தமாஷ் நேரம்

எனது 6 வயது மகன் பள்ளிக்கூட, வீட்டு வேலை (Home work தானுங்கோ) செய்து வரும் வேளையில், அவனுக்கு ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவைப்பட்டதால், என்னை அணுகி கேட்க ஆரம்பித்தான். கேட்கப்பட்டவார்த்தைகள்.
1) Bundle,
2) unwarp
3) excited
4) steam
ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தேன், கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
1 , 2 , 3   மறுகேள்வி கேட்காமல் கவனித்தான்.
'ஸ்டீம்' - நான் சொன்ன விளக்கம்.
நான் : வெந்நீரிலிருந்து மேலே செல்லும் ஆவியைப் பாத்திருக்கியா..?

மகன் : ஆம்
நான் : அதுதான் 'நீராவி' இங்கிலீஷுல 'ஸ்டீம்'
          தண்ணிய  சூடு பண்ணினா, நீராவி ஆகிடும்....
          தண்ணிய கூல்  பண்ணினா 'கட்டி' ஆகிடும்.. அதாவது தண்ணிய ஃபிரிஜ்ஜில வச்சா  ஐஸ் கட்டி  ஆகிடும்ல..........
மகன் : தண்ணிய சூடு பண்ணி  ஃபிரிஜ்ஜில வச்சா என்ன ஆகும் ?
நான் :  ?!@#$%^&*().. (கரெண்டு-பில்லு ரொம்ப ஆகும்)

Moral : எம்புட்டு தேவையோ அதோட பொத்திக்கணும்.. எக்ஸ்ட்ரா விளக்கம்லாம் கொடுக்கப்டாது.

---------------------------------------------------------
இன்றைய ஸ்பெஷல் ஜோக்கு :
 க ஸ் (ஷ்) டமர் : என்னங்க, ஆடி 1ம் தேதி முதல்  'தள்ளுபடி' அறிமுகம்ணு விளம்பரம் செஞ்சுட்டு, 'டிச்கவுண்டே' தரலையே?
கடைக்காரர் : ஹீ... ஹீ....  நாங்க சொன்னது அதோ இருக்குதே அந்த 'தள்ளு-படி' (எஸ்கலேட்டேர்) அதுதான் இன்னிலேர்ந்து ஆரம்பிச்சுருக்கோம்..

--- இது எனது 'சொந்த முயற்சி'

'தள்ளுபடி' (எஸ்கலேட்டேர்) நல்ல கண்டுபிடிப்பு தான..? அது எப்படி வேலை செய்யுறதுன்னு, நெட்டுல கெடச்ச இந்த படம் நல்லா இருக்குறதால............  கொஞ்சம் கீழே பாருங்க..


நன்றி : google images
---------------------------------------------------------

10 Comments (கருத்துரைகள்)
:

Gayathri said... [Reply]

இந்த சின்ன பசங்களுக்கு விளக்கம் சொல்லர்துக்குள்ள அவங்க நுறு கேள்விகளோடு தயாராக இருப்பார்கள்...

உங்க தள்ளுபடி சூப்பர்...

அதற்கும் மேல எப்படி அது இயங்குதுன்னு நீங்கள் கொடுத்த விளக்கம் அமோகமாக இருந்தது...

நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

//இந்த சின்ன பசங்களுக்கு விளக்கம் சொல்லர்துக்குள்ள அவங்க நுறு கேள்விகளோடு//

"அவங்களோட கேள்விகளுக்கு மதிப்பளித்து விடை தர முயல வேண்டும். அது அவர்களை ஊக்குவிக்கும்" -- எனது அண்ணன் கொடுத்த அட்வைஸ்

//உங்க தள்ளுபடி சூப்பர்...//

நன்றி Gayathri

rice said... [Reply]

soopparoo.....

DreamGirl said... [Reply]

//மகன் : தண்ணிய சூடு பண்ணி ஃபிரிஜ்ஜில வச்சா என்ன ஆகும் ?
நான் : ?!@#$%^&*().. (கரெண்டு-பில்லு ரொம்ப ஆகும்)//

வீட்டுக்கு வீடு வாசப்படி.. (குழந்தைகள் கேட்கும் கேள்விகள்)
கடைக்கு கடை 'தள்ளுபடி' (ஆடித் தள்ளுபடிங்க..)

பெசொவி said... [Reply]

//1 , 2 , 3 மறுகேள்வி கேட்காமல் கவனித்தான்//

ஒரு வேளை, தெரியலன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டீங்களோ?

//தண்ணிய சூடு பண்ணி ஃபிரிஜ்ஜில வச்சா என்ன ஆகும் ?//

ஓஹோ....அதுனாலதான் ஃபிரிஜ்ஜைத் திறந்தா ஆவி வருதா?

CS. Mohan Kumar said... [Reply]

தள்ளுபடி .. :))

Room pottu yosippeengalo??

அனு said... [Reply]

//தள்ளுபடி//

முடியல!!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

//பெயர் சொல்ல விருப்பமில்லை said. "ஒரு வேளை, தெரியலன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டீங்களோ?"

ஆஹா.. நம்மளையே சந்தேகப் படுறாங்களே..!

//ஓஹோ....அதுனாலதான் ஃபிரிஜ்ஜைத் திறந்தா ஆவி வருதா?//

ஹீ.. ஹீ.. தமாஷு.. (thanks pe.so.vi)


இதுக்குலாம் ரூம் தேவை இல்லை, எனக்கு. ஹாலே போதும்.. (நன்றி திரு. மோகன் குமார்)

//முடியல // என்னது ('தள்ள') முடியலையா? நீங்க தள்ளவேண்டாம்.. அதுவே நகர்ந்து நகர்ந்து போகும்.. (நன்றி அனு)

நன்றி rice , dream girl (தமிழ் தெரிந்த, ஹிந்தி சினிமா நடிகை ?)

ஸ்ரீராம். said... [Reply]

ஆவி பறக்கும் முதல் செய்தியையும், தள்ளுபடி செய்ய முடியாத இரண்டாவது நகைச்சுவையையும் ரசித்தேன்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ ஸ்ரீராம் :: நகைச்சுவையை ரசித்தமைக்கு நன்றி.. என்னடா நீங்க இன்னும் வரலியேன்னு நெனைச்சேன்.. வந்துட்டீங்க.. (வெரி குட்),இனிமே லேட் பண்ணாதீங்க..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...