மனம்கனிந்த பொங்கல்
நல் வாழ்த்துக்கள்..
முழுமையான பொங்கல் எது?
மஞ்சள், இஞ்சி, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை மாலைபோல் கோர்த்து அணியப்பெற்ற புதுப்பானையில் புத்தம் புதிய அரிசி (சமீபத்தில் அறுவடை செய்து நெல் நீக்கப்பட்ட அரிசி) பருப்பு, பசு நெய், நல்லதொரு முந்திரி , திராக்ஷை, பாகு வெல்லம் இவையனைத்தும் சரியான அளவில் இட்டு, நமது எதிர்காலம் நல்ல பல விஷயங்களுடன் பொங்கு பொங்கு என்று பொங்கட்டும் என்பதற்கு அடையாளமாக பொங்கி வழியும் பொங்கல்.
அத்தகைய ஒரு நிகழ்ச்சி அனைவர் இல்லங்களிலும் நல்ல முறையில் நடைபெற நல் வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில், இறைவனுக்கு சிறப்பு படையல் செய்வித்து வணங்கி , இயற்கையையும் நன்றியுடன் போற்றுவோமாக. இது பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் விஷயமாகும்.
நம்மிடம் இருக்கும்(இருந்தால்) தீய எண்ணங்களை / செயல்களை தீயிட்டு கொளுத்துவோம் முதல் நாளாகிய, போகிப் பொங்கல் தினத்தில்.
நமக்கு பல விதங்களில் உதவும் மாடு, ஆடு போன்ற கால்நடைகளுக்கும் நன்றி போற்றும் விதமாக அமையட்டும், மூன்றாம் நாள். (உங்கள் இல்லத்தில் கால்நடை ஏதும் இல்லை என்றாலும், வீதியில் காணப்படும் எதாவது ஒரு கால்நடைக்கு, ஒரு வாழைப்பழமாவது அளிக்கலாமே).
காண்பதற்கென்றே ஒரு சிறப்பு நாள், காணும் பொங்கல் - நான்காம் நாளாகும். உறவினர் (மற்றும்) நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இனிய நாளை அனுபவிக்கலாமே.
இவ்வாறு செய்கையில், ஒரு முழுமையான பொங்கல் கொண்டாடிய உணர்வு வருகிறதல்லவா?

13 Comments (கருத்துரைகள்)
:
பொங்கல் வாழ்த்துக்கள், அப்புறம் நான் வாழ்த்தானதாலதான் பொங்கலை கொண்டாடலைன்னு சொல்லப்படாது...:-)
நல்ல பதிவு.. பொங்கல் பண்டிகையைப் பற்றி சற்று விரிவாக எழுதி வாழ்த்தியமைக்கு நன்றி.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கலை பற்றி விளக்கமான நல்ல பகிர்வு, தொடருங்கள்
அய்யா மாதவன், காணும் பொங்கல் என்ற பொங்கல் சென்னை மற்றும் உங்கள் ஊரில்தான் நடக்கும். இது உண்மையில் கனுப்பொங்கல். கரும்பில் உள்ள ஒரு கனுவில் இருந்து இன்னெரு கனு வரைக்கும் வெட்டி தோலை சீவி கரும்பு மட்டும் எடுத்துக் கொண்டு, சாதங்களை குங்குமம், மஞ்சள் ஆகியவற்றால் பிடி செய்து, தலைவாழையிலையில் ஏழு கூழாங்கற்கள் வைத்து சப்த கன்னியராக்கி அவர்களுக்கு பொங்கலிலும்,சாதப் பிடிகள், கனு கரும்புகள் வைத்து பெண்கள் தன் கனவன்,ஸ்கோதரன் ஆகியோர் நல்லா இருக்க வேண்டுவார்கள். பின்னர் இவர்கள் இந்த பெண்களை ஆசி கூறிப், பணம் கொடுப்பார்கள். இந்த நல்ல நாளில் தமது சந்தோசங்களைப் பகிர கோவில், ஆறு முதலிய இடங்களுக்கு செல்வார்கள். நாளடைவில் இது ஊர் சுற்ற ஆரம்பித்து பீச், பொருட்காட்சிப் பொங்கல் ஆயிற்று. நன்றி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@ Jaleeja 'Thanks Sister' keep visiting & comment please.
@ piththan
நன்றி பித்தன் அவர்களே !
நீங்கள் சொல்லும் 'கனுப் பொங்கல்' தை இரண்டாம் நாள்(பொங்கலுக்கு அடுத்த தினம்) எங்கள் வீட்டு பெண்கள் செய்வார்கள் (இன்றும் கூட).
இது பெரும்பாலும் ஒரு சில பிரிவினரே செய்து வருகிறார்கள். ஆகையால் இதனைப் பற்றி எனக்குத் எழுதத் தோணவில்லை.விரிவாக சொன்னதற்கு மிக்க நன்றி.
இதனைத்தவிர நான்காம் நாள் கொண்டாட்டமாக 'கன்னி பொங்கல்' அல்லது 'காணும் பொங்கல்' அமைந்துள்ளது.
என்னவோ மாதவா..எல்லா ஹோட்டல்லயும் பொங்கல் பொங்கிட்டுதான் இருக்கு::))
சாரி ச்சும்மா..::))
வாழ்க்கைல தேடல் இருக்கலாம் வலைப்பூ நல்லா இருக்கான்னுல்லாம் கருத்து கேக்க கூடாது::))
டமிலிஷ், தமிழ்மணம்,இன்ன பிற திரட்டிகள்ல இனையுங்க, நல்ல நல்ல பதிவுகள படியுங்க, உங்க மனச, வாழ்க்கைய பாதிச்சத, எழுதுங்க, இது உங்க டயரி மாதிரி..simple..::))
// பலா பட்டறை said..."வாழ்க்கைல தேடல் இருக்கலாம் வலைப்பூ நல்லா இருக்கான்னுல்லாம் கருத்து கேக்க கூடாது::))"
'பழமொழி சொன்னா அனுபவிக்கனும், அர்த்தம் கேக்கக் கூடாது' அதுமாதிரியா?
//டமிலிஷ், தமிழ்மணம்,இன்ன பிற திரட்டிகள்ல இனையுங்க, நல்ல நல்ல பதிவுகள படியுங்க, உங்க மனச, வாழ்க்கைய பாதிச்சத, எழுதுங்க, இது உங்க டயரி மாதிரி..simple..::)) //
அறிவுரைக்கு நன்றி.. முயற்சி செய்கிறேன்.
இனிய பொங்கல் திருநாளில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கௌதமன் சார் வந்தால்தான் சந்தோஷம் போல...மேல நான் வந்து சொன்னதுக்கு பதிலே இல்லை...
//ஸ்ரீராம். said... "கௌதமன் சார் வந்தால்தான் சந்தோஷம் போல...மேல நான் வந்து சொன்னதுக்கு பதிலே இல்லை..."//
எப்படியோ, உங்க பின்னூட்டத்துக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன் சார்... அடிக்கடி வாங்க.. என்னை வழி நடத்துங்க.. மீண்டும் நன்றி.
சாரி மாதவன் - சென்னை இசைவிழா சமயம் சென்னை சென்று - பதினைந்து நாட்களுக்கு மேல் மயிலாப்பூர் ஏரியா முழுவதும் அலைந்து திரிந்து - இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்தி நீந்தி (எனக்கு நீச்சல் தெரியாது - சும்மா ...) மகிழ்ந்து பெங்களூர் திரும்பினேன். அதனால நான் அடிக்கடி விசிட் செய்யும் எல்லா வலைகளுக்கும் விசிட் ஓவர் டியூ ...! ஒ கே - இப்போ வந்து பார்த்து டாப் போஸ்ட் படித்து, வோட்டுப் போட்டு, எல்லாம் பண்ணிட்டேன். வாழ்க வளமுடன்.!
பொங்கல் பண்டிகையைப் பற்றி விரிவாக எழுதியதற்கு வாழ்த்துகள்!
தொடர்ந்து நான்கு நாட்கள் விழா மாதிரி கொண்டாடும் பொங்கல் பண்டிகையை விட வேறெந்த பண்டிகையும் மனத்தில் நிற்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பலா பட்டறை சொல்லியிருப்பதுபோல், நிறைய படியுங்கள், நிறைய யோசியுங்கள், நிறைய எழுதுங்கள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைவிட நாம் சொல்ல வந்ததை நன்றாக சொல்லியிருக்கிறோமா என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
(அதுக்காக, நம்ம வலைப்பூ பக்கம் வந்து அடிக்கடி பின்னூட்டம் போட மறக்காதீங்க..................ஹிஹி!)
Post a Comment