சென்ற மாதம் எனது பிராட் பேன்ட் பில்லில் நான் எதிர்பாரா வண்ணம், அதிகத் தொகை வந்தது. எனக்கு ஆச்சரியம்.. பிப்ரவரி மாதம் 28 நாட்கள் மட்டுமே.. அதிலும் நான் நான்கு நாட்கள் வீட்டில் இல்லை. மேலும், நான் எனது போன்-கால்கள் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளை அடிக்கடி அப்டட் செய்பவன். அதனாலேயே இந்த பில்லில் ஏதோ குறைபாடு இருப்பதாக எனக்குத் தோன்றியது. போன் செய்து கேட்டேன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில். அவர்களும் இந்த முறை எனது பில்லில் ஏதோ தவறு நேர்ந்து விட்டதாகவும்.. ஓரிரு நாட்களில் சரி செய்து விட்டு எனக்குத் தகவல் தருவதாகவும் சொன்னார்.
சொன்னதோடு இருக்காமல், அதனை சரி செய்தவுடன் வீட்டிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்கள். இப்படியும் அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும்.
ரயில்வேத் துறையின் செயல்பாடுகள் (முன்பதிவு அலுவலகம்) :
நான் மூன்று-நான்கு வருடங்களாக, ரயில் பயணங்களுக்கு ஆன்-லயனில் முன் பதிவு செய்து வருகிறேன். கூட்டம் குழப்ப மில்லாமல், வீட்டிலிருந்த படியே முபதிவு செய்வது வசதிதான். இருந்தாலும்.. நேரடியாக ஒரே ரயில் இல்லாத இரண்டு இடங்களுக்கிடையே, ஒரு ரயில் பிடித்து இடைப்பட்ட ஊர் வரை சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் பிடித்து செல்வதற்கு ஒரே டிக்கெட்- தொலைநோக்கு கட்டணமுறை ( telescopic fare ) பெறுவது இயலாததால் முன்பதிவு நிலையத்திற்கு சென்றேன்.
முன்பெல்லாம் முன்பதிவு மையத்திற்கு சென்றால், எட்டு வரிசை இருந்தால்.. நாம் எதில் சேருகிறோமோ அது மிகவும் மெதுவாக முன்னேறும்.. (மர்பி விதி). நமக்கும் பின்னால் வந்தவர்கள் வேறு வரிசையில் சேர்ந்து நமக்கு முன்னரே முன்பதிவு செய்து விட்டு செல்வதை நம்மில் பலரும் அனுபவித்திருக்கலாம். இதைத்தான் நேரம் என்று நினைத்து நம்மையே நாம் தேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால்..
இப்போது அங்கு வரிசை முறை சிறப்பானதாக இருக்கிறது. கால் வலிக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. முதலில் விண்ணப் படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து ஒரு கவுண்ட்டரில் வரிசை(டோக்கன் முறை) எண் பெறவேண்டும். பின்னர் இருக்கும் நாற்காலியில் (இடம் கிடைத்தால்) அமர்ந்திருக்கலாம். இருக்கும் எல்லா கவுண்டர்களிலும் தற்போதைய மூன்று எண்கள் டிஸ்ப்ளே செய்த படியே இருக்கும், அதனோடு ஒவ்வொரு கவுண்ட்டரில் வரிசை எண் மாறும் பொது, அறிவிப்பும் செய்யப்படும். குளிரூட்டப் பட்டுள்ள அறையில் நிம்மதியாக ஓய்வெடுத்த படியே நமது முறை வரும் வரையில் இருக்கலாம். அதே அறையின் பக்கத்திலேயே சிற்றுண்டி / காபியும் காசு கொடுத்து வரலாம். பக்கத்திலேய பே அண்ட் யூஸ் குளியல் மற்றும் கழிவறைகளும் இருக்கிறது. நேரமானாலும் அளுப்பு தோன்றவில்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பது இந்த முறையில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இதனை செயல் படுத்தும் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும்.
இன்றைய இந்திய வெஸ்ட்-இண்டீஸ் ஆட்டம் :
வழக்கம் போல பேட்டிங் பவர் பிளேயில் இந்திய அணி சோபிக்கவில்லை. 1990களில் டெண்டுல்கர் மட்டுமே அடித்து ஓட்டங்கள் சேர்த்த நிலை மாறி மேலும் இரண்டு மூன்று நல்ல ஆட்டக்காரர்கள் கிடைத்தாலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை முதல் மூன்று நான்கு ஆட்டக்காரர்களைத் தவிர மற்றவர்கள் சொதப்புவதை பார்க்கையில் இந்தியா அடுத்த நிலை ஆட்டங்களில் வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. சரியான பவுலர்கள் இல்லை...
தோனியின் கணிப்புகள் சரியாக பயனளிக்க மறுக்கிறதோ ? இன்றைய ஆட்டத்தில் யுவராஜ் செஞ்சுரி அடித்திருக்கிறார்.... என்ன செய்ய ? இந்திய அணியின் வெற்றி திறமையைவிட அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கிறதோ ?
ஒரு வேளை, இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட வேண்டுமென்ற பயத்தில், இந்திய அணி தோற்க முயலுகிறதோ ?
ஒரு ஆறுதல்.. அம்பயர் அவுட் கொடுக்காவிட்டாலும், டெண்டுல்கர் அவுட் என அவராகவே வெளியேறியது, பாராட்டுதலுக்குரியது.
=====================================
=====================================
25 Comments (கருத்துரைகள்)
:
//மற்றவர்கள் சொதப்புவதை பார்க்கையில் இந்தியா அடுத்த நிலை ஆட்டங்களில் வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது//.
Yes very much. That is why I am sitting in computer; do not want to waste the time before TV.
@மோகன் குமார்
//That is why I am sitting in computer; do not want to waste the time before TV.//
I am wasting time in both.. he. he...
கிரிக்கெட் உடனடி விமர்சனமா? அருமை...
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
// ஒரு வேளை, இன்றைய ஆட்டத்தில்
ஜெயித்தால் காலிறுதியில் ஆஸ்திரேலிய
அணியுடன் விளையாட வேண்டுமென்ற
பயத்தில், இந்திய அணி தோற்க முயலுகிறதோ ? //
இன்னிக்கு நாம தான் ஜெயிக்கிறோம்..
வெஸ்ட் இண்டீஸ் ஜெயிச்சா
அவங்களுக்கும் காலிறுதியில
ஆஸ்திரேலியாதான் தெரியும்ல..!!!
@வெங்கட்
//வெஸ்ட் இண்டீஸ் ஜெயிச்சா
அவங்களுக்கும் காலிறுதியில
ஆஸ்திரேலியாதான் தெரியும்ல..!!! //
அது நமக்குத் தெரியும்..
மேற்கிந்திய அணிக்கு தெரிஞ்ச மாதிரி இல்லையே..
Latest update :
WI 149/2(28.6) - Sarwan* 23(37), Smith 78(91)
@ மாதவன்.,
// அது நமக்குத் தெரியும்..
மேற்கிந்திய அணிக்கு தெரிஞ்ச மாதிரி இல்லையே.. ? //
எல்லாம் பிளான் பண்ணின மாதிரி
தான் நடக்குது.. Just Wait and See..
:)
எப்படியும் இறுக்கி புடி திருப்பி சுத்தி அடிச்சு வேர்ல்ட் கப் வாங்கிடுவோம்!:-)
இதுதான் ராஜதந்திரமோ....! சொல்லிக்க வேண்டியதுதான்! இந்த நிலையில் மேற்கிந்திய தீவு அணி தோற்றால் உண்மையிலேயே 'வேஸ்ட்' இண்டீஸ்தான்! எனக்கும் கூட ஒரு மாதம் அதிக பில் வந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை.
@தமிழ்வாசி - பிரகாஷ்
வாங்க தமிழ்வாசி- பிரகாஷ்.. வலைச்சர ஆசிரியர் பேட்டி படித்தேன்.. நல்ல பதிவு..
" INDIA Win "
நாங்க தான் சொன்னோம்ல..
@எஸ்.கே
ஓஹோ. கேக்க நல்லாத்தான் இருக்கு.. பாப்போம்..
@ஸ்ரீராம்.
// எனக்கும் கூட ஒரு மாதம் அதிக பில் வந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை. //
உங்களது சந்தேகத்தை சம்பந்தப் பட்ட அலுவலகத்தில் (பி.எஸ்.எண். எல் ஆக இருந்தால், உங்கள் ஏரியாவின் அக்கவுண்ட்ஸ் ஆபீசர்) சென்று விசாரிக்கலாம். அவர்களால் தவறு ஏற்பட்டிருப்பின் நீங்கள் 'நாட்டாமை தீர்ப்ப பாத்தி சொல்லுனு' சொல்லலாம். உங்களுக்கு மேற்படி வரும் பில்லில் ஈடுகட்டி விடுவார்கள்.
இது கூட Umpire Decision Review System மாதிரியே
@வெங்கட்
//" INDIA Win "
நாங்க தான் சொன்னோம்ல..//
சொல்லுங்க.. சொல்லுங்க..
எங்களுக்கும் அதுதான் ஆசை.
ஆனா. ... ஆனா.. பவர் ப்லேவில கவனம் செலுத்தனும்.. அதே மாதிரி ஃ பீல்டிங் மற்றுள் பவுலிங் கொம்சம் இம்ப்ரூவ் பண்ணனும்.. அப்பத்தான் நமக்கு கப்பு (வேர்ல்ட் கப்.... இல்லேன்னா. கப்புதான் (காலேஜுல அரியர்ஸ கப்புன்னு சொல்லுவாங்க)
மாதவன் அதே போன்ற ரயில்வே ரிசர்வேசன் க்யூ முறை சென்னை பெசண்ட் நகர், ரிசர்வேசன் செண்டரில் 10 வருடம் முன்பே இருந்தது.
////////வெங்கட் said... [Reply] 6
@ மாதவன்.,
// அது நமக்குத் தெரியும்..
மேற்கிந்திய அணிக்கு தெரிஞ்ச மாதிரி இல்லையே.. ? //
எல்லாம் பிளான் பண்ணின மாதிரி
தான் நடக்குது.. Just Wait and See..
:)//////////
என்னத்த ப்ளான் பண்ணீங்க? இப்படி அவசரப்பட்டு ஜெயிச்சுட்டாங்களே? அங்க ஆஸ்திரேலியா நாக்க சப்புக்கொட்டிக்கிட்டு ரெடியா இருக்கு....
டோக்கன் சிஸ்டம் தான் சரி... இல்லன்னா வரிசைல நிக்கிறது நம்ம மக்களுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை :))
வேஸ்ட் இண்டீஸ் என்று எழுதி இருக்கிறீர்களே, தெரியாமல் எழுதினீர்களா இல்லை ஏதாவது உள்குத்து இருக்கா?
சச்சின் எப்போதுமே ஜென்டில்மேன்தான்
@பன்னிக்குட்டி ராம்சாமி "
அதே போன்ற ரயில்வே ரிசர்வேசன் க்யூ முறை சென்னை பெசண்ட் நகர், ரிசர்வேசன் செண்டரில் 10 வருடம் முன்பே இருந்தது.//
ஓஹோ, அப்படியா.. நல்ல விஷயம்..
@நாஞ்சில் பிரதாப்™
அதே மாதிரி ஆங்கிலத்தில் நமாளுங்களுக்கு பிடிக்காதா வார்த்தை 'க்யூ' -- சரியா ?
@பாலா //வேஸ்ட் இண்டீஸ் என்று எழுதி இருக்கிறீர்களே, //
ஓஹோ.. தெரியாமல் நிகழ்ந்த தவறு அது. சரி செய்து விட்டேன். நன்றி பாலா.
இந்தபோன் பில் விவகாரத்தில் என் அனுபவமே வேரமாதிரி. ரொம்பவே கஷ்டம் கொடுத்தாங்க. எல்லாம் நம்ம நேரம் தான்.
நல்ல அலுவலர்தான் போலேயே. அவர பாராட்டலாம் .. ஹி ஹி
அப்புறம் இந்த மேட்ச்ல இந்தியா ஜெயிக்கும் .. எப்படின்னு கேக்குறீங்களா ?
அதான் முடிஞ்சதே .. ஹி ஹி
நீங்க சொல்ற மாதிரி ரயில் டிக்கெட் புக்கிங் எல்லா ஊரிலும் வந்தால் தேவலை
Let's appreciate those officials, who work up to the mark..
நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள்.. (குறைந்த அளவில்...) பிராட்பேண்டுக்கு சொல்கிறேன்.. ;-))
Post a Comment