ஜாலி டைம் பாஸ் - 1

கேள்விக்கென்ன பதில் ?
கேள்விகள் :
  1. தமிழ் நாட்டுல முக்கியமான ஊரான திருச்சிராப்பள்ளில இது கெடையாது.. ஆனா அதனைச் சுற்றி  இருக்குற பெரும்பாலான ஊருலலாம்  இது இருக்கும் ..  - அது என்ன ?
  2. இந்த / நம்ம உலகத்துல பிறந்த அனைத்து மனுசங்களும், இந்த வாகனத்துல பயணம் செய்யாம இருக்க முடியாது.. --  எந்த வாகனம் ?
  3. ஒரு மனைவி தனது கணவனுக்கு காட்டாத விஷயம் என்னவாக இருக்கும் ?
  4. ஒரு குட்டி யானை தப்பித் தவறி ஒரு மரத்துல ஏறிடிச்சாம் . அது கீழ வர்றதுக்கு சுலபமான வழி என்ன ?
  5. பூனைக்கு பிடிச்ச பொழுதுபோக்கு என்ன ?
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
வடைகள்  சாரி.. விடைகள்.. 
  1. திருச்சிரோடு
  2. பூமி  ( சூரியன சுத்தறோமே.. . )
  3. விதவைக்கோலம்
  4. இலை மேல உக்காந்து வெயிட் பண்ணா.. இலையுதிர் காலத்துல இலையோட கீழ வந்திடலாம். 
  5. சங்கீதம் -- அதாங்க -- meow-sic (music)
 ===============================


28 Comments (கருத்துரைகள்)
:

மங்குனி அமைச்சர் said... [Reply]

yaaro kulanthai intha blogkka heg panni vittathu....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்

ஆமாம் மங்கு.. கேள்விலாம் ரொம்ப அறிவு பூர்வமா இருக்கு..

செல்வா said... [Reply]

எனக்கு நாலாவது கேள்வியும் அதற்கான பதிலும்தான் ரொம்ப பிடிச்சிருக்கு .. ஹி ஹி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

நாலாவதோட சரியா.. ?
இதுக்குத்தான் அஞ்சாவது வரைக்குமாவது படிச்சிருக்கணும்..

RVS said... [Reply]

முடியல.... ;-)

CS. Mohan Kumar said... [Reply]

மத்தவங்களை பதில் சொல்ல விட்டுருக்கலாம்ல

பெசொவி said... [Reply]

மாத்தி யோசி?
நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா...............முடியல!

மாலுமி said... [Reply]

சங்கீதம் -- அதாங்க -- meow-sic (music)/////////
மியாவ்.... மியாவ்...மியாவ் .....

பாலா said... [Reply]

இது ஐக்யூவா அல்லது கடியா?
எப்படியோ நல்லா இருக்கு.

A.R.ராஜகோபாலன் said... [Reply]

மன்னையின் மைந்தன் மாதவனுக்கு மட்டுமே உரித்தான ஏழாம் சுவை
(எப்படித்தான் யோசிக்கிறிங்களோ ??????)நான் அழுதுடுவேன் .........

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS

சாரி பாஸ்.. என்னால இந்தளவுக்குத்தான் முடியும்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

பதில்லதான் காமெடியே இருக்குனு சேர்த்துட்டேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெசொவி

ஆர்.வி.எஸ் அவர்களுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மாலுமி

கப்பல்ல யாருடா பூனையா விட்டது..?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பாலா
ஐக்கூவா .. அப்படீன்னா ?

நமக்குத் தெரிஞ்சது 'கடி'தான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.RAJAGOPALAN

ம்ம்..
ஆனா ஏழாம் சுவை !
அட.. எட்டாவது உலக அதிசயம்,
அறுபத்தி நாலாவது நாயன்மார்
அறுபத்தி அஞ்சாவது கலை ----- இது மாதிரியா ?.

வெங்கட் said... [Reply]

// ஒரு குட்டி யானை தப்பித் தவறி
ஒரு மரத்துல ஏறிடிச்சாம் . அது கீழ
வர்றதுக்கு சுலபமான வழி என்ன ? //

// இலை மேல உக்காந்து வெயிட் பண்ணா..
இலையுதிர் காலத்துல இலையோட கீழ
வந்திடலாம். //

அந்த குட்டி யானை மரத்துல இருந்து
இறங்கும் போது.., நீங்க அந்த மரத்துக்கு
கீழே நின்னு வேடிக்கை பாத்துட்டு
இருக்கணுமாம்..

செம ஜாலியா இருக்கும் - எங்களுக்கு..!!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நல்ல கேள்விகள் – பதில்களும்…. தொடரட்டும் நண்பரே.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

ஆமாம்.. என்னைய மாதிரி ஸ்ட்ராங்கான.. ஹெல்த்தான ஆசாமி, விழப் போற ஆணைக் குட்டிய கேட்ச் புடிச்சு.. மெதுவா தரையில விடணும்.. இல்லேன்னா அந்த குட்டிக்கு தரையில மோதி அடி பட்டுடுமே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்

ஹி.. ஹி.. நன்றி நண்பரே..

குறையொன்றுமில்லை. said... [Reply]

ஹா, ஹா, ஹா. இன்னும் சிரிச்சு முடிக்கலீங்க.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Lakshmi

நன்றி...

middleclassmadhavi said... [Reply]

ஜாலி டைம் பாஸ்!

Gayathri said... [Reply]

eppadi ippadilam yosikurenga..onnu kuda naan kandu pidikala

சாய்ராம் கோபாலன் said... [Reply]

1 is hillarious

3 is too much !!

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி,
மாதவி,
காயத்ரி,
சாய்..

Yaathoramani.blogspot.com said... [Reply]

ஒன்றைக்கூட அனுமானிக்க முடியல
ஆனாலும் பதிலைப் படித்ததும்
ரசிக்காமலும் இருக்க முடியல
(ஒன்றை தவிர)
அடுத்த டைம் பாஸை ஆவலுடன் எதிர்பார்த்து...

ஸ்ரீராம். said... [Reply]

:))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...