நண்பனிடம் மாட்டிகிட்டு முழிச்ச அனுபவம்

நண்பர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொள்வது ரொம்ப சகஜம்தானே. அதுமாதிரி ஒரு அனுபவத்தை இங்கு பகிரவே இந்த பதிவு.

நான் : வாடா, மாப்ளே. ஊட்டுல எல்லாரும் சௌக்கியமா? என்னடா காலைலேர்ந்து ஆளை காணுமேன்னு பாத்தேன்..

அவன் : ஊட்டுல எல்லாரும் சௌக்கியம்தான்.... ஹோம் வோர்க்கு, அசைன்மெண்டு.... அப்பப்பா... தாங்கல... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னுதான் இப்ப இங்க வந்தேன்..

நான் : சரிதான்.. பொழுது போக்கா நா சில கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்லு பாக்கலாம்..

அவன் : சரி.. ஆரம்பி..

நான் : மூணு ஸ்டெப்புல ஒரு யானைய பிரிஜ்ஜுக்குள்ள எப்படி வெக்கலாம் ?

அவன் : ???

நான் : ஸ்டேப் ஒண்ணு - ஃபிரிஜ்ஜுக் கதவ தொறக்கணும்
ஸ்டேப் ரெண்டு - யானைய வெக்கணும்.
ஸ்டேப் மூணு - பிரிஜ்ஜுக் கதவ மூடனும், அம்புட்டுதான்.

அவன் : (ஆண்டவா... நா வேறெங்காவது போயிருக்கலாம் ) ஹி.. ஹி.. ஹி..

நான் : ஒக்கே.. இப்ப சரியா சொல்லு .. மூனே ஸ்டெப்புல ஒரு நீர்யானைய எப்படி பிரிஜ்ஜுக்குள்ள வெக்கலாம்..

அவன் : நீ சொன்ன மூணு ஸ்டெப்பு யானை கதை மாதிரியே.. யானைக்கு
பதிலா நீர்யானைய வெச்சிட்டு வேண்டியதுதான்..

நான் : அவ்ளோ கஷ்டப்பட வேண்டாம். ஒரு மிருகத்த வெச்சு வளக்குறதே கஷ்டம், இதுல எதுக்கு ரெண்டு மிருகம். நா சொன்ன மூணு ஸ்டெப்புல ரெண்டாது ஸ்டெப்பு மட்டும் 'தண்ணிய பிரிஜ்ஜுக்குள்ள ஊத்த வேண்டியதுதான்'. அதான் யானை ஏற்கனவே உள்ள இருக்குதே.

அவன் : (அய்யோ.. அய்யோ.. தாங்கலையே.. ஸ்கூல் வோர்க்கே தேவலையே) நா அப்புறம் வரேண்டா..

நான் : ஹேய்.. நில்லுடா.. இன்னும் ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் தான் பாக்கி.. ஒரு பறவை வானத்துல பறக்கும் பொது முட்டை போட்டுச்சாம்.. ஆனா முட்டை கீழே விழலையாம்.. எப்படி?

அவன் : அது ஆண் பறவையா இருக்கும்..

நான் : மாப்பு.. நான்தான் முட்டை போட்டுச்சுனு சொன்னேனே.. அது எப்படி ஆண் பறவையா இருக்கும்.. -- சரி சரி.. காரணம் என்னன்னா.. அது 'Snaggi' போட்டிருந்துச்சி..

(நண்பன் ஓட ஆரம்பிச்சான்.. விடுவேனா நா.... மடக்கி பிடிச்சி அடுத்த கேள்விய கேட்டேன்..)

நான் : இன்னும் ஒண்ணுதான் பாக்கி.. காட்டுல நடந்த முக்கியமான கூட்டத்துக்கு சிங்கம் தலைமையில, புலி, கரடி, மான், காண்டாமிருகம், எல்லாரும் வந்திருந்தாங்க.. ஒரு ஆளு மட்டும் வரலை.. யாருன்னு சொல்ல முடியுமா... அது யாரு தெரியுமா?

அவன் : ------- என்னடா சின்ன புள்ளதனமா இருக்கு.... மொட்டையா கேட்ட எப்படிடா சொல்லமுடியும்..

நான்: மொட்டையா இல்லடா... நா மொக்கையா கேட்டேன்.. சரி.. கூட்டத்துக்கு போகாதது யானைதான்..

அவன் : அதெப்படி சொல்ல முடியும் ?

நான் : அது தான் (தண்ணியோட) பிரிஜ்ஜுக்குள்ள இருக்குதே..

அப்புறம் அவன் நாலு நாளைக்கு என்ன பாக்காவே மாட்டேனுட்டான்.... நீங்களே சொல்லுங்க, நா செஞ்சது தப்பா ?
--------------------

டிஸ்கி - 1 : நா கூட 'நண்பேண்டா' !

டிஸ்கி - 2 : தலைப்பு சரியா இல்லைனு நெனக்கறீங்களா? தலைப்புலாம் சரிதான்.. 'அவன்' தன்னோட 'நண்பனிடம்' (எங்கிட்டதான்) மாட்டிகினு முழிச்ச அனுபவமுங்கோ !


11 Comments (கருத்துரைகள்)
:

என்னது நானு யாரா? said... [Reply]

கலக்கலுங்கண்ணா! சூப்பரு! நல்லா இருக்கு தல! Keep it up! :-))))

அருண் பிரசாத் said... [Reply]

ரைட்டு!

@ அருண்

இனி நீ இந்த பக்கம் வருவ?

DreamGirl said... [Reply]

அன்னாச்சி, ஒங்ககிட்ட பாத்து நடந்துக்கிறென் ..

Gayathri said... [Reply]

ketta jokkuthaan aanaa neenga sonna vidham arumai

ஸ்ரீராம். said... [Reply]

ஹா..ஹா...ஹா...பாவம் அந்த நண்பன்...

Madhavan Srinivasagopalan said... [Reply]

//என்னது நானு யாரா? said...
கலக்கலுங்கண்ணா! சூப்பரு! நல்லா இருக்கு தல! Keep it up! :-)))) //
ஊக்கத்திற்கு நன்றி..

//அருண் பிரசாத் said..."ரைட்டு!"
@ அருண்
இனி நீ இந்த பக்கம் வருவ?//
ரைட்டுன்னு சொல்லிட்டீங்க.. அப்புறம் எதுக்கு ரெண்டாவது லயனு ?


//Dream Girl said "அன்னாச்சி, ஒங்ககிட்ட பாத்து நடந்துக்கிறென் .." //
ஒக்கே ஒகே.. கனவுக் கண்ணியலாம், நாங்க கலாய்க்க மாட்டோம்

//Gayathri Said "ketta jokkuthaan aanaa neenga sonna vidham arumai"//
உண்மைதான்..தெரிஞ்ச ஜோக்குதான்..பாராட்டிற்கு நன்றி.. ஹைலைட்டே , டிஸ்கி-2 தான்

//ஸ்ரீராம். said..."ஹா...ஹா...பாவம் அந்த நண்பன்... //
ஃ பெரேண்ட்ஷிப்புல இதெல்லாம் சகஜம்தானே ஸ்ரீராம் சார்?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said... [Reply]

///டிஸ்கி - 1 : நா கூட 'நண்பேண்டா' !

டிஸ்கி - 2 : தலைப்பு சரியா இல்லைனு நெனக்கறீங்களா? தலைப்புலாம் சரிதான்.. 'அவன்' தன்னோட 'நண்பனிடம்' (எங்கிட்டதான்) மாட்டிகினு முழிச்ச அனுபவமுங்கோ ! ///

ஹா ஹா ஹா.. அய்யயோ முடியலங்க..
அதிலும்..... நா கூட 'நண்பேண்டா... ' எப்பா சாமி......ஹ்ம்ம் ஹும்.. நோ சான்ஸ். சூப்பர். :D

என்னமா கேள்வி கேக்குறீங்க..
எப்படி ஏதும் ஸ்பெஷல் கிளாஸ் போனீங்களா என்ன??

தேங்க்ஸ் :-)))

RVS said... [Reply]

ஒரு நீர் யானையையும் யானையையும் சேர்த்து எப்படி ஃப்ரிட்ஜ்ல வைப்பீங்க..
அதுக ரெண்டும் சண்டை போட்டுகிச்சுனா நான் எப்படி சேர்த்து வைப்பேன்.

போற போக்கே சரியில்லை.. வேணாம்... அழுதுருவேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

//Ananthi said "என்னமா கேள்வி கேக்குறீங்க."//
அதான, ஈசியான காரியம்..

//RVS said..."ஒரு நீர் யானையையும் யானையையும் சேர்த்து எப்படி ஃப்ரிட்ஜ்ல வைப்பீங்க..அதுக ரெண்டும் சண்டை போட்டுகிச்சுனா நான் எப்படி சேர்த்து வைப்பேன்."//

நீர்யானைக்கு சாதாரண 'குளிர்' போறாது.. அதா, 'ஃபிரிசர் கம்பார்டுமெண்டுல வெச்சிடுவோமுல்ல ..

kailash,hyderabad said... [Reply]

super comedy.:D :D :D :D :D :D :D

HVL said... [Reply]

//நீர்யானைக்கு சாதாரண 'குளிர்' போறாது.. அதா, 'ஃபிரிசர் கம்பார்டுமெண்டுல வெச்சிடுவோமுல்ல .. //
அப்புறம் ஐஸ் யானை ஆயிடப் போகுது!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...