நண்பர் எஸ்.கே ஆங்கில ஜோக்கு ஒன்றை மொழி பெயர்த்து சொல்லக் கேட்டேன். அது...
ஒரு பெட்ரோல் பேங்குக்கு போனப்ப அங்க ஒரு போர்டை பார்த்தேன். அதில் “இங்கே
செல்போன் உபயோகிக்காதீர்” அப்படின்னு எழுதியிருந்தது. உடனே என் செல்ஃபோனை
எடுத்து எல்லோருக்கும் போன் பண்ணி எனக்கு இப்ப போன் பண்ணாதீங்கன்னு
சொல்லிட்டேன்!
- புத்திசாலி ஆளுதான்..
- புத்திசாலி ஆளுதான்..
ஹி.. ஹி.. அவரு வேணா வெறும் 'புத்திசாலியா' இருக்கலாம்.. நாதான் ஆதிலேருந்து அதி-புத்திசாலியா இருக்கேனே. எப்படியா ? சொல்லுறேன், கேளுங்க (படிங்க)..
சாம்பிள் - 1
நா கூட பெட்ரோல் பங்கு போனப்ப, கன்னத்துல அரிச்சுது. கையில இருந்த செல்போன வெச்சி கன்னத்த வருடி அரிப்ப போக்கலாம்னு நெனைச்சேன். “இங்கே செல்போன் உபயோகிக்காதீர்” -- அங்க போர்டுல இருந்த அறிவிப்ப பாத்த உடனே, அரிச்சாலும் பரவாயில்ல போர்டுல எழுதி இருக்கிறத மீற வேணாம்னு பொறுத்துக் கிட்டேன்.
(அடப்பாவி கூகிள் மொழியாக்க பக்கத்துல 'மீற வேணாம்'னு டைப் அடிச்சா 'மீரா வேணாம்'னு காமிக்குது, என்ன வில்லங்கத்தனம்... )
சாம்பிள் - 2
ஒரு முறை எங்கள் வீட்டு டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் வேலை செய்யவில்லை (ஸ்ட்ரைக் பண்ணிச்சு ). நா அத சரி செய்ய, ஓபன் பண்ணி, என்னால எவ்ளோ முடிஞ்சதோ அதுவரைக்கும் நோண்டி எடுத்திட்டேன்.
அப்புறமா அத செட் பண்ணிட்டு பட்டனை அமுக்கினேன். ம் ஹூம், அதோட ஸ்ட்ரைக் வாபஸ் ஆகலை. வீட்டுல எல்லாரும் என்னைய கேவலாமா ஒரு லுக் உட்டாங்க.
அப்புறமா அத செட் பண்ணிட்டு பட்டனை அமுக்கினேன். ம் ஹூம், அதோட ஸ்ட்ரைக் வாபஸ் ஆகலை. வீட்டுல எல்லாரும் என்னைய கேவலாமா ஒரு லுக் உட்டாங்க.
இதுக்குலாம் நா வருத்தப் படலை. நான்தான் மேதாவி ஆச்சே(!) அந்த
ரிமோட் கண்ட்ரோல வெச்சு வால்யூம் / ச்செனல மாத்திக் காட்டுறதா ச்செலன்ஜ் செஞ்சேன். அவங்களாம் என்னைய நம்பவே இல்லை.
ஏற்கனவே
ஆன் செய்ஞ்சு இருந்த டி.வி கிட்ட போயி, டி.வி பொட்டில இருக்குற பொத்தானை (வால்யூம்,
ச்செனேல்) கையில இருந்த ரிமோட் வெச்சி அமுக்கி வால்யூம்/ ச்செனல சொன்ன படி மாத்திக்
காமிச்சேன்..
--- நானேதான்.. அதாங்க அதி-புத்திசாலி
---------------------
என்னோட நம்பர்களும்.. நண்பர்களும் புத்திசாலிதான்
ஜஸ்ட் ஒரு சாம்பிளுக்கு நமது அமைச்சர் மங்குனியோட ஐட்டத்த எடுத்து விடுறேன் பாருங்க.
அவரு ஒரு பெட்ரோல் பேங்குக்கு போனப்ப அங்க ஒரு போர்டை பார்த்தாரு. அதில் “இங்கே செல்போன் உபயோகிக்காதீர்” அப்படின்னு எழுதியிருந்தது. உடனே தன்னோட என் செல்ஃபோனை எடுத்து அதுல இருந்த 'செல்ல' கழட்டிட்டு வெறும் போன தான் உபயோகிச்சாரு(!).. ரூல்ஸ மதிக்கிற ஆளாச்சே அவரு.
இன்னும் சாம்பிள் வேணும்னா செல்வா கதைகளைப் படிச்சா தெளிவா தெரியும்..
=============================================
27 Comments (கருத்துரைகள்)
:
திருப்பி பேசாதோ! நிறைய பேரின் சிக்கலை ஒரு போட்டோவில் சொல்லி விட்டீர்.பதிவானால் நிறைய பக்கம் வரும்.
இந்த புத்திசாலிகளை உலகம் அவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்வதில்லை!:-)
@"குறட்டை " புலி
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி
@எஸ்.கே
ஹி.. ஹி.. அதுதான் பிராப்ளம்.
ஆனா, நாம் கவலைப் படாம.. நம்ம வழியில போயிகிட்டே இருக்கணும்..
பாஸ்! நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்
@சௌந்தர்
ஹி. ஹி.. நீங்களாவது என்னைய சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களே.. நன்றி..
நானும் அறிவாளி நானும் அறிவாளி .. ஹி ஹி
வின்னைக்காப்பன் ஒருவன் மன்னைக்காப்பான் ஒருவன்
மொக்கை காப்பான் ஒருவன்
@கோமாளி செல்வா
ஒகே.. ஒகே.. அதான் ஒத்திகிட்டாச்சே..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அமாம்.. நா
மன்னைக்காப்பான்.
-- 'மன்னையின் மைந்தர்களில் ஒருவன்',
உண்மையிலேயே நீங்க பெரிய புத்திசாலிதான்.
மாதவா.. முடியலை.. ;-))))
Sample 2 - Super!!!!
அறிவாளிகளை அவ்வளவு சீக்கிரம் உலகம் ஏத்துக்காது. நீங்க இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்க.
@பாலா
அதே..அதே..
@RVS
முடியலேன்னா (சுகமில்லேன்னா) டாக்டர்கிட்ட போயி கன்சல்ட் பண்ணுங்க..
@Chitra
ஹி.. ஹி.. அது உண்மையிலேயே நடந்த விஷயம்.. நா ரிப்பெர்லாம் பண்ணலை.. பாட்டரி இல்லாம ரிமோட்டால டி.வி ச்செனல மாத்தறதா சொல்லி அப்படி செஞ்சேன்.
@நாகராஜசோழன் MA
அட்வைசுக்கு நன்றி.. ட்ரை பண்றேன்.
good joke.... thanks for sharing. vaalththukkal
@மதுரை சரவணன்
நன்றி நண்பரே..
உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லங்க.. :)
அண்ணே எப்பிடிண்ணே..........? உடம்பெல்லாம் புல்லரிக்குதுண்ணே.........!
@ அனு & ப.ராம்ஸ்
ஹி.. ஹி.. ரொம்ப புகழாதீங்க.. எனக்கு கூச்சமா இருக்கு..
ஆஹா ஓஹோ
ஏன்யா கொலையா கொல்ற?
உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லங்க.//
செல்வா கூட இருக்க வேண்டிய ஆளா
\\அனு said... [Reply] 18 உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லங்க.. :) \\
நான் இதைக் கன்னா பின்னாவென்று ரிபீட் செய்றேன்:-)
செல் ஃபோனை அங்க உபயோகப் படுத்தலைன்னாலும் இங்க உபயோகப் 'படுத்தி' பதிவு போட்டுட்டீங்களே....
@ஸ்ரீராம்.
அதான.. காசு கொடுத்து வாங்கினா செல்போன் -- எப்படியாவது உபயோகமா இருந்தா சரி..
தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்
http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html
Post a Comment