிலை படுத்திக்கொள்கிறது.
அதில் மனிதன் கைவைக்கும்போதுதான் இயற்கையில் மாற்றங்கள் ஏற்படும். இப்போது அதிகம் அதான் நடக்கிறது.//
//
நல்லா சொன்னீங்க!
--------------------
வருகை தந்து கருத்துக்களை கூறிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
---------
நல்ல பகிர்வு.
We call it food cycle. Like fish eat worms, men eat fish, tiger eat man etc.
We cant do anything. Even, if you switch off the light as suggested by Cho visiri, you are spoiling the food of Lizard.
தம்பிகளா ,
கோபம் இருந்தா சுஜாதாவை வேணுமின்னா நேரடியா திட்டிடுங்க , இந்த மாதிரி அவரை கேவலப் படுத்தாதீங்க !!
மாது, பல்லி பாவமா - பட்டாம் பூச்சி பாவமா - கோர்ட்டில் ஜட்ஜ் தீர்ப்பு சொல்லும் போது குற்றவாளி பாவமா - பாதிக்கப்பட்டவன் பாவமா பார்க்க இயலாது - சட்டென மனதில் தோன்றிய முடிவினை குழம்பாமல் செயல் படுத்தி விட வேண்டும். பொதுவாக நாம் பட்டாம் பூச்சி இறப்பதை விரும்ப மாட்டோம் - பல்லிக்கு உணவு கிடைக்க வில்லை என்றாலும். நல்வாழ்த்துகள்
சுஜாதா பாலகுமாரன்னு முண்டாசு கட்டறதுக்கெல்லாம் மயங்கிடக் கூடாது சரியா மாது - நண்பர்கள் பிரியத்தின் பெயரில் ( அதுவும் பழைய நண்பர் ) ஏதாவது சொல்வார்கள் - ஒரு கணம் மகிழ்ந்து மறந்து விட வேண்டும். இன்னொருத்தர் கூட சொன்னாரே - இதெல்லாம் வேண்டாம். சுஜாதா ஆக முயல்வது தவறில்லை. நல்வாழ்த்துகள் - கடும் உழைப்பு முயற்சி தேவை. நட்புடன் சீனா
Post a Comment