நான் சுமாராக சதுரங்கம், அதான் ச்செஸ் விளையாடுவேன். எனது அண்ணன் தேசிய அளவில் சதுரங்கப் போட்டிகளில் கலந்து ஒரு சில பரிசுகளை வென்றிருக்கிறார். பில்டப் போதும்னு நெனைக்கிறேன்.
என்னதான் கணணி ச்செஸ் நல்லா வெளையாடும்னாலும்.... நா அதத் தோக்கடிக்க செமையான ஐடியா கண்டுபுடிச்சிட்டேன்.... அதான், கணணிக்கிட்ட அடிக்கடி தோத்துப்போற ஒங்கள மாதிரி ஆளுங்களுக்கு இனிமே கவலையே இல்லை.. சொடக்கு (சுடோக்கு இல்லை.. அது வேற வெளையாட்டு..) போட்டு நீங்க கணணிய ச்செஸ் ஆட்டத்தில தோக்கடிக்கலாம். உங்களுக்கு கெடைச்ச காய்கள்(பீசெஸ்) வெள்ளையா கருப்பா அது முக்கியமில்லை.. எது கெடைச்சாலும் நா சொல்லுறபடி நீங்க ஃ பாலோ பண்ணீங்கன்னா வெற்றி ஒங்களுக்குத்தான்.
உதாரணமா நீங்க வெள்ளை காய்கள உங்களுக்கும், கருப்பு காய்கள கணணிக்கும் ச்சூஸ் பண்ணதா ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம். மொதல்ல சாதரணமா அமெச்சூர் மாதிரியே ஒரு சில மூவ் பண்ண ஆரம்பிங்க.. அப்புறம் ச்சான்ஸ் எவ்ளோ சீக்கிரம் கெடைக்குதோ அவ்ளோ சீக்கிரம் உங்களோட குவீன (இராணி) தியாகம் பண்ணுங்க.. கணணி யோசிக்க ஆரம்பிக்கும்.. பின்ன யாராவது அவ்ளோ ஈசியா வேணுமின்னே 'சக்' (sack) பண்ணுவாங்களா... கணணி அப்படி கன்பியூஸ் ஆகும்போது அடுத்து பிஷப்,(மந்திரி) ரூக்(யானை), நைட்(குதிரை) அப்படீன்னு ரெண்டு மூனு பீஸ்களை காவு கொடுத்துடுங்க.. ஆனா ஜாக்கிரதை.... அதுக்குள்ள நீங்க தோத்துடக்கூடாது.... ஓரளவுக்கு நீங்க நெறைய கைகளை காவு கொடுத்துடணும்..
கிட்டத்தட்ட வெள்ளைக்காக ஆடுறவர் (நீங்கதாங்க..) தோக்கப் போற நேரம் வருதான்னு பாத்துக்கிட்டே இருக்கணும் (ரொம்ப கவனமா இருக்கணும்.. தோத்துடக் கூடாது)..... வந்துச்சின்னா உடனே நம்ம ஐடியாவ எடுத்து உட்டுட வேண்டியதுதான்.. அதேன்னவா..?
சட்டுன்னு, கணணி வெள்ளை காய்களுக்கும் நீங்க கருப்பு காய்களுக்கும், ஆடுற மாதிரி செட்டிங்க மாத்திடணும். அப்புறம் பாருங்க.. நீங்க தான் வின்னர்..
எப்படி நம்ம ஐடியா ? இதே பாணில ஒரு அம்பதுக்கும் தடவைக்கும் மேல கணணிய தோக்கடிச்சிருக்கேன், என்ன சொல்லுறீங்க என்னோட தெறமயப் பத்தி..?
ஆடும்போது நடுவுல, வெள்ளை - கருப்பு இண்டர்சேன்ஜ் ஆப்ஷன் உங்க கணணி ச்செஸ் சாஃப்ட்வர்ல இல்லியா ? பரவாயில்லை, நீங்க தோக்கக் கூடாது அதுதான, அப்ப கருப்பு வெள்ளை ரெண்டுக்குமே கணணியே (மெஷின்) விளையாடும்படி செய்துடுங்க.. நீங்க தோக்கவே மாட்டீங்க.. கணணி தோத்துடும்..
அந்த ஆப்ஷனும் இல்லியா.. பரவாயில்லை.. நீங்க தோக்குறா மாதிரி ஆயிட்டா, கணணிய ஷட் டவுன் பண்ணிடுங்க.. தோக்காம தப்பிச்சிடலாம்..
---------------------------------------
50 Comments (கருத்துரைகள்)
:
வெற்றிக் கோப்பையை பறித்துச் சென்றார் மாதவன்!
இதேபோல் கேரம்போர்ட், கில்லி, கோலி, பம்பரம் போன்ற விளையாட்டுகளில் சர்வதேச அளவில் வெற்றி பெற டிப்ஸ் தாங்க!
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!!! :)
//சட்டுன்னு, கணணி வெள்ளை காய்களுக்கும் நீங்க கருப்பு கைகளுக்கும் ஆடுற மாதிரி செட்டிங்க மாத்திடணும். அப்புறம் பாருங்க.. நீங்க தான் வின்னர்../
நீங்க உண்மைலேயே பெரிய அறிவாளி .. கண்டிப்பா எவ்ளோ பெரிய கம்புடரையும் தோற்கடிச்சிரலாம் ..
உங்களை நினச்சா கண்ணெல்லாம் கலங்குது வயிறெல்லாம் கலக்குது
@எஸ்.கே
இதே மாதிரியா ?
......
நல்லா யோசிச்சு சொல்லுங்க.. இதே மாதிரி ஐடியா வேணுமா ?
@karthikkumar
ஹி. ஹி..
@கோமாளி செல்வா
அதெல்லாம் தானா வருது..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அப்ப மறந்துடுங்க..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... உங்களை நினச்சா கண்ணெல்லாம் கலங்குது வயிறெல்லாம் கலக்குது //
Same blood.
என்னா ஒரு வில்லதனம்... :))
TERROR-PANDIYAN(VAS) said... [Reply] 11
என்னா ஒரு வில்லதனம்... :))
//
\நிமிடத்துக்கு ஒரு தரம் பீதில பேதியாகி பேரை மாற்றும் டெரர் வாழ்க
@ செல்வா
கண்டிப்பா எவ்ளோ பெரிய கம்புடரையும் தோற்கடிச்சிரலாம் ///
கம்ப்யுட்டர் ரொம்ப பெருசா கூட இருக்கா செல்வா... நான் எதோ டேபிளில் வைக்கிற மாதிரி இருக்கும்னு நெனச்சேன்....
வொய் பிளட்?
சேம் பிளட்...
@ரமேஷ்
//நிமிடத்துக்கு ஒரு தரம் பீதில பேதியாகி பேரை மாற்றும் டெரர் வாழ்க//
ஆட அடிக்கனும் முடிவு பண்ணிட்ட நான் எப்படி வேனும்னா வருவேன்... :)
:-)
நானும் இத்தனை நாள் செஸ் விளையாடி இருக்கேன் இந்த ஐடியா வே வரலை எப்படி மாதவன் சார் உங்களுக்கு மட்டும் இவ்வளவு அறிவு
டைட்டிலயும் Rybkaவையும் பாத்து நான் நிஜமாவே ஏதோ டிப்ஸ் கொடுக்கிறீங்கன்னு சந்தோஷ பட்டுட்டேன்..முழு பதிவையும் படிச்சு பாத்தப்புறம் தான் நியாபகம் வந்தது, நான் வந்தது மாதவனோட ப்ளாக்-குன்னு..
இந்தியன் கிரிக்கட் டீமுக்கு உங்களை ஆலோசகராக நியமிக்க பலமாக சிபாரிசு செய்கின்றேன்.
i want to play with chess seriusly, wanna play?
@மோகன் குமார்
சிவப்பா, திரவமா இருக்குமே.. அதுவா ?
@TERROR-PANDIYAN(VAS)
//வில்லதனம்.//
சினிமால ஹீரோக்கு சவாலா இருக்குமே அதுவா ?
@karthikkumar
//கம்ப்யுட்டர் ரொம்ப பெருசா கூட இருக்கா//
அதான.. செல்வா.. காதுல விழுதா.. ? பதில் சொல்லு.. கேக்குரோமில்ல..
@வெளங்காதவன்
//வொய் பிளட்?
சேம் பிளட்...//
ரொம்ப டயமாயிச்சின்னா.. கருப்பா கட்டியா ஆகிடுமே அதுவா ?
@Gopi Ramamoorthy
thanks.. :-)
@சௌந்தர்
//உங்களுக்கு மட்டும் இவ்வளவு அறிவு //
ஹி.. ஹி.. எப்படி.. தெரியலையே.. ?
@அனு
//நான் வந்தது மாதவனோட ப்ளாக்-குன்னு.. //
என்னோட பிளாகுக்கு வர்றது உங்களோட கடமை..
கடமைல (மெய்மறந்து) உணர்ச்சிவசப் படக் கூடாது, ஆமாம்..
@kggouthaman
//இந்தியன் கிரிக்கட் டீமுக்கு உங்களை ஆலோசகராக நியமிக்க பலமாக சிபாரிசு செய்கின்றேன். //
ஓகே.. ஓகே..நா ரெடி.. ஒரு வழி பண்ணிட்டுதான் மறுவேலை..
@ஷர்புதீன்
//i want to play with chess seriusly, wanna play //
If u want to play, you play.. "-)
நீங்க தோக்குறா மாதிரி ஆயிட்டா, கணணிய ஷட் டவுன் பண்ணிடுங்க.. தோக்காம தப்பிச்சிடலாம்..
---------------------------------------
.... Super idea tip from the Chess Champion!
@Chitra
//.... Super idea tip from the Chess Champion! //
Champion, me ? oh! thanks, sister..
தல,
நான் பதிவ படிக்கலை !!!! ஆனா கணினிய ஈசி யா வெல்ல முடியும் .,பாபி FISHER எண்டு கேம் விளையாடி ப்ராக்டிஸ் பண்ணு ..,போதும் ,,கணினி யாவது வெங்காயமாவது .,அடிச்சி தூள் கிளப்பலாம்
அட.. அட.. என்னமா யோசிக்குறாங்க..
எப்படி சார்?.. சும்மா பின்னிட்டீங்க
அண்ணே.... கோச்சிங் செண்டர் ஆரம்பிக்கலாமே...
அப்படியே எனக்கு ஒரு அப்ளிகேஷன் பாரம் கொடுங்க...
நல்ல ஐடியா..... ஃபாலோ பண்ணிடுவோம்!
ஹய்யோ ஹய்யோ கொல்றாரே..
ஆனா கலக்கல் ஐடியா தான் .. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுச்சு
@தில்லு முல்லு
அட அப்படியா.. டிரை பண்ணலாமே..!
ஏதோ என்னால முடிஞ்சது இவ்ளோதான்..
@Philosophy Prabhakaran
//அண்ணே.... கோச்சிங் செண்டர் ஆரம்பிக்கலாமே...
அப்படியே எனக்கு ஒரு அப்ளிகேஷன் பாரம் கொடுங்க... //
செஞ்சிட்டாப் போச்சு..
பி.பிக்கு ஒரு அப்ளிகேஷன் பார்சல்.
@ஸ்ரீராம்.
@சி.பி.செந்தில்குமார்
மிக்க நன்றி
நானும் ஏதோ சொல்ல வரீங்களோனு நம்பி வந்தேன்....வழ்க்கம் போல இதுவும் மொக்கைதானா! கடவுளே காப்பாத்து.....
@அருண் பிரசாத்
மொக்கைதான், நண்பரே..
ஆனாலும் நீங்க படிச்சிட்டு கண்டிப்பா சிரிச்சிருப்பீங்கனு நெனைக்கிறேன்.. சரியா ?
சுடோகுக்கு டிப்ஸ் எப்போ?
@middleclassmadhavi
அதுக்கு கணணி புரோகுரம் (ஹையர் லெவல் ) எழுதிக் கிட்டு இருக்கேன்.. வொர்கவுட் ஆனதும், சொல்லிடறேன்
செஸ் விளையாடும்போது அப்படி என்னதான் யோசிப்பாங்களோனு நான் யோசிச்சிருக்கேன். ஆனா இப்படியெல்லாம் யோசிப்பிங்கனு நான் யோசிக்கவே இல்ல.
சூப்பர்.
parattugal
@ஆதி மனிதன்
மத்தவங்க யோசிக்காதத யோசிச்சு சொல்லுறது எப்படீன்னு நா யோசிச்சுக் கிட்டே இருப்பேன்..
@thru
mikka nanri, nanbare.
//அந்த ஆப்ஷனும் இல்லியா.. பரவாயில்லை.. நீங்க தோக்குறா மாதிரி ஆயிட்டா, கணணிய ஷட் டவுன் பண்ணிடுங்க.. தோக்காம தப்பிச்சிடலாம்..//
குழந்தைகள் செய்கிற அழுகினி ஆட்டம் இது தான்.
என் பேரன் ஜெயித்துக் கொண்டே இருக்கத்தான் பிரியப் படுவான். தோற்கிறமாதிரி வந்தால் ஆட்டத்தை கலைத்து விடுவான்.
Post a Comment