சபீபத்தில், ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது.. அந்த விளம்பரத்தில் வரும் கடைசி வரிகள்.. சென்னையில் உள்ள பல ரயில் நிலையங்களில் கீழ்க் கண்ட வாசகங்களுடன் வேயக்கப்பட்டுள்ளன.
"இரண்டாவது டிகாக்க்ஷனும் முதலாவது போலவே". அதனைப் படித்துவுடன் எனக்குத் தோன்றியவை
"அடேங்கோய்யாலே. .. இனிமே, நாங்க முதலாவது டிகாக்க்ஷன்ல காபி போட்டாலும், அவிங்க ரெண்டாவதொன்னு நெனைப்பாங்களே ?"
-------------------------------
அதாவது பரவாயில்லை.. AXE - Deo க்கு வருகிற விளம்பரங்கள் ரொம்ப கொடுமையா இருக்கு.. பெண்களெல்லாம் ஆண்களுக்கு பினாலே ஓடுவது ரொம்ப அருவருப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் தணிக்கை (censor) என்பது கிடையாதா?
----------------------------------------------------------------------------------------------------
பொது இடங்களில், சினிமாவில் சிகரெட் குடிப்பது & மது அருந்துவது தடை செய்யப்பட்டு பல நாட்களாகிறது.. தொலைக்காட்சியில் கூட அது போன்ற செயல்களை காட்டக்கூடாது என்பது எழுதப் பட்ட விதி. அந்த தடை அமலுக்கு வரும் முன்னர் எடுக்கப் பட்ட நிகழ்சிகள், சினிமா போன்றவைகளை ஒளிபரப்பும் பொது கண்டிப்பாக 'சிகரெட் குடிப்பது & மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு' போன்ற எச்சரிக்கை வாசகங்களை போட வேண்டும். தடைக்குபின்னர் எடுக்கப்பட்ட நிகழ்சிகளிலாவது அது போன்ற செயல்கள் இல்லாமல் எடுக்கலாமே.. எனினும் பாருங்கள், தற்போது வரும் நிகழ்ச்சிகளில் கூட, அது போன்ற செயல்கள் எச்சரிக்கை வாசகங்களுடன் ஒலிபரப்பப் படுகிறது..... நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்களா ?
-----------------------------
6 Comments (கருத்துரைகள்)
:
கொள்கையா முக்கியம்? காசுதான் முக்கியம். ம்ஹூம்.......
அருமை....
நீங்க சொல்றது ரொம்ப உண்மைங்க. இங்க யாருக்கும் பொறுப்பு இருப்பது போல் தெரியவில்லை.நம் சந்ததிகளுக்கு நல்ல உலகை நாம் விட்டு செல்லப் போவதில்லை.
i support u
Madhavan, you are an Indian. When did you forget that ?
பதினைந்து முதல் இருபது நொடிகளில் எப்படியாவது கண்களை கவர முயற்ச்சிக்கிறார்கள். ஸ்கூட்டி பெப் விளம்பரத்தில் கார் கண்ணாடியை பார்த்து லிப்ஸ்டிக் இட்டுக்கொள்ளும் பெண்மணியை பார்க்கும் "ஜொள் கணவன்" பொண்டாட்டியிடம் மாட்டுவது பார்க்க ரசிக்கும்படியாகத்தான் உள்ளது. இருந்தாலும் சிலது ரொம்ப ஓவர்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment