அ(ன)ர்த்தமுள்ள கிரிக்கெட்

ஹி... ஹி.. உலகக் கோப்பை கிரிக்கெட் ஆரம்பிச்சிடிச்சி.. அதோட விளைவுதான் இந்த ப்   பதிவு.. ஏதோ என்னால முடிஞ்சது.. சில கிரிக்கெட் வார்த்தைகளுக்கு குறும்பான  அர்த்தங்கள்..

  1. point - புள்ளி 
  2. silly point  - விஷமப் புள்ளி 
  3. short leg - குட்டைக் கால்
  4. forward short leg - முன் குட்டைக் கால் 
  5. long leg -  யானைக் கால் (பெரிய காலுங்க அதான்) 
  6. square leg  - வர்க்கக்  கால் 
  7. fine leg  - செம காலு
  8. deep fine leg - ஆழமான செம காலு..   
  9. mid wicket  - நடு குச்சி 
  10. deep mid wicket  - ஆழ(மான) நடு குச்சி 
  11. cover  - மூடி
  12. deep cover   - ஆழமான மூடி 
  13. country - நாடு / தேசம்
  14. wicket keeper  - குச்சி (யை) வைத்திருப்பவர் / காப்பவர் (ஹி.. ஹி.. அப்புறம் என்னாத்துக்கு பந்து விக்கெட் மேல பட்டா அழுவாம கொண்டாடுறாரு ?)
  15. first slip  - முதல் வழுக்கல்
  16. second slip  - இரண்டாவது வழுக்கல் 
  17. thirdman - மூணாம் மனுஷன்
  18. gully   - கள்ளி(ப்பயல் )
  19. delivery - பிரசவம்
  20. good delivery - சுகப் பிரசவம்  
  21. full length delivery - முழு நீள பிரசவம் (ரொம்ப நேரம் ஆச்சு..)
  22. no ball - இல்லாத பந்து
  23. chainaman - சீனஆளு 
  24. swing - ஊஞ்சல்
  25. in -swing -  (வீட்டு ) உள் - ஊஞ்சல் 
  26. out -swing  - தோட்டத்து ஊஞ்சல் 
  27. wide - வெளிக்குத்து 
  28. square cut - வர்க்க வெட்டு (வர்க்கத்தையே வெட்டு -- பூண்டோட வெட்டு)
  29. french cut - பிரான்சு வெட்டு...
  30. striker -  அடியாளு
  31. all rounder  - அல்லாரும் சுத்துறவங்க.. 
  32. front   / back foot = முன்னடி  / பின்னடி 
  33. Googly   - கூகிளாண்டவர்..
  34. leg break - காலை (எலும்ப) உடை.
  35. leg cutter - காலை வெட்டுபவர்  
  36. late cut -  அப்பால வெட்டு
  37. Free 'hit ' -  இலவச கொசுமருந்து 
  38. extra - அதிகப்படி..
  39. Single - திருமணம் ஆகாதவர். 
  40. doosra - சின்னவீடு (ரெண்டாவது...)
  41. Umpire          - நாட்டாமை ( நன்றி எனது மச்சான்)
  42. Leg Umpire    -  குவாட்டர்(கால்) நாட்டாமை
  43. Umpire Review - நாட்டாமை தீர்ப்ப மாத்து..
  44. over - முடிஞ்சிடிச்சு..
  45. Bye - வர்ட்டா  

மிச்ச சொச்சம் இருந்தா பின்னூட்டத்துல அ(ன)ர்த்ததொட சொல்லுங்க..

நன்றி (படங்கள்)  -- http://www.cricketupdates.org/cricket-fielding-positions.html  மற்றும் கூகிள் தேடல்..  
========================= ====

முற்பகல் செய்யின்..

வார விடுமுறை.. ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் நண்பர் வீட்டிற்கு சென்று வர இரண்டு வாரங்களாக போட்ட திட்டம்.. இந்த முறை (20-02-2011) நடந்தேறியது..

இன்று கற்றுக் கொண்ட பாடம்...
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..."

காட்சி  - 1   (முற்பகல்)
நண்பர் வீட்டில் வாசற் படிகளுடன் பக்கத்தில் மோட்டார் சைக்கில் ஏற்றுவதற்கு சரிவு இருந்தது. எனது மூன்றரை வயது மகள், அந்த சரிவின் மீதேறி உள்ளே சென்றாள்.
அவளிடம் நான், "அதன் வழியாகச் சென்றாள் நீ, கீழே  விழுந்து விடுவாய்... அது பைக் செல்வதற்காக மட்டுமே. நாம் படிகள் மீது ஏறி செல்லவேண்டும்", என்றேன்.
"சரிப்பா", தலையாட்டிக் கொண்டே மகள் சொன்னாள். 

முற்பகல் அட்வைஸ் 
பிற்பகல்  (பல்ப் ?)


காட்சி  - 2 (பிற்பகல்)
வீட்டில் குளியலறையில், மகளுக்கு கால் கை சுத்தம் செய்யும் பொது...
மகள் : (மக்கில் (Mug) இருக்கும் கைப்பிடியை காண்பித்து) அப்பா இந்த மக்குல, எதுக்கு இந்த மாதிரி வெச்சிருக்காங்க இருக்கு ?
நான் : அதக் கையால பிடித்து தண்ணி எடுத்து ஊத்துறதுக்கு..
மகள் : அப்புறம் எதுக்குப்பா, நீ, சைடுல பிடிச்சிக்கிட்டு தண்ணி எடுக்குற ?

நாம் வாழ்க்கையில் பல விஷயங்களைச்  சரியாகச் செய்வதில்லை என்பதை எனக்கு நினைவு படுத்தப் பட்ட தினம் நேற்று, எனது மூன்றரை வயது மகள் மூலம்.

அருண், இம்சை பாபு எழுதியுள்ள 'பல்பு' சம்பந்தப் பட்ட பதிவுகளை படித்த முதல் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.. வேறென்ன 'விதி' சார். .'விதி'..
(ஹி.. ஹி.. பொண்ணு வாயால வாங்கிய பல்பு..)

===================================

கிரிக்கெட்டினால் ஏமாந்த அனுபவம்

வழக்கமா 'http://www.samachar.com' என்ற வலைதளத்தில் பெரும்பாலான செய்திகளின் லிங்க்கு இருக்கும், அதனை நான் பார்ப்பது வழக்கம். என்னைக் கவர்ந்த செய்தி ஏதாவது இருந்தால், அந்த லின்க்கை க்ளிக் பண்ணி படிப்பது வழக்கம். அந்த மாதிரி இன்னிக்கு என்னைக் கவர்ந்த தலைப்பு,
  "Imran Khan caught in a ladies compartment"
 
இம்ரான்கான் கிரிக்கெட்டர் ---  24 மணி நேர பெண்கள் கம்பார்ட்மென்ட்           

"அட.. இம்ரான் கான்.. கிரிக்கெட்டர்.. ஓஹோ.. வேல்டு கப்பு கிரிக்கெட் மேட்ச் நடக்கப் போகுது. அதுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டர் இம்ரான் கான் இந்தியா வந்திருக்காரு போல.... விளையாடுறதுல இருந்து ரிடையர் ஆனாலும், காசு சம்பாதிக்க கமேண்டேடர், அம்பயர்னு தொடரலாமே. இருந்தாலும் அவரு என்னாத்துக்கு டிரைணுல போகணும் ? சரி.. சரி.. எதுக்கோ போயிருக்காரு(!). தெரிஞ்சோ - தெரியாமலோ, அவர் லேடிஸ் கம்பார்ட்மென்டுல  எறிட்டாறு  போல..... ", இப்படிலாம் நெனைச்சுக் கிட்டு, மனசுல அவரை நல்லா திட்டிட்டு(லேடிஸ் கம்பார்ட்மென்டுல ஏறினதுக்குத்தான்)   லிங்கை க்ளிக் பண்ணி போயி பார்த்தா.. கீழே கொடுத்துள்ள போட்டோ தான் இருந்திச்சு.
ஆர்ராது ???????...... ஆமா இம்ரான்கானை எங்கே காணொம்..?

இந்த போட்டோல இருக்கிற 'இம்ரான்கான்' ஒரு திரைப்பட நடிகராம்.. அவரு நடிக்கற விளம்பர ஷூட்டிங்க்ல தான் இந்த மாதிரி லேடிஸ் கம்பார்ட்மென்ட் கூத்து  நடந்திச்சாம். 

எனக்கு 'ஹிந்தி' தெரியும்  - 'ஹிந்தி நடிகைங்க'(ஹி.. ஹி..) தெரியும். அதெல்லாம் மட்டும் தெரிஞ்சா போதாது. ஹிந்தி நடிகர்களையும் (அட்லீச்ட் பெயராவது) தெரிஞ்சிருந்தா தேவையில்லாமல் ஏமாந்திருக்க மாட்டேனோ? 

நா கற்பனை பண்ணதுக்கும், அந்த மேட்டருக்கும் இருந்த பொருத்தம், மார்க் டைலருக்கும் (ஆஸ்திரேலிய முன்னால் கிரிக்கெட் வீரர்) - தையல் மெஷினுக்கும் இருந்ததுபோலவே இருந்திச்சு..
 
நீதி : நியூஸ்காரங்க கூட(involantary) பல்பு தராங்க அதையும் (பல்புதான்) வாங்க  என்னைய மாதிரி ஆளுங்க இருக்காங்க.. ஹி.. ஹி.. 
==================================

நண்பரின் பயண அனுபவம்

நண்பர் வெங்கட் இங்க எழுதின மேட்டருக்கு, அருண்(சீனியர்,எனக்கு ஜூனியர்தான், எங்க குரூப்புல ரெண்டு அருண் இருக்காங்க அதான் ) அங்க பதில் பதிவு போடுறாரு.. பாத்துக்கிட்டு இருந்த எனக்கும் எதிர் தொடர் பதிவு எழுதத் தெரியாதா என்ன?.. அதான் இது..


மொரீஷியஸ் நண்பர் அருண் இந்திய விசிட்டுல அவரோட நெருங்கிய (!) உறவினர் கல்கத்தால இருக்குறதால அவர பாக்கப் போறதா கேள்விப்பட்டேன், உடனே அவருக்கு போன் பண்ணினேன்..

நான் : அருண்..  கல்கத்தா போறீங்களா, கேள்விப்பட்டேன்.. எப்ப ?

அருண் : நாளைக்கு, ஹவுரா மெயில்.

நான் : ஒகே.. வைசாக் (Vizag )  வர்றப்ப 1:20 ஆகிடும்.. ரெண்டுங்கெட்டான் நேரம்தான் .. இருந்தாலும் பரவாயில்லை.. கண்டிப்பா நா வந்து உங்களை வைசாக் ரயில் ஸ்டேஷன்ல மீட் பண்றேன்.

அருண் : ஹி.. ஹி.. நா அப்ப  ஸ்டேஷன்ல தான் (ரயிலுலதான்) இருப்பேன்.. யோசிச்சு சொல்லுங்க ஒங்களால கண்டிப்பா வரமுடியுமா, சேலம் மாதிரி ஆகிடாதே ?

நான் : உங்களைப் பாக்க நா, இது கூட செய்ய மாட்டேனா ?

அருண் : சரி நீங்க வந்தா, அதுவும் குடும்பத்தோட, கண்டிப்பா, ஃபேமிலி  ஸ்பெஷல் பிசாவும், ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீமும் வாங்கித் தர்றேன் என்னோட கோச் A /2

நான் : கரும்பு தின்னக் கூலியா.. குடும்பத்தோட வந்துடறேன்..

அடுத்தநாள் ரயிலில் ஏறிய சிறிது நேரத்திற்கு பிறகு...
அருண் (மனதிற்குள் மாதவன் சொன்னதை நினைத்து ) : ஹி.. ஹி.. ரெண்டுங்கெட்டான் நேரம்னு சொல்லுறாரு.. . கண்டிப்பா வர்றாராம்.. அதுவும் குடும்பத்தோட..  ஹா.. ஹா.. ஹா... சரி.. சரி.. தூங்கலாம் இப்போ..

அருண் தூங்கி முழிச்சுப் பாத்தப்ப.. மணி காலை 10 ஆகிடிச்சு..
அருண் (தனக்குள்) : "எ.சி கோச், அதான் வெளிச்சம் தெரியலை, நெனைச்சபடி மாதவன் 1 :20 க்கு வரலை.... செலவு மிச்சம்".

பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு ரெண்டு மூணு புத்தகம் படிச்சிட்டு.. பொழுது போகாம.. டயத்த போக்கிகிட்டு இருந்தாரு அருண். கிட்டத்தட்ட ரெண்டு மூணு மணி நேரத்துக்கப்புறம், பேன்ட்ரி சர்வர் கிட்ட,

அருண் : லஞ்ச் எப்போ கெடைக்கும் ?.

சர்வர் : சார் பத்து நிமிஷத்துல வைசாக் வந்துடும். அங்க லஞ்ச் தருவோம்.

அருண் (சர்வரிடம்) : என்னது.. வைசாக் இன்னும் வரலியா.. வண்டி 12 மணிநேரம்  லேட்டா போகுதா ?

சர்வர் : இல்லையே வண்டி ரைட் டைம் தான்  சார். மதியம் 1:20 தான் வைசாக் ரீச் ஆகும்.

அருண் : !@#$%^&*() ?
(வழக்கம்போல தனக்குள்) : அடப்பாவி மக்கா.. மத்தியானம் கூட உங்களுக்கு 'ரெண்டுங்கெட்டான்' டைமா ?

டிஸ்கி : அருண் பர்சை எடுத்துக் கொண்டு தயாராகிறார், மாதவனை ஆவலோடு(!) காண, வேறு வழியில்லாமல்...
======================================


நினைத்தேன் எழுதுகிறேன்-13-02-2011

முதலாவது மேட்டர்: 

நேற்று (பிப்ரவரி பன்னெண்டு) இந்திய நேரப்படி முன்னிரவு எட்டு மணி முதல், ஒன்பது மணி வரை ஜெயா தொலைக்காட்சியில் நல்லதொரு நிகழ்ச்சி கண்டு களித்தேன். 'சின்ன சின்ன ராகம்' என்பது அதன் பெயர். இந்நாளில், (அசிங்கமான) குத்தாட்டம், சினிமா பாட்டு, சினிமா, விஷயம் தவிர எந்த ஒரு  (நல்ல) கலை (!) நிகழ்ச்சியும் எந்த தொலைக்காட்சியில் பார்ப்பது அரிதான நிலையில் இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது. 


பள்ளி மாணவ மாணவியர் சுமார் பத்து பேருக்கு மேலே தமிழ், தெலுகு, சமஸ்க்ருத  சங்கீதமும், நாட்டுப் புறப் பாடல்களுடன் குழுவாக இனிமையாகப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு மன மகிழ்ச்சி தந்து வருகிறது. கடந்த ஒரு மாதாகாலமாக இந்த நிகழ்ச்சியை சனிக் கிழமைதோறும் பார்த்து வருகிறேன். 

இன்றைய நிகழ்ச்சியில் நன்றாகப் பாடிய மாணவியர்கள், வண்டலூர் விஷ்வ வித்யாலயாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நல்ல முறையில் பாடியதற்கும், அவர்களை தயார் செய்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள். 

இதைப் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தொலைகாட்சி நிறுவனங்களும், விளம்பர தாரர்களும் தொடந்து தந்து வந்தால், ஆரோக்கியமான சமுதாயம் நன்கு வளரும் என்று நான் நினைக்கிறேன். 

ஹி.. ஹி.. நா ரொம்ப லேட்டா இதப் பத்தி சொல்லுறேன் போல..பல மாசமா இந்த நிகழ்ச்சி நடந்து வருதாம்.... தங்க்ஸ் சொன்ன விஷயம். 

இரண்டாவது மேட்டர் :

பள்ளி மாணவர்களின் தேர்வு நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட்டு தேவையா..?  கடந்த மூன்று வருடங்களாக, ஐ.பி.எல் T-20 தரும் தொல்லைகள் போதாதென இந்த வருடம் இது வேறு சேர்ந்து கொண்டுள்ளது. இந்த மாதிரி கிரிக்கேட்டுகளை தேர்வு நேரமில்லாத நவம்பர், டிசம்பர், ஜனவரிக்குள் முடிக்கக் கூடாதா ? சம்பத்தப் பட்டவர்கள் யோசிக்க மாட்டார்களா..?

நானும் சின்ன வயதில் கிரிக்கெட்டு பார்த்து ரசித்தவந்தான்.. ஆனால் அப்போது கூட அளவாக.. எனது படிப்பு /அலுவல்களுக்கு இடைஞ்சல் வராதவாறு இருந்தது எனது ஈடுபாடு. இப்பதேல்லாம் கிரிக்கெட் மூலம் பணம்.. பணம்.. வேறோன்றுமில்லாத வியாபராமாகிவிட்டதால் அதன் மீதுள்ள ஈடுபாடு மிகவும் குறைந்துவிட்டது.


பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களே உஷார்.. கிரிக்கெட்டு ஆட்டங்கள் வருடம் தோறும் வரும்.. போகும்.. . உங்களது பொதுத் தேர்வு ஒருமுறை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறி அவர்களது படிப்புக்கு பங்கம் வராதவாறு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். (ஹி.. ஹி.. என்னோட பையன் இப்ப ரெண்டாவது படிக்கிறான்.. இன்னும் எட்டு வருசம் கழித்து அவன் பத்தாம் வகுப்பு படிப்பான்.. அப்ப கிரிக்கெட்டு உலக கோப்பை வருமோ ? -- )

இந்த வருடம் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் -பொதுத் தேர்வேழுதவிருக்கும், அனைத்து மாணவ மாணவிகளுக்கும், நல்ல முறையில் தயார் செய்து தேர்வெழுதி சிறந்த மதிப்பெண்கள் வாங்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

உபரி.. : அப்புறம்..  பிப்ரவரி 14 , வாலண்டைன் டெ.. , அந்த நாளிற்கான சரியான அர்த்தத்தினை நண்பர் 'ஆதி மனிதன்' அவரது வலைப்பூவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்... நேரம் கெடைச்சா போயி படிச்சிட்டு வாங்க.. நன்றி..
+++++++++++++++++++++++++++++++++++++++++++

விடைகள் - மொக்கைக் கேள்விகளுக்கு

என்னுடைய முந்தைய பதிவில்  ஆறு கேள்விகள் கேட்டிருந்தேன்.... நண்பர்கள் கண்டு பிடித்துச் சொன்ன  விடைகளையும் பிரசுரம் செய்துள்ளேன். எனினும் இங்கும் நான் நினைத்த விடைகளை தந்துள்ளேன். கேள்விகள் இருக்கின்ற முந்தைய பதிவையும் படித்து விட்டு மேற்கொண்டு தொடரவும். இங்கு விடைகள் மட்டும் தரப்பட்டுள்ளது..

1) 'மஞ்சு' --  வீட்டில் அழைக்கும் பெயர்..  'மாலா' அவளது பள்ளிக்கூட சான்றிதழில் இருக்கும் பெயர். -- இருவருமே ஒருவர் தான். சுந்தரும் ஒருவர்தான்.

2 ) o,t,t,f,f,s, s , _ , _, _ , e  --> 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 இவைகளின் ஆங்கிலப் பெயர்களின் முதலெழுத்து மட்டும். எனவே விடை   'e', 'n', 't'.

3) இதற்கு ரயில்வேத் துறைதான் சரியான பதில் சொல்ல முடியும். குறும்பாக நான் ஊகித்த வாய்ப்புக்கள், கீழே படம் வடிவில், கொடுத்துள்ளேன். அதாவது இரண்டு படங்களிலும் 'அகமதாபாத் - வாபி' இருப்புப் பாதை சற்று (1 கி.மீ) தூரம் அதிகம். வாபி, அகமதாபாத்ல ஒரு பக்க பிளாட்பாரம் அரை கி.மீ அதிகமோ.. அல்லது.. வாபில ஒரு பாக்க பிளாட்பாரம் 1 கி.மீ (நம்ப முடிலையாள) அதிகமோ ?

4) "No 'one' Under stands" (no-one undersands)

5) 20 Horses have Forty -fore legs -- இருபது குதிரைகளுக்கு நாற்பது முன்னங்கால்கள்  -- சரிதானே..

6) 60 ஆப்பிள்கள் --  60 sick soldiers ( நோயடைந்த வீர்கள்) 
                             --  60 sikhs soldiers (சீக்கிய வீரர்கள்)

சரியாக விடைகளைச் சொன்ன அனவருக்கும் பாராட்டும் நன்றியும்
படித்தும், பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
==========================
  


ஜோக்கான கடிகள்..

1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்..
             ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..?

2) கோடிட்ட (மூன்று) இடங்களை நிரப்பவும்.
                  o,t,t,f,f,s, s , _ , _, _ , e

3) வாபி என்ற ஊரிலிருந்து, அகமதாபாத் இந்திய ரயில்வே அட்டவணைப் படி 321 கி.மி.  (12009 சதாப்தி எக்ஸ்ப்ரெஸ்.) அதே அட்டவணையில் அகமதாபாத் என்ற ஊரிலிருந்து, வாபி 322 கி.மி. (12010 சதாப்தி எக்ஸ்ப்ரெஸ்.)
             ------------- இதெப்படி சாத்தியமாக இருக்கலாம் ?
4) கீழே வருவது அர்த்தமுள்ள ஆங்கில வாக்கியமாகும், கண்டு பிடிக்க முடிகிறதா ?
   STANDS
    0_23456789

என்னவோ தெரியலை.. ஆங்கிலம் சார்ந்த கேள்வியாவே அமையுது.. (சொந்தமா யோசிச்சு கேள்வி கேக்காம, கேள்வியக்கூட காப்பி யடிச்சா அப்படித்தான்). அதுக்காக கேள்வி ஆங்கிலத்துல இருந்தாலும்.. தமிழ் வலைமனையில தமிழ்ல எழுதினாத்தான் நல்லா இருக்கும்.... அதுனால.. கீழே இரண்டு கேள்விகள்.. அமிழ்தினும் இனிய தமிழில் எழுத்துகளில்...


5) ட்வென்டி ஹார்செஸ் ஹாவ் ஒன்லி ஃபார்டிஃபோர் லெக்ஸ் (legs ).  எந்த குதிரையும் நொண்டி அல்ல. இது எப்படி சாத்தியம் ?

6) அறுபது ஆப்பிள்கள் இருக்கிறது.... எல்லோருக்கும் சமமாக ஆனால் வெட்டாமல் பரிந்தளிக்க வேண்டும்.. யாருக்கா, ஃபார் சிக்ஸ்டி சிக்ஸ் சோல்ஜெர்ஸ்

டிஸ்கி : நாங்களும் வித்தியாசமா யோசிச்சு கடிப்போமில்ல..
விடைகள் 'கடி'னமானது அல்ல சற்று கடியாக இருக்கும்.....
================================

எனக்குப் பிடிச்ச 18+

திருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள்.
( மறக்காம டிஸ்கியப் படிங்க.. !)
  1. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
  2. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார். 
  3. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 
  4. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின் 
  5. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 
  6. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று. 
  7. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
  8. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.  
  9. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.
  10. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு
  11. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனாள்  பவர்க்கு. 
  12. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
  13. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல். 
  14. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு.
  15. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று. 
  16. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும். 
  17. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
  18. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள. 
  19. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.
  20. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும். (ஹி.. ஹி.. இது உண்மையிலேயே 18 + தான் )
டிஸ்கி - 1 : எல்லாரும் 18 + போடுறாங்க.. அதான் நானும்  இப்படி..
பத்து குறள்தான் சொல்லுறதாதான் இருந்தேன்.. ஹிட்ஸ் வேணும்னுதான் பதினெட்டு ப்ளஸ் போட்டுட்டேன்..


டிஸ்கி  - 2 : இந்தப் பதிவினை தொடர நண்பர் டெரர் பாண்டியனை அன்புடன் அழைக்கிறேன்.. அவர் தனக்குப் பிடித்த டாப் 1330 குறள்களை  எழுதுவார்.

நன்றி : http://kural.muthu.org/
===========================================

புத்திசாலி நன்பேண்டா, நானு !


எனக்கு ஒரு பிரண்டு இருக்கான் பாருங்க.. ரொம்ப குளோஸ்..  என்ன கஷ்டம் வந்தாலும் உடனே உதவிக்கு வருவான்... நானும் அவனுக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடிடுவேன். ச்சே.. ச்சே.. நீங்க நெனைக்கிறாமாதிரி இல்லை.. அவனுக்கு உதவி செய்யத்தான் ஓடிப் போவேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற நட்பு இருக்கே.. அது திருவள்ளுவர் சொன்ன,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு                

என்ற திருக்குறளுக்கு  ஏத்த மாதிரி. என்னமா சொல்லி இருக்காரு திருவள்ளுவர் ! தெய்வப் புலவராச்சே.. தப்பா சொல்லுவாரா ? நாமதான் பல நல்ல விஷயத்தை தப்புத் தப்பா புரிஞ்சிக்கிட்டு, ஏடா கூடமா செஞ்சிடுறோம்.

எனக்கு ஒருதடவை எதிர்பாராத பணத் தேவை.. பிரேண்டுகிட்ட சொன்னா  உடனே அரேன்ஜ் பண்ணிடிவான்னு போன் செஞ்சு பாத்தேன். 'அவரு' (ஷ்.. ஷ்.. ரெஸ்பெக்டு )  முக்கியமான மீட்டிங் - வெளியூருக்கு போயிருக்காரு, நாந்தான் மறந்திட்டேன், போன் சுவிச் ஆஃப் பண்ணி இருந்திச்சு.. எப்படியாவது அவனுக்கு சொல்லிட்டா, ஆன்லைன் மூலம் என்னோட அக்கவுண்டுக்கு பணத்த அனுப்பிடுவான், நா உடனே எ.டி.எம் மூலமா பணத்த எடுத்து யூஸ் பண்ணிப்பேன். இந்த மாதிரி பல தடவ ஆன்லைன்ல நா அவனுகிட்டேயிருந்து  பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்..  ரொம்ப சகஜம். ஆனா, அன்னிக்கின்னு பாத்து தொரை ரொம்ப பிசியா இருந்தாரு போல.. இருக்காதா பின்ன பெரிய பெரிய பிசினஸ் மாக்னேட்லாம் அட்டென்ட் பண்ணுற மீட்டிங் ஆச்சே....
அப்பத்தாங்க என்னோட புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சு.. அட.. நல்ல ஐடியா..  இண்டர்நெட்டுல, என்னோட ஆன்லைன் பேங்க்  அக்கவுன்ட்ட ஓபன் செஞ்சு தேர்டு பார்டி கேஷ் டிரான்சாக்ஷனுக்குப் போயி பிரெண்டோட அக்கவுன்ட ச்சூஸ் பண்ணேன். அவனுக்கு நா கூட ரெண்டு மூணு தடவ பணம் போட்ருக்கேனே அந்த பணத்த அவசரத்துக்கு எடுத்தா அவன் தப்பாவா நெனைக்க போறான் ? நீங்க கேக்குறது புரியுது. நா, அவனோட அக்கவுண்டுல போட்ட பணத்த எப்படி திரும்ப எடுக்குறதா ? கணக்கு பாடத்துல நூத்துக்கு நூறு எடுத்தவனாச்சே நானு (!) ,எனக்குத் தெரியாதா என்ன ? அது  ரொம்ப சிம்பிள்.

என்னோட அக்கவுண்டுலேருந்து -25000 ( மைனஸ் 25000 ) ரூபாய் அவனோட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினா, அவன் எனக்கு 25000 ரூபாய் கொடுத்த அர்த்தம் தான ? 

சரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தாங்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி !!! 
=================================