ஜோக்ஸ் (பேத்தல்) டைம்சின்ன வயசுல காதால் (அபிஷ்டு.. 'காதல்' இல்லை 'காதால்') கேட்ட சில ஜோக்குகள்..

கணவர் : (மனைவியிடம்) நா இங்க கழுதை மாதிரி கத்தி உன்னை கூப்பிடுகிட்டு இருக்கேன்.. நீ அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
மனைவி : உங்களுக்குக்காக பேப்பர தேடிக்கிட்டு இருக்கேன்..
-----------------------------------------
ஒருவர் : ஒரு தடவை கேட்டா, உங்களுக்கு மறக்காதா ?
மற்றவர் : எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு  'தோல்'காதுதான்.
-----------------------------------------------
ஒருவர் : எண்டா, நேத்திக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வயலின், கேட்டியா ?
மற்றவர் : கேட்டாமட்டும், தந்துடுவாரா என்ன ?
-------------------------------
முதலாமவர் : சிட்டி பாபு வீணை வாசிக்கச்சே இந்த ஆள் காட்டி விரலை யூஸ் பண்ண மாட்டாரு தெரியுமா ?
மற்றவர் : ஏன் ?
முதலாமவர் : காரணம்.. இது என்னோட விரல்.
மற்றவர் : வீணையே இல்லாம ரமணி கச்சேரி பண்ணுவாரு தெரியுமா ?
முதலாமவர் : எப்படி ?
மற்றவர் : அவரு தான் புல்லாங்குழல் வித்வான் ஆச்சே.

கொசுறு செய்தி (1 ) : முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு வீணையும் வாசிக்கத் தெரியுமோ ? கிரேட். நெட்டிலிருந்து கிடைத்த படம் ( நன்றி - கூகிள் இமேஜெஸ்).
-----------------------------
இதே பாணில நா என்னோட பிரண்டு கிட்ட 1987 உலகக் கோப்பை கிரிக்கெட் சீசனுல கேட்டேன்
நான் : ரவி சாஸ்திரி பவுலிங் போடும் பொது இந்த விரலை (எனது வலது கை நடு விரலைக் காட்டி) யூஸ் பண்ண மாட்டாரு தெரியுமா ?
எனது நண்பர் : ஹி.. ஹி.. இதுதான் உன்னோட விரலாச்சே !
நான் : அதில்லை, 'அவரு லெஃப்ட் ஹான்ட் பவுலர்'.

கேள்வி : ஹர்பஜன் சிங் மற்றும் மகாத்மா காந்தி இருவரிடையே இருக்கும் ஒற்றுமை ?
பதில் : ரெண்டுபேருமே ஸ்பின்னர்ஸ்.. 
------------------------------
நன்றி விக்கிபீடியா
கொசுறு செய்தி (2 ) :
அதல்லாம் சரி.. முன்னாள் பாகிஸ்தான் காப்டன், வக்கார் யூனுஸ் பவுலிங் போடும்போது சுண்டு விரலை பயன் படுத்தமாட்டாரு ஏன் தெரியுமா ?

ஏன்னா.. அவருக்கு  சுண்டு விரலே (இடது கை) கெடையாது.. வெட்டி எடுத்துட்டாங்க..
(நன்றி : http://en.wikipedia.org/wiki/Waqar_Younis section titled 'Cricket and coaching career' ).

கொசுறுக்கு கொசுறு : வக்கார் யூனுஸ் எனக்கு பிடித்த பவுலர்களில் ஒருவர். (மைன்ட் வாய்ஸ் : ஆமா, இது ரொம்ப முக்கியம் ?)
==============================

9 Comments (கருத்துரைகள்)
:

மோகன் குமார் said... [Reply]

கலாம்ஜி படம் அருமை

நான் தான் பஸ்ட்டா?

ஸ்ட்டார்ட் தி மியுசிக்

ஆர்.சண்முகம் said... [Reply]

அபிஷ்டு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

good ones!

RVS said... [Reply]

வக்காரை எனக்கும் பிடிக்கும்.. ஏன்னா.. ஒரு மேச்சல ஜடேஜாவும் அசாரும் வுட்டு வெளுத்துட்டாங்க.. ;-)))

எஸ்.கே said... [Reply]

எல்லா ஜோக்கும் புதுசா இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

என்னது காந்தியும் ஸ்பின்னரா?

பாலா said... [Reply]

மரண கடின்னா இதுதானா? அந்த "ஸ்பின்னர்ஸ்" உண்மையிலேயே சூப்பர்.

Anonymous said... [Reply]

:-))

ஸ்ரீராம். said... [Reply]

வக்கார் யூனுஸ் தகவல் புதுசு. எனக்கு அவரை விட வாசிம் அக்கரம், இம்ரான் பிடிக்கும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...