எனக்கு பிடிச்ச கணக்கு..




சிலபேருக்கு கணக்கு கரும்பு ஜூஸ் பருகுவதுபோல் இனிக்கும்..
மற்ற சிலருக்கு.. வேம்பு ஜூஸ் (அப்படி ஒண்ணு இருக்குதா ?) பருகுவதுபோல இருக்கும்.
பாரதியார் கூட, கணக்கு பிடிக்காமல், 'கணக்கு, பிணக்கு.. ஆமணக்கு..' அப்படி சொன்னதாக எனது பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் சொன்னது போன்ற நினைவு. (தப்புன்னா பெருசு பண்ணாம, ஆனா, பெரிய மனசோட மன்னிச்சு விட்டுடுங்க..)

எனது ஃ பெமிலியே அந்த வழில வந்ததுனால..நாங்கல்லாம் முதலாவது வகையைச் சேர்ந்தவங்க.
நான் கூட அதனைப் போன்ற வழியினை தொடர முடிந்தது.. எனது ஒரு அண்ணன், 'அறிவியல்' படித்துவிட்டு தேர்வெழுத பள்ளிக்கூடம் சென்றபின்னரே தெரிய வந்தது, அன்றையதினத் தேர்வு கணிதமென..
(மீண்டும் இந்த பாராவின் முதல் வரியினை படிக்கவும்)... 'அவ்ளோதான'.. பரவாயில்லை என்று, எனது அண்ணனும் தேர்வெழுதி 100 % வாங்கியிருந்தார்....(நம்ம பெமிளிக்கே அதுலாம் சகஜமப்பா)..

[உங்க அண்ணன் திறமைசாலிதான் .. உங்களைப் பத்தி சொல்ல வந்தத சொல்லுங்க.. ] அடாடா நம்மளப் பத்தி சரியாவே புரிஞ்சு வெச்சிருக்காங்க.. (எல்லாம் பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குற கதைதான்)

என்னையப் பத்தி ரொம்ப விரிவா சொல்ல வேண்டியதில்லை.. ஒரே ஒரு சாம்பிள் கொடுத்திட்டாப் போதுமே..

நான்'பெருக்கல்'( http://madhavan73.blogspot.com/2010/08/18.html' வருகிற பெருக்க அல்ல ) -- அதாங்க 'multiplication' ரொம்ப வேகமா பண்ணி உடனே விடைய சொல்லுவேன்.. என்ன ஒரே ஒரு நிபந்தனையோட..

இப்படித்தான் சொல்லி எனது உறவினர்கள்,.. நண்பர்கள், சக அலுவலர்களை அசத்தி வருகிறேன்.
உங்களிடமும் எனது திறமையை காண்பிக்க.. இதோ.. இப்ப.. நா ரெடி.. நீங்க ரெடியா..?

ஒக்கே.. ஒக்கே..

நீங்க எவ்வளவு எண்கள் வேண்டுமானாலும் தொடர்ந்து சொல்லலாம்.. நீங்கள் சொல்லி முடித்த அடுத்த அடுத்த நொடிக்குள், அதனோட பெருக்குத் தொகையை, நான் சொல்லிவிடுவேன்..

ஆச்சரியமா இருக்குதா..... அதான் ஒரு நிபந்தனைனு சொன்னேனே.. அது என்னனு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா..... கொஞ்சம் கீழே பாருங்க சார் / மேடம்

....................
...............
...........................
......................................
.......................................
..........................................
............................................
...................................................
...........................................................
.........................................
..............................
......................................
..............................
நீங்க சொல்லுற எண்களில் ஒன்றாவது 'ஜீரோ' (சைஃபர்) வாக இருக்க வேண்டும்..

10 Comments (கருத்துரைகள்)
:

அருண் பிரசாத் said... [Reply]

ஒண்ணும் புரியல!



ஏன்னா கணக்குல நானும் வீக்கு!

பெசொவி said... [Reply]

பாத்து.......................சைபர் க்ரைம் போலீஸ் புடிச்சுகிட்டு போய்டப் போறாங்க!

Madhavan Srinivasagopalan said... [Reply]

நாமெல்லாம் ஒரே இனம்..

நீங்க சொன்ன ஒடனே ஆயுதத்த (ஃ) இணைச்சிட்டேன்.., தற்காப்புக்குத்தான்.. < நன்றி பெ.சோ.வி >

ஸ்ரீராம். said... [Reply]

நான் இங்கே வரவும் இல்லை எதையும் படிக்கவுமில்லை என்று சொன்னால் நம்பணும்.

CS. Mohan Kumar said... [Reply]

கடைசில் வச்சீங்க பாரு ஒரு டுவிஸ்ட்..

வெங்கட் said... [Reply]

// ஒண்ணும் புரியல!
ஏன்னா கணக்குல நானும் வீக்கு! //

நான் கணக்குல Month..

Madhavan Srinivasagopalan said... [Reply]

* உங்க காமென்ட நா பாக்கவும் இல்லை, பப்ளிஷ் பண்ணவும் இல்லை (நன்றி ஸ்ரீராம்)
* ஓஹோ.. டிவிஸ்ட அங்கிட்டு வேச்சிட்டேனா.... மறந்து போயி வேற எங்கிட்டோ தேடிக்கிட்டு இருக்கேன்.. <நன்றி வீல்- மோர்)
* தமிழ் மாசமா, இல்லை 'gregorian month' ஆ ? (நன்றி வெங்கட்)

Gayathri said... [Reply]

நானே பரவால்ல போலருக்கே....ம்ம நான் கணக்குல சூரப்புலி ல ...ஹா ஹா...

வானவில் மனிதன் said... [Reply]

உங்களுக்கு 'முட்டை'மார்க் தான்.nice. நம்மப் போல 'மனவாடு' தானா? கலக்குங்க பிரதர்!
மோகன்ஜி,ஹைதராபாத்

Madhavan Srinivasagopalan said... [Reply]

thanks Gayathri & வானவில் மனிதன்
visit again..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...