கிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி?) வழி.

ஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல  ? (அட.. ஃபீல் பன்னினோம்பா .)

டெண்டுல்கர் செஞ்சுரி அடிச்சும் நாம தோத்துப் போயிட்டோம். டெண்டுல்கர் 100 க்கு மேல அடிச்சாலும் இந்திய 13 மேட்சுல இதுவரைக்கும் தோத்திருக்காம்(தோல்வி). நம்ம க்ரிக்-இன்ஃபோ புள்ளி-குரு (ஸ்டாட்ஸ் -குரு) சொல்லுறாரு.

அதுக்காக டெண்டுல்கர் செஞ்சுரி அடிக்க வேணாம்னு சொல்லுறது நல்லா இல்லை. யோசிச்சேன்.. யோசிச்சேன்.. 

டெண்டுல்கர் செஞ்சுரி அடிக்கணும்.. ஆனா இந்தியாவும் ஜெயிக்கணும்..  ம்ம் என்ன பண்ணலாம்..?

நம்ம யுவராஜ் அரை சதம் போட்டு இந்தியா இது வரைக்கும் பெரும்பாலான மேட்ச்சு  ஜெயிச்சிருக்கு   (இது கூட ஸ்டாட்ஸ் -குரு சொன்னதுதான்). (வெற்றி)

ம்ம்.. ஆனாலும் பாருங்க.. யுவராஜ் அரை சதம் போட்டும், டெண்டுல்கர் செஞ்சுரி அடிச்சதால இந்திய-இங்கிலாந்து (27-02 -2011) மேச்சு 'டை' (வெற்றி-தோல்வியின்றி) ஆகிடிச்சு.
டெண்டுல்கர் 100 + யுவராஜ் 50 = தோல்வி + வெற்றி  = 'டை'
 (மைன்ட் வாய்ஸ் : எலேய் இது எல்லாருக்கும் நல்லாவே தெரியும்..)

சடார்னு எனக்கு ஒரு ஐடியா..? இப்படி நடந்தா என்னா ?

ஒரே மேட்சுல டெண்டுல்கர் சதம் அடிச்சும், யுவராஜ் ரெண்டு அரை சதம் கிராஸ் பண்ணா, அதாங்க செஞ்சுரி போட்டா,  இந்தியாவுக்கு வெற்றிதான ?

100 + 50 + 50 = தோல்வி + வெற்றி + வெற்றி = வெற்றி ?
அட நம்ம மேதமடிக்ஸ் நாலேட்ஜு இந்திய டீம் ஜெயிக்குறதுக்குக் கூட உதவும் போல இருக்கே ? வாட்ட-ன  ஐடியா !

டிஸ்கி : யாருப்பா அது.. அதுக்குள்ளே தோனிக்கு டயல் பண்றது ? நம்ம வெங்கட்டா ?
==================================

15 Comments (கருத்துரைகள்)
:

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

பாவம் தோனி....

செல்வா said... [Reply]

என்னே ஒரு அறிவுத்திறமை .. உங்கள் அறிவுத் திறம் கண்டு புல்லரித்துப் போகிறேன் ..

சக்தி கல்வி மையம் said... [Reply]

நல்லாதான் கணக்கு போடரீங்க...

CS. Mohan Kumar said... [Reply]

நல்லா போடுறீங்க கணக்கு ..

வைகை said... [Reply]

எங்கிட்ட தீபிகா படுகோனே(?) நம்பர்தான் இருக்கு :))

ஸ்ரீராம். said... [Reply]

கணக்கு என்னமோ நல்லா தான் இருக்கு. ஆனால் தோனி நிறைய தப்பு செஞ்சிட்டு (பதானை முன்னால் இறக்கி, யுவராஜை முன்னால இறக்கி, தானும் சரியா விளையாடாம பௌலிங் லயும் சரியா யூஸ் செய்யாம...) ஆனால் பேட்ஸ்மேன் மேல தப்பு சொன்னது தப்பு...

RVS said... [Reply]

உன் கணக்கிற்கு இந்த பாண்டிய நாடே அடிமை.... ;-))))

எஸ்.கே said... [Reply]

என்னது புள்ளி குருவா? உங்க தமிழ்ப்படுத்தலுக்கு அளவே இல்லையா:-))))

எஸ்.கே said... [Reply]

//
டிஸ்கி : யாருப்பா அது.. அதுக்குள்ளே தோனிக்கு டயல் பண்றது ? நம்ம வெங்கட்டா ?
//

எப்பவும் தோனிதான் வெங்கட்டுக்கு போன் பண்ணுவார். அப்பத்தான் அவர் ஆலோசனை சொல்வார். குருவை தேடித்தான் சிஷ்யன் வருவார். சிஷ்யனை தேடி குரு போக மாட்டார்!

எஸ்.கே said... [Reply]

உங்க ஐடியா ரொம்ப நல்லாயிருக்கு!

Anonymous said... [Reply]

அட நம்ம மேதமடிக்ஸ் நாலேட்ஜு இந்திய டீம் ஜெயிக்குறதுக்குக் கூட உதவும் போல இருக்கே ? வாட்ட-ன ஐடியா !//
என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை..ஹஹாஹா

R. Gopi said... [Reply]

உங்களுக்குக் கணக்கு சொல்லிக் குடுத்தவரை நாங்க பாக்கணுமே:-)

வெங்கட் said... [Reply]

@ கோபி.,

// உங்களுக்குக் கணக்கு சொல்லிக்
குடுத்தவரை நாங்க பாக்கணுமே:-) //

அவர் தான் இவருக்கு கணக்கு
சொல்லி குடுத்துட்டு இருக்கும்போதே
BP எகிறி., ஹார்ட் அட்டாக் வந்து.......
பாவம் அவர்..!

CS. Mohan Kumar said... [Reply]

இப்போதெல்லாம் கம்மேண்டுகளுக்கு பதில் சொல்வதில்லையா? ரைட்டு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

ஓரளவிற்கு வேலை பளு காரணமாக பதில் சொல்ல முடிவதில்லை..
முடிந்தவரை இனி சொல்லவதற்கு முயலுகிறேன். நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...