கட்டழகியும் கந்துவட்டியும்



ஒரு ஊருல பெரிய செல்வந்தர் இருந்தார். அவரோட பேரு 'கந்தசாமி'. பணத்த வட்டிக்கு விட்டு தொழில் நடத்திவந்தார். (ஒக்கே ஒக்கே.. கந்துவட்டி கந்தசாமி ). அவரு தொழில் விஷயத்துல ரொம்ப கறார் பேர்வழிதான். கொடுத்த காசுக்கு வட்டிய வசூல் பண்ணாம விடவே மாட்டாரு. அவருடைய 65 வயதிலும் காசு விஷயத்தில் அவர் காம்ப்ரமைஸ் ஆனதில்லை.

நம்ம ஹீரோ ஒரு ஏழை விவசாயிக்குப் பிறந்தவர். அந்த ஊரிலேய நம்ம ஹீரோதான் சிறந்த 'அழகி'.. இல்லை இல்லை 'பேரழகி'. அதுவும் மணமாகாத இள-நங்கை. (ஹீரோன்னா ஆம்பிள்ளையத்தான் சொல்லனுமா.. இந்த கதைக்கே இவங்கதான் மெயின் காரக்டர்.. அதனால இவருதான் ஹீரோ) அழகு மட்டுமல்ல.. 'அதி புத்திசாலித்தனமும்' இவரு கூடப் பிறந்தது.. (இப்ப சொல்லுங்க இவருதான ஹீரோ?)

விளைச்சல் குறைவு, விலைவாசி ஏற்றம் (ஹி.. ஹி.. அதான் விலைவாசி என்னிக்குமே கஷ்டத்த கொடுக்குதே.. இத வேற தனியா சொல்லனுமா ?) போன்றவற்றால், ஹீரோவின் குடும்பம் பணச் சிக்கலால் படாத பாடு பட்டது... கந்தசாமியிடம், அந்த ஏழை விவசாயி எத்தனை முறைதான் கடன் (வட்டிக்கு) வாங்க முடியும்.... கொஞ்சமாவது கடனை திருப்பி கொடுத்தால் தானே அடுத்த முறை மறுபடியும் கேட்க முடியும்.

(கந்து) வட்டியோ மேலே மேலே ஏறிக்கொண்டே இருக்க, ஒருநாள், கந்தசாமி, விவசாயிடம் சென்று.. 'உன்னால கொடுத்த கடனை இந்த ஜென்மத்தில திருப்பித் தர முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.. எனக்கு உனது பெண்ணை திருமணம் செய்து கோடு.. உனது கடனை வட்டியுடன் தள்ளுபடி செய்துவிடுகிறேன்'. அவர்களது இக்கட்டான சூழ்நிலையை தனக்குச் சாதமகாக மாற்றிக் கொண்டான்.

அதனைக் கேட்ட விவசாயியும், அவளது மகளும், அடைந் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. (அதான.. இள வயசு கன்னிப் பெண், 65 வயசுக் கிழவரை திருமணம் செய்து கொள்வதா ?). அது சரியான செயலல்ல என மறுத்தனர். அதற்கு அந்த செல்வந்தரோ, வேண்டுமானால் இப்படி செய்யலாம். ஒரு பையில் ஒரு கருப்பு, மற்றும் ஒரு வெள்ளை கூழாங்கல்லை போட்டு, உனது மகள் கண்ணை மூடிக் கொண்டே அதிலிருந்து ஒரு கல்லை எடுக்கட்டும். அவள் எடுத்தது கருப்பு கல்லாக இருப்பின், என்னை மணமுடிக்க வேண்டும். அத்துடன் உனது கடன், வட்டியுடன் தள்ளுபடி செய்யப் படும். ஆனால், வெள்ளை கல்லாக இருப்பின், என்னை மணமுடிக்க வேண்டாம்... உனது கடனும் வட்டியுடம் தள்ளுபடி செய்யப்படும் என்றார். என்ன ஒரு விபரீத விளையாட்டு?.. (கேம்ப்ளிங்) .. வேறு வழில்லாததால், அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

ஊரார் முன், அந்த செல்வந்தர் ஒரு காலிப் (empty) பையில், கருப்பு-வெள்ளை கலந்திருந்த கற்குவியல் இருந்த இடத்தில், ஒரு கருப்பு, ஒரு வெள்ளை கற்களை எடுத்துப் போடும் பொது தனது தந்திரத்தினால் (trick) இரு கறுப்புக் கற்களை போட்டுவிட்டார். ஆனால் அதனை நமது ஹீரோ பார்த்துவிட்டாள்
(ள் .. ஆமாம் அவள் பெண்தானே).

இப்போது என்ன செய்திருப்பாள்.. (சாதாரண மனநிலை உள்ளவர்கள் மனதில் தோன்றுபவை)
1) இரண்டுமே கருப்பு என்பதை எல்லோருக்கும் சொல்லி, சோதனை செய்யுமாறு கேட்டிருக்கலாம்.
2) தனது விதியை நினைத்து நொந்து பொய், அவரை திருமணம் செய்திருக்கலாம்.
3) தனக்கு இதில் இஷ்டமில்லை.. தன்னை வற்புறுத்தி இந்த செயலை செய்வதாக சொல்லியிருக்கலாம்..

ஆனால் அவளோ புத்திசாலியல்லவா.. அவள் செய்ததெல்லாம்...
--------என்னவாக இருக்கும் ............. நீங்க, கொஞ்சம் ட்ரை பண்ணுங்களேன்.. முடியலையா?
----------
-----------
--------------
------------------
--------------------------
---------------------------------
----------------------------------------
-------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------------
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
இப்படித்தான்.. மேலே.. சாரி.. சாரி. தொடர்ந்து (கீழே) படியுங்கள்.

நேரே அந்த பையை நோக்கி சென்று தனது கண்களை கட்டிக்கொண்டு (மூடிக் கொண்டு), பையிலிருந்து மிகவும் பத்திரமாக, கல்லை கையால் முழுவதும் மூடிக் கொண்டு வெளியே எடுத்தாள். அதே சமயத்தில், தனது கால்கள் தடுமாறி தன்னால் சரியாக நிற்க முடியாமல் கீழே விழுந்து .. தன் கையிலிருந்த கல் (கருப்பு-வெள்ளை) கற்குவியலில் உருண்டு கலந்துவிடுமாறு செய்துவிட்டாள். தன்னை சுதாரித்து கொள்வது போல பாசாங்கு செய்து.. அனைவரும் தன்னை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டாள். பின்னர் அவர்களிடம், "பரவாயில்லை.. நான் எடுத்தது போக வேறு நிறக்கல் அந்த பையில் இருப்பதால்.. நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்துவிடுமல்லவா?" என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்.

இப்ப சொல்லுங்க.. 'இவள்'தானே இந்த கதையின் ஹீரோ ?

நீதி : எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு இருக்கு. நாம்தான் குறுகிய வட்டத்தினை விட்டு வெளியே வந்து அதனை கண்டு பிடிக்கவேண்டும். "Be Creative.. & Show your Creativity"

18 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

நீதி : எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு இருக்கு. நாம்தான் குறுகிய வட்டத்தினை விட்டு வெளியே வந்து அதனை கண்டு பிடிக்கவேண்டும். "Be Creative.. & Show your Creativity"


.... Well-said! :-)

senthil velayuthan said... [Reply]

கலக்குங்க பிரதர்

அருண் பிரசாத் said... [Reply]

நல்ல கதை. நல்ல நீதி.

ஸ்ரீராம். said... [Reply]

ச்சே... எனக்குத் தெரிஞ்ச ஒரே பதில் இதுவரை இதுதான்... கேள்வியாக் கேப்பீங்க..உடனே பதில் சொல்லி கை தட்டல் வாங்கிடலாம்னு இருந்தேன்...

RVS said... [Reply]

மாதவா இது Lateral Thinking பாடங்களில் வருவது. ஒரு பிரச்சனைக்கு வேறு ஆங்கிளில் ஆராய்ந்து முடிவெடுப்பது. கட்டழகியும் என்று தலைப்பை மாற்றவும்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி சித்ரா, செந்தில், அருண்

ஸ்ரீராம்.. உங்களால் விடையளிக்க முடிந்தமைக்கு நன்றிகள்... அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காததற்கு 'சாரி'

RVS -- 'lateral thinking ' என்பதை, நான், 'creative thinking ' என்று சொல்லியிருக்கிறேன். 'தலைப்பிலிருந்த' பிழையை நீக்கி விட்டேன். நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

Hi madhavan73,

Congrats!

Your story titled 'கட்டழிகியும் கந்துவட்டியும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th August 2010 10:42:02 PM GMT

Here is the link to the story: http://ta.indli.com/story/323739

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Unknown said... [Reply]

சூப்பர் போங்க.. நானும் கொஞ்ச நேரம் திங்க் பண்ணீட்டுதான் வந்து முடிவைப் படிச்சேன்..

நல்ல கதை.. வாழ்த்துக்கள்..

ALHABSHIEST said... [Reply]

ரெண்டு கல்லையுமே எடுத்து அந்த ககக(கசமாலும் கந்துவட்டி கந்தசாமி)யை ஊரார் முன்னால் காட்டி கொடுப்பாள் என்று நினைத்தேன்.ஆனால் அவள் புத்திசாலி தனமாய் கடனிலிருந்தும் கல்யாணத்திலிருந்தும் தப்பி விட்டாள்.

வெங்கட் said... [Reply]

ஆஹா.. என்னாமா யோசிக்குது
அந்த பொண்ணு... நீங்க Asnwer-ஐ
ரெண்டு நாள் விட்டு Comment-ல
போட்டு இருக்கணும்..

நாங்கல்லாம் எங்க மூளையை
கொஞ்சம் Use பண்ணி இருப்போம்..

இப்படி எப்பவாவது Use பண்ணினாதானே
உண்டு..

( ஹலோ.. யாருப்பா அது...
" மூளையெல்லாம் உனக்கு இருக்கான்னு "
கேட்கறது..?!! )

பெசொவி said... [Reply]

@ Venkat
//ஹலோ.. யாருப்பா அது...
" மூளையெல்லாம் உனக்கு இருக்கான்னு "
கேட்கறது..?!! //

அப்படியே சொன்னாலும் அது உங்களை இல்லை, வெங்கட்! நீங்க கவலைப் படாதீங்க! :)

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Super Madhavan

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி பாபு, சிவா, வெங்கட், பெ.சோ.வி & சாய்ராம் கோபாலன்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said... [Reply]

( ஹலோ.. யாருப்பா அது...
" மூளையெல்லாம் உனக்கு இருக்கான்னு "
கேட்கறது..?!! )
ha ha haa haaa ..

DREAMER said... [Reply]

கதையும் அருமை, அதற்கு நீங்கள் தேர்வு செய்து போட்டிருக்கும் புகைப்படமும் அருமை...

-
DREAMER

அப்பாதுரை said... [Reply]

சுவாரசியமான கதை.
(எனக்கென்னவோ சொத்தையெல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு கிழவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் இன்னும் புத்திசாலியென்று தோன்றுகிறது.)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... [Reply]

அப்பாதுரை சொன்னது தான் சரி என்று எனக்கும் தோன்றுகிறது..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... [Reply]

இந்த தலைப்பு தான் ஆளை தூண்டில் போட்டு இழுத்து படிக்கத் தூண்டுகிறது. வேறு தலைப்பு என்றால் வந்திருக்க்வே மாட்டேன்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...