ாரிடம் 'கைபேசி' இல்லை இந்நாளில். சாலையில் போகும்போது, நடந்துகொண்டே, இரு மற்றும் நான்கு சக்கர வாகனத்தினை ஓட்டியபடியே 'கைபேசியில்' உரையாடும் (இல்லை இல்லை.. அவர்கள் கைபேசியில் பேசிகொண்டிருக்கும் பொது, வாகனத்தையும் செலுத்துகிறார்கள்.. என்று கூட சொல்லலாம்) பலரை நாம் நிதம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஒருசிலர் கைபேசியில் உரையாடும் பொது, கைகளையும், தலையையும், முக பாவனையும் மாற்றி மாற்றி பேசுவது,. சில சமயங்களில் நமக்கு சிரிப்பைக் கூட வரவழைக்கும்.
ஒருசிலர் பேசுவது கூடத் தெரியாமல், ஓசையில்லாமல் (காதலன் / காதலி !) பேசுவது, மற்றவர்களை இம்சை செய்யாது.. (அந்த 'கைபேசிக்கு' பில் கட்டுபவரைத் தவிர).
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், (2000 க்கு முன்னர்,) 'கைபேசி' உதவியதாலேயே தனது காதலனுடன் கை-கோர்த்த சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது. அவரின் காதலனும், எனது நண்பர் தான். அப்பெண்ணின் வீட்டிற்கு சாதரணமாக வந்து செல்லும் நண்பர்.. அந்த பெண்ணின் குடும்பத்தின் அனைவருக்கும் பிடித்தமானவர்தான். ஆனால், அவர்களிருவருக்கும், காதல் இருப்பது தெரியவந்தவுடன், பெண் வீட்டார்.. மறுப்பு தெரிவிக்க, நண்பரோ அவர்கள் வீட்டிற்கு செல்வது நிறுத்தப் பட்டது. இன்று நிமிடத்திற்கு ரூ 1 /-, நொடிக்கு ஒரு பைசா.. , நிமிடத்திற்கு 30 பைசா என பல வாய்ப்புகள் நுகர்வோருக்கு உள்ளது. ஆனால் அன்றைய தினத்தில்.. உள்வரும் அழைபிற்கே நிமிடத்திற்கு ரூ.4 /- தண்டம் அழ வேண்டும்.வெளி செல்லும் அழைபிற்கோ ரூ.8 / நி. இருந்தாலும், நண்பர் நல்ல வேலையில்('நல்லவேளை' கூட ) இருந்ததால், 'கைபேசி' மிகவும் பயன் தந்தது. அந்த பெண் தனது வீட்டிலிருந்து நிலஇணைப்பு ( Landline தானுங்கோ.) தொ(ல்)லை பேசி மூலம், அவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி.. தனது திருமணத்திற்கு வழி செய்தார். ஒரு வழியாக பெண் வீட்டாரும் அவர்களது இணைப்பை அங்கீகாரம் செய்தனர். இவ்வாறு ஒரு காதலர்கள் இணைய உறுதுணையாக இருந்தது 'கைபேசி'. வீட்டில் இருந்தவர்களுக்கு புரியாமல் மிகவும் மெதுவாக பேசும் வல்லமை கொண்டிருந்ததாலேயே அந்த பெண்ணின் முயற்சி வெற்றி கொண்டது.
'கைபேசி' பல விஷயங்களில், நன்மை புரிந்தாலும், சரியாக பயன்படுத்தாமலிருந்தால், பல இன்னல்கள் வரக்கூடும். ஒரு படம் (still picture /photograph) பல வார்த்தைகளை உடைய செய்தியை உணர்த்தும்.. அத்தகைய ஒரு படத்தினை உங்கள் பார்வைக்காக இங்கு தந்துள்ளேன். படம் சொல்லும் பாடம் நன்கு உணரக்கூடியதே..
நாம் சாலையில் செல்லாத பொது கூட, யாரிடம் பேசுகிறோமோ அவர் சாலையில் செல்லும் (நடந்து, வாகனத்தை செலுத்தும்) பொது 'கைபேசி' உரையாடல் வேண்டாமல்லவா..?
பின்குறிப்பு : அருமை அண்ணன் 'சோ விசிறி' பின்னூட்டத்தில் சொல்லியதற்கினங்க, படத்தில் உள்ளவரின் அடையாளம் தெரியாதபடி படத்தினை வெளியிட்டுள்ளேன். நன்றி.