அனைவருக்கு முதற்கண் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !
பொருளீட்டும் காரணமாக பிறந்த ஊர் விட்டு வேறு ஊரில் (நாடுகளில்) நம்மில் பலர் வசித்து வருகிறோம். சின்ன வயதில், பள்ளி, கல்லூரி நாட்களில் நாம், நமது சொந்த ஊரில் கொண்டாடிய கொண்டாட்டங்கள் மனதிலிருந்து நீங்காததாகும். அதான் இந்த மலரும் நினைவுகள்.
போகித் திருநாள் : தீய எண்ணங்களை கொளுத்துவதாக, பழைய பொருட்களை கொளுத்தி வீட்டினை சுத்தமாக வைத்து, எண்ணெய் நீராட்டம் கொண்டு ஆரம்பிப்போம், பொங்கல் திருநாட்கள் கொண்டாட்டத்தினை. இன்றையதினம் எங்கள் அன்னை செய்யும் 'போளி' எனும் இனிப்புவகை பலகாரம். சுத்தமான நெய்யும், சுண்டக் காய்ச்சிய பாலும் சேர்த்து சாப்பிட்டால், இது மிகவும் சுவையா இருக்கும். இதுதான் இன்றைய ஸ்பெஷல். (படம் உதவி, கூகிள் இமேஜ்.)
பொங்கல் திருநாள் :
ஏனோ. இன்று கொண்டாடும் முறையும் அன்று கொண்டாடிய முறையும் மனதில் மாறி மாறி வருகிறது. அன்று, பாரம்பரிய முறைப்படி, விறகு அடுப்பில் பொங்கல் பானை வைப்பார் எனது தாயார். நகர்புறத்தில் விறகு எங்கு கிடைக்கிறது, கிடைத்தாலும் விறகு அடுப்பில் வேலை செய்வதற்கு யாருக்கு பழக்கம் இருக்கிறது. இருக்கவே இருக்கிறது காஸ் அடுப்பு. ஹி.. ஹி.. நாங்களும் மாடர்ன்(!) தான்

பொங்கல் பானை வைத்து பொங்கல் செய்து இறைவனுக்கு பூஜை செய்து, இயற்கை வளங்களைத் தரும் சூரியன், பூமி முதலியவற்றிக்கு நன்றி செலுத்திய பின்னர்தான் எங்கள் வீட்டில் யாவரும் கரும்பின் சுவையறிவோம். அதற்கு முன்னர், அந்தந்த சீசனில் கரும்பு சுவைக்காமலிருப்பது எங்கள் குடும்ப வழக்கம். அதில் கூட, பெண்கள் பொங்கல் படையலிட்ட அன்றே கரும்பு சுவைக்க மாட்டார்கள். அடுத்த தினமான, 'கனுப் பொங்கல்' நன்நாளில், 'கனு' வைத்தப் பின்னரே கரும்பின் சுவை பார்ப்பர்.
கனுப் பொங்கல் திருநாள் :
மேலுள்ள படத்தில் இருப்பது போல் மஞ்சள் பயிரின் (பச்சை) இலைகளைப் தரையில் பரப்பி, அவற்றின் மேல் முந்தைய தினம் செய்த பொங்கல், மற்றும், வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிற அன்னங்களையும், மஞ்சள், இஞ்சி, கதளிபழம், கரும்புத் துண்டுகள் இவற்றோடு வெற்றிலை பாக்கும் வைத்து, இயற்கை தெய்வங்களை வழிபடுவது பாரம்பரிய வழக்கம். இவ்வாறு செய்வது, உடன் பிறந்த சகோதர்களின் நல்வாழ்விர்காகவே என்பது மரபு. உடன் பிறந்த சகோதரிகளுக்கு, சகோதர்கள், பணம், உடைகள் போன்ற பயன்படும் பொருட்களை தருவது வழக்கம். எங்கள் வீட்டில் மாடுகள் இல்லாததால், நாங்கள் அக்கம் பக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் 'மாடுகளுக்கு' பழம், காய், இலை, தழைகள் அளிப்போம். (அதான, மாட்டுப் பொங்கல் நாளுல 'மாடுகளை' கவனிக்கலேன்னா என்ன அர்த்தம் ? )
காணும் பொங்கல் :
மேற்சொன்ன முறையில் மூன்று தினங்களும் குடும்பத்தாருடன் ஒன்று கூடி கொண்டாடுவதால், மூன்று நாட்களுமே எங்களுக்கு 'காணும்' பொங்கல்தான். அதான் தனியாக இதற்கு நாள் ஒதுக்குவதில்லை நாங்கள். (எழுத மேட்டரு இல்லையின்னா எப்படிலாம் சமாளிக்க வேண்டி இருக்குது. )
மறுபடியும் உங்களனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் ! நன்றி.
---------------------------------------------------------------

10 Comments (கருத்துரைகள்)
:
எனக்கு தான் முதல் போளி.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
மாதவனுக்கு
மனமார்ந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
(இப்படி படிக்கட்டி எழுதினால் அது கவித....) ;-)
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
தங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!!
போகி, பொங்கல், கனுப்பொங்கல் வாழ்த்துகள்
இனிய மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
// எங்கள் வீட்டில் மாடுகள் இல்லாததால், நாங்கள் அக்கம் பக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் 'மாடுகளுக்கு' பழம், காய், இலை, தழைகள் அளிப்போம். (அதான, மாட்டுப் பொங்கல் நாளுல 'மாடுகளை' கவனிக்கலேன்னா என்ன அர்த்தம் ? ) //
ஹி ஹி ஹி , எங்க வீட்டுல மாடுகள் இருக்கு அண்ணா !!
Post a Comment