வரவிருக்கின்ற
மார்ச் 30 ம் தேதி நடைபெற உள்ள, உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில்
தோற்காமல் இருக்கப் போவது யார் தெரியுமா ? நான் சொல்லும் பதில்
கண்டிப்பாக நடக்கத்தான் போகிறது .... பதில் இப்பதிவின் கடைசியில்
இருக்கிறது, பதிவை படித்துவிட்டு கடைசியில் பதிலைப் படிக்கவும்.
இந்திய-பாகிஸ்தான் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இரு நாட்டு மக்களுக்கும் 'முக்கியமானதொன்றாக' ஆகிவிட்டது.... 'கிரிக்கெட்' இது மட்டுமே வாழ்க்கை இல்லை, ஆட்டங்களில் வெற்றி தோல்வி ஒரு பகுதிதான். இப்படித்தான் 'விளையாட்டை' விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த முறையில் இந்த ஆட்டத்தினை அணுகினால், நாம் தேவையில்லாத டென்ஷனிலிருந்து தப்பலாம். விளையாடு வீர்கள் தங்கள் திறமையை காண்பிக்க விடுமே தவிர, தேவையில்லாத பயம் மற்றும் வாய்க்கொழுப்பை காண்பிக்கக் கூடாது.
பாகிஸ்தான் அணித் தலைவர், ஷாஹித் அஃப்ரீதி தேவையில்லாத வாய்ச் சவாடாலில் ஈடுபட்டுள்ளதாக நான் கருதுகிறேன். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய அடுத்தநாளே அஃப்ரீதி, 'சச்சின் தனது நூறாவது சதத்தை (டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டையும் சேர்த்து) அடிப்பதற்கு அடுத்த தொடர் ஆட்டம் வரை காக்க வேண்டியதுதான். நாங்கள் எந்த இந்திய வீரரையும் அதிக ரன்கள் எடுக்க அனுமதிக்கப் போவதில்லை', என்று சொன்னதாக ஊடகம் வாயிலாக அறிந்தேன்.
மேலும் அவரும், இம்ரான்காணும், சொந்த ஆடுகளத்தில் (ஹோம் கிரவுண்டு) விளையாடுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினால், இந்திய அணிக்குத்தான் டென்ஷன் அதிகமாக இருப்பதாகவும், தங்கள் அணியினருக்கு எந்த வித டென்ஷனும் இல்லையென்றும் சொன்னதாகவும் அறிந்தேன்.
இதே இந்த ஆட்டம் அவர்கள் (பாகிஸ்தான்) நாட்டு ஆடுகளத்தில் இருந்திருந்தால், மேற்சொன்ன வார்த்தையை வெளியிடாமல் 'சொந்த மண்ணில் விளையாடுவதால் எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும்..' என்று பெருமையாக சொல்லியிருப்பார்கள்.
மேற்சொன்ன விஷயங்களை உற்று நோக்கினால் அவர்கள்தான் டென்ஷனில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது.
- 'இந்த ஆட்டம் கடுமையாக இருக்கும்.. '
- 'நாங்கள் எதிரணியினரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை..... '
- 'நாங்கள் கவனமாக ஆடுவோம்.. '
- 'நன்றாக ஆடுவோம்மென எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது..'
இதுபோன்று சொல்வதுதான் 'ஜென்டில் மென் கேம்' என்றழைக்கப்படும் 'கிரிக்கெட்' ஆடுபவருக்கு அழகு / பெருமை சேர்க்கும்.
பாகிஸ்தான் அணி இதுவரையில் உலகக்கோப்பை ஆட்டங்களில் நன்றாகத்தான் விளையாடி வருகிறது. ஆனாலும் அவர்கள் நியூசிலாந்திடம் தோற்ற அளவிற்கு நாம் தே.ஆப்ரிக்காவிடம் தோற்கவில்லை. அதாவது, லீக் ஆட்டங்களில், இந்திய அணி ஓரளவிற்கு சுமாராக விளையாடினாலும், அதிக வித்தியாசத்தில் தோற்கவில்லை..
சுருங்கச் சொன்னால்.. இந்திய அணி தற்போது பாகிஸ்தானிற்கு எந்த விதத்திலும் குறைந்ததாக எனக்குப் படவில்லை. ஹ்ம்ம்.. நமது அணி பொறுப்போடு விளையாடவல்லது என்பது காலிறுதிப் போட்டியில் நன்கு வெளிப் பட்டதாக நான் நினைக்கிறேன்.
இது ஒரு விறு விருப்பான ஆட்டமாக வெளிப்படும் ...... அதுவரை..
"Let's keep our fingers crossed"
அன்றைய தினம் தோற்காமல் இருக்கப் போவது.. யார் ?
கண்டிப்பாக...
-------------
--------------
-------------
------------
------------
------------
------------
-------------
------------
------------
---------
------------
-----------
-----------
----------
-----------
----------
---------
-------
ஆஸ்திரேலியா, தெ.ஆப்ரிகா, வெ.இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, நியுஜிலாந்து .. இவர்களில் யாரும் தோற்கப் போவதில்லை அன்றையதினம்.... ஹி.. ஹி.. ஹி..
========================================
9 Comments (கருத்துரைகள்)
:
///அன்றைய தினம் தோற்காமல் இருக்கப் போவது.. யார் ?///
இப்படியா சஸ்பென்ஸ் வைக்கிறது....ஹி...ஹி...
எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
சரிப்பா.. யாரு தோக்கமாட்டங்கன்னு தெரிஞ்சுகிட்டோம். அரையிறுதியில் பாகிஸ்தானை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது. ஜெய் ஹிந்த். ;-)
// ஆஸ்திரேலியா, தே. ஆப்ரிகா, வெ.இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, நிஜிலாந்து .. இவர்களில் யாரும் தோற்கப் போவதில்லை அன்றையதினம். //
முடியலப்பா...!!
ஹா....ஹா...இந்த மாதிரி கண்டு பிடிக்க உங்களால்தான் முடியும்...!!
//சுருங்கச் சொன்னால்.. இந்திய அணி தற்போது பாகிஸ்தானிற்கு எந்த விதத்திலும் குறைந்ததாக எனக்குப் படவில்லை. ஹ்ம்ம்.. நமது அணி பொறுப்போடு விளையாடவல்லது என்பது காலிறுதிப் போட்டியில் நன்கு வெளிப் பட்டதாக நான் நினைக்கிறேன்.
//
me too! Let us hope for the best!
இந்திய அணி வெல்லும் என்று நிச்சயமாக கூறுகிறேன் ..ஏன் என்றால் உலக கோப்பை வரலாற்றில் இந்திய பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது
We have played 4 matches in world cup against Pak & have won all !
We have played 2 matches in Mohali against Pak and have lost both !!
One of this is going to be reversed this time.
Your blog says " You are reading it as the 5th person. But already there are 7 comments from different persons. Something wrong.
Kankku Puli.. Ithai konjam kavaniyungal.
போறபோக்கைப்பார்த்தா இந்திய அணிதான் வெல்லும்.போல இருக்கு.
Post a Comment