சென்ற டிசெம்பர் 13 ம் தேதி முதல் வலைச்சரத்துல நான் ஒரு வார கால ஆசிரியர் பொறுப்பு ஏற்று எழுதினது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். எனக்கு ரொம்ப ராசியான நம்பரு 13 .
- **** ^^^ 13 ம் தேதி தான் என்னோட கல்யாண நாள் (டிசெம்பர் அல்ல).
- **** , அக்டோபர் 13 ம் தேதி, பிரமொஷனுக்கான நேர்முகத் தேர்வு நடந்து பதவி உயர்வு கிடைத்தது.
- முக்கியமான அலுவலக அசைன்மென்ட் 13 மார்ச் **** ல ஒரே நாளுல வெற்றிகரமா முடிச்சேன்.
வலைச்சரத்துல நான் எழுதின வாரமான டிசெம்பர் 13 முதல் டிசெம்பர் 20 வரை வழக்கமா நா, பாலோ பண்ணுற பிலாகலாம் படிக்க முடியலை... என்னோட நண்பரு ஒருத்தரு , நா அவரோட பிலாக பாலோ பண்ணுறத நிப்பாட்டிடேனானு கேட்டாரு. அந்தளவுக்கு நா பிசியா இருந்தேன்.
முடிஞ்சவரை வலைச்சரத்துல எழுதின பதிவுக்குலாம் வந்த காமெண்டுகளுக்கு பதில் கமெண்டு போட டிரை பண்ணேன்.. இருந்தாலும் ரெண்டு மூனு பதிவத் தவிர எதுவும் 70 கமேன்டத் தாண்டலை..
எனக்கு முன்னாடி எழுதின பன்னிக்குட்டு ராமசாமி எப்படித்தான் எல்லா போஸ்டுலேயும் சளைக்காம பதில் எழுதினாரு, தெரியலை. அவரோட தேறமையே தனிதான்.
நன்மைகள் :
- பலதரப் பட்ட பதிவுகள செலெக்ட் பண்ணுறதுக்காக படிச்சேன்.
- என்னோட வலைப்பூவுல 10 பர்சென்ட் பாலோயர்ஸ் அதிகரிச்சாங்க..
தினமும், 'நெட்'டுல ரொம்ப நேரம் ஒக்காந்ததுனால.. வீட்டுல நல்லா திட்டு வாங்கினேன். இருந்தாலும் தங்ஸுகிட்ட "ஒரு வாரம்தான.. பிளீஸ்", போட்டு பெர்மிஷன் வாங்கினேன். அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டுலே NET பாக்க முடியாத கண்டிஷனல் பெர்மிஷன். ( ச்சே.. பிலாகுல எழுதுறதுக்கு சரக்கு இல்லாததுனால என்னலாம் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு..)
வலைப்பூ அனுபவத்தில், வித்தியாசமான நாட்களாகச் சென்றது அந்த வாரம்.
டிஸ்கி : **** நாலு இலக்க வருடத்திற்கு பதிலாக.
மாசம் , வருசம் முக்கியமில்லை.. தேதி.. தேதியை மையப் படுத்தவே அப்படி.. -- இதெப்படி ?
-----------------------------------------------------
47 Comments (கருத்துரைகள்)
:
உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் 13 அதிர்ஷ்டமில்லாததாக கருதினாலும் சீனா அந்த எண்னை அதிர்ஷ்டமானதாக கருதுகிறதாம்!
சில ஐரோப்பிய ஓட்டல்களில் 13ஆம் நம்பர் டேபிளே இருக்காதாம்!
13ஆம் நம்பர் பற்றிய பயத்திற்கு பெயர் Triskaidekaphobia
@எஸ்.கே
வலைச்சர சீனா (சார்) கூட 13 ராசியுள்ளதுதான் என, நினைத்து என்னை நியமித்தாரோ (13 ம் தேதி முதல்)
சில நாடுகளில், 13 ம் நம்பர் வீடுகளே கிடையாதாம். 12 க்கு அப்புறம் 12 A அப்புறம் 14
Friday, 13th ?
My marriage was on 13th Friday...
I love 13th Friday, with God's Grace.
எஸ்.கே said... [Reply] 3
13ஆம் நம்பர் பற்றிய பயத்திற்கு பெயர் Triskaidekaphobia/////////////////////
13 ஆம் நம்பரோடு சேர்த்து வெள்ளிகிழமையும் வந்தால் தான் பயம் .......
இதுல நிறைய டெக்னிக் வச்சிருக்காஙகப்பா.
சில நம்பிக்கைகள்:
13ஆம் தளம் இருப்பதில்லை.
பல ஏர்போர்ட்களில் 13வது கேட் இருப்பதில்லை
பல மருத்துவமனைகளில் 13ஆம் அறை இருப்பதில்லை.
இத்தாலியர்கள் தங்கள் தேசிய லாட்டரியில் 13ஆம் எண்னை தவிர்ப்பார்கள்.
இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரின் தெருக்களில் வீடுகள் 12, 12 1/2, 14 என்றே இருக்கும்.
பல நகரங்களில் 13வது தெரு 13வது அவென்யூ இருக்கது.
அப்பல்லோ 13 என்ற நிலவிற்கு அனுப்பட்ட விண்கலத்தின் பயணம் தோல்வியடைந்தது.
உங்கள் பெயரில் 13 எழுத்துக்கள் இருந்தால் அது கெட்ட அதிர்ஷ்டமாம்!
Jack the Ripper(சீரியல் கில்லர்), Charles Manson(கிரிமினல் கவிஞர்!), Jeffrey Dahmer(சீரியல்கில்லர்), Theodore Bundy(சீரியல் கில்லர்), Albert De Salvo (கொலையாளி) இவர்கள் பெயரில் 13 எழுத்துக்கள் உள்ளனவாம்!
//அஞ்சா சிங்கம் said... [Reply] 6
எஸ்.கே said... [Reply] 3
13ஆம் நம்பர் பற்றிய பயத்திற்கு பெயர் Triskaidekaphobia/////////////////////
13 ஆம் நம்பரோடு சேர்த்து வெள்ளிகிழமையும் வந்தால் தான் பயம் .......
//
நீங்க சொல்றது சரிதாங்க! ஆனா சிலர் வெறும் நம்பருக்கே பயப்படுவாங்க!
// ( ச்சே.. பிலாகுல எழுதுறதுக்கு சரக்கு இல்லாததுனால என்னலாம் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு..)/
ஹி ஹி , விடுங்க விடுங்க .. இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு ..
எஸ்.கே !! பதிமூணு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.. அட்டகாசம்.. ;-)
மாதவா பதிமூன்றாம் நம்பர் வீடு அப்படின்னு ஒரு பேய் படம் வந்ததா ஞாபகம். ;-) ;-)
பதிவுமா கருத்து இருக்கனும் யார் சொன்னா?? எல்லாம் ஜாலியா எழுதுங்க.. :))
(இப்படி கமெண்ட் போடுவேன்.. :) )
உலகத்துக்கே ராசி இல்லைன்னாலும் உங்களுக்கு மட்டும் ராசியா இருக்குது பார்த்தீங்களா..
(கல்யாணதேதியாச்சே.. மாத்திச்சொன்னா மாத்து விழும்கிறதுதானே உங்க பயம் :-))))
மாதவன் சார், ’நம்ப’ரை ரொம்ப ’நம்ப’றீங்க போல?
//TERROR-PANDIYAN(VAS) said... [Reply] 12
பதிவுமா கருத்து இருக்கனும் யார் சொன்னா?? எல்லாம் ஜாலியா எழுதுங்க.. :))
(இப்படி கமெண்ட் போடுவேன்.. :) )
//
இதுல எது கமெண்ட்டு மச்சி?
நாகராஜசோழன் MA said... [Reply] 15
//TERROR-PANDIYAN(VAS) said... [Reply] 12
பதிவுமா கருத்து இருக்கனும் யார் சொன்னா?? எல்லாம் ஜாலியா எழுதுங்க.. :))
(இப்படி கமெண்ட் போடுவேன்.. :) )
//
இதுல எது கமெண்ட்டு மச்சி?//////////
இது கூட தெரியலையா மாம்ஸ்? அதுல கமெண்ட்னு ஒரு வார்த்தை வருதுல....அதான் மாமு!
@அஞ்சா சிங்கம்
// 13 ஆம் நம்பரோடு சேர்த்து வெள்ளிகிழமையும் வந்தால் தான் பயம் .....//
இருந்தாலும் 13 மேலை நாடுகள்ல ராசியில்லன்னுதான் நெனைக்குறாங்கே..
thanks for ur visit & comment
@இனியவன்
இவ்ளோ ஷார்ப்பா சொன்னா எப்படி புரியும்..
விளக்கமா சொல்லுங்களே, இனியவனே..
@கோமாளி செல்வா
செல்வா, நீ சொல்லிட்டே இல்லை.. அப்புறம் எதுக்கு பீலிங்க்லாம்.. எல்லாத்தையும் மறந்தாச்சு..
@RVS
ஆமாம், RVS .. எஸ்.கே அதப் பத்தி தனிப் பதிவே போடலாம்..
அந்தப் படம் எனக்கும் ஞாபகம் இருக்கு..
@TERROR-PANDIYAN(VAS)
டெர்ரர் கமெண்டு போட்டாலே போதும்..
என்ன போட்டாருன்னு பாக்கவேணாம்..
@அமைதிச்சாரல்
ராசி -- ராசி இல்லை
இவை பொதுவானவை அல்ல.. ஒருத்தருக்கு இருப்பது அடுத்தவருக்கு எதிர் மாறாக இருப்பது இயற்கையின் நியதி..
@நாகராஜசோழன் MA
குட் ஜோக், நாகா..
@வைகை
சரியா பாயிண்டைப் புடுச்சிட்டீங்க..
அனுபவங்களை வைத்தே ஒரு பதிவா... பலே...அந்த ஒரு வாரத்துக்கு தங்கமணி தந்த தண்டனையின் விளைவுதான் நீண்ட நாள் நெட் தொடாத விரதமா...!
@ஸ்ரீராம்.
ஒரு வாரமில்லை.. ரெண்டு வாரம். ஹி.. ஹி..
உண்மையிலே எனது பெற்றோர், சகோதரக் குடும்பம் மற்றும், மனைவியின் பெற்றோர் ஒரு வார காலம் இங்கு வந்திருந்தனர். பிறகு ஒரு வாரம் நான், பெங்களூர், மணிப்பால், உடுப்பி சென்று வந்தேன்... ஆகையால்தான் வலைப்பூவிற்கு வர இயலவில்லை.
அண்ணன், கௌதமனின் முகவரி என்னிடம் இல்லை, இருந்திருந்தால் அவரை சந்தித்திருக்கலாம்.. (அவர் சென்னையில் இருக்கிறாரோ ./ இருந்தாரோ.. சங்கீத மார்கழியாச்சே !)
எழுத சரக்கில்லாமலேயே இவ்வளவு எழுதி இருக்கீங்களே. சரக்கு இருந்தா பின்னி எடுத்திருப்பீங்க இல்லியா?:)
@Lakshmi
ஹி.. ஹி.. நா கொஞ்சம் (!) வள.. வள..
வாழ்த்துக்கள்..வலைசரம் படிக்காமல் மிஸ் பண்ணிவிட்டேன்...
ஆக 13 ராசியான நெம்பர்னு சொல்லுறீங்க..ஓகே
வெள்ளிகிழமை யில் 13 வந்தால் அமெரிக்கர்கள்,ஜப்பானியர்கள்,இங்கிலாந்து நாட்டினர் நடுங்குவார்களாம்
ஏசுவின் கடைசி விஒருந்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 13 பேர் என்பதால் இந்த பயம் வந்திருக்கலாம் என்கிறார்கள்
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஏசுவின் கடைசி விஒருந்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 13 பேர் என்பதால் இந்த பயம் வந்திருக்கலாம் என்கிறார்கள்//
உண்மைதாங்க எல்லா மதத்திலும் இந்த எண்ணைப் பற்றிய சில நம்பிக்கைகள் இருக்கு!
நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்.
நான் எழுதிய வலைச்சரம் -- முடிந்தபோது படியுங்கள்...
13 ல நா ஒரு கொறையும் பாக்கல..
ஆளாளுக்கு இந்தக் கருத்து வேறுபடலாம்.... அது இயற்கை..
இன்ட்லில பதிமூனாவது ஓட்டு. :)
@ ஆர்.பி.சதீஷ்குமார் , எஸ்.கே
நம்ம ஊருல வண்டியோட பதிவு எண் கூட்டுத் தொகை எட்டு வந்தா யாரும் விரும்ப மாட்டாங்க.. -- ராசி இல்லன்னு ஒரு எண்ணம்.
ஆனா இந்தியாவுல குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, யு.பி -- இங்கலாம் அப்படி நெனைக்கலை.. (எனக்குத் தெரிந்தவரை)
@புவனேஸ்வரி ராமநாதன்
அட.. இது சூப்பர் கமெண்டு, மேடம்..
இந்த கமெண்ட் போடுற எனக்கும் வயசு 13 தான் ஹிஹி
13....? 13.....!
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அடே.. பொட்டப் புள்ளையா நீ..?
@பன்னிக்குட்டி ராம்சாமி
கேள்விக் குறியா?
ஆச்சர்யமா !
அந்த வாரத்தில் நிறைய பாலோயர்கள் அதிகரிச்சதை நானும் கவனிச்சேன்.
:-)
HAPPY NEW YEAR!!!
// இந்த வகையில நான் வலைச்சரத்துல 13 ம் தேதி முதல் எழுதினது ரொம்ப ராசியா உணர்ந்தேன். //
ஹி., ஹி., ஹி..!!
உங்களை வலைசரத்துல எழுத
ஊக்கம் கொடுத்த என் Birthday கூட - 13th April தான்
@மோகன் குமார்
உங்களையும் நல்லா கவனிசிட்டாப் போச்சு.. !
@வெங்கட்
உங்களோட பேருல 'தமிழ்' வருமா ?
13 - அதுவும் மத்த தேதி மாதிரி ஒண்னூ தான் - ம்ம் வெங்கட்டின் பொறந்த நாளும் 13 தானாம் - ம்ம்ம்ம் ஆமா இதை நீங்கள் இரண்டாவது நபராக வாசிக்கிறீர்கள் என ஒரு செய்தி வருகிறதே - ஆனா மறுமஒஇ 48 - இதுவும் 13 பண்ற வேலைதானா மாதவா
Post a Comment