கிரைம் நாவல் ஸ்பெஷலிஸ்ட்

பள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு பதிமூன்று வயதிருக்கலாம்.. என்னை விட மூன்று வயது இளைய சிறுவனின் பரிந்துரையின் பேரில் ராஜேஷ் குமார் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். ராஜேஷ் குமார் நாவல்களில் பெரும்பாலும் சஸ்பென்ஸ்-கிரைம், துப்பு துலக்குதல் (டிடெக்டிவ்), சயன்ஸ் ஃபிக்ஷன் இதெல்லாம் கதையுடன் ஒட்டி இருக்கும். ஒரு சில சமூக நாவல்களும் எழுதி இருக்காரு. (உதா : 'காவ்யாவின் கருப்பு தினங்கள்')


கிரைம் நாவல் புத்தகத்தில் முக்கிய நாவலைத் தவிர ஐந்தாறு பக்கத்தில் வரும் சிறுகதைகளும் நன்றாக இருக்கும். அவருடைய கற்பனை கதா நாயகன் விவேக் தனது மனிவி ரூபலாவுடன் நடத்தும் 'அர்த்தமுள்ள அரட்டை' தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். நான் படித்த கிரைம் நாவல்களில் சிலவற்றைப் பற்றி சிறு குறிப்புடன் பட்டியல் இட்டுள்ளேன். இந்தக் கதைகள் அனேகமாக 1985 - 88 வருடங்களில் வந்தவை என நினைக்கிறேன்.
  • 'ஹலோ டெட் மார்னிங்' -- இதுதான் நான் படித்த முதல் நாவலாகும். இது 'கிரைம் நாவல்' வரிசையில் நான்காவதாக வெளி வந்தது. கொலை போல ஆரம்பிக்கும் கதையினை, அது தற்கொலை என்று சரியான லாஜிக்குடன் முடித்திருப்பார்.
  • திக் திக் திவ்யா - 'திவ்யா' ஒரே ஆளா.. இல்லை மூவரா என ஆச்சரியப் படும்படி கதை செல்லும். சொத்துக்கு ஆசைப் பட்டு திவ்யாவை கொலை செய்யும் நோக்குடன் அவரோட மாமா, சித்தப்பா இரண்டு பேரும் செய்கிற குற்றங்களை சஸ்பென்சாக சொல்லி இருக்கிறார் கதாசிரியர்.
  • கற்றது டைமண்ட் களவு : கதைகேற்ற ஆனால் தெரிந்த பழமொழியை மாற்றி அதே மாதிரி ஒலிக்கும் ஓசை வருமாறு அமைந்த தலைப்பு. தலைப்பில் உள்ளது போல கதை 'டயமன்ட்' கடத்தலை மையமாகக் கொண்டது.
  • நாளை யாரோ : கதை சரியாக ஞாபகமில்லை.. 'அற்புதா' என்ற வீரமிகுந்த பெண்துணிச்சலுடன் கெட்டவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்வது போல வரும். கடைசி வரிகள் 'இன்று அற்புதா.. நாளையாரோ ?' என முடியும்.
  • மற்றுமொரு கதையில் (தலைப்பை மறந்துவிட்டேன்) விவேக்கின் கண்களை கட்டி, கெட்டவர்கள் தங்கள் இடத்திற்கு அழைத்து செல்வார்கள். பின்னர் விவேக்கை விட்டு விடுவார்கள். அவர்களிடம் மாட்டிக் கொண்டுள்ள மற்றவர்களை விடுவிக்க விவேக் அதேபோல கண்களை கட்டிக் கொண்டு காதில் விழும் சப்தங்களையும், வினாடிகளையும், காலால் வைக்கும் அடிகளையும் மனதில் கொண்டு அதேபோல செய்து, கயவர்களின் இடத்தை அடைந்து காப்பாற்றுவதாக வரும். 'குருதிப்புனல்' திரைப் படத்தில், ஒருவர் தனது அலுவல் மற்றும் சொந்த நண்பரை காப்பாற்ற அதே பாணியில் வருவது கண்டு 'காப்பி' அடிப்பதென்றால் என்ன என்பதை உதாரணத்துடன் தெரிந்து கொண்டேன். (ராஜேஷ் குமாரே வேறு ஒரு இடத்திலிருந்து காப்பி அடித்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வாறு வருவதை, நான் முதலில் படித்தது ராஜேஷ் குமார் கதையில் தான்)

மொத்தத்தில் ராஜேஷ் குமாரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்களை படிப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதில்லை வேறு மாநிலத்தில் இருப்பதால்.
(ஹி.. ஹி.. அதான் நாமளே பிலாகு எழுத ஆரம்பிச்சிட்டோமே ? )

நண்பர் மங்குனி அமைச்சர், அவர்களை இந்த பதிவினை தொடருமாறு வேண்டி (!) விரும்பி (!!) கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------

61 Comments (கருத்துரைகள்)
:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

vadai

Arun Prasath said... [Reply]

ஐ மங்கு மாட்டிகிடாறு

எஸ்.கே said... [Reply]

என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர்களில் ஒருவர் ராஜேஷ் குமார். சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சவுந்தர்ராஜன் ஆகியோரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்!

அருண் பிரசாத் said... [Reply]

இதை தொடர்பதிவாக மாற்றியதற்கு சல்யூட்....

பலர் புத்தகம் படிப்பதையே விட்டு விட்டார்கள் (நான் தான்)

பல புத்தகங்க வெளியே தெரியாமலே நின்று விடுகிறது...

தற்பொழுது...Chetan Bagat என்னை கவரெத் எழுத்தாளர் ஆக இருக்கிறார்....முடிந்தால் நானும் எழுதுகிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

im big fan of rajeshkumar. while travelling im reading his books...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

நண்பர் மங்குனி அமைச்சர், அவர்களை இந்த பதிவினை தொடருமாறு வேண்டி (!) விரும்பி (!!) கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்.கே said... [Reply]

இப்பவும் அவர் நாவல்களை அப்பப்ப படிப்பேன். அவர் கதையில் இரண்டு மூன்று கிளைக்கதைகள் வந்து எல்லாம் ஒன்று சேரும். அந்த யுக்தி எனக்கு ரொம்ப பிடித்து போனது!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

//ராஜேஷ் குமார். சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சவுந்தர்ராஜன் ஆகியோரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! //

அப்ப உங்களுக்கு நாலு பதிவு கைவசமிருக்கு ..!

// அவர் கதையில் இரண்டு மூன்று கிளைக்கதைகள் வந்து எல்லாம் ஒன்று சேரும். அந்த யுக்தி எனக்கு ரொம்ப பிடித்து போனது! //

அது அவரது தனிச் சிறப்பு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Arun Prasath

// ஐ மங்கு மாட்டிகிடாறு //

சொந்த செலவுல சூனியம்.. ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அருண் பிரசாத்

//இதை தொடர்பதிவாக மாற்றியதற்கு சல்யூட்....//

இதுக்கே சல்யூட்டா ?

பலர் = நீங்கதானா ?

// முடிந்தால் நானும் எழுதுகிறேன் //

நல்லா யோசிச்சு எடுத்த முடிவா.. ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

// im big fan of rajeshkumar. //

ரேடியஸ் என்ன ?

NaSo said... [Reply]

//Madhavan Srinivasagopalan said... [Reply] 11

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

// im big fan of rajeshkumar. //

ரேடியஸ் என்ன ?
//

நீங்க விஞ்ஞானின்னு மறுபடியும் ஒரு முறை நிரூப்பிச்சிட்டீங்க!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA

இல்லேன்னா எனக்கே மறந்திடுமே.. அதான்..

TERROR-PANDIYAN(VAS) said... [Reply]

//தனது மனிவி//

அது மனிவி இல்லை மனைவி.... :)

நாங்களும் துப்பு துலக்குவோமில்ல.. :)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@TERROR-PANDIYAN(VAS)

நீங்க பல் (சாரி) துப்பு துலக்குரதுல கிங்குன்னு தெரிஞ்சிதான்..

நீங்க கண்டு பிடிச்சி - கமெண்டு போடணும்னுதான் அப்படி..
(சமாளி.. ராஜா சமாளி.. )

பெசொவி said... [Reply]

நல்ல பதிவு
(பதிவைப் படிக்காமல் கமெண்ட் போடுவோர் சங்கம்)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெயர் சொல்ல விருப்பமில்லை

சரி.. சரி.. டெம்ப்லேட்ட மாத்துங்க..
இதே கமெண்ட்ட ஆறேழு தடவை போட்டுட்டீங்க..

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

தனது மனிவி//

அது மனிவி இல்லை மனைவி.... :)

நாங்களும் துப்பு துலக்குவோமில்ல.. :)///


துப்புத் துலக்குவோமில்ல..இப்படி தான் எழுதணும் ...துப்புத்துலக்குற ஆள பார்த்தாலும் .......

வார்த்தை said... [Reply]

இந்த பதிவை நான் வாசிக்க ஆரம்பிக்கையில் , கோவை ராஜ் வாட்ச் ஹவுஸில் மணி சரியாக மாலை ஆறு ஆறு.

வார்த்தை said... [Reply]

//கதா நாயகன் விவேக் தனது மனிவி ரூபலாவுடன் நடத்தும் 'அர்த்தமுள்ள அரட்டை' தகவல் களஞ்சியமாகவும் இருக்கும்.//

13 வயசிலேயேவா....

வார்த்தை said... [Reply]

//ராஜேஷ் குமாரே வேறு ஒரு இடத்திலிருந்து காப்பி அடித்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வாறு வருவதை, நான் முதலில் படித்தது ராஜேஷ் குமார் கதையில் தான்//

எனக்கு தெரிந்த வரை, இதே ஐடியா "ப்ரியா" படத்தில் வந்தது....

அப்ப சுஜாதா கிட்ட இருந்து சுட்டதா?

இல்ல, அதுக்கு முன்ன "எங்கள் தங்கம்" ந்குற (எம்.ஜி.ஆர் ....இல்ல முரசொலி மாறன்....ஊஹும்) படத்துலயும் வரும்...

அவங்க யாருகிட்ட இருந்து சுட்டாங்க?

அவங்க...அவங்க........அவங்க.................

வார்த்தை said... [Reply]

நான் மாங்கி...மாங்கி..... பாக்கெட் சைஸ் நாவல்கள் படிப்பதை கண்ட என் மெஸ் நண்பர் அவர் வகுப்பு (கல்லூரி) தோழரை அறிமுகம் செய்து வைத்தார். பெயர் கார்த்திக் என்று சொன்னதாக நியாபகம், சரியாக நினைவில்லை.
ஓ....என்று விலகி விட்டேன். "படைப்பை மற்றும் கவனி; படைப்பாளி அவன் குடும்பம், கொள்கை என சென்று ஈஷிக்காத", எனும் எண்ணம் உடையவன் நான் என்பதால்.
அந்த நபர் ராஜேஷ்குமாரின் மகன்

RVS said... [Reply]

கொஞ்சம் க்ரைம் படிச்சேன். அப்புறம் போர் அடிச்சுடிச்சு... கோயமுத்தூரிலிருந்து ஒரு ட்ரங்கால் என்று முதல் பக்கத்தில் வாசகர்களுக்கு எழுதுவார்.. சரியா.. ;-)

CS. Mohan Kumar said... [Reply]

I got bored with his writing soon & left to read other's writing.

அன்புடன் நான் said... [Reply]

நல்ல பகிர்வுங்க பாராட்டுக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

சிறு வயதில் பெருதும் விரும்பி படிக்கும் நாவ்லகுள் இவருடையது.... படித்து முடித்த பின் பல விசயங்கள் புரியாது... ஆகையால் திரும்பவும் படிக்க துவங்குவேன்...

குறையொன்றுமில்லை. said... [Reply]

இன்னிக்குவரைக்கும் ராஜேஷ் குமார் க்ரைம் கதைகள் எழுதிக்கொண்டு இருப்பது, அவர் எழுத்துக்குக்கிடைத்தவெற்றிதானே.

ஸ்ரீராம். said... [Reply]

நான் ராஜேஷ்குமார் வாசித்ததில்லை.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வார்த்தை (comment # 20)

'அர்த்தமுள்ள அரட்டை' அது -- 'அந்தரங்க அரட்டை' அல்ல

பின்ன என்ன சார்.. 13 வயசுல அந்த அரட்டைலேருந்து

* விஞ்ஞான முன்னேற்றங்கள்
* ஹார்ட் அட்டாக்,
* நயாகரா ஃபால்ஸ்

இதெல்லாம் தெரிஞ்சுக்குறது தப்பா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS

அதே.. அதே....

அதான.. நீங்க அவர் கதைய ஈடுபாட்டோட படிச்சிருந்தா.. இந்நேரம் அவரப் பத்தி ஒரு பதிவாவது போட்டிருப்பீங்களே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

உங்கள் ரசனைகேற்றவாறு அவரது கதைகள் இல்லையோ என்னவோ ?
எனக்குப் பிடித்திருந்தது..

உங்கள் கருத்திற்கு நன்றிகள், மோ.கு.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சி. கருணாகரசு

நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெறும்பய


அதான, புரியலேன்னா மறுபடி படிக்கலாமே.. தடையேது..?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Lakshmi
உண்மைதான் மேடம். நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

அண்ணன் ஸ்ரீராமிற்கு ராஜேஷ்குமார் கிரைம் நாவல் ரெண்டு பார்சல்..

Chitra said... [Reply]

நல்ல தொகுப்பு..... இதில் சில கதைகளை வாசித்ததில்லை. அடுத்த முறை, வாங்கி வர வேண்டும்.

வெங்கட் said... [Reply]

எனக்கும் ரஜேஷ்குமார் க்ரைம்
கதைகள் ரொம்ப பிடிக்கும்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Chitra

சித்ரா மேடம்.. அதெல்லாம் பழைய கதைகள்.. கெடச்சா வாங்கிப் படிங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

வாங்க நண்பரே..
நீங்க நம்ம இனம்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... [Reply]

ராஜேஷ்குமார் கதைகள் விரும்பிப் படிப்பேன்.
படிச்சி விரும்புவேன்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NIZAMUDEEN

நீங்களும் நம்மள மாதிரியா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

எனக்கும் ராஜேஷ்குமார் கதைகள் மிகவும் பிடிக்கும்.. ஏகப்பட்டவை படித்திருக்கிறேன் தலைப்புகள் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு.....! இந்திரா சௌந்திரராஜனும் எனக்கு பிடித்த எழுத்தாளர்.

இந்தக் கமென்டையும் தொடருமாரு மங்குனி அமைச்சரை வேண்டாமல் (!) விரும்பாமல் (!) அழைக்கிறேன்...

Anonymous said... [Reply]

HE USED TO WRITE FOR HIS FRIEND G.ASHOKAN .
I HAVE READ MANY POCKET NOVELS. THERE WAS GREAT DEMAND FOR POCKET NOVELS.(SOME ONE EVEN QUOTED "PAAVAM THAMIZHAN INNUM POCKET NOVELIN POCKETIL IRUNDHU VELIVARAVILLAI"

R. Gopi said... [Reply]

எனக்கும் ராஜேஷ்குமாரைப் பிடிக்கும். ஒரே மூச்சில் படித்துவிடக் கூடிய நாவல்கள்.

Anonymous said... [Reply]

டேய் மங்குனி கமெண்ட் போடுடா

மங்குனி அமைச்சர் said... [Reply]

நண்பர் மங்குனி அமைச்சர், அவர்களை இந்த பதிவினை தொடருமாறு வேண்டி (!) விரும்பி (!!) கேட்டுக் கொள்கிறேன்.///

ஏனப்பா உனக்கு மனசாட்ச்சியே கிடையாதா ...................

மங்குனி அமைச்சர் said... [Reply]

ராஜேஸ்குமார் - எனக்கும் புடிக்கு ..........நானும் நிறையபடித்துள்ளேன் ............அந்த வயதில் படிப்பின் மேல ஆர்வம் வர இவரும் முக்கிய காரணம்

மங்குனி அமைச்சர் said... [Reply]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கும் ராஜேஷ்குமார் கதைகள் மிகவும் பிடிக்கும்.. ஏகப்பட்டவை படித்திருக்கிறேன் தலைப்புகள் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு.....! இந்திரா சௌந்திரராஜனும் எனக்கு பிடித்த எழுத்தாளர்.

இந்தக் கமென்டையும் தொடருமாரு மங்குனி அமைச்சரை வேண்டாமல் (!) விரும்பாமல் (!) அழைக்கிறேன்...///////


ஓகே ஓகே.......நீ கவலையே படாத இன்கொய்யாலே இந்த கமன்ட் எங்க போனாலும் விடாம தொடர்ந்து போறேன்

மங்குனி அமைச்சர் said... [Reply]

ஹி.ஹி.ஹி................ 50

மங்குனி அமைச்சர் said... [Reply]

Anonymous said...

டேய் மங்குனி கமெண்ட் போடுடா///


சரிங்க ஆபீசர் (பெரிய்ய பிரபல போலீஸ் அதிகாரியா இருப்பார் போல )

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
நானும் பல தலைப்புக்களை மறந்திட்டேன்..
நல்லவேளை.. இல்லேன்னா பதிவு நீள் பதிவாயிருக்கும்...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Anonymous
ஹி.. ஹி.. இன்னுமா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthyஅட.. நீங்களுமா..
சரி.. சரி.. உங்களுடைய அனுபவத்த பதிவா போடலாமே, கோபி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்
வாட் இஸ் தி மீனிங் ஆக்ஃப் 'மனசாட்சி' ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்
//அந்த வயதில் படிப்பின் மேல ஆர்வம் வர இவரும் முக்கிய காரணம் //

அடப்பாவி.. எதபோயி எதுல இழுத்து விடுறான் பாருங்க பப்ளிக்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்
வடை வாங்கி, 'மங்கு'விற்கு ஒரு பெரிய 'ஓ' போடுங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்
//சரிங்க ஆபீசர் (பெரிய்ய பிரபல [co="red"] போலீஸ் [/co] அதிகாரியா இருப்பார் போல ) //

சிரிப்பு போலீசு ?

கோமதி அரசு said... [Reply]

நானும் ராஜேஷ்குமார் கதைகள் படித்து இருக்கிறேன்.

அது ஒரு காலம்.

இப்போது தொலைகாட்சி, கம்யூட்டர் எல்லாம் நேரத்தை சாப்பிடுகிறது. மாத வார புத்தகங்கள் தான் படிக்க முடிகிறது. நாவல்கள் படிக்க பொறுமையும் நேரமும் இல்லை.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமதி அரசு

மாற்றம் என்பது இன்றியமையாதது..

//இப்போது தொலைகாட்சி, கம்யூட்டர் எல்லாம் நேரத்தை சாப்பிடுகிறது.//

இதுவும் மாறும்..
This shall too pass away..

ஷைலஜா said... [Reply]

ராஜேஷ்குமார் எனது அருமையான எழுத்தாள நண்பர் அருமை அண்ணன். அடிக்கடி கேட்பார் இணையத்துல என்னைப்பத்தி என்ன பேசிக்கிறாங்கன்னு ஏன்னா அவர் கம்ப்யூட்டர் பக்கம்வரமாட்டார் நேரத்தை விழுங்கிடும்னு.. அவர்கிட்ட இந்த உங்க பதிவைப்பத்தி சொல்றேன் சந்தோஷப்படுவார்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஷைலஜா

"கோயமுத்தூரிலிருந்து ஒரு ட்ரங்கால்.... "
"விவேக், ரூபலா"
"அர்த்தமுள்ள அரட்டை"

இதெல்லாம் மறக்க முடியாது என்னால..
முடிஞ்சா இந்த போஸ்ட ஒரு பிரிண்ட் எடுத்து ராஜேஷ் குமாரு சார் கிட்ட கொடுங்க.. அப்பவாது படிப்பாரே !..

என்னோட பதிவுகள அதிக ஹிட்ஸ், லிஸ்ட்ல இந்தப் பதிவு மூணாவது இடத்துல இருக்கு.. அதுவே அவரது எழுத்திற்கு சான்று..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...