மொக்கை மூக்கு |
இ.என்.டி (ENT ).. ஓஹோ.. 'N' -என்பது 'நோஸ்' மூக்கையும், 'T ' என்பது 'த்ரோட்' தொண்டையையும்.. குறிக்கிறது.. அப்ப 'E' என்பது கண்களைதானே குறிக்கிறது என்றார். நான் அவரிடம் 'E ' என்பது , 'Ear ', காதினைக் குறிப்பதாகச் சொன்னேன். அவர் ஒப்புக்கொள்ள வில்லை. மூக்கிற்குப் பக்கத்தில் கண்கள்தான் இருக்குறது. காது சற்று தொலைவில் உள்ளது. எனவே 'ENT ' மருத்துவர் 'கண், மூக்கு, தொண்டை' மருத்துவ நிபுணர்தான் என்று அடித்துப் (!) பேசினார். அவரை சமாதானம் செய்து.. மருத்தவரை அணுகி முதலில் மருத்துவ உதவி பெறுமாறும்.. பின்னர் இது பற்றி பேசி ஒரு முடிவிற்கு வரலாம் என்றேன்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் நண்பர் செல்வாவை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றேன்.. அவர் தற்போது சளித் தொல்லையிலிருந்து சற்று நிவாரணம் பெற்றிருப்பதாகவும் சொன்னார். நான் மெதுவாக ENT என்பதில் வரும் 'E ' என்பது காதினை குறிப்பதாகும் என ஆரம்பித்த உடனேயே, என்னை நிறுத்தி அவர் சொன்ன தகவல் இருக்கிறதே.. .. ம்ம்.. எல்லாம் என்னோட நேரம்.. இப்படிலாம் ஒரு ஆள் எனக்கு நண்பனா கிடைத்ததை நினைத்து நினைத்து.. நோ.. நோ.. நா ரோம்ப பாவம்.. இதுக்கு மேல வேணாம்.. வேணவே வேணாம்..
அவரு என்ன சொன்னாரா... ?
செல்வா : இங்கப் பாருங்க.. ENT டாக்டர் ப்ரிஸ்க்ரைப் பண்ண மருந்துல இதுவும் ஒண்ணு.. இதோட பேரு 'நாஸிவிஷன்'. 'நாஸி'ன்னா மூக்கு.. 'விஷன்'ன்னா பார்வை.. அதாவது கண்ணுக்கும் மூக்கும் இருக்குற சம்பந்தத்த நா, இதுக்கு மேல உங்களுக்கு விளக்கணுமா என்ன ?
P.S.V(பக்கத்திலிருந்த எங்கள் இன்னொரு நண்பர் செல்வாவிடம் ) : "நல்லா பாருங்க செல்வா , அது நாசிவியான். நாசிவிஷன் அல்ல"
செல்வா : "போங்க சார், கம்பெனி காரங்க, ஸ்பெல்லிங் தப்பா எழுதியிருக்காங்க. அவங்களுக்கு தான் நீங்க அட்வைஸ் பண்ணனும்" என்றாரே பார்க்கலாம், எனக்கு காது கேட்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
டிஸ்கி : நன்றி பி.எஸ்.வி.
P.S.V(பக்கத்திலிருந்த எங்கள் இன்னொரு நண்பர் செல்வாவிடம் ) : "நல்லா பாருங்க செல்வா , அது நாசிவியான். நாசிவிஷன் அல்ல"
செல்வா : "போங்க சார், கம்பெனி காரங்க, ஸ்பெல்லிங் தப்பா எழுதியிருக்காங்க. அவங்களுக்கு தான் நீங்க அட்வைஸ் பண்ணனும்" என்றாரே பார்க்கலாம், எனக்கு காது கேட்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
டிஸ்கி : நன்றி பி.எஸ்.வி.
============================
27 Comments (கருத்துரைகள்)
:
vadai
அப்ப அந்த மருந்தை கண்ணிலயும் மூக்கிலயும் சேர்த்து போடனுமா!
@கோமாளி செல்வா
மூக்கு சரியான உடனேய வாசம் பிடிச்சு வந்து லபக்கிட்டாறு.. மொக்கைராசா..
@எஸ்.கே
கண்ணை மூடிக்கிட்டு மூக்குல ரெண்டு-மூணு சொட்டு போடணும்..
நான் சரியாதானே சொன்னேன் ..
@கோமாளி செல்வா //நான் சரியாதானே சொன்னேன் .. //
அமாம்.. ஆமாம்.. அதனால உங்களுக்கு கெடைச்ச கெளரவம் இந்தப் பதிவு..
அருமையான கண்டுபிடிப்பு...
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்ததுதான்
மிச்சம் உங்க பதிவை படிச்சதுல மாதவன்.
அது நேசிவியன், நாசிவிசன் இல்ல
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அப்ப நமக்கு ஒரு சயின்டிஸ்ட் கெடைச்சிட்டரா ?
@புவனேஸ்வரி ராமநாதன்
ஓ!.. நீங்கள் சிரித்து மகிழும்படி பதிவெழுத முடிந்ததா.. நன்று..
படித்து, கருத்து சொன்னதற்கு உங்களுக்கு நன்றிகள்
@YESRAMESH
அப்படியா.. 'Na'வ 'நா'னு படிச்சிட்டாறு நம்ம ஆளு..
@YESRAMESH
மன்னிக்கணும்.. நான் இப்பவே போயி கண் டாக்டரப் கன்சல்ட் பண்ணிட்டு வரேன்..
நானும் 'நாசி-விஷன்' படிச்சேன், அவசரத்துல..
அந்த பாட்டலை ஒடைச்சி வாயில ஊத்திக்கிட்டா கண்ணு, காது, மூக்கு, தொண்டை, மண்டை எல்லாத்துக்கும் போயிடாது....?
மொக்கையோட எல்லைக்கே போயிட்டே மாதவா.... வாழ்க நீ எம்மான்.. ;-))
அவர் பெரிய விஞ்ஞானி ஆகவேண்டியவர்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஆமால்ல....
அப்புறம் எதுக்கு மூணு நாலு மணி நேரம் 'ரத்தம்' / 'குளுகோஸ்' பாட்டில் ஸ்லோவா ஏத்துறாங்க... ஜஸ்ட் வாய்ல ஊத்தி குடிச்சிட்டா.. அது பாட்டுக்கு எல்லா எடத்துக்கும் போயிடுமில்ல ?
@RVS
ஹா.. ஹா.. ஹா..
அடங்கமாட்டோம்ல..
எங்க மொக்கைக்கு வானமே எல்லை..
@பாலா
அடாடா.. அவரோட அறிவுத் திறமை.. சரியா பயன்படலையோ..
பயிற்சி கருத்து.
ஹா....ஹா...
அது சரி மூக்குல போடணும்னா சிரசாசனம் செய்யணும் போல இருக்கே...
@TERROR-PANDIYAN(VAS)
என்னாத்துக்கு இந்தப் பயிற்சி..?
@ஸ்ரீராம்.
ஹா.. ஹா.. ஹா
அட.. அது வேறையா.. நா யோசிக்கவே இல்லை ஸ்ரீராம்.
ha.ha.ha.........serkkai sariyillai
இனிமேல E N T யை பார்க்கும்போதெல்லாம் உங்க பதிவுதான் நினைவில் வரும்.
:-)
அட மூக்கு படம் போட்டு கூட நண்பருக்கு புரியலையே...இதுக்குதான் நம்மூர்ல ஆண்கள் பெண்கள்னு எழுதி பக்கத்தில் படத்தையும் ஒட்ராங்களோ? டாய்லட்களில் ..
Post a Comment