மாறுதிசை - தொடர் பதிவு.

என்னை இந்த தலைப்பின் மூலம் தொடர் பதிவிற்கு அழைத்தவர்(கள்) 'எங்கள்' பிளாக்..
அவர்(கள்), 'கற்பனை - தனித்தன்மை' போன்ற திறமைகளை 'எங்கள்',்றும்  'engalcreation' ஆகிய வலைப்பூக்கள் மூலம் ஆற்றிவரும் பணிகள் எண்ணற்றவை. அதே போன்ற திறமையை காட்டுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு என்ன சொல்லி நன்றி தெரிவிப்பது எனத் தெரியவில்லை.


"இந்த உலகம்(பூமி மட்டும்) சுற்றும் திசையில இருந்து மாறி எதிர் திசையில் சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் ?"

'எங்கள்' சொன்னவை, நினைவில்  கொள்க : ஆரம்பப் பள்ளி நாட்களில் நமக்குக் கிடைத்த பாடம், காலையில் நாம் சூரியனை நோக்கி நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு. இதன் படி பார்த்தால், இதுநாள் வரை வடக்காக அறியப்பட்ட திசை தெற்கு ஆகிவிடும். தெற்கு என்று இவ்வளவு நாள் அறியப்பட்ட திசை வடக்கு ஆகிவிடும். எனவே நானும் அதே வழியில் பயணம் செய்கிறேன்.

என் கற்பனை(?) குதிரையை தட்டி எழுப்பியதன் விளைவுகள் கீழே..
 
  1. தற்பொழுதுள்ள உலக வரைபடங்கள்(world maps) நமது மனதில் நன்றாக பதிந்துள்ளத்தால், அதனை தலைகீழாக மாற்றம் செய்யாமல், வரைபடங்களுடன் மேற்கண்ட குறியீடு அச்சிட வேண்டும்.
  2. 'திசைமானி (compass)' காட்டும் அம்புக்குறி முனையில் 'S' என்று திருத்தி எழுதப் பட வேண்டும்.
  3. North pole, South Pole ஆகும் ( South pole, North pole ஆகும்)
  4. விஞ்ஞான ரீதியாக, 'தெற்கே' தலை வைத்து படுக்க வேண்டாமென சொல்லப்படும்.
  5. 'தை' முதல் 'ஆனி' வரை தக்ஷிணாயனமாகவும், 'ஆடி' முதல் 'மார்கழி' வரை உத்தராயனமாகவும்  மாற்றப்படும்.
  6. 'தென்குமரி', 'வடகுமரி' என பெயர் மற்றம் செய்யப்படும்.
  7. இந்திய இருப்புப்பாதை மண்டலங்களும் (மத்திய மண்டலம் தவிர) பெயர் மாற்றங்கள் செய்யயப்படும். (உதாரணம் -- 'வடக்கு ரயில்' மண்டலத்தின் தலைமையகம் சென்னையாக மாறும்.)
  8. கிழக்குத்  தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலையாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்  தொடர்ச்சி மலையாகவும் மாறிவிடும்.
  9. சென்னையில் 'சூரிய நெருப்புப் பந்து' கடலினுள் அமிழ்வதையும், அதே 'நெருப்புப் பந்து',  கடல்-தண்ணீர் உள்ளிருந்து எழும்புவதை மும்பையிலும் காணலாம். (கன்யாக்குமரியில், வழக்கம்போல், இரண்டினையும் காணலாம்..)
  10. நாமெல்லாம், மேற்கிந்தியர்கள் என அழைக்கப் படுவோம்.

இன்னும் பல சொல்லலாம்.. மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், இதனோடு நிறுத்துவதுதான் நல்லது என நினைக்கிறேன். மிக்க நன்றி.

இதனை தொடர, நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்.
  1. பெயர் சொல்ல விருப்பமில்லை,
  2. சித்ரா

7 Comments (கருத்துரைகள்)
:

ப்ரியமுடன் வசந்த் said... [Reply]

நாமெல்லாம், மேற்கிந்தியர்கள் என அழைக்கப் படுவோம்.

ரொம்பவே ரசிச்சேன் பாஸ்

அட்டகாசம்...

CS. Mohan Kumar said... [Reply]

அலுவலகமோ, வீடோ உங்கள் ப்ளாக் உள்ளேயே போக முடியலை.. Dashboard-ல் புது பதிவு வந்தது தெரிகிறது. உள்ளே வந்து படிக்க முடியலை. ஏன் என தெரியலை. அதனால் தான் உங்கள் ப்ளாக் பக்கம் வரலை தவறாக எண்ண வேண்டாம்

எங்கள் said... [Reply]

நன்றாக உள்ளது. நீங்கள் அழைத்திருப்பவர்களும் நல்ல செலக்ஷன்.

Ananya Mahadevan said... [Reply]

:)

Chitra said... [Reply]

உலக திசை மாறுவதற்குள், நான் ஒரு டூர் போயிட்டு வந்திடுறேன்.... ஒரு ரெண்டு வாரம் கழித்து எழுதுகிறேன்.... சரியா?
நான் வந்து எழுதுறேன்..... "கிழக்கே உதிக்கிற சூரியன், மேற்கே உதிக்கிறதுக்குள் வந்திடுறேன்....."

பெசொவி said... [Reply]

நல்ல பதிவு, அழைப்புக்கு நன்றி, முயற்சி செய்கிறேன்.

செல்வா said... [Reply]

குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் அப்படின்னு ஆராய்ச்சி செயவாங்கள்ள .. அத மறந்துட்டீங்க ..!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...